தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/2011)

 ஆல்பம்.
இன்னும் இரண்டு நாட்களில் சமச்சீர்கல்விக்கு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டு  விடும்..
இருந்தாலும் குழப்பங்கள் தீர்ந்து போகாது.. அது இந்த ஆண்டு  முழுவதும் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்க போகின்றது.. லட்ச்சக்கணக்கான பிள்ளைகளின் கல்விக்கான பொன்னான நேரங்கள் பாழாக்கப்பட்டு விட்டன..கடந்து போன காலத்தின் மணித்துளிகள் ஒரு போதும் திரும்ப வரப்போதில்லை...
=============
 எவ்வளவுநாள்தான் ஒரு ஆள் கொடுக்கும் தலைவலியை  ஒரு தலைமை பொறுத்துகொண்டு இருக்க முடியும்?? அழுது அழுது இதுநாள்வரை காரியத்தை சாதித்த பெங்களூர் முதல்வர் எடியூரப்பாவை மாற்ற பாஜக கட்சி பகீரதபிராயத்தனம் செய்து இப்போதுதான் அவரை ராஜினாமா செய்ய சொல்லி, அவர் இரண்டு நாட்களுக்கு முன்தான் மசிந்தார்.. அடுத்த முதல்வர் சதானந்த கவுடாவை தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள்...
=============================
கடந்த ஆட்சியாளர்கள் மீது நிலஅகபரிப்பு மோசடி வழக்கு போட படுகின்றது...அதில் சில அப்பாவிகள் மாட்டினாலும் பல பெரும் முதலைகள் மாட்டி இருக்கின்றன..அவர்கள் அந்த குற்றத்தை செய்து இருக்கின்றார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்..

=============

யார் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் தொகைக்கு எற்றது போலத்தான் சட்டம் ஒழுங்கு இருக்கும்...அது யார் ஆட்சியாளராக இருந்தாலும் சரி..ஆனால் ஜெ ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பக்கவாக இருக்கும் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் பொதுவாய் பரப்பினார்கள்...இதையே ஜெவும் ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னார்.. நான் வந்தவுடன் ரவுடிகள் ஆந்திரா பக்கம் ஓடி விட்டார்கள் என்று சொன்னார்..ஆனால் கிரைம் ரேட்டிங்கில் எந்த மாற்றமும் இன்னும் வரவில்லை...பழைய குருடி கதவை திறடிதான்..
================
ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரனை வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. நேரில் வந்து வாக்குமூலம் அளிக்காமல் வீடியோ காண்பரன்சிங்கில் வாக்கு மூலம் செய்ய அனுமதிக்க ஜெ தரப்பு மனு செய்து இருக்கின்றது... பார்ப்போம்..இந்தியாவில் தப்பை பெரிதாய் செய்தால்தான் மதிப்பும் மரியாதையும்...
=============== 
==============
மிக்சர்

இரவு பதினோரு மணிக்கு தூக்கத்துக்கு அழ ஆரம்பிக்கும் யாழினியை என்ன சொல்லியும் சமாதானபடுத்த முடியவில்லை..வயிற்றுவலி இல்லை, நன்றாக விளையாடிக்கொண்டு இருப்பவள் திடிர் என்று அழ ஆரம்பித்து அரை மணி நேரத்துக்கு படுத்தி எடுத்து விடுகின்றாள்...இழுத்து போட்டு இரண்டு  சாத்து சாத்த வேண்டும் என்று கோபத்தை ஏற்படுத்துகின்றாள்..குழநதை காரணமில்லாமல் அழும் காரணத்தை தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பம் எதாவது இருந்தால் சொல்லவும்...
============================
பதிவு எழுதிக்கொண்டு இருக்கும் போது என் மனைவி ஏதோ பேச.. நான் திரும்பாமல் ,எழுதும் போது என்னை டிஸ்டர்ப் செய்யாதே என்று கத்தினேன்..

நேற்றில்
இருந்து நான் சிஸ்டம் எதிரில் உட்கார்ந்து இருந்தால் அவள் எதுவும் பேசுவதில்லை.. எல்லாம் செய்கைதான்... காபி எடுத்து வைத்தாலும் கம்யூட்டர் மேஜையில் இரண்டு தட்டு தட்டி வைத்து விட்டு சென்றாள்... இதுக்கு என்ன அர்த்தம் என்றேன்?? நீதானே சொன்னே சிஸ்டம் எதிரில் உட்கார்ந்து இருக்கும் போது பேச வேண்டாம் என்று..... அதனால் காபியை வைக்கும் போது லொட் லொட் என்று சத்தமாக வைத்தேன் என்றாள்..

தோ பாரு இப்படி சண்டை போட்டா?
சிஸ்டத்தை போட்டு உடைத்து விடுவேன் என்றேன்..

யோவ் தில் இருந்தா இப்ப சிஸ்ட்த்தை உடைச்சி பாருய்யா பார்க்கலாம் என்று சவால் விடுகின்றாள்...

நான் என் செயினை விற்றாவது உனக்கு புது
சிஸ்டம் வாங்கி தரேன் என்று சிட்டிகை போடுகின்றாள்...

நோக்கியா 1100
செல் போனாக கைக்கு அடக்காமானதாக இருந்தாலும் எனது ஈகோவை நிரூபிக்க உடனே உடைத்து இருப்பேன்.....முதலில் மானிட்டரை உடைப்பதா?மானிட்டரை உடைப்பது பெரிய விஷயம் இல்லை மானிட்டர் உடைக்கும் சத்தத்தில் தூங்கும் குழந்தை யாழினி எழுந்து விட்டால்?? சரி சீபியூவையாவது எப்படி உடைப்பது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றேன்....===========
பஸ்சில் ஒரு விவாதம்...அதில் எனது நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் நான் கடிதம் எழுதனால் எப்படி இருக்கும் என்று என்னை போலவே எழுத்து பிழைகளுடன் எழுதி இருந்தார்.. அது ஒரு பெரிய விஷயமே இல்லை.. அவன் என்னை என்னதான் நக்கல் விட்டாலும் எனது தீவிர வாசகன் அவன் அதனால் பிரச்சனை இல்லை...ஆனால் ஆச்சர்யமான விஷயம் வடகரைவேலன் அண்ணாச்சி எனக்கு வரும் ஆங்கில கடிதங்கள் எப்படி இருக்கும்  என்று எழுதி இருந்தார்.. நல்ல அவதனிப்பு இருந்தால் மட்டுமே அப்படி எழுத முடியும்..
அந்த கடிதம் கீழே..
வடகரை வேலன் - ஆங்கிலத்துல அவருக்கு ஒரு கடிதம் வரும்; இப்படி.

Hi Jacky,


I read ur blog for long time. u write ur mind out. I Like ur frankness and boldness.


Why should one fear in expressing one's true inner feelings? U write as it come to your mind.


I always eat my breakfast after reading ur blog. If there is nothing new that day is waste only for me.


Dont bother abt sepling mitsake. infact it adds value to you.


I have one thing to say, "Dogs may bark, you carry on your walk"


Your loving brother

வடகரை  வேலன் அண்ணாச்சி நீங்க  எனக்கு இதுவரை நீங்க ரெண்டே  ரெண்டு பின்னுட்டம்தான் போட்டு இருக்கிங்க..இந்த கடிதம் என் பாக்கியம்... என் பொக்கிஷம்...:)))))))))
 =========
==================
04/08/2011 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் உண்மைதமிழன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

=====================

புதிய தலைமைசெயலகம் முகப்பு பகுதி இருக்கும் சுவாமி சிவானந்தா சாலை வழியாகத்தான் நான் பாரிஸ்கார்னர் போவது வழக்கம்... அந்த சாலையில் டிராபிக் குறைவாக இருக்கும்.. ஆனால் முன்பு எல்லாம் கூவம் முற்செடிகள் ஓரம் நிறைய விபச்சார பெண்கள் மற்றும் அதிகமான மேக்கப்பில் திருநங்கைகள் இருப்பார்கள்.. ஆனால் தலைமைசெயலகம் வந்த காரணத்தால் அந்த சாலையை அகலப்படுத்தி அந்த முள்செடிகள் அத்தனையும் அழித்து அந்த சாலையை  அழகுபடுத்தி நேர்த்தியாக்கிவிட்டார்கள்.. சென்னைபல்கலைகழகம் மதில் சுவர், நேப்பியர் பாலம் ஆரம்பிக்கும் இடத்துக்கு முன்னே அதே சாலையில் ஒரத்தில் இப்போதும் திருநங்கைகள் மற்றும் விபச்சார பெண்கள் இருக்கின்றார்கள்.. அங்கு வாகனத்தை நிறுத்தி இருந்த இரண்டு இளைஞர்களிடம் பைக்சாவியை பிடிங்கு கொண்டு அவர்களை கெஞ்சவைத்துக்கொண்டு இருந்தார்கள் போலிஸ்காரர்கள்.. அந்த திருநங்கைகள் போலிஸ் வந்த உடன் எஸ்சாகி இருக்க வேண்டும்..நான் பாரிஸ் போய் விட்டு வேலைகளை முடித்துக்கொண்டு திரும்ப அதே வழியாக திரும்பினேன்..அதே இடத்தில் புல்தரையில் அவர்கள் உட்கார்நது கொண்டு இருந்தார்கள்.. ஒரு ஆட்டோ வந்து நின்றது.. நல்ல டிசன்டாக இருந்த ஒரு பையன் இறங்கினான் அவர்கள் இருக்கும் திசை நோக்கி நடந்தான்..


=================
சென்னையில் நடந்த வீடியோகிராபி போட்டோகிராபி எக்சிபிஷனுக்கு வந்த கடலூர் நண்பர்கள் 60 பேருக்கு சென்னை கவர்னர் வீட்டுக்கு அருகில் இருக்கும் லெமன்டிரீயில் மதிய விருந்து கொடுத்தோம்... அன்லிமிடேட்  நான்வெஜ்  பபே புட் ஒரு பிளேட் 450ரூபாய் பிளஸ் டாக்ஸ் .. நல்ல சர்விஸ்... 60 பேர் இரண்டு மணி நேரத்துக்கு வெளுத்துக்கட்டினார்கள்..ஓட்டலை பற்றி அறிமுகபடுத்திய தம்பி அன்புடன் மணிகண்டனுக்கு என் நன்றிகள்.
==========
சலனபடம்...
அவன் அந்த குடைக்கு கவர் போட்டதெல்லாம் ஓகே... அதை எல்லாரும் யூகித்து விடலாம்.. ஆனால் அந்த கவர் போட்டதும் பட்டன் அழுத்தி, குடை சீறுவது அல்டடிமேட் தாட்....


======
இந்தவார கடிதம்.

என் பெயர் செந்தில். திருவாருரை பூர்வீகமாக கொண்டவன். நான் இங்கிருந்து சிங்கபூருக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் Management Consultancy வைத்துள்ளேன். அலுவலகம் திருவாரூரில் உள்ளது. மேலும் ஒரு DTP, Browsing centre-ம் அங்கேயே உள்ளது.  நான் தற்பொழுது இரண்டு மாதமாக சென்னையில் வசிக்கிறேன். என் மனைவி இங்கு கால் சென்டரில் வேலை செய்கிறாள். எனக்கு நான் முடித்த ரயில்வே அப்ரெண்டிஸ் சீனியாரிட்டி படி வேலை வருவது போல் உள்ளது. அதற்காகத்தான் சென்னையில் உள்ளேன். நான் தோத்தவன்டா என்கிற பெயரில் வலைப்பதிவில் எழுதி வருகிறேன். உங்களது வலைப்பதிவை பார்த்த பிறகு தான் எனக்கெல்லாம் எழுத வேண்டும். என்ற ஆசை வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் வலைப்பதிவு பற்றி எனக்கு தெரிய வந்தது. பிறகு ஒரே வாரத்தில் உங்களது பழைய அனைத்து பதிவுகளையும் படித்தேன்.
இப்பொழுது உங்களிடம் ஒரு கோரிக்கை. என்னடா ஒரே மெயிலில் உதவி கேட்கிறானே என்று நினைக்காதீர்கள். உங்களுடன் மட்டுமே இது எனது முதல் சந்திப்பு. ஆனால் உங்களது பதிவு எனக்கு ஒரு வருட நண்பன்.
எனக்கு நவம்பரில் தான் வேலை வரும் போல் தெரிகிறது. வருமானத்திற்கும் பிரச்சனையில்லை. எனக்கு சிறு வயதில் இருந்து சினிமா துறையில் ஏதோ செய்து முன்னேற வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக உடனடியாக பணம் சம்பாதிக்கும் வேலை தேவைப்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஓரளவு பொருள் ஈட்டி விட்டேன்.
இப்பொழுது கொஞ்ச நாட்களாக எனக்கு பழயபடி ஊடகத்துறையில் ஆர்வம் அதிகரிக்கிறது. எனக்கு இந்த துறையில் யாரையும் தெரியாது. நீங்கள் எனக்கு வழிகாட்டுங்கள். பெரிய ஹீரோ அல்லது இயக்குனர் அல்ல என் கனவு. லைட்மனாக இருந்தாலும் சரி. அல்லது தொலைக்காட்சியில் நாடகத்தில் துணை நடிகனாக கிடைத்தாலும் சரி. என் கனவு நிறைவேறிவிடும். ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரோ அல்லது ஏதோ ஒரு துறையில் உதவியாளர் வேலை கிடைத்து விட்டால் எனது ஆசை முடிந்து விடும். உங்களால் முடிந்தால் நீங்கள் சம்பந்தப்பட்டதோ அல்லது நீங்கள் குறிப்பிடும் ஆலோசனையின் படி ஏதோ ஒரு ஊடகத்துறையில் ஒரு வாய்ப்பு.
வாங்கி கொடுங்கள்.
அல்லது எப்படி அணுகுவது என்று வழிகாட்டுங்கள்  அது போதும்.

நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், நன்றி

செந்தில்

========================
எனக்கு சினிமா கசப்பான அனுபவத்தை தந்தது.. ஆனால் ஒருமுறையாவது ஷுட்டிங் பார்த்து விட வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கும் இந்த நண்பருக்கு நான் என்ன சொல்வது...யாருக்காவது அசிஸ்டென்ட் வேணும்னா இந்த நண்பரை தொடர்பு  கொள்ளுங்கள்.. நன்றி..

வேலை வேண்டும்.....

நானே வேலை தெடிக்கொண்டு இருக்கின்றேன்...வேலை  வாய்ப்புகள் எனக்கு பயங்கர கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கின்றது...நம்பிக்கை ஒளி தெரிவது போல இருக்கின்றது.. கிட்டே போனால் மின்மினி பூச்சி போல காணமால் போய் விடுகின்றது...அதனால் டிப்ரஷன்..

ஜடி கம்பெனியில்  புராஜக்ட்களில் பிரிசேல்  வேலை சென்னையில் இருந்தால், யாருக்கவாது  தெரிந்தால் என்னை தொர்பு கொள்ளுங்கள்..98402 29629 ... நம்ம சொந்தங்கார பையன் ரெஸ்யூம் அனுப்பி வைக்கின்றேன்... ஏம்பா அவன் டிரீட் வேற தரேன்னு சொல்லி இருக்கான்..  அதனால எதாவது  இருந்தா பாருங்க நண்பர்களே.

jackie anna,

If you have any friends working in pre sales in a IT company or in Marketing in any reputed company, enna konjam refer panunga.
I have attached my resume that provides more information about my education & my past work experience.
Only constraint is - the job location has to be Chennai. You know why nu. Appa amma kaga thaan ;-)
Nichayam Treat kudukapadum :-)

நன்றி,
Bharathசினிமா  செய்தி..

மினி மோட்சத்தில் ஏலியன்ஸ் அண்டு கௌபாய் படம் பார்க்க போய் இருந்தேன்..பல பேர் ஆபிசில் இருக்கும் போது எதாவது பொய் சொல்லிவிட்டு வந்து இருப்பார்கள் போல.......... நிறைய போன் அடித்துக்கொண்டே இருந்தது... எல்லோரும் போனை எடுத்துக்கொண்டு வெளியே போய் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. ஒருவர் ரொம்ப ஓவராக 5 நிமிடத்துக்கு ஒரு முறை  கதவு திறந்து திறந்து போய்  கொண்டு இருக்க.. கதவு பக்கத்தில் இருந்த ஒருவர் அவர் வெளியே போனதும் கதவை சாத்தி தாப்பா போட்டு விட்டார்... அவர் ஒரு பத்து நிமிடத்துக்கு கதவை தட்டி அலுத்து போன பிறகுதான் கதவை திறந்து விட்டார்கள்...
 ===============
 இணையும் முழுவதும் இந்த  போஸ்டர் டிசைன் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்தது.. போஸ்டரை கூடவா? என்று விவாதங்கள் ஓடியது....
==============
நேற்று ஒரு பரபரபப்பான  கோலிவுட்டில் சுற்றியது திரிஷாவுக்கு திருமணம் என்று.. இரண்டு பேர் அதில் ஒருவரை  செலக்ட் செய்து திருமணம் செய்துக்கொள்வேன் என்று  சொன்னதாய் செய்தி சொல்லியது...

வழக்கம் போல இருவரும் தொழில் அதிபர்கள்தான். ஆனால் இப்போது அந்த செய்தியை திரிஷா மறுத்து இருக்கின்றார்....
===========
பிலாசபி பாண்டி
இழந்து போனவைகளை பற்றி ஒரு போதும் கவலைபடாதீர்கள்..மரத்தில் எப்படி  பழுத்த இலை விழுந்த பிறகு புது இலை துளிக்கின்றதோ அது போலத்தான்.ஒன்றை இழந்தால்  ஒன்றை பெருவீர்கள்..
 ============
நான்வெஜ் 18+


மனோவை செக் செய்து பார்த்த அவனுடைய குடும்ப டாக்டர், 'நீங்க இன்னும் பத்து மணிநேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க' என்றார்.மனோவுக்கு தூக்கிவாரி போட்டது..

சரி இன்னொரு டாக்டர்கிட்ட கேட்டு பாக்கலாம்னு போனான். அவரும் செக் பண்ணி பார்த்துட்டு, அதே பல்லவியைதான் பாடினார் 'நீங்க இன்னும் ஒன்பது மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க' என்றார்.

மனோ அதற்க்கு மேலும் தாமதிக்காமல் வீட்டுக்கு போனான். அவன் மனைவியிடம்,' டார்லிங்..நான் இன்னும் எட்டு மணி நேரம் தான் உயிரோட இருப்பேன்னு டாக்டர் சொல்லிட்டார்' என்றான்.

அவன் மனைவி வருத்தப்பட்டு, 'ஐயோ..என்னங்க இப்படி சொல்றிங்க..' என்று கதறினாள். கண்ணீர் விட்டாள்..

மனோ, 'அழுது பிரயோஜனம் இல்ல..உருப்படியா எதாச்சும் செய்யலாம்..முதல்ல செக்ஸ் பண்ணலாம் வா.. ' என்று அழைத்தான். அவளும் இணங்கினாள்.

எல்லாம் முடிஞ்சா பிறகு மறுபடியும் மனோ, 'இன்னும் ஏழு மணி நேரம் தான் இருக்கு, இன்னொரு தரம் செக்ஸ் பண்ணலாம்' என்றான்.

சரி என்று அவன் மனைவியும் ஒத்துழைத்தாள். முடிந்த பிறகு மறுபடியும் மனோ, 'இன்னும் ஆறு மணி நேரம் தான் இருக்கு, இன்னொரு வாட்டி பண்ணலாம்' என்றான்.

மனைவியும் ஒத்துகொண்டாள். எல்லாம் முடிந்ததும் மறுபடியும் மனோ, 'இன்னும் ஐஞ்சு மணி நேரம் தான் உயிரோட இருக்க போறேன், இன்னொரு தடவை பண்ணலாம்' என்றான்.

உடனே அவன் மனைவி, 'நீங்க காலையில எழுந்திரிக்க மாட்டீங்க, ஆனா எனக்கு காலையில ஆபிஸ் இருக்கே, அதனால சீக்கிரமா எழுந்திரிக்கனும், குட் நைட் ' என்றாள்.
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

16 comments:

 1. சிவானந்தா சாலை மேட்டர் ஒரு சிறுகதையாய் விரிவடைகிறது ஜாக்கி. இதை தனியாக ஒரு கதையாக எழுதியிருக்கலாம் நீங்கள். உங்கள் சாண்ட்வெஜ்ஜியில் நிறைய கதைகளை வேஸ்ட் செய்கிறீர்கள்.

  ReplyDelete
 2. அட்லீஸ்ட் மெளஸையாவது உடைச்சு உங்க ஈகோ-வை நேர்த்தி செய்திருக்கலாம்.

  ReplyDelete
 3. //04/08/2011 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன்//

  I thought it is for ALAGIRI one second..

  ReplyDelete
 4. மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்.இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html

  ReplyDelete
 5. பாரதியை என்னுடன் தனி மடலில் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். www.gofrugal.com நிறுவனத்தில் முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
 6. "நோக்கியா 1100 செல் போனாக கைக்கு அடக்காமானதாக இருந்தாலும் எனது ஈகோவை நிரூபிக்க உடனே உடைத்து இருப்பேன்.....முதலில் மானிட்டரை உடைப்பதா?மானிட்டரை உடைப்பது பெரிய விஷயம் இல்லை மானிட்டர் உடைக்கும் சத்தத்தில் தூங்கும் குழந்தை யாழினி எழுந்து விட்டால்?? சரி சீபியூவையாவது எப்படி உடைப்பது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றேன்...."

  டிவி பார்க்கும்போது கோபம் வந்தால்....நாம் டிவி யை உடைப்பதில்லை....
  ரிமோட்தான் பலிகடா....
  சிஸ்டத்தில் இருக்கும்போது...நாம் ஏன் மவுசை பலிகொடுக்கக்கூடாது.....?
  இப்படிக்கு இரண்டாவது புது மவுசில் கிளிக்கிக்கொண்டிருக்கும்
  மொக்கைசாமி....

  ReplyDelete
 7. குழந்தை காரணமில்லாமல் அழும் பொழுது பைக் ல குழந்தையுடன் ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்தால் குழந்தை சந்தோஷமாக தூங்கும். எனக்கும் இது மாதிரி ஏற்பட்டிருக்கிறது. நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் குழந்தையுடன் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்துள்ளேன் .

  ReplyDelete
 8. இன்றைய பதிவு சூப்பர்.

  ReplyDelete
 9. //முதலில் மானிட்டரை உடைப்பதா?மானிட்டரை உடைப்பது பெரிய விஷயம் இல்லை மானிட்டர் உடைக்கும் சத்தத்தில் தூங்கும் குழந்தை யாழினி எழுந்து விட்டால்??//

  உங்க மனைவிக்கு பயப்படாவிட்டாலும், யாழினிக்காவது பயப்படுறீங்களே.

  ReplyDelete
 10. //போஸ்டரை கூடவா? //
  டிரெயில்ட் படத்தை சுட்டு பச்சைக்கிளி முத்துசரம் எண்டு எடுத்தவர் தானே

  ReplyDelete
 11. எதையும் உடைக்கப்போறதில்லை. என்ன பெட்?

  ReplyDelete
 12. dear jackie
  yazhini appadithan iruppal (jackie jackieyagavey iruppathupol :-) ) kuzhanthayinal yerpadaum kovathai thunaiviyaridam kaatatheergal please. ungal kovam ennaipol anaivarum arinthathe just cool and relax. ungal kovathukku inimael yazhini kutty thaan speedbreaker.
  vijay velayutham pada poster kooda ASSASSIN's CREED yenum videogamilirunthu suttathu ena inaiyathil palarukkum theriyum.
  enakku yethavathu job vacancy kidaithaal sollukiraen. nandri
  anbudan sundar g

  ReplyDelete
 13. ஆல்பம் என்று தலைப்பிட்டு நல்ல பக்காவாக விருந்து வைத்ததுபோல் இருந்தது பதிவு...

  சீக்கிரம் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 14. Bro... Please check your email for your relative's job information.

  ReplyDelete
 15. Boss, He is not CM of Bangalore but Karnataka...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner