இன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள் பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு...நிறைய பேர் அவர்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்..
மிக முக்கியமாக புலம் பெயர் ஈழ தமிழர்கள் தங்கள் பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்..வழக்கம் போல சில கெஸ்ட் சன்ஸ் அதனை நக்கல் விட்டு இருந்தார்கள்..அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
மிக முக்கியமாக புலம் பெயர் ஈழ தமிழர்கள் தங்கள் பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்..வழக்கம் போல சில கெஸ்ட் சன்ஸ் அதனை நக்கல் விட்டு இருந்தார்கள்..அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
எனது நெடிய வாழ்க்கை பயணத்தில் நான் இதை எல்லாம் பார்த்ததே இல்லை... ஒரு கார்பரேட் அலுவலகம் எப்படி இருக்கும் என்று பார்த்து இருந்தாலும், ஒரு பிரபல யாஹு அலுவலகம் எப்படி இருக்கும் என்று கைபிடித்து அழைத்து சென்றது இந்த பதிவுலகம்தான்..
ஆனால் எனக்கு தெரிந்து ஒரு தமிழ் பிளாக்கில் எழுதும் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் எனக்கு கிடைத்து இருக்கின்றது என்றுதான் நினைக்கின்றேன்...இன்னும் கைக்கு எட்டாத உயரத்தில் விமானங்கள் பதிவை பார்த்து விட்டு ஒரு மடல் எனக்கு வந்தது.. அது கீழே...
Good post.I am long time reader of your blog.I too had similar feeling in my childhood.
Now I am working for an aerospace company in Bangalore.We make slides and few aircraft parts .Let me know if you are interested,I can take you there.(When you are in bangalore)Regards,Sivaசிவா என்னிடம் பேசினார்..சிவாவிடம் பெங்களுர் வந்ததும் போன் செய்ய சொன்னார்..மார்த்தஹல்லி பிரிட்ஞ்க்கு பக்த்தில் வெயிட் செய்ய சொன்னார்...அவரே வந்து பிக்கப் செய்து கொணடர்...
சிவா உங்களுக்கு வலைஉலக அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன்..வெட்டிபயல் என்று எழுதிக்கொண்டு இருந்த ஒரு பதிவுதான் தனக்கு வலையுலக அறிமுகம் என்றார்... நண்பர் லக்கியின் பதிவுகள் அவருக்கு ரொம்பவும் விருப்பமாம்.. மிக முக்கியமாக அவரின் குவாட்டர் கோவிந்து கேரக்டர் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.. இருந்தாலும் உங்களிடம் மட்டும்தான் நான் போன் செய்து பேசினேன்... உங்களுக்கு மட்டும்தான் நான் மெயில் அனுப்பினேன்.. காரணம் என்னை போல நீங்களும் கிராமத்தில் இருந்து மெல்ல மெல்ல உயர்ந்தவர் என்று காரணம் தெரிவித்தார்...
கிருஷ்ணகிரி பக்கம் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்து தற்போது பல கட்டங்களை கடந்து ஏரோபேஸ் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு இருப்பதாக சொன்னார்..
கல்லூரிகளில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தால் படிப்பின் மீது வெறுப்பு வந்ததாகவும்.. கல்லூரி விட்டு விடமுயற்ச்சியுடன் படித்து இன்று பல நாடுகளில் பயணித்து வந்து விட்டதையும் சொன்னார்..
20 மணிநேரம் விமானத்தில் பைலட்டாக பறந்த அனுபவம் தனக்கு இருப்பதாக சொன்னார்... பெங்களூரில் புறநகரில் இருக்கும் ஒரு நிறுவனம் அது... பெயர் வேண்டாம்..என்னை அழைத்து சென்றார்... கார்பரேட் விசிட்டர் கழுத்து பட்டையை வாங்கி எனக்கு அணிவித்தார்... கல்லூரிக்கு போகும் போது போட்டுக்கொண்டு சென்றது நினைவுக்கு வந்தது...
உள்ளே ஹைடெக் பேக்டரிக்கு அழைத்து சென்றார்...ஆங்கில படங்களில் விமானம் தரையில் பெல்லி லேண்டிங் ஆகும் போது கதவு பக்கத்தில் இருந்து ஒரு பெரிய சறுக்கு மரம் போல பெரிய பலூன் இருக்குமே.. அதனை தயாரித்துக்கொண்டு இருந்தார்கள்.. அட்நத கம்பெனிக்கு உலகம் எங்கு இருந்தும் விமானகம்பெனிகள் ஆர்டர் கொடுக்கின்றன...
அதுக்கு பெயர் ஸ்லைடு என்று பெயர்...40 அடி வரை பெரிதான ஸ்லைடுகளை தாயரித்துக்கொண்டு இருந்தார்கள்..
விமானத்தின் கதவுபகுதியில் அவ்வளவு பெரியதை சுருட்டி வைத்து இருப்பார்களாம்..விபத்து ஏற்பட்டதும் கதவு பகுதியில் இருந்து அது ஆறே வினாடிகளில் நைட்ரஜன் வாயு நிரப்பி பெரிதாகி விடுமாம்....விமான கதவுக்கும் தரைக்கும் ஆறு அடி உயரத்தை இது சறுக்கு மரம் போல ஆக்கி விடும்...
பெல்லி லேண்டிங் ஆகி சரியாய் ஆறு வினாடிகளில் விஸ்வருபம் எடுத்துவிடும் இந்த ஸ்லைடு சறுக்கு மரம் வழியாக 90 வினாடிகளில் பயணிகள் விமானத்தை விட்டு வெளியே வந்து விடுவார்களாம்..
தொட்டு பார்த்தேன்.. ரப்பாக இருந்தது.. ஒருவேளை கடலில் விமானம் விழுந்தால் இது பயணிகள் உயிர் காக்கும் படகாக மாறிவிடும்... விமானத்தில் அனுதினமும் பயணிப்பவர்களே இந்த ஸ்லைடை தொட்டு பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.. காரணம் விமானம் விபத்தில் சிக்கினால் மட்டுமே அவர்களால் அதனை பார்க்க முடியும்...ஒரு விமானப்பயணி தன் பறக்கும் விமானத்தின் ஸ்லைடை அவர் பார்க்கின்றார் என்றால் அவருக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்..
தீயை தவிர எந்த கடினமான பொருளும் இதனை குத்திக்கிழிக்காது என்பதை தெரிவித்தார்.....
என்னை பொருத்தவரை கடலூரில் எனது கிராமத்தில் இருந்து இந்த அனுபவத்தை பெற்ற ஒரே ஆள் நான்தான்..ஒரு முறை எனது உறவினர் பிள்ளைகளின் பெரியப்பா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மேனேஜராக இருந்தார்.. கடலூரில் இருந்து போய் பிரசாத் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து விட்டு காசி தியேட்டரில் நீதிக்கு தண்டனை பார்த்து விட்டு அந்த அனுபவங்களை சொன்ன போது எனக்கு சென்னையும் ஸ்டுடியோவும் பெரிய ஏக்கமாக எனக்கு பட்டது...ஆனால் இன்று அதை விட, வெவ்வேறு தளத்தை நோக்கியும் புதிய அனுபவங்கைளை பெறுவதும் எனக்கு பெருமைதான்...
அடுத்து பக்க்ததில் இருக்கும் வேறு ஒரு டிப்பார்ட்மென்ட்டுக்கு அழைத்து சென்றார்கள்.. அதில் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு செல்லும் சயின்ட்டிஸ்ட் போல ஒரு பெரிய ஓவர் கோட்டை எடுத்து மாட்டிவிட்டார்கள்.. எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது..
அவ்வப்போது அவரின் நண்பர்களிடத்தில் நான் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு நடக்கும் போது ஏதோ நாசாவில் நடப்பது போன்ற ஒரு சந்தோஷம்...
ஓத்தா ஏண்டா என்னை நல்ல ஸ்கூலில் சேர்த்து என்னை நல்லா படிக்கவைக்கலை என்று என் அப்பா மீது கோபமாக இருந்தது..இந்த அனுபவத்தை என் அம்மா படித்து இருந்தால் இன்னும் சந்தோஷபட்டு இருப்பாள்...
நிறைய பேர் கம்ப்யூட்டர் உதவியுடன் எதை எதையே நோண்டிக்கொண்டு இருந்தார்கள்.. விமானத்த்தின் இறக்கை மற்றும் வால்பகுதியில் உள்ளே வைக்கும் கருவிகள்.. அனைத்தும் எந்த அதிர்வையும் தாங்குவதாகவும்
550 டிகிரி ஹீட்டுகளை தாங்ககூடியவையாக வடிவமைத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்....
ஒரு வெற்றிலை டப்பா போல ஒரு சமாச்சாரத்தை என் கைகளில் கொடுத்தார்.. அதனை தயாரிக்க இரண்டு வருடங்கள் அனது என்றும் அது இன்னும் இன்னும் மேம்படுத்திக்கொண்டே வருவதாகவும் சொன்னார்... நான் என்ன சுஜாதாவா அதில் இருக்குத் சர்க்கியூட்டில் இருந்து ஐசி பாகங்கள் வரை சொல்ல.. என்னை பொருத்தவரை அது வெற்றிலைபெட்டி அவ்வளவுதான்... அதை தொட்டு பார்த்தேன் சிலிர்த்தேன்...
எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டினார்.. நிறையபுரிந்தது.. பலது புரியவில்லை...புரிந்தது போல தலையை ஆட்டினேன்.இன்னும் இருபது வருடத்தில் ஏர்டிராபிக்கில் இந்தியா பெரிய வளர்ச்சி அடையும்... இப்போது நீங்கள் சதாப்தியில் பெங்களூருக்கு வந்தது போல அதுவும் எளிதாகிவிடும் என்றார்...
அவரது அலுவலகத்தை விட்டு வெளிய வந்தோம்.. காடுகோடியில் இருக்கும் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார்...
உப்புக்கண்டத்தில் இருக்கும் மட்டன் சமைத்துக்கொடுத்தார்... தான் வெளிநாடுகளில் இருக்கும் போது தனது அம்மா செய்து கொடுத்த மட்டன் உப்புக்கண்டங்கள் பெரிதும் உதவியாய் இருந்ததை தெரிவித்தார்...
நான் வாழ்க்கையில் முதல் முதலாய் உப்புக்கண்டத்தில் போட்ட பதப்படுத்திய மட்டனை சுவைத்தேன்..கடலூர்காரனான எனக்கு கருவாடு எனக்கு பிடித்த உணவு... ஆனால் சமைக்கும்
காதூரம் ஓட வேண்டும்..
நான் அவரிடம் விடைபெற்று 500சீ எசி பஸ்சில் ஏறினேன்...விடைபெறும் முன் ஏன் விமானபயணம் காஸ்ட்லியாக இருக்கின்றது என்று வாசக நண்பர் சிவாவிடம் கேட்டேன்..
விமான கட்டுமான பொருள்களின் தரத்தில் செகன்ட் ஆப்ஷனே இல்லை என்றார்...எல்லா பொருளும் 100 சதவீதம் தரமாகவே இருக்கவேண்டும்..சென்னை புதுப்பேட்டையில் நிறுத்தி இரண்டு செகன்ட் ஹேன்ட் ஷாப்ட்டு வாங்கி லாரிக்கு போட்டு ஒருவாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து ஓடவைக்கும் சமாச்சாரம் இதுவல்ல... என்பதாலும்
புவியீர்ப்பு விசைக்கு எதிரான பயணம்... எல்லா உதிரிபாகமும் பப்ப்பெக்ட்டாக இருக்க வேண்டும்...காரை ஓரம் நிறுத்தி என்ன பிரச்சனை என்று பார்பபது போல விமானத்தை பார்க்கமுடியாது.. ஒன்னு பிரச்சனைன்னா இன்னோன்னு இருக்கும்.. ஒன்னுக்கு இரண்டு என்ஜின் என்பது போல நிறைய விளக்கம் தந்தார்...
விமானபாகங்கள் அனைத்து உற்பத்தியும் காஸ்ட்லி என்பதால் விமானபயண கட்டனமும் காஸ்ட்லியாக இருக்கின்றது என்று சொன்னார்... நான் அவர் சொன்னதை நினைவில் நிறுத்திக்கொண்டு பேருந்தில் பயணத்தேன்..மழையில் பெண்களுர் டிராபிக்கில் திணறியது..மாரத்தஹல்லி பாலத்தில் அரைமணி நேரத்துக்கு மேல் டிராபிக்கினால் பேருந்தில் உட்கார்நது வெறுத்து போனேன்..சிவா சொல்வது போல 30 வருடத்தில் ஏர்டிராபிக் அதிகமானல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன்...பேருந்து அடித்து உடைத்து பறப்பது போல முற்ச்சித்து பெரிய வேகமேடுத்து பத்தடிதள்ளி நின்றது........திரும்பவும் 30 வருடத்துக்கு அப்புறம் ஏர்டிராபிக் இந்தியாவில் எப்படி இருக்கும் என்ற கற்பனை குதிரை மெட்டி
ஒலி சீரியல் போல ஓட ஆரம்பித்தது...
அவரோடு ஒரு புகைபடமும் எடுத்துக்கொள்ளாமல் வந்து விட்டேன்..அதுதான் ஒரு பெரிய குறை...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வாழ்த்துக்கள் நண்பா! இன்னும் நிறைய இடங்கள் பாக்கி இருக்கிறது கவலை வேண்டாம் நண்பர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்த
ReplyDeleteநிறைய படிச்சவங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்ன்னு நினைக்குறீங்க ...
ReplyDeleteஉங்க கூட நடந்து வந்த மாதிரி இருந்திச்சி
பதிவு அருமையா இருக்கு.
ReplyDeleteஆமா ஏன் உப்புகண்டம் இதுவரை சாப்பிட்டது இல்லை..உங்க பக்கம் கிடைக்காதா?
நல்லதொரு வாய்ப்பு.,
ReplyDeleteஜாக்கி வாழ்த்துகள்
உங்களின் மிகச் சிறந்த இடுகைகளில் இதுவும் ஒன்று ஜாக்கி அண்ணா... ஆரம்பம் முதல் இறுதி வரை நிறைய ரசித்தேன். எஷுத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிறைய எழுதுங்கள். ஜெய் ஜாக்கி!....
ReplyDeleteமல்லாந்து எச்சில் துப்பும் சனியன்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.
பிரபாகர்.
விமானத்தின் ஸ்லைடு பற்றிய தகவல் முற்றிலும் புதியது எனக்கு... நல்ல பகிர்வு நண்பரே!
ReplyDeleteஓத்தா ஏண்டா என்னை நல்ல ஸ்கூலில் சேர்த்து என்னை நல்லா படிக்கவைக்கலை என்று என் அப்பா மீது கோபமாக இருந்தது..இந்த அனுபவத்தை என் அம்மா படித்து இருந்தால் இன்னும் சந்தோஷபட்டு இருப்பாள்.எதையும் மறைக்காத இந்த கறந்த பாலைபோன்ற நடை எவருக்கும் வாய்க்காத ஒன்று ஜாக்கி சார்
ReplyDeleteஉங்களுக்கு கிடைத்த நண்பர் வட்டம் மிக சிறந்தது.. இது உங்களுக்கும் உங்கள் பதிவுக்கும் கிடைத்த சிறிய பரிசு தான்..
ReplyDeleteஓத்தா ஏண்டா என்னை நல்ல ஸ்கூலில் சேர்த்து என்னை நல்லா படிக்கவைக்கலை என்று என் அப்பா மீது கோபமாக இருந்தது..இந்த அனுபவத்தை என் அம்மா படித்து இருந்தால் இன்னும் சந்தோஷபட்டு இருப்பாள்...
நீங்க நல்ல ஸ்கூல படிச்சு பெரிய ஆளாயி இருந்த எங்களுக்கு ஜாக்கி சேகர்னு ஒருத்தர் கிடைச்சு இருக்கமாட்டாரே.. தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுருங்க...
எனக்கும் ஏர்கிராப்டை சுற்றி காண்பித்ததுக்கு மிக்க நன்றி...
//பெண்களுர் //
ReplyDelete?????????????????????
ரயில் அனுபவம் பற்றி எழுதிருதிர்கள் ரசித்தேன் , நான் சொலுவது உண்மை , இன்று காலை ஏதோ உங்கள் நினைவு வந்தது , விமான பயணம் பற்றி எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் , இன்று பதிவை பார்த்தவுடன் மிகவும் ஆச்சிரியமாக இருத்தது.
ReplyDeleteநட்புடன்
ராஜன் , சென்னை
ஜாக்கி அண்ணா நான் உங்கள் தளத்தை தொடர்ந்து வசிக்கிறேன்,
ReplyDeleteஇனி என்னுடை கமெண்ட்ஸ் மற்றும் ஒட்டு தினமும் இருக்கும்....
நல்லதொரு படைப்பு வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு............
ரசித்துப்படித்தேன்.
ReplyDelete//ஒரு விமானப்பயணி தன் பறக்கும் விமானத்தின் ஸ்லைடை அவர் பார்க்கின்றார் என்றால் அவருக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்..//
ReplyDeleteஅதானே....நான் ஏரோபிளேணுல போகும்போதும் வரும்போதும் இந்த ஸ்லைடு சமாச்சாரத்த பாத்ததே இல்ல.... நல்ல வேளை பாக்கல....
//ஏண்டா என்னை நல்ல ஸ்கூலில் சேர்த்து என்னை நல்லா படிக்கவைக்கலை என்று என் அப்பா மீது கோபமாக இருந்தது//
ஒருவேளை உங்க அப்பா உங்களை நல்ல ஸ்கூல்ல படிக்க வச்சி, ஒருவேளை நீங்களும் நல்லா படிச்சிருந்தா....இந்த சான்செல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்காது.....அப்பாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்....அருமையான பதிவு....எதோ அந்த ஸ்லைடுல சறுக்குன மாதிரி ஒரு பீலிங் வரவெச்சிட்டீங்க.....
nice post jackie....
ReplyDeletemano
Nice entry, Jackie.
ReplyDeleteநண்பா.. நானும் மாரதஹள்ளி பக்கத்தில் தான் வசிக்கிறேன்..எனது அலுவலகம் கோரமாங்களவில் தான் உள்ளது. ஒரு நாள் அவசியம் சிந்திப்போம்.
ReplyDeleteரசித்துப்படித்தேன்.
ReplyDeleteஜாக்கி,பெங்களூர் அப்படினு எழுதி பழகுங்க. எப்ப பார்த்தாலும் பெண்களூர் அப்படினு எழுதறீங்க. படிக்க ஒரு மாதிரி இருக்கு.
ReplyDeleteஅருமை! ரசித்தேன் ஜாக்கி!
ReplyDeleteஅசத்தல் ஜாக்கி. தொட்டு உணர்ந்தது போலவே இருந்தது
ReplyDeleteஓத்தா ஏண்டா என்னை நல்ல ஸ்கூலில் சேர்த்து என்னை நல்லா படிக்கவைக்கலை என்று என் அப்பா மீது கோபமாக இருந்தது..
ReplyDeleteஅப்புறம் எதுக்கு சமச்சீர் கல்வி வேணும் என கேக்குறீங்க ஜாக்கி?
நான் விமானப் படையில் பணிபுரியும் போது பெண்களூர் வந்திருக்கக் கூடாதா ??? போர் விமானங்களையும் காட்டியிருப்பேனே ! !
ReplyDeleteதல, உங்கள கிண்டல் பண்றத படிக்கவே ஒரு நாளைக்கு 3000 பேர் வந்துட்டதா பெருமையா சொல்லி இருக்காங்க.... ஆனா அந்த பெருமை யாருக்கு சொந்தாம்?
ReplyDeleteநன்றி சிவா, எங்களையும் அழைத்து சென்றதற்கு
ஜாக்கி, அது காடுகோடி இல்லை, ஆடுகோடி.
ReplyDeleteஉங்களோட நானும் பயணித்தது போன்ற உணர்வு.வாழ்த்துக்கள்.இன்னும் நீங்கள் சந்திக்காத இடங்கள் எவ்வளவோ இருக்கிறது அதையும் கூடிய சீக்கிரத்தில் தொட்டு விடலாம்..
ReplyDelete