Cowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திரைவிமர்சனம்




ஸ்பீல்பெர்க் புரோட்யூசர்... ஏலியனுக்கும் கௌபாய்க்கும் ஏதோ சம்பந்தம் வேற படுத்தறாங்க அதனால இந்த படத்தை தியேட்டர்ல போய் முதல் நாளே பார்த்து விடுவோம்..
போனா வராது பொழுது போன கிடைக்காது என்பது போல் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி காட்சிக்கு மோட்சம் போனேன்...இந்த படத்தை மினி மோட்சத்தில் போட்டு இருந்தார்கள்... மினி மோட்சம் ஒரு கோமண  துணி போல இருக்கும் தியேட்டர்.. ஏன் மோட்சத்தில் போடவில்லை என்று கேட்ட போது காஞ்சனாமுனி பார்ட்டு 2 நன்றாகவே  போய் கொண்டு இருக்கின்றது என்பதால் மினியில் போட்டு இருப்பதாக  சொன்னார்கள்....

 ================

Cowboys & Aliens-2010 படத்தின் கதை என்ன??



1873 அரிசோன மாகானத்தில் லோனர்(டேனியல் கிரிக்) தான் யார் என்று  அவனுக்கே தெரியாமல்...மயக்கத்தில் இருந்து எழுந்துரிக்கின்றான்..



அது ஒரு சிறு நகரம்.. அந்த நகரத்தில் திடிர் திடிர் என்று மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளினால் சிறைபிடிக்க படுகின்றார்கள்... அவர்களை காப்பற்ற மக்கள் ஒன்று திரள்கின்றார்கள்..



லோனர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றான்...ஆனால் அவன் கையில் ஒரு காப்பு இருக்கின்றது..அதன் மூலம் ஏலியன்களை சுட முடிகின்றது...அதே கௌபாய் நகரத்தில் இருக்கும் பெரிய பணக்காரரும் பவர்புல் பண்ணைக்காரருமான ஹாரிசன் போர்டு மகனும்  ஏலியன்களால் கடத்தபடுகின்றான்...

லோனர் தான்  யார்  என்ற விடையையும், அவ்ன கையில் இருக்கும் சக்திமிக்க காப்பு எப்படி வந்தது என்பதையும், ஏலியன்களை கடத்தி சென்ற மக்களை விடுவித்தார்களா?? என்பதை திரையில் பாருங்கள்...



==============

படத்தின் சுவாரஸ்யங்கள்..



காமிக்ஸ் கதையை அதே பெயரில் செல்லுலாய்ட்டில் பதியவைத்து வெளிவந்து இருக்கும் இந்த படம் அவ்வளவு சுவாரஸ்யமாய் இல்லை என்பதே உண்மை..



எலியன்கள் கௌபாய் காலத்தில் எப்படி இருந்து இருக்கும் என்று  கொஞ்சமாக யோசித்து இருக்கின்றார்கள்...



ஏலியன்கள்  பூமியில் தங்கத்தை எடுக்க வந்து இருக்கின்றார்கள் என்று கொஞ்சம் காதில் பூ வைக்கின்றார்கள்..



எலியன்களிடம் சக்கையாக கிளைமாக்சில் நமது மனிதர்கள் உதை வாங்குகின்றார்கள்..அதுவே இந்த படத்துக்கு மைனஸ்..



டேனியில் கிரீக் சில காட்சிகளில் ஸ்மார்ட்டாக இருக்கின்றார் மற்ற படி சொல்ல ஏதும் இல்லை..



ஹாரிசன் போர்டு கிழசிங்கமாக மாறி நகரமுடியாமல் இருக்கின்றார்...

சிரி பிகருங்களாவது சொல்லிக்கொள்வது போல இருக்கின்றதா? அதுவும் இல்லை..




=======

படக்குழுவினர்விபரம்..





Directed by     Jon Favreau



Starring           Daniel Craig

Harrison Ford

Olivia Wilde

Music by         Harry Gregson-Williams

Cinematography          Matthew Libatique

Editing by       Dan Lebental

Studio             DreamWorks Pictures

Reliance Entertainment

Relativity Media

Imagine Entertainment

Distributed by             Universal Pictures (United States)

Paramount Pictures (International)

Release date(s)            July 23, 2011 (Comic-Con)

July 29, 2011 (United States)

Running time 118 minutes

Country           United States

Language        English

Budget            $163 million

Box office       $40,707,340

================

பைனல் கிக்...

டைம்பாஸ்படம் அவ்வளவுதான்....அதுக்கே நிறைய யோசிச்சு சொல்ல வேண்டி இருக்கு..


 =========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


1 comment:

  1. கௌபாய் அண்ட் ஏலியன்ஸ் படத்தை மோட்சதில்தான் நானும் பார்த்தேன் .
    பிரிண்ட் சரி இல்லையா , அப்ரடோர் சரி இல்லையா தெரியல . சுமார்தான் .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner