நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவது ஜெவுக்கு ஒன்றும் புதிது அல்ல.. ஏற்கனவே டான்சி வழக்கில் இது என் கையெழுத்தே அல்ல என்று சொன்னார்..
அதுக்கு ஒரு நீதிபதி,பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு பொய் சொல்லலாமா? என்று கண்டனம் தெரிவித்தார்...சமச்சீர் கல்விக்கு எதிராக, இந்த அரசு பொறுப்பேற்றதும் அவசரம் அவசரமாக ஆணைப் பிறப்பித்த போது பொது மக்கள் திடுக்கிட்டுப் போனார்கள்... தமிழகத்தில் பொதுமக்கள் அப்போதே இந்த பொம்பளை இன்னும் மாறவில்லை வரட்டு பிடிவாதமும் போகவில்லை என்று முனு முனுக்க ஆரம்பித்து விட்டார்கள்..
உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்... சென்னை உயர்நீதிமன்றம் சொல்வதை கேளுங்கள் என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை...உயர்நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை எதிர்த்து திரும்ப உச்சநீதிமன்றம் செல்ல அங்கு மிக மோசமான கண்டனத்தை பெற்று தோல்வியுடன் திரும்பி இருக்கின்றது...
இது அகங்காரத்துக்கு வைத்த ஆப்பு...
அசைக்கமுடியாத இடத்தில் அரியணை ஏறிவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்புக்கு கிடைத்த அடி...
பொதுமக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.. காரணம் திமுக குடும்ப உறுப்பினர்களின் அரசியல் தலையீடுகளை நேரில் பார்த்தார்கள். அதனால் மாற்றத்தை வேண்டினார்கள்....
நான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்..எலக்ஷன் முடிந்ததும் விக்கலுக்கு விஷத்தை குடிச்சிட்டாங்க என்று சொன்னேன்.. அதுக்கு உதாரணம்..சமச்சீர் கல்வி, மற்றும் தலைமைச்செயலகம் மாற்றம்., வாட் 14 பர்சென்ட் போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம்..
ஒரு தனிப்பட்ட பெண்மணியின் ஈகோ...மூன்று மாதங்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்..
உச்சநீதிமன்றம் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு பலர் கேட்பது போல கேள்விகள் கேட்கவில்லை.. 25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி இருக்கின்றது...
சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பின்வருமாறு....
அடுத்த 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு.
25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள்...
அடுத்த 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு.
25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள்...
மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையைப் பறித்த ஜெ அரசுக்கு கடுமையான கண்டத்தைத் தெரிவித்து இருக்கின்றது...
சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பாலோ செய்ய சொல்லி இருக்கின்றது...
இப்படி எல்லாம் தீர்ப்பு வரும் என்று தெரிந்த காரணத்தால் நேற்றே சட்டசபையில் முதல்வர் ஜெ உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுவோம் என்று சொல்லி இருந்தார்... இதே உச்சநீதிமன்றம்.. உய்ர்நீதிமன்றம் வழிகாட்டுதலை பின்பற்றவேண்டும் என்று சொல்லியும் கேட்காமல் அவர் திரும்பவும் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த திட்டம் திமுக கொண்டு வந்த திட்டம் அல்ல என்று திரும்ப திரும்ப சொல்லியும், அரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய, மாணவ மாணவிகள் ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் வினவு தோழர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

100%சரி ஜாக்கி இது அகங்காரதுக்கு எதிரான வெற்றி.
ReplyDeleteசமச்சீர் கல்வியில் உள்ள உள்குத்து வை ஜாக்கி புரிந்துகொள்ளவேண்டும்
ReplyDeleteஅரசு பள்ளிக்கு மட்டும் சமச்சீர் புத்தகங்கள், ஆனால் கொள்ளை அடிக்கும் "தே" பய தனியார் பள்ளிக்கு அவர்கள் இஷ்டப்படி புத்தகங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம அதற்கான publisher name அரசு வெளியிட்டுள்ளது. இதுவே சமச்சீர் கல்விக்கு ஆப்புதனே.... அரசு பள்ளி மாணவனுக்கும் தனியார் பள்ளி மாணவனுக்கும் எப்படி சமச்சீர் கல்வியாகும்.... அடிமடியில் அம்மா கைவைச்டுச்சு.....
நாய் வால நிமித்த முடியாது......
ReplyDeleteஇப்படி ஒட்ட நறுக்கினாத்தான் உண்டு....
சமச்சீர் கல்வியின் தீர்ப்பு......
அதிகாரிகள் நடுநிலையைப் பின்பற்றவேண்டும்
சரியான சம்மட்டி அடி. பொறுத்திருந்து பார்ப்போம் இதில் வேறு ஏதாவது வில்லங்கம் செய்வாறா? என்று.
ReplyDelete// எலக்ஷன் முடிந்ததும் விக்கலுக்கு விஷத்தை குடிச்சிட்டாங்க என்று சொன்னேன் //
ReplyDeleteமிக பெரிய போராட்டம் நடத்தி ஈழ படுகொலையை தடுப்பதை விட்டுவிட்டு மனித சங்கிலி, உண்ணாவிரதம் என்று காலம் கடத்தி முப்பது வருட உயிர் தியாகங்களை மண்ணோடு மண்ணாக்கியது உங்களுக்கு "விக்கல்".
ஈரோட்டில் சிவபாலன் குடும்ம்பத்தையே சிறை வைத்து, அவர்கள் குடியிருந்த வீடு, தோட்டம், தென்னை மரம் அனைத்தையும் புல்டோசரால் நிரவி குடும்பத்தையே நாடு தெருவில் நிறுத்துவது, உங்களுக்கு விக்கல்.
வீரபாண்டியார் அங்கம்மாள் காலனி மக்களை நாற்பது வருடமாக குடியிருந்தவர்களை அடித்து விரட்டுவது, உங்களுக்கு விக்கல்.
பொட்டு சுரேஷ், மன்னன், எஸ் ஆர் கோபி எல்லாம், உங்களுக்கு விக்கல்.
ஊருக்கு எத்தனை சிவபாலன் என்று இன்றுமா தெரியவில்லை உங்களுக்கு.
சிவபாலன் மாதிரி நம்ம வீட்டுக்கு வந்து " ஓடிப்போ , இந்த இடம் எனக்கு வேணும்னு" சொன்னா தான் விக்கலுக்கும் விசத்துக்கும் வித்தியாசம் புரியுமா.
// நான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்//
உங்களுடைய புரிதல் மிக பெரிய தவறு. தி மு க காரன் ஒரு தவறை செய்யணும் என்று நினைத்தால், அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் அவர்கள் தவறு செய்யாதவர்கள் போல நினைப்பீர்கள்.
அதே தவறை அ தி மு க காரன் செய்தால் எப்படியும் தெரிந்த்துவிடும். அவ்வளவு புத்திசாலிதனமாக எல்லாம் செய்ய மாட்டார்கள்.
தர்மபுரியில் அ தி மு க காரன் மூன்று மனைவிகளை எரித்தான். தூக்கு தண்டனை வாங்கி இருக்கான்.
தமிழா தமிழா திமுக யோக்கியம்னு சொல்லவே இல்லையே..,.. யாராவது ஒரு செகன்ட் ஆப்ஷன் சொல்லுங்க...
ReplyDeleteதிமுக ஆட்சிகாலத்தில்யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பாதிக்கபட்டடாங்க அது சரின்னு வாதிடலை
ஆனா ஜெ ஆட்சியில்
3 மாசம் பசங்க அள்ளாடினாங்களே அது விக்கல் இலலையா?,
வாட் 14 பர்சன்ட் அது விக்கல் இல்லையா??
//ஆனா ஜெ ஆட்சியில்
ReplyDelete3 மாசம் பசங்க அள்ளாடினாங்களே அது விக்கல் இலலையா?,
வாட் 14 பர்சன்ட் அது விக்கல் இல்லையா??//
இது தான் விக்கல். இது கொஞ்ச நேரத்தில தானா சரியாயிடும்
இதுக்கு விசமெல்லாம் வேண்டாம்.
ஜாக்கி,
ReplyDeleteஎனக்கென்னமோ ஜெ. இதை எதிர்த்ததற்க்கு காரணம் ego மட்டுந்தான்னு தோனுது. அதை இப்ப புரிஞ்க்கிட்டார்னும் தோனுது. அவரது நேற்றைய அறிவிப்பை மறைமுக apology-யதான் நான் பார்க்கிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி. Better Late than never. இதில்
அரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய அனைவருக்கும், இரும்புக்கரம் கொண்டு அரசை பணியவைத்த SC & Madras HC-க்கும் ஒரு ROYAL SALUTE.
ஜாக்கி,
ReplyDeleteஎனக்கென்னமோ ஜெ. இதை எதிர்த்ததற்க்கு காரணம் ego மட்டுந்தான்னு தோனுது. அதை இப்ப புரிஞ்க்கிட்டார்னும் தோனுது. அவரது நேற்றைய அறிவிப்ப மறைமுக apology-யதான் நான் பார்க்கிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி. Better Late than never. இதில்
அரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய அனைவருக்கும், இரும்புக்கரம் கொண்டு SC & Madras HC-க்கும் ஒரு ROYAL SALUTE.
anne !!!! admk sarvathigaram....BUT dmk kollai kootam...
ReplyDeletepillayai petha thaan pillaihalodai padippai pathi akkarai irukkum. Maldikku engay pillahalin future eppadeee endu theirya pohuthu???
ReplyDeleteDMK govt irundhirundha next time makkalachi ellam illa inime dynasty aachinu solli moththama aapu vachirupaanga...Namakku vera vazhi illa maathi vote podaradhu oru temporary relief. Idhu onnum thappu illa. visham kuda marundhaagalam. ADMKla oru pudhu MLA oru nallavan kedaichuruppannu nambuvom.
ReplyDeletejayalalitha vin agangaram ennabathai vida metric pallikalin mony power ,communal laaby irrukku enbathi yaaralum marukka mudiyathu. ithai tamilnadu govt amaitha ''aayvu kuzhu'' memper's list i paarthaalea purithirukkum.
ReplyDeletejackie vat 14% really apart from oil, vera ethuku potanga???? I meant other essential commodities???? really i thght they put for items like drinks...
ReplyDelete// நான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்//
Yes...I too accept what u say...but if they hav captured power this time...then really their family wuld hav performed more attrocities...Don't say they are better...we are left wid no choice...its a punishment for dmk...let them suffer...so that atleast when they come to power next time...they'll keep quiet for atleast two years...
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்
ReplyDeleteவைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே -
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -
பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான சிலர் -
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே - நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ -
"எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)
தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,
சுய விளம்பரம் செய்து கொண்டும்,
தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,
அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும் இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.
(Undoubtedly, there had been
few instances of portraying
the personality - by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.
personal glorification,
self publicity and
promotion of his own cult
and philosophy -
which could build
his political image and
influence the young students,
particularly in the primary
classes )