சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(22/08/2011)

ஆல்பம்..

125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா என்று நேற்று முதல்வர் ஜெவுக்கு ஸ்டாலின் பட்டப்பெயர் வைத்து இருக்கின்றார்..
இப்போது வேண்டுமானால் முதல்வாராக அயாரத மக்கள் பணி காரணமாக அவரால் பெங்களூர் செல்லமுடியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்..ஆனால் கடந்த ஐந்து வருடமாக என்ன பணி காரணமாக அவர் வாய்தா வாங்கினார் என்று தெரியவில்லை...முதல்வர் பொறுப்பில் இருப்பவர் மேல் சொத்துகுவிப்பு குற்றச்சாட்டு உள்ளது அதில் இருந்து அவர் குற்றமற்றவர் என்று நிருபித்து விட்டு வெளியே வருவதையே   பொதுமக்கள் விரும்புவார்கள்...

=====================
அன்னா அசாரேவுக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு வலுத்து வருகின்றது... இது அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார் என்பதே  உண்மை...இன்றைய பெங்களூர் டைம்ஸ்ஆப் இந்தியாவில் எல்லா  சாலைகளும் ரோம் நகரத்து நோக்கி செல்வது போல, மக்கள் அன்னா அசாரேவை நோக்கி  செல்வதாக இன்றைக்கு தலைப்பு வைத்து இருக்கின்றது...

=========================
சென்னை சரவணாஸ்டோரில் வருமானவரித்துறை விடியவிடிய நடத்திய ரெய்டில் 150 கோடி ரூபாய் அளவுக்கு அள்ளிக்கொண்டு போய் இருக்கின்றார்கள்.. கால்கடுக்க நின்று காலையில் இருந்து ராத்திரி வரை உழைத்த பிள்ளைகளுக்கு கொஞ்சம் கிள்ளிக்கொடுத்து இருந்தால் கூட, காலம் முழுவதும் விசுவாசமாய் இருந்து இருப்பார்கள்...நம்ம கிட்ட வேலை செஞ்ச பயலுவலுக்கு நாம செஞ்சோம் என்ற மனநிறைவாவது இருந்து இருக்கும்... எத்தனை பசங்க அன்னைக்கு நைட் சந்தோஷமா குவாட்டர் அடிச்சாங்களோ???
==========================
பார்த்து என்ஜாய் பண்ணுங்க..


முதலில் மிக அழகான கலைக்கா மெனக்கெட்ட இந்த குழுவினருக்கு வாழ்த்துகள்.. அந்த உடைந்த பனி மீது நின்ற படி போஸ் கொடுப்பது சான்சேஇல்லை...
========

மிக்சர்..
கடந்த இரண்டு வாரமாக இண்டர்வியூ,பெண்களுர் பயணம்,பெண்களுர் நண்பர்களை சந்தித்தல், மலர்கண்காட்சி,ஆன்மீக சுற்றுலா, சினிமா என்று ஒடிக்கொண்டு இருக்கின்றது....
நிறைய நல்லவாயப்புகளை தவறவிட்டேன்...சிலர் கொடுத்த நம்பிக்கை காரணமாக...பட் அதுவும் பொய்த்து போய் விட்டது.. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.. முயற்சி செய்தார்களே.. அதுவே போதும்... என்ன நல்லவேலையில் இந்நேரம் செட்டில் ஆகி இருப்பேன். நேரம் என்ன செய்ய??
==============
ரொம்ப நாளைக்கு பிறகு இண்டர்வியூக்களுக்கு செல்கின்றேன்..கடந்து ஒருமாதமாக  இதான் வேலை..எனக்கே இது புது அனுபவமாக இருக்கின்றது..பெங்களுரூலேயே இரண்டு இண்டர்வியூ அட்டன் செய்தேன்..சென்னையில் ஒரு பிரபல சினிமா பத்திரிக்கையில் போட்டோகிராபர் கம் ரிப்போர்ட்டர் பதவிக்கு இண்டர்வியூவுக்கு சென்றேன்..ஒரு கொஸ்ட்டின் பேப்பர் கொடுத்து எழுத சொன்னார்கள்.. சந்திரமுகி எந்தமொழி படத்தின் ரீமேக்.. ஜோதிகா பாத்திரத்தை செய்தவர் யார்? என்பது கேள்வி...

ஜோதிகா பாத்திரத்தை செய்தவர் ஷோபனா என்று எழுதிவிட்டேன்... சரியாக முக்கால் மணிநேரம் யோசித்தேன்..அம்மே,என்டசேட்டன்,தேண்மாவின் கொம்பத்தேன்,புட்டு,எர்ணாகுளம்,போட்ஹ்வுஸ்,சொப்பனக்கூடு, ஷகிலா, அஞ்சரைக்குள்ள வண்டி, மீசைமாதவன், சிபிஐடைரிகுறிப்பு,கதைபறையும் போல்,அய்யர்த கிரேட்,நான் பட்டில்லா, என்று என்ன  என்னகருமமோ நினைவுக்கு வந்து தொலைத்தது.. ஆனால்  ங்கோத்தா மணிச்சித்ரத்தாழ் என்ற அந்த வார்த்தை மட்டும் வரவேயில்லை..ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் அல்ல 45 நிமிடங்கள் அந்த தலைப்பு நினைவுக்கு வர போராடினேன்.. ஆனால் இனி மணிச்சித்ரதாழ் என் உயிர் இருக்கும் வரை மறக்காது...சார் ஒரு வாரம் கழிச்சி போன்  பண்ண சொன்னிங்க...?

உங்க பேர் உட்பட ஒரு 5 பேரை செலக்ட் பண்ணோம்..

நிர்வாகம் பிரஷ்ஆனா ஆட்கள் இரண்டு பேரை எடுத்து விட்டது என்று சொன்னார்கள்... சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் மலையாளத்தில் நடித்தது ஷோபானா என்று சரியாக எழுதினேன்... வந்தவர்கள் அத்தனை பேரும் மணிச்சித்ரதாழ் என்று எழுதினார்கள்... ஆனால் ஷோபனா பேரை எழுதவில்லை...ஷோபனா பேரை எழுதிய ஒரே காரணத்துக்காக எனக்கு வேலை கொடுத்து இருக்கலாம்...ஒரு வேளை ஷோபனா ரவி என்று எழுதி இருக்க வேண்டுமோ???


=================

நாளை ஈரோட்டில் ந்ண்பருக்கு திருமணம்.. அதனால் செவ்வாய் மாலை மற்றும் புதன்கிழமை காலை வரை ஈரோட்டில்.....திரும்ப பேங்களூர்... இந்த வார இறுதியில் சென்னை...
============
பார்த்து ரசிக்க இந்த வீடியோ...


=============
இந்தவாரகடிதம்..
அன்பன் ஜாக்கிசேகருக்கு வணக்கம் .
                                                                    நான் வினோத் குமார் , எனது ஊர் காங்கயம் .நான் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை பயன்ப்பாட்டு வேதியியல் முதலாமாண்டு படித்து வருகிறேன் . நானும் உங்களைபோல் இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்து  பார்த்து வருபவன் தான் . உங்களது வலைபதிவை தொடரும் அன்பர்களில்  நானும் ஒருவன் . நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு ஏக்கம் இருந்து வருகிறது . பெரும்பாலும் நல்லா திரைப்படங்களை விரைவில் பார்த்து விடுவேன் . ஆனால் கடந்த ஆண்டு ரீலிஸ் ஆன "பாபா சாகேப் அம்பேத்கர் " படம் மட்டும் என்னால் பார்க்க முடியாமல் போனது . இந்த திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் ரீலிஸ் செய்யப்படவில்லை . இருந்தாலும் கோவையில் ஒரு திரையரங்கில் ரீலிஸ் செய்திருந்தனர் . ஆனால் நான் போன சமயம் அந்த படம் விரைவாகவே  மாற்றப் பட்டிருந்தது . பிறகு திருப்பூரில் ஒரு சில தமிழ் இயக்கங்கள் படத்தை ரீலிஸ் செய்ய முயற்சி எடுத்து தேதியும் அறிவித்தன .ஆனால் ஒரு சில மனிதர்களின் ஆதிக்கத்தின் காரணமாக படம் ரீலிஸ் ஆகவில்லை . இன்னும் என் மனதில் அந்த படம் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் இருந்து வருகிறது . இந்த அருமையான திரைப்படம் நான் பார்ப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா ? dvd வடிவிலாவது இந்தப் படம் கிடைக்குமா ? அப்பிடி எதாவது வாய்ப்பிருந்தால் தயவு செய்து கூறுங்கள் . உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு என்னை மன்னிக்கவும் . நன்றி அன்பரே .   

==============================
அன்பின் வினோத்குமார்...

நானும் அந்த படத்தின் டிவிடி தேடி வருகின்றேன்...  அப்படி  கிடைத்தால் மறக்ககாமல் தெரிவிக்கின்றேன்... வந்து  பெற்றுக்கொள்ளவும்... உங்களுக்கு கிடைத்தால் எனக்கு மறக்காமல் கொடுக்கவும்....

நன்றி.

================

இந்தவார விண்ணப்பம்..

ஈரோடு கேன்சர் பெண்ணுக்கு 45ஆயிரம் இந்தபிளாக் வழியாக உதவி கிடைத்து இருக்கின்றது...மைதிலி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிகிடைத்து இருக்கின்றது..அதனால் நியாமான உதவிகளை இந்த இடத்தில் பிரசுரிக்கின்றேன்..உதவி செய்பவர்கள் உதவி செய்யட்டும் அல்லது பெறட்டும்... எந்த கட்டாயமும் இல்லை...
=======
 ஆனால் இந்த விண்ணப்பம் சற்றே வித்யாசமானது.. இது கலை... மைக்கேல்மதனகாமராஜ் படத்தில் நாடகம் போட்டு பயர் சர்விசில் வேலை செய்யும் கமல் கடனாளியாக இருப்பரே... அது போல கலைக்காக நேரத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கும் ஒரு நண்பருக்கு பண உதவி தேவை... அழிந்து போகும் கலையான தெருகூத்தினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல  பணஉதவிதேவையாய் இருக்கின்றது... ஆர்வம் இருப்பவர்கள் பங்கெடுத்து கொள்ளுங்கள்...
===============
வணக்கம்,

நண்பர் மணலிவீடு ஹரிகிருஷ்ணன் நீண்ட நாட்களாகவே தெருக்கூத்து கலைஞர்களின் நலனுக்காக பல்வேறு வகையில் உழைத்து கொண்டிருக்கிறார். 'Portable Stage'- பெயர்த்தகு மேடை ஒன்று தயார் செய்யலாம்
அக்கலைஞர்களுக்கு உதவியாக இருக்குமென பிரியப்படுகிறார்.கூடவே ஒரு ஆவனப்படமும் எடுக்க அவா. தங்கள் தளத்தில் இக்கடித்தை பிரசுரித்து தெருக்கூத்து கலைஞர்களுக்கு உங்க வாசகர்களை முடிந்தளவு பொருளுதவி செய்ய வேண்டுமாய் கோருகிறேன்.

 தொடர்புக்கு மணல்வீடு ஹரிகிருஷ்ணன் -9894605371

                                                                   M.Harikrishnan,
                                                                  A/c no: 534323956
                                                                  Indian Bank,
                                                                  Mecheri. 636451

                                                                   Micr Code :  636019092
                                                                   IFSC Code: IDIB000M025


நன்றியுடன்
மயில்ராவணன்.
=============


 =
பிலாசபிபாண்டி...
பப்ளிசிட்டியில் நல்ல பப்ளிசிட்டி கெட்ட பப்ளிசிட்டி என்று எதுவும் இல்லை அதனால் பப்ளிசிட்டி கிடைத்தால் அதைவரவேற்க்கவேண்டும்...

================
நான்வெஜ்18+

அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு ஒரு பிரைஸ்ட்டோட ஒரு பெண் பயணம் செஞ்சா...லண்டன் கிட்ட போறசமயத்துல பிரைஸ்ட்கிட்ட ஒரு உதவி செய்யமுடியுமான்னு கேட்டா.. சொல்லும்மான்னு சொன்னார்.. என்னோட ஹேர் டிரையர் ரொம்ப காஸ்ட்லி கஸ்டம்ஸ்ல மாட்டினா காசை தீட்டிடுவாங்க.. அதனால உங்க ஜட்டி உள்ள வச்சி மறைச்சி எடுத்து வந்து வெளிய கொடுக்க முடியுமான்னு கேட்டா.. ஓகே ன்னு சொல்லிட்டார்... செக்கில் பிரைஸ்ட்ட  செக் பண்ணாம நீங்க எதாவது சொல்லி விரும்புரிங்களான்னு கேட்க, உண்மையை சொல்லிடனும் அந்த பொண்ணு மாட்டிகிட்ட மாட்டிகிட்டும்னு உண்மையை சொல்ல ஆரம்பிச்சார்... தலையில் இருந்து இடுப்புவரை என்னிடத்தில் எதுவும் இல்லை... ஆனால் இடுப்புக்கு கீழே பெண்ணுக்கு தேவையான முக்கிய பொருள் என்னிடத்தில் இருக்குகின்றது.. அது புதியது இதுவரை பயண்படுத்தியதில்லைன்னு சொல்ல கஸ்டம்ஸ்ல சிரிச்சிகிட்டே அவரை அனுப்ப்பிட்டாங்களாம்..

 ===

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
============
நினைப்பது அல்ல நீ..
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

 1. விரைவில் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Jackie,
  Searching for new job is hard but result is worth the effort. Best wishes for finding a good job.

  P.S: Nice social service by posting the help wanted alerts.

  ReplyDelete
 3. கெட்டவங்களுக்கு சாமி நிறைய கொடுக்கும் ஆனா கை விட்டுடும்..நல்லவங்களுக்கு சாமி ஒன்னுமே கொடுக்காது,ஆனா கடைசில எல்லாமே கிடைக்கும்... உங்களுக்கும் நல்ல வேலை கிடைத்து அந்த அனுபவத்தையும் விரைவில் பதிவு பண்ண என் வாழ்த்துகள்....

  ReplyDelete
 4. உங்கள் பகுதியில் என் பிளாக் முகவரியை போடலாமா..? http://www.sathishmass.blogspot.com
  விருப்பம் இருந்தால் மட்டும் வெளியிடயும்..

  ReplyDelete
 5. ஜாக்கி சாரே... ஈரோடுல எந்த திருமண மண்டபம்?

  ReplyDelete
 6. நண்பா ஜாக்கி,

  சோதனைகளும், வேதனைகளும் வந்திடுச்சா?? இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கஷ்டப் படுங்கள்.

  அடுத்தது சாதனைகள் தான்...

  ReplyDelete
 7. நண்பர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களே கூத்துக்கலைஞர்களைப்பற்றிம அந்த ஆவணப்படத்தை இயக்குகிறாறா? இல்லை அல்லது ஆர்வமும், அனுபவமும் உள்ள குறும்பட இயக்குனர்களுக்கு அந்ந வாய்ப்பை தருகிறாறா?

  ReplyDelete
 8. வினோத்குமார் "அம்பேத்கார்" திரைப்படம் த.மு.எ.க.ச வின் முன்முயற்ச்சியால் திருப்பூரில் 4நாட்கள் ஸ்ரீனிவாசா திரையரங்கத்தில் திரையிடப்பட்டது நீங்கள் தாம் தவறவிட்டுவிட்டீர்கள் என் நண்பரிடம் அந்தபடம் இருப்பதாக கூறினார் இருப்பின் அதை அப்லோடு செய்துவிட்டு லிங்க் அனுப்புகிறேன்

  ReplyDelete
 9. Hi Jackie,

  Wish you all the very best for your job search. I found the following link to view the Dr. Babasaheb Ambedkar movie online. If you are interested you can watch from the following link. The link is http://www.cinefind.com/watch-free-movie-online/watch-online-movie.php?ln=hindi&movname=Dr.%20Babasaheb%20Ambedkar

  Thanks
  Sivaprakasam G

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner