பதிவுலகில் இருக்கும் நட்புகளின் பலத்தை பல முறை நான் உணர்ந்து இருக்கின்றேன்..அதனாலே தொடர்ந்து பதிவுலகில் இயங்கி கொண்டு இருக்கின்றேன்..
எனக்கு பிடித்தமானவர்களிடம் மட்டுமே நான் பேசுவேன்.. அப்படி நான் அவர்களிடம் பேசுகின்றேன் என்றால் நான் பேசுவது ரொம்பவும் உரிமையாகவும் இருக்கும்.. அவர்களிடம் மட்டுமே நான் விவாதம் செய்வேன்...உறவினர்கள் இல்லாத இந்த சென்னையில் உறவுகள் அதிகம் பெற்றுக்கொடுத்தது இந்த பதிவுலகம்தான். உறவுகள் கூட கணக்கு பார்க்கும் வரவு செலவை யோசிக்கும்... பதிவுலக நண்பர்கள் அப்படிபட்டவர்கள் அல்ல...
பொதுவாய் பதிவர் சந்திப்பு சென்னை பூங்கா மற்றும் கடற்கரையில் சந்திப்பு நடக்கும்... மெரினா காந்திசிலைக்கு பின் பதிவர் சந்திப்பு எவர்வந்தாலும் எவர் வராவிடாலும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடக்க ஆரம்பித்தது.. இப்போதும் அப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது...பொதுவாய் மெரினா காந்திசிலை பதிவர் சந்திப்பு சேவல் பண்ணைக்கு சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்..
முதலில் காந்திசிலையின் வலப்புறம் ஒன்று சேர்ந்து கூட்டம் அதிகம் ஆனால், கடற்கரை மணலில் ஒரு முழுவட்டமாய் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டு லைட் ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் டீ,மசாலா பால், தம்மு, பாக்கோடு பதிவுலக சண்டை, இடஒதுக்கிடு,திமுக அதிமுக அரசியல் நிலைப்பாடு என்று மாலை ஆரம்பிக்கும் கடற்கரை கூட்டம் இரவு எட்டரை வரை போய் எல்லோரும் பிரிந்து போய்கொண்டு இருக்கும் போது ஒரு ஐவர் கொண்ட தனிக்குழு மட்டும் சக்திக்கு ஏற்றது போல டாஸ்மார்க் அல்லது பாரில் தாகசாந்தி அடைந்து விட்டு வீட்டுக்கு போய் விடும்...
முதன் முதலில் சென்னை பதிவர்கள் சங்கம் ஆரம்பிக்கலாமா? என்று ஒரு கூட்டத்தை டிஸ்கவரி புக்பேலஸ் மாடியில் போட்ட போதுதான் பெண் பதிவர்கள் இரண்டு மூன்று பேர் தலைக்காட்டினார்கள்.. அப்போதுதான் விதூஷ் போன்றவர்களை நான் பார்த்தேன்..
அதன் பிறகு பழைய பதிவர்கள் ஒரு சிலரை தவிர பிளாக்கில் தீவிரமாக இயங்காமல் கூகுள் பஸ்சில் இயங்க ஆரம்பித்தார்கள்..அது இன்னும் வட்டத்தை சுருக்கி நெருங்கிய நட்புகளுடன் அரட்டை மற்றும் அரசியலாக மாறி ஒரு கம்போர்ட் ஜோனுக்குள் புகுந்துகொண்டார்கள்......ஆனால் பிளாக்கை விட கூகுள் பஸ் ஒரு நேர விழுங்கி...
கூகுள் பஸ்சில் நிறைய பெண்கள் தலைகாட்ட ஆரம்பித்தார்கள்.. காரணம் இது ரொம்ப சேப்ட்டி எல்லோரும் தெரிந்தவர்கள்..
முதலில் ழ கபேயில் நண்பி சக்தி வருகின்றார் சந்திக்கலாமா? என்று பெண்களுக்குள் பேசிக்கொண்ட பஸ்சில் மெல்ல மெல்ல நேரம் இருப்பின் ஆண்களும் கலந்து கொள்ளலாம் என்று மாறி அது பெரிய பதிவர் சந்திப்பாக மாறிப்போனது பெருத்த ஆச்சர்யமே..
இந்த முயற்சியை முன்னெடுத்து வெற்றி பெற்ற விதூஷ்க்கு என் நன்றிகள்..
சனி மற்றும் ஞாயிறு இறுதிநாட்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளில் ஆண்கள் கூட்டம் இருபது முப்பது பேர் வருவார்கள்..ஆனால் வேலைநாளான வியாழக்கிழமை அன்று நாற்பது பேர் தங்கள் அலுவல் பணிகள் இருந்தும் தலைகாட்டியது பெரிய விஷயம்.. பெண்கள் எட்டுபேர் கலந்து கொண்டார்கள்.. தம்பதி சமோதரமாய் சக்தி மற்றும் சென் வருகை தந்தார்கள்.. அப்துல்லா, வித்யா,சக்தி போன்றவர்கள் தங்கள் குழந்தைகளையும் இந்த பதிவர் சந்திப்புக்கு அழைத்து வந்தது இதுவே முதல் முறை..
மாலை நாலு மணிக்கே ழ கபே பதிவர்களால் நிறைந்து காணப்பட்டது..காபியோடு,சாண்டவிச்,கருவேப்பிலைசூப் என அரட்டை களைக்கட்டியது...நிறைய புதுமுகங்கள் வந்து இருந்தார்கள்..
ழ கபே... ஒரு வீட்டை அதன் பழமை மாறாமல் நண்பார்கள் இளைப்பாறும் ஒரு இடமாக அதனை மாற்றி இருந்தார்கள்.
நல்ல சந்திப்பு, குடும்பத்தினருடன், நெருங்கிய நண்பர்களுடன்,ஒரு கெட்டு கெதராக இந்த சந்திப்பு இருந்தது..
எல்லோரும் ழ கபேயில் விடைபெற்றும் கிளம்பும் போது இரவு எட்டுமணி ஆனாது...
நல்ல சந்திப்பை பெரிய அளவில் நடத்தி தலைமை தாங்கிய விதூஷ் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்..
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
Thanks for sharing annaa
ReplyDeleteநீங்கள் எல்லாரும் வந்திருந்தது ரொம்ப சந்தோஷம். நன்றி ஜாக்கி. :)
ReplyDeleteழ கபே எங்கே உள்ளது?
ReplyDeleteநான் மிஸ் பண்ணிட்டேன் ஜாக்கி
ReplyDeleteமிக அருமை ஜாக்கி:)
ReplyDeleteநன்றி
ReplyDelete//வேலைநாளான வியாழக்கிழமை அன்று நாற்பது பேர் தங்கள் அலுவல் பணிகள் இருந்தும் தலைகாட்டியது பெரிய விஷயம்//உண்மைதான் ஜாக்கி . permission கிடைக்கிற வரைக்கும் சந்தேகமாகவே இருந்தது.
நானும் ஒரு Blogger என்று சொல்ல பெருமைப்படுகிறேன்.....
ReplyDeletehttp://tamilpadaipugal.blogspot.com
/ ழ கபேயில்/
ReplyDeleteஅப்படியென்றால் புரியலயே..
பகிர்வுக்கு பாராட்டுக்கள்...
Memorable Moments!.....
ReplyDeleteநான் அடையாரில்தான் இருக்கிறேன். தெரியாமப்போச்சே!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநீங்கள் அந்தந்த புகைப்படங்களின் கீழ் பெயர்களையும் எழுதியிருந்தால் எழுத்தில் பார்த்தவர்களை நாங்களும் நேரில் பார்த்தார் போன்ற உணர்வு ஏற்படும்.
இன்று (5.8.11) திரு அருணகிரியும் திரு தினேஷும் சதுரகிரி மலை போவதற்காக இங்கு (ஸ்ரீ வில்லிபுத்தூர்) வந்திருந்தார்கள். சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சி.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
ஓ... மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும் நட்பின் வட்டம் ஒழியட்டும் பொறாமையும் தீமையும்..
ReplyDelete