ரயில் மெல்ல சிலிர்த்து விட்டு நகரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்.. அந்த வால் பையனின் பிரிவு அந்த தந்தையின் கண்களில் தெரிந்தது..
சதாப்தி அந்த அப்பாவின் பிரிவின் சோகத்தை சட்டைசெய்யாமல் உதாசீனபடுத்திவிட்டு கர்வத்துடன் நகர ஆரம்பித்தது..
அந்த சின்னபையன் கண்ணாடி ஜன்னலில் தன் தந்தை முகம் மறையும் வரை டாட்டா காட்டிக்கொண்டு இருந்தான்..ரயில் விலுக்கென்று வேகம் எடுத்தது..பேசின் பிரிட்ஜ்,அம்பத்தூர்,அவடி போன்ற ஊர்களை அசுர வேகத்துடன் விழுங்கியபடி வேகமாக செல்ல ஆரம்பித்து....
ரயில் மெல்ல வெண்ணையில் வழுக்குவது போல வழுக்கி சென்று கொண்டு இருந்தது.. வழக்கமான ரயிலின் தேசிய ஒலியான தடக் தடக் கிஞ்சித்தும் காதில் விழவில்லை..
அவன் புயலென உள்ளே நுழைந்தான்.. டிராயர் அணிந்து இருந்தான்.. சட்டையை முற்றிலுமாக எல்லா பட்டன்களுக்கும் தற்க்காலிக விடுதலை கொடுத்து இருந்தான்.. ஒரு வெள்ளைகண்ணாடி அணிந்து இருந்தான்.. அந்த கண்ணாடியில் நில நிற கிளாஸ் இருந்தது...மரியாத்தா கோவிலில் கூழ் ஊற்றும் போது நடக்கும் திருவிழாவில் வாங்கிய பத்து ரூபாய் கண்ணாடி போலவே இருந்தது..பனியன் சுத்தமாக நனைந்து போய் இருந்தது...கட் பனியன் போடாமல் கை வைத்த பனியன் போட்டு இருந்தான்...நகரும் பேக்கை கையால் இழுத்துக்கொண்டு டிக்கெட் எண்ணுக்கான சீட்டை தேடிக்கொண்டு இருந்தான்...ஒரு வழியாக இரண்டு சீட் தள்ளி இடம் பார்த்து அமர்ந்து விட்டான்..கடைசிவரை அந்த வெள்ளைக்கண்ணாடியை கழட்டவே இல்லை...
டிக்கெட் பரிசோதகர்கள் எல்லாம் பிரிஸ்க்காக இருந்தார்கள்..கர்வத்தோடு ஸ்டைலாக நடந்தார்கள்... ரயில் பெட்டிகள் அனைத்தும் ஸ்லைடிங் டோர் இருந்தது..அடுத்து ஒரு அழகு பதுமை ரொம்ப ஸ்டைலாக பேகை இழுத்துக்கொண்டு வந்தது... பேக்கின் கைப்பிடி பதுமையோடு உள்ளே வந்துவிட்டது ஆனால் அதற்குள் ஸ்லைடிங் டோர் மூடிக்கொள்ள கைப்பிடி உள்ளேயும் பெட்டி வெளியேவும் இருக்க பின்னால் திரும்பி பார்க்காமலே இழு என்று இழுத்து சிம்பிக்கொண்டு இருந்தாள்...
திரும்பிபார்த்தால் அசிங்கம் என்று அந்த பதுமை நினைத்து இருக்கலாம்..அனால் ஆண்டவன் பதுமையை திரும்பி பார்க்க வைத்தார்....டோரை ஸ்டைலாக ஷிட் என்று சொல்லி திறக்க முயற்சிக்க அந்த பதுமையால் முடியவில்லை..பின்னால் வந்த கேன்டீன் பையன் கதவை திறந்து உதவிசெய்தான்..அவனுக்கு சலிப்பாக நன்றி சொல்லிவிட்டு இத்தனை பேர் பார்க்க அந்த சின்ன அசிங்கம் நடந்து விட்டதால் உற்சாகம் வடிந்து, அலட்டல் இல்லாத நடை நடந்து பதுமை சீட்டை ஆக்கிரமித்துக்கொண்டது..
சதாப்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைப்பதற்கு பதில் தின்னுக்குளி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்து இருக்கலாம்..
முதலில் எல்லோருக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கபட்டது...
ஒரு பத்து நிமிடம் கழித்து ஒரு புருட்டி பாக்கெட் கொடுத்தார்கள்..
அடுத்து ஒரு கால் மணி நேரம் கழித்து பிரட் சாண்ட்வெஜ்,சமோசா,ஒரு ஸ்வீட்டாக பாதுஷா...சமோசாவுக்கு டோமேட்டே சாஸ் வித் பேப்பர் நாப்கின்
அதன் பிறகு காபி அல்லது டீ.....
திரும்ப கால் மணி நேரம் கழித்து இரண்டு பிரட் ஸ்டிக்ஸ் வித் வெஜிட்டபிள் சூப்...பிரட் ஸ்டிக்ஸ் தொட்டுக்கொள்ள அமுல்யா வெண்ணை சின்ன பாக்கெட்...
ஒரு அரைமணிநேரம் கழித்து நைட் டின்னர்.... சப்பாத்தி,தால்,அவியல் ஊறுகாய்,பெரிய கப்பில் தயிர்,ஒரு கப் ஜீரா ரைஸ்.. எல்லாம் முடிந்து ஒரு ஸ்டாப்பெரி ஐஸ்கிரிம்
மேலே சொன்ன எல்லா தீனிகளையும் மாலை ரயில் 5,30க்கு கிளம்பி இரவு ஒன்பதுக்குள் கொடுத்து முடித்து விட்டார்கள்..
நான் டெல்லிக்கு இரண்டுநாள் பயணமாக ரயிலில் சென்ற போது நாக்கு வரண்டு பயணித்த காலத்தை நினைத்து பார்த்தேன்..எங்காவது ரயில் நிற்க்காதா? நாக்குக்கு ருசியா சாப்பாடுகிடைக்காதா என்று பயணித்து இருக்கின்றேன்...வாரங்கல் தண்டியவுடன் பிரட் ஆம்லேட் தின்னு தின்னு வாழ்க்கை வெறுத்து போய் இருக்கின்றேன்...
ரயில் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் பலர் லேப்டாப்பை திறந்து லேப்டாப்பில் படங்கள் பார்ப்பது பாடல்கள் கேட்பது மற்றும் ஆபிஸ் ஒர்க் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. திடிர் என்று ரயில் பெட்டி ஒரு ஐடி ஆபிசாக மாறிப்போனது...
ரிங்டோன் அவ்வப்போது அடித்துக்கொண்டு இருந்தது...நேர்த்தியக உடை உடுத்தி இருந்த இளைஞனின் ரிங்டோன் ஜில்லாவிட்டு ஜில்லா வந்த என் கதையை கேளுய்யா? என்ற பாடல் ஒலிக்க இரண்டு பேர் சத்தம் வராமல் சிரித்தார்கள்..
என் பக்கத்தில் இருந்த ஆண்ட்டியும் மனைவியும் சரளமாக பேசிக்கொண்டார்கள்..ஆண்டியின் சொந்த ஊர் பாலக்காடு தமிழ்பெண்மணி... மனந்து கொண்டது கன்னடத்துகாரரை லவ்மேரேஜ்.. அவர் மாமியார் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு சொன்ன ஒரே வார்த்தை மறந்தும் தமிழில் பேசக்ககூடாது என்றதுதானாம்..பதிலுக்கு எங்கள் காதல்கதை பறிமாறிக்கொள்ளபட்டது...அவரது பிரமாண்ட பையனுக்கு கன்னடமும் ஆங்கிலமும், இந்தியும் தெரியுமாம்....
அவரது ஜன்னல் சீட்டை குழந்தை வைத்து இருந்த காரணத்தால் எங்களுக்கு விட்டுக்கொடுத்தார்.. எனக்கு பக்கத்தில் அவர் உட்கார்நது கொண்டதால் என்னால் வெகு சுலபமாய் வெளியே சென்று வரமுடியவில்வலை..
குழந்தை ஜன்னலுக்கு வெளியே இருக்கும் உலகத்தை தன் கைகளால் உடனே வசப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு இருந்தாள்.. தன்பிஞ்சு கைக்கு சிக்காமல் கடந்து செல்லும் நகரும் உலகத்து பொருட்களை ஜன்னல் கண்ணாடி மேல் அடித்து அடித்து ஆரவாரம் செய்தாள்..
நான் செல்லில் குழந்தையை எடுத்த புகைபடங்கள் பார்த்த ஆன்ட்டி பாராட்டினார்...மேலே எடுத்த இந்த படம் அவருக்கும் ரொம்பவும் பிடித்து இருந்ததாக சொன்னார்.. எனக்கும் இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது...
ரயிலில் கொடுத்த உணவுபண்டங்கள் அத்தனை சுத்தமாக இருந்தன.. சிலர் வெறும் தண்ணீர்பாட்டில் தவிர வேறு எதையும் வாங்கவில்லை..350ரூபாய் கொடுத்து பப்பேவுக்கு வந்து வெறும் தயிர்சாதம் மற்றும் உறுகாய் மட்டும் சாப்பிட்டு சிலர் செல்வது போல அவர்கள் இருந்தார்கள்..
காட்பாடி அருகே ரயில் கிராசிங்கில் பத்து நிமிடம் நின்று பின்பு வேகம் எடுத்தது....
ஏசி வண்டி என்பதால் குட்டி பசங்கள் அடிக்கடி டாயலட் பக்கம் வந்து ஜிப்பில் கைவைத்துக்கொண்டு திற்க்கமுடியாமல் தன் நச்சரிப்பு தாங்காமல் தள்ளாத வயதில் அழைத்து வந்த தாத்தா பாட்டிகளின் உதவியை எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்..
பாடகி வசுந்ராதாஸ் கிராப் வெட்டி இருப்பாரே அதே போல கிராப் வெட்டி உதட்டுசாயம் போட்டு வெள்ளை சட்டையும் பிரவுன் பேண்டும் போட்டு இருந்த பெண்மணி ,தன் மகனை வைத்துக்கொண்டு பட்ட அவஸ்த்தை சொல்லிமாளாது..ரயில்பெட்டியின் கடைகோடிக்கு ஓடிய பையனை பிடித்து தூக்கி நடந்து வரும் போது ரயில் வளைவில் வேகமாக செல்லும் போது பெட்டி சாய, புவியிர்ப்பு விசைமேல் நம்பிக்கை வைத்த வசுந்திராதாஸ் தன் பிள்ளையோடு அருகில் இருந்த சீட்டில் மோதி நொடியில் பயத்தை கண்களுக்கு வரவைத்து சமாளித்து சீட்டுக்கு வந்து பிள்ளையை இரண்டு சாத்து சாத்தினார்...பூவியீர்ப்பு பொய்த்து போன கோப அடியை பையன் வாங்கி கொண்டு வீரிட்டான்..
ஒன்பது மணிக்கு எல்லாம் பெரிய கருப்பு பாலித்தீன் பேகில் எல்லா குப்பையையும் சேகரித்து கட்டி மூட்டையாக வைத்து விட்டு யூனிபார்மில் இருந்து தங்கள் கேஷுவல் உடைக்கு கேண்டின் பையன்கள் மாறினார்கள்..
ரயில் சரியாக பத்தேகால் மணிக்கு கண்டோன்மன்ட் ஸ்டேசனுக்கு வந்து நிற்க்க..நவநாகரிக ஆண்களும் பெண்களும் பிளாட்பாரத்தை வியாபித்துக்கொண்டார்கள்..
அடுத்து ஸ்டேசன் பெண்களூர் என்பதால் நாங்கள் இறங்க தயார்ஆனோம்.. ஆண்டியிடம் ஜன்னல் இருக்கை விட்டுக்கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தோம்...நாங்கள் கேப் பண்ணி இருக்கின்றோம்... நீங்கள் கேப் புக் பண்ணிங்களா என்று கேட்டேன்...அந்த ஆண்டி சொன்னார்... வீட்டில் மூன்று கார் இருக்கின்றது அதில் ஏதாவது ஒன்று பத்துமணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து வெயிட் செய்யும் என்று சொன்னார்..அந்த பிரமாண்ட பையனும் அதை ஆமோதித்தான்.. எனக்கு அவனை பார்க்க ஏனோ பொறாமையாக இருந்தது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
============
குறிப்பு..
எனது பதிவை அப்படியே நக்கல் விடுத்து ஒரு சைக்கோ தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கின்றான்..அடுத்து எனது எழுத்தை தீவிரமாய் காதலிக்கும் வெறிக்கொண்ட சைக்கோ ரசிக்ன் நான் என்ன செய்ய??மாரியாத்தா கோவிலில் கூழ் ஊற்றுவது போல வருடத்துக்கு ஒரு பஞ்சாயாத்தை நான் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றேன்...எழுதி சலித்து ஓடியவர்களே அதிகம்..என்னை விமர்சிக்கு அனானி விருந்தாளிக்கு பொறந்தவன் என்ற வரியை மட்டும் விட்டுவிட்டான்.. சுருக்கென்று மனதில் குத்தி இருக்கலாம்..
உங்க ஸ்டைலில் பதில் சொல்லுங்க என்று ஒரு சில நண்பர்கள் கோவத்துடன் சொல்லுகின்றார்கள்..பச்சா பசங்க,அனானி இவனை எல்லாம் பேசி பெரியாஆளா ஆக்க கூடாது...எழுத தெரியாதவன் எத்தனை தடவைதான் பிளாக் ஆரம்பிச்சி,எழுதனும்னு டிரை பண்ணாலும் அடுத்தவன் எழுத்தை யோக்கியம் பேசுவதுதான் அவனுக்கு வருதுன்னா நாம் என்ன செய்யறது??ஊத்தி மூடி புது பிளாக் ஆரம்பிச்சாலும் இதே நிலைமைதான்..
இன்று மதியமே எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்பது போலசில விஷயங்கள் நடந்ததாகவும் நண்பர்கள் போன் செய்து சொன்னார்கள்..எனக்காய் வாதடிய நண்பர்களுக்கு நன்றி..நிறைய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் இதில் ஆர்வம் இருக்கின்றது...யார் பாலோ செய்கின்றார்கள் என்பதை கூட ஒருவர் லிஸ்ட் எடுத்து அனுப்பி ஜாக்கி இவர்களிடம் நீங்க கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்.. அதுக்குள்ள ஒரு போஸ்ட்டையே எடுத்துட்டானுங்க.. அந்த அளவுக்கு தைரியசாலிகள்...இன்று மதியம் நிறைய கமெனட்டை நண்பர்கள் பார்த்து இருக்கின்றார்கள்...காப்பி எடுத்து வேறு அனுப்பி இருந்தார்கள்..திரும்பஅந்த கமென்டுகள் டெலிட் ஆகிவிட்டதாம்..கமென்ட் படித்தேன். அதிர்ந்து போனேன்..அந்த கமென்டுகளை பத்திரமாய் நான் சேவ் செய்து வைத்து இருக்கின்றேன்..சின்ன உலகம் என்பதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்...இன்னும் அதிகமாக உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்..அப்போதுதான் நேரில் சந்திக்கும் போது பேச வசதியாக இருக்கும்...
===========
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இது என்னோட முதல் கமெண்ட்.. சும்மா நச்சுனு இருக்கு சார் உங்க எழுத்து.. நானும் பெங்களூர் போய் இருக்கேன் அத பத்தி எழுத சொன்ன ஒரு மண்ணும் தெரியாது.... உங்க பிளாக் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு... பட் சார், உங்க பெர்மிசன் இல்லாம என் பிளாக்ல நீங்க தான் என் பதிவுலக தலைவர்னு போட்டுடென்... சாரி சார்...
ReplyDeleteவிடுங்க ஜாக்கி உங்களுக்கு இலவச விளம்பரம்
ReplyDeleteசதாப்தி போலவே இந்த கட்டுரையும் அருமை
ReplyDelete\\பாடகி வசுந்ராதாஸ் கிராப் வெட்டி இருப்பாரே//
ReplyDeleteஇந்த பத்தியை இரண்டு முறை படித்தேன் ..... ஆனாலும் அண்ணே இந்த மாதரி உன்னிப்பா கவனிக்கிற விஷயத்தில் உங்களை யாரும் அடிச்சிக்கவே முடியாது.. :)
அலட்டல் நடை பெண்ணின் லக்கேஜ் கதவில் மாட்டியதைத் தொடர்ந்த அந்த பெண்ணின் செய்கைகள் பற்றிய உங்கள் வரிகள் அருமை...
ReplyDeleteஅப்புறம் நீங்க சொன்ன உங்கள் எழுத்துக்களை வைத்து கலாய்த்து எழுதிய அந்த தளத்தில் நானும் கமென்ட் போட்டேன். அதுவும் வெறும் ஸ்மைலி தான்...ஏனோ அதை படித்தவுடன் சிரிக்காமல் இருக்க முடியவில்லை... தங்களை பாதித்து இருந்தால் மன்னித்துவிடுங்கள்...
ReplyDeleteanna seems ilavarasanr.blogspot.com writing this page. and also he changed his site as donashok.blogspot.com( due to this print screen photos as you mentioned before he might have changed i think)
ReplyDeleteand chk his facebook page he mentioned ur name as same. make a copy of it.
regards
priya
Super sir.
ReplyDeletenice description about the IT office inside the Coach :) . i like it very much. it becomes so common these days... every where
ReplyDeleteகலக்கல் பதிவு ஜாக்கி. நானும் உங்கள் கூடவே பிரயாணம் பண்ணியது போல் இருந்தது
ReplyDeleteஅட... ரோட்டுல போகும் போது தூசி பறந்தா, நாம கொஞ்சம் விலகி நடந்துக்கிறது தான் நல்லது... ஏன்னா, தூசி மூக்குல போச்சுனாலோ, கண்ணுல விழுந்தாலோ நமக்கு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... அந்த தூசியை எல்லாம், அடக்க நிச்சயமா மழை வரும்... அதனால இந்த அனானிகளை பற்றி கவலைப்படாம நீங்கபாட்டுக்கு எழுதுங்க பாசு... அப்புறம் யாழினியோட முகத்தை படம் பிடிச்சு போடுங்க பாசு... மூணு மாசத்துல குழந்தைகளோட முகம் இன்னும் தக தகன்னு அழகாயிடும்...
ReplyDeleteஅப்புறம் நீங்க சாப்பிட்ட அத்தனை ஐட்டத்துக்கும் சேர்த்து தான் டிக்கெட்ல காசு வாங்கி இருக்காங்க... அதுனால நல்லா கட்டு கட்டுன்னு கட்டுறதுல தப்பே இல்ல...
நல்ல பதிவு சார்
ReplyDeleteஜாக்கி!
ReplyDeleteபோலி பிளாக் அருவருப்பான விஷயம்.
இந்த விஷயத்தில் என்னுடைய நூறு சதவிகித தார்மீக ஆதரவினை தங்களுக்கு தருகிறேன்.
மிக்க நன்றி நண்பர்களே..
ReplyDeleteமிக்க நன்றி யுவாகிருஷ்னா, ரோமியோ,
எங்கள் ஊருக்கு பிராட்கேஜ் வரப்போகிறது என்று சொல்லி இருந்த மீட்டர் கேஜையும் காலி செய்து மூன்று வருடம் ஆகுது. இன்னும் எத்தனை பத்தாண்டுகள் ஆகும்னே தெரியல. நீங்க சதாப்தி, தசாப்தின்னு எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறீங்க. நடத்துங்க. அடுத்தது ராஜதானியா ?
ReplyDeleteசீனி மோகன், உடுமலைப்பேட்டை.
nice post . . .
ReplyDelete