ஆசிப் மீரான் அண்ணாச்சி சென்னைக்கு வருவதை இணையத்தில் தெரிவித்து இருந்தார்...சென்னைக்கு வந்த அண்ணாச்சி எனக்கு போன் செய்தார்.. நலம் விசாரித்தார்.. விடுமுறை நாட்கள் மிகக்குறைவு அதனால் நேரம் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் என்று சொன்னார்..
கடந்த புதன் (27/07/2011) அன்று காலையில் ஆசிப் அண்ணாச்சி போன் செய்தார்...
ஜாக்கி எங்க இருக்கிங்க..??
மதியம் லஞ்சுக்கு சந்திக்கலாமா?? என்று கேட்டார்... நிச்சயம் சந்திக்கலாம் என்று சொன்னேன்..
ஆசீப் அண்ணாச்சியிடம் எனக்கு பிடித்த குணம் என்னவென்றால் பதிவுலகின் மிக சீனியராக இருந்தாலும் கிஞ்சித்தும் பொறாமை கொள்ளாதவர்.. எனக்கு முதன் முதலாக பர்சனலாக என்னை கணித்து என்னை என்கிரேஜ் செய்ய ஒரு கடிதம் எழுதியவர்..
அந்த கடிதத்தை படித்த போது, நம்மையும் ஒரு சீனியர் மிகச்சரியாக கவனித்துக்கொண்டு இருக்கின்றாரே என்று எனக்கு பெருமையாக இருந்தது..
அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது தமிழில் கிரிக்கெட் வர்ணணையில் வார்த்தை ஜாலம் செய்த, அப்துல்ஜாபர் அவர்களின் குமாரர் என்று தெரிந்துகொண்டேன்.. மற்றபடி அவர் குடும்பம் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது..
சரியாக மதியம் மணி ஒன்றரை மணிக்கு, வடபழனி போலிஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் சிம்ரன் ஆப்பக்கடைக்கு வரச்சொன்னார்...
லக்கி, அதிஷா,மணிஜி,கேபிள் போன்றவர்களையும் அழைத்து இருப்பதாக சொன்னார்..
அண்ணன் உண்மைதமிழன் மற்றும் பாலபாரதிக்கு அழைத்தேன் இருவரும் ஷுட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை என்று ஆசீப் அண்ணாச்சி சொன்னார்.. உதாவிடம் நான் பேசினேன். அவர் ரொம்ப பிசியா இருந்தார்..
நான் மூன்று மாதமாக வேலை தேடிக்கொண்டு இருக்கின்றேன்.. ஆனால் எல்லாம் கிடைப்பது போல வந்து தள்ளிப்போய் கொண்டு இருக்கின்றது...ரொம்ப டிப்ரஷனில் நான் இருந்தேன் இந்த மதிய சந்திப்பு நல்ல ஒரு ரிலாக்சாக எனக்கு இருந்தது..
நிறைய பேசினோம்... சிரித்தோம், நான்வெஜ் அயிட்டங்கள் சுவைத்தோம்.. சிம்ரன் ஆப்பக்கடையில் சர்விஸ் நன்றாகவும் இருந்தது.. பக்கத்தில் இருக்கும் டிசிஎஸ் இல் வேலை செய்யும் பல சாப்ட்வேர் பெண்கள் மதியம் சாப்பிட வந்தார்கள்...ஓட்டலில் நல்ல இன்டீரியர் செய்து இருந்தார்கள்..
அதிஷா சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது... இணைய சண்டைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கும் யாராவது ஒரு வாசக நண்பர்.. நாம் இப்படி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை பார்த்தால் என்ன நினைப்பான் என்று கமென்ட் அடிக்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்..
(முதலில் எதிர் எதிராய் உட்கார்ந்து இருப்பது...மணிஜி/லக்கி
இரண்டாவது எதிர் எதிராய் உட்கார்ந்து இருப்பது... நான்/ கேபிள்
மூன்றாவதாக எதிர் எதிராய் உட்கார்ந்து இருப்பது ஆசிப்மீரான் அண்ணாச்சி/அதிஷா)
லக்கி,கேபிள்,அதிஷா விடைபெற்றார்கள்.. நான், அண்ணாச்சி மணிஜி, மூவரும் டிஸ்கவரி பேலஸ் போனோம் அண்ணாச்சி நிறைய புத்தகங்கங்கள் வாங்கினார்..
மணிஜி அண்ணாச்சிக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தார்... நான் நர்மதா பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் ஓலைச்சுவடி வடிவில் இருக்கும் திருக்குறள் புத்தகத்தை பதிவெழுதும் அண்ணாச்சி மகளுக்கு பரிசளித்தேன்...
டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனோடு போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம்..
எனக்கு அண்ணாச்சி அனந்தவிகடனின் வெளியீடான தமிழருவி மணியன் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்...
அண்ணாச்சியை லட்சுமண் ஸ்ருதி சந்திப்பில் ஷேர் ஆட்டோவில் ஏற்று அனுப்பி விட்டு வீட்டுக்கு சென்றேன்.. இரவு மணிஜியிடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அண்ணாச்சி துணைவியாரின் செய்தியை பற்றி சொன்ன போது எனக்கு மனது கணத்தது..
நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. பேரிழப்புதான்.. அண்ணாச்சிக்கு அவர் பிள்ளைகளுக்கும் எல்லாமனபலத்தையும் உடல் பலத்தையும் எல்லாம் வல்லபரம்பொருள் வழங்க வேண்டிக்கொள்கின்றேன்...
படங்களை கிளிக்கி பார்க்கவும்..
படங்கள் உதவி..
அதிஷா.
அண்ணாச்சியோடு இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புகைபடத்தை எடுத்தவர் நண்பர் அதிஷா... எனக்கு இந்த புகைபடம் பிடித்த படக்ளில் ஒன்று...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
முதல் போட்டோவில் இருப்பது நீங்க! உங்க பக்கத்தில் இருப்பவர் தான் அண்ணாச்சியா?:)))))
ReplyDeleteநெகிழ்வான சந்திப்பு ஜாக்கி..
ReplyDeleteஅண்ணாச்சியின் தமிழ் சொற்றாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..
உச்சரிப்பின் சுத்தம் அண்ணாச்சி..
வாழ்த்துக்கள்...
அண்ணாச்சி இங்க வந்ததை சொல்லவே இல்லையேண்ணே?சரி விடுங்க,இன்னொரு சமயம் சந்திப்போம்.
ReplyDeleteலக்கியையும் அதிஷாவையும் போட்டோவில் பிரித்த கேபிள் ஒழிக :)))
ReplyDeleteலக்கி அதிஷா அருகருகில் இல்லாத Rare போட்டோ இது !!
புதிய அறிமுகம் கிடைத்தது ஜாக்கி நண்பரின் பதிவால்.. நன்றி நண்பரே...!
ReplyDeletenehilchiyana santhippu arumai nanbare
ReplyDeletevery NIce grooup Photon . . .
ReplyDelete