கேரிசன் கல்லறைகள்..(1800-1860)ஸ்ரீரங்கப்பட்டினம்(பெங்களூர்)உங்கள் தாத்தா யார் என்று தெரியும்அவரின் அப்பா யார் என்று தெரியுமா? தெரியும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றது... சரி அவரின் அப்பா யார் என்று தெரியுமா?
அதை கூட சொல்லி விடலாம்.. ஆனால் 5 தலைமுறைக்கு முன் இருந்த  அல்லது ஆறு தலைமுறைக்கு முன் இருந்த தாத்தாவின் பெயர் என்ன என்று தெரியுமா? தெரியாது... அவர்களை எங்கே அடக்கம் செய்தார்கள் என்று தெரியுமா? தெரியாது... அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியுமா? தெரியாது...

குறைந்தது ஐந்து அல்லது ஆறு தலைமுறைக்கு முன் இறந்து போன தாத்தாவை பற்றி உங்களுக்கு தெரிந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்...?? அவர் பெய்ர் என்ன? அவர் வகித்த பதவி, அவர் பங்கு கொண்ட் பணி, அவர் எப்படி இறந்தார்? அவர் பெற்ற  வெற்றிகள்..வெட்டு பட்டு இறந்தாரா? காயப்பட்டு இறந்தாரா? அல்லது துப்பாக்கி குண்டால் சுடப்பட்டு இருந்தாரா? என்பதை தெளிவாக  சொல்லும் ஒரு ஆவனம் இருந்தால் எப்படி இருக்கும்.... கண்களில் நீர் வர பெருமையாக  வாசிப்பீர்கள் அல்லவா?

(கேரிசன் கல்லறை..) 


இந்த உலகில்  அனுதினமும் கோடிக்கானக்கான மனிதர்கள் பிறக்கின்றார்கள்..இறக்கின்றார்கள்.. எல்லோரும் அவணகாப்பகத்தில் அல்லது வராலாற்றில் இடம் பிடிப்பது இல்லை.. அப்படி இடம் பிடிப்பவர்கள் வெகுகுறைவு....அப்படி இடம் பிடித்தவர்களில் உங்க தாத்தாவும் இருந்தா என்ன செய்விங்க..ரொம்ப பெருமையா இருக்கும்.... போனதலைமுறை தாத்தாவோட கல்லறையை நீங்க பார்த்து இருக்கலாம்.. ஐந்து தலைமுறைக்கு கடந்த தாத்தாவோட கல்லறையை உங்களுக்கு காண கிடைச்சா எப்படி இருக்கும்...? சார் சொம்ம மெர்சாலியிடுவேன் சார்...

அனா நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்க வாய்ப்பே இல்லை... பட் ஐரோப்பாவில்  இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கின்றது...

எப்படி??  திப்பு சுல்தான் கூட போரில் சண்டை போட்டு மரணமடைந்த வெள்ளைகாரர்கள் மற்றம் சுவிஸ்,டச்சி படை வீரர்கள் அதிகாரிகளின்  கல்லரைகள்தான் அது....

அந்த கல்லறைக்கு கேரிசன் கல்லறை என்று பெயர்..
திப்புவின் அரசு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்ரீரங்கபட்டணத்தில் விழ்ச்சி அடைந்த உடன் இந்த கல்லறையின் வரலாறு தொடங்குகின்றது..1800லிருந்து1860 வரை...


1800லிருந்து 1860 வரை இந்தியாவில் பணியாற்றிய முன்னனி படை வீரர்கள்.. மற்றும் அதிகாரிகளின் கல்லறைகள் இன்றும் பேணிகாக்கப்பட்டு வருகின்றது..
கடந்த 25 வருடங்களாக தனது கொள்ளுதாத்தாவுக்கு கொள்ளுத்தாத்தா சமாதியை காண 15 அல்லது 20 பேர் குழு குழுவாக ஒவ்வெலரு வருடமும் வருகின்றார்கள்... மெழுகுவர்த்தி மற்றும் மலர்வளையங்கள் வைத்து 15நிமிடங்கள் பிரேயர் செய்துவிட்டு செல்லுகின்றார்கள்...


மனைவியின் சில ஆன்மீக வேண்டுதல்களை நிறைவேற்ற கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தன்று பெங்களூருவில் இருந்து, மைசூர் அருகே இருக்கும் சென்ன பட்டணம் மற்றும் ஸ்ரீரங்க பட்டணம் போய் வேண்டுதலகளை நிறைவேற்றினோம், மச்சான் இந்த கெரிசன் கல்லறையை பற்றி சொன்னான்.. ஆனால் பலர் அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு...ஆனால் எனக்கு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. காரணம்1800 ஆண்டுகளுக்கு முன்..... அதுதான் ஆர்வத்தை தூண்ட் காரணம்....


(அந்த வாழிகாட்டி கல்)

ஸ்ரீரங்கபட்டினத்தில் மைசூர் போகும் நெடுஞ்சாலையில் இடது பக்கம் மயூரா ரெஸ்ட்டாரன்ட் போகும் வழியில் அதாவது நெடுஞ்சாலையில் இடது உள் பக்கம் சென்றால் கேரிசன் சிமென்ட்ரி என்று ஆங்கிலத்தில் ஒரு காணிக்கல்லில் எழுதி இருக்கும் அதன் பக்கத்தில் ஒரு சின்ன  வாய்க்கால் இருக்கும் அதுதான் அடையாளம்.. அப்படியே வலது புறம் திரும்பி ஒரு 300மீட்டர் நடந்தால் அதாவது அந்த வாய்க்காலை ஓட்டியே நடந்தால் கேரிசன் கல்லறை வந்து விடும்...

(சென்னை வார் சிமேட்ரி நத்தம்பாக்கம்)

ரொம்ப தனியாக பயணப்படும் அந்த பாதை வாய்ககலை ஒட்டியே இருக்கின்றது...


(சென்னை வார் சிமேட்ரி நத்தம்பாக்கம்)

சென்னையில் சாம்ராஜ்ய யுத்த கல்லறை இருக்கின்றது... அது நந்தம்பாக்கம் மெயின் ரோட்டில் எல்லோரருக்கும் தெரிந்தது போல இருக்கும்...கிண்டி போருர் மார்கம் செல்பவர்கள் தவறாமல் ரோட்டில் இருந்தே பார்த்து விட்டு கடக்கலாம்...ஆனால் அது முதல் உலகபோரின் போது இறந்த வீரர்கள் மட்டும்... ஆனால் இதை பார்க்க வேண்டும் என்றால் ஒரு தனியான திகில் பயணம் மேற்கொள்ளவேண்டும்...

அந்த வழி ஒரு ஒத்தையடிபாதை.. எப்போதோ  நான்கு சக்கர வாகனம் போனதுக்கான வழித்தடம் இருக்கின்றது...ஒரு ஈ, காக்கா,குருவியை பார்க்க முடியவில்லை...நாங்கள் மாலை 5 மணிக்கு போனோம் அப்போதே கல்லறை சாத்தி இருந்தார்கள்..இந்த பதிவை படித்த விட்டு காதலன் காதலியாக யாரும் தனியாக இந்த இடத்துக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.. காரணம் உங்கள் காதலியின் கற்ப்பு அந்த தனிமையில் சூரையாடும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது...
(அந்த ஒத்ததையடி பாதை..) 


போகும் போது குழுவினரோடு அல்லது குடும்பத்துடன் செல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்..5 தலைமுறைக்கு முன் பெரிய போக்குவரத்து வசதியை பெறாத அந்த காலத்தில், நம் இந்தியாவில்  யார் போருட்டோ  சொந்த  நாட்டை விட்டு வந்து, நம் மண்ணில் போரிட்டு அல்லது அரசு பணி செய்து உயிர்துறந்தவர்களின் சாமாதியை பார்த்தேன்...இங்கு300க்கு மேற்பட்டவர்களின் கல்லறை இருக்கின்றது..


(கல்வெட்டு கல்)

பக்கத்தில் இருந்து கல்வெட்டில் எழுதி இருந்த ஒரு வார்த்தை எனக்கு சிரிப்பை வரவழித்தது....லேட்டஸ்ட் பரியல் 1860 என்று எழுதி இருந்தது... அந்த நேரத்துக்கு அது லேட்டஸ்ட்தானே??


 (டீடேயில்)

அப்படியே என் அம்மாவின் சமாதியை நினைத்து பார்த்தேன்...ஒரு நாளும் கிழமைக்கு   போய் ஒரு கற்புரம் ஏற்றி ஒரு கும்பிடு போட்டு விட்டு வர கூட நாம் எதையும் கட்டிவைக்கவில்லையே என்ற ஏக்கம் வந்தது...ஆறுதலைமுறைக்கு அப்புறம்  தன்
தாத்தன் சாமாதியை கடல் கடந்து வந்து பார்க்க சிலருக்கு கொடுப்பினை இருப்பதை நினைத்து பார்த்து நெகிழ்ந்தேன்..


எங்களில் எரிப்பது இல்லை புதைப்பதுதான்.. என் அம்மாவை புதைத்தோம்...மறுநாள் காலை எரிந்த சாம்பலை எடுத்து நெஞ்சில்  அடித்துக்கொண்டு அழும் வேலை எல்லாம் இல்லை..அம்மா இறந்த போது வலியில் இருந்து விடுதலை அடைந்த உணர்வு இருந்ததே தவிர பெரிய அளவில் வருத்தம் அப்போது இல்லை.. ஆனால் இப்போது ஒவ்வோரு நாளும் என் வளர்ச்சியில் அவரை நினைத்துப் பார்க்கின்றேன்.. முக்கியமாக என்மகள் பிறந்த பிறகு அந்த ஏக்கம் முன்னை விட அதிகமாகவே மாறிவிட்டது... என் அம்மா,அவள் இன்னும் கொஞ்சம்நாள் உயிரோடு இருந்து இருக்கலாம்.....


1996ல்  அம்மா இறந்து போன போது எனக்கு அழுகையே வரவில்லை... அதே நாளில் இறந்தவர் நடிகை சில்க்சுமிதா...இரண்டாம் நாள் மாலைதான் அம்மாவை எடுத்தோம்..கடலூர் கம்பியம் பேட்டை பின்பக்கம் கெடிலம் ஆற்றின் கரையோரம் மேடான பகுதியில் குழிவெட்டி இருந்தார்கள்..
கடைசியாக முகம் பார்ப்பவர்கள் பார்க்கலாம் என்று சொன்னதும் நான் கடைசியாக என் அம்மாவின் முகத்தை பார்த்தேன்...இரண்டு நாளாய் வராத அழுகை அப்போதுதான் வெடித்து கிளம்பியது...பெருங்குரலோடு அழ ஆரம்பித்தேன்... அம்மா மீது மண் பொத் பொத் என்று உடலெங்கும் சத்தம் எழுப்பிய போது அம்மா மஞ்சள் பூசிய மங்களகரமான முகத்துடன் எந்த எதிர்ப்பும் இன்றி இருந்தார்...
(1800/1860 வரை இந்த உலகத்தில் இருந்த சிலர்....) 

மண்ணை போட்டுமேடாக்கினார்கள்..நாள் நட்சத்திரம் பார்த்தார்கள்.. உடன்பால் ஊற்றி விடுவது என்று ஊற்றினார்கள்..மண்ல்மேட்டின் தலைமாட்டில் ஒரு நெய்வேலி காட்டாமணி  செடியை பிடுங்கி நட்டார்கள்..அவ்வளவுதான்.. அப்பா இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பக்கம் வந்த போது, அந்த செடி இல்லை என்றும் திரும்பவும் தான் நட்டு விட்டு வந்ததாகவும் சொன்னார்...

ஒரு இரண்டு வாரம் கழித்து நான் போனேன்.. அம்மா புதைத்த மணல்மேட்டினை அடையாளம் சொல்ல,  நெய்வேலி காட்டாமணி செடி வேர்விட்டு இருந்தது..ஒவ்வோரு வெள்ளிக்கிழமையின் போதும் அப்பா மணல்மேட்டில் அம்மாவின் கால் மாட்டில் கற்புரம் ஏற்றி குப்பிட்டு விட்டு வருவார்...மனது சரியல்லாத போது அம்மாவின்  நினைவு வரும் போது அந்த இடத்தில் போய் உட்கார்நது விட்டு வருவேன்..

அடுத்த வந்த ஒரு பெரும் மழை வெள்ளத்தின் காரணமாக கெடிலம் ஆறு  நொப்பும் நுரையுமாக தண்ணீர் கரை புரண்டு ஓடுவதை கடலூர் அண்ணாபாலத்தில் இருந்து பார்த்து விட்டு
அம்மா புதைத்து இருந்த இடத்தை பார்க்க  ஒடினேன்.புதைத்த இடத்தின் கரைக்குமேல் பத்தடிக்கு  தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.. கெடிலம் தனது வேகத்துக்கு ஏற்றது போல அம்மா புதைத்த இடத்தில் இருந்து 30 அடிக்கு மேல் தனது கரையை விரிவுபடுத்திக்கொண்டது...அம்மா கெடிலம் ஆற்றில் துகளாய் கலந்து விட்டாள்...இப்போது கெடிலம் ஆற்றின் முழுமையிலுமே என் அம்மா இருக்கின்றாள்...கேரிசன்  கல்லரை போல ஒரு குறிப்பிட்ட சமாதி அடையாளம் அவளுக்கு இல்லை..கெடிலம் ஆறு வங்க கடலில் கலந்து விட்டதுமே அவள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்றார்....
  =

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

===
நினைப்பது அல்ல நீ ....
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

 1. I first, jackie pls acknowledge that i'm the first one to comment here

  ReplyDelete
 2. உங்கள் சான்ட்வெஜ்ஜை எதிர்பார்த்து வந்தேன்!
  மனதை நெருடும் பதிவைத்தந்திருக்கிறீர்கள்!சற்றும் எதிர்பார்க்கவில்லை.கேரிசன் கல்லறையை பற்றி வாசித்துக்கொண்டிருக்கையின் ஊடே உங்கள் அம்மாவின் நினைவை பகிர்ந்துள்ளீர்கள்!எங்களுள்ளும் ஏதோ செய்கிறது.உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் உங்கள் அம்மா!நிச்சயம் உங்கள் மனதை எப்போது லேசாக வைத்திருப்பார்.

  ReplyDelete
 3. ஜாக்கி. மிகவும் அருமையான பதிவு! கேரிசன் கல்லறையை பற்றிய வியப்பில் ஆழ்ந்து வாய்பிளந்துள்ளபோது, உங்கள் அம்மாவின் விரல்கள் தலையை கோதுகின்றது! அற்புதம். ஏதோ ஒரு உலகத் திரைப்படத்தின் காட்சி அமைப்பை போல் எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 4. Wow!
  When I visit Bangalore next time, I definitely would like to visit this cemetery.
  Thanks for finding and sharing this historical site.

  ReplyDelete
 5. ஆரம்பம் அமைதியாகவும் திகிலாகவும் சென்றது.. ஆனால், அம்மா அவர்களை பற்றி சொன்னது கண்ணீர் வந்தது.. உணர்ச்சி பொங்கிய உங்கள் குரலில் அந்த ஏக்கம் தெரிந்தது...

  ReplyDelete
 6. Additional details on this site at
  http://www.deccanherald.com/content/63412/epitaphs-european-officers.html

  ReplyDelete
 7. Memorable note on your mother's burial. I am sure she would have been happy about you and your family right now.

  ReplyDelete
 8. Thala don't feel. Your mother stay with you and give tons of peace

  ReplyDelete
 9. உங்கள் பதிவுகளிலேயே மிக நெகிழ்ச்சியான பதிவு இது. உலகத்தின் முக்கால் பாகத்திற்கும் மேலே உங்கள் தாயார் பரவி இருக்கிறார். இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை...

  ReplyDelete
 10. கெடிலம் ஆறு வங்க கடலில் கலந்து விட்டதுமே அவள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்றார்....
  =>>>>>>>>>>>>>>excellent words

  ReplyDelete
 11. இந்த உலகில் சிலருக்கு தான் ஜல சமாதி கிடைக்கும். மண் திண்ணாமல் உங்கள் தாயார் நீரில் கரைந்ததினால் அவர் நிச்சயமாக புண்ணியம் செய்தவர்... ஆக நீங்கள் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்... அவரது ஆசி எப்போதும் உங்களுடன் இருக்கும்...

  ReplyDelete
 12. நல்ல பதிவு. இங்கு மட்டுமல்ல. ஆங்கிலேயர் எங்கெல்லாம் ஒரு கூட்டமாக வாழ்ந்தார்களோ ஆங்கு இப்படிக் கல்லறைதோட்டங்கள் (கிருத்துவர்கள் இப்படித்தான் குறிப்பிடுவர்) காணக்கிடைப்பதுண்டு. ஆங்கிலேயர்கள் வரலாற்றைப் பேணுபவர்கள்; அக்குணம் ஈண்டும் தென்படும். அஃதாவது கல்லறைத்தோட்டங்களை நன்கு பாரமரிப்பர். லக்னோவுக்குச் சென்றால் ரிஜிடன்ஸி செல்லவும். இதுதான் ஆங்கிலேயர் 1857 சிப்பாய்க்கலகத்தின் ஒரு பெரும்போர் நடந்தயிடம். அப்போரில் மரித்த ஆங்கிலேயர்களின் கல்லறைத்தோட்டம் உண்டு. அதே கலகத்தில் எதிர் ராஜாக்களுக்காக மரித்த எந்த இந்துக்களுக்கும் அந்த இராஜாக்கள் ஒரு நினைவுச்சின்னம் அவர்கள் மரித்த இடத்தில் எழுப்பவில்லை. மரித்தவர்கள் ஆர் ஆரென்று இன்றுவரைத் தெரியாது. ஆங்கிலேயர் ஒவ்வொருவர் பெயரும் பதிவுசெய்யப்பட்டு விட்டது. தில்லி ஓபராய் ஓட்டலுக்கெதிரில் உண்டு.

  - சிம்மக்கல்

  ReplyDelete
 13. Jackie உங்கள் இந்த பதிவு கண்ணீர் வர செய்தது நான் உங்களின் பதிவுகளை ஒரு வருடம் வாசித்து வருகிறேன் சில நேரம் உங்களின் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை அதனால் பின்னோட்டம் இட வில்லை. ஆனால் இன்று உங்களின் பதிவு என்னை மிகவும் பாதித்தது .. Jackie நான் விழுப்புறம் தான்...

  ReplyDelete
 14. அண்ணே... மிகவும் நெகிழ்ச்சியான பதிவு

  ReplyDelete
 15. நைஸ் ரோடு பதிவை பார்த்து அதே சுமுகமான மன நிலையில் இங்கு வந்தால்....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner