ஆல்பம்...
தமிழகம் வெற்றிக்களிப்பில் இருக்கின்றது...உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு வழங்கிய தீர்ப்பை சென்னையில் எல்லா இடத்திலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்..
இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால் எதிர்பாராத இடங்களில் இருந்து எல்லாம் பட்டாசுவெடிக்கும் சத்தம் கேட்பது போல, பல இடங்களில் அதனை காணமுடிந்தது...முக்கியமாக மாணவர்கள் அந்த திருப்பணியை செய்தார்கள்.. மூன்று மாத வேக்காட்டில் வெந்து வெளிவந்த ஒரு திருப்தி அந்த உற்சாகத்தில் காணப்பட்டது..===========================
போனவருஷம் திமுக ஆட்சியில் இதே சமச்சீர் கல்வியை அறிமுகபடுத்திய போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டும் ஏகத்துக்கு குதித்துகொண்டு இருந்தன..கோர்ட்டுக்கு நடையாய் நடந்தன.. ஆனால் உச்சநீதிமன்றம் சமச்சீரை அறிமுகபடுத்தலாம் என்று சொன்னதும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு அறிமுகபடுத்தினார்கள்.. அப்ப ஒரு மயிராண்டியும் வாயை திறக்கலை....இங்க சென்னையில் பொதுமக்களே அதுபற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை..காரணம் சொந்தமா யோசிக்க தெரியாத பயலுங்க... ஏவனாவது மண்டப்த்துல எழுதிகொடுத்தா அதை எடுத்து வந்து வச்சிக்கினு கூவறது..இன்னைக்கு பேசற எல்லாரும் போனவருஷம் இதைப்பத்தி அக்கு வேற ஆணி வேற பேசி இருந்தா மெச்சலாம்...ஒரு ஓவியம் ரொம்ப அழகா இருந்துச்சாம் எல்லோரும் அந்த ஓவியத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்தாங்களாம்..சில பேருகிட்ட அந்த ரசனைக்கூட இல்லையாம்...ஆனா அந்த நாட்டு ராஜா அந்த புகழ் பெற்ற ஓவியத்தை பார்த்துட்டு இந்த ஓவியத்துல அந்த கண்ணுதான் லைட்டா சாய்வா இருக்குன்னு போகிற போக்கில் ஒரு பிட்டை போட,ராஜாவே சொல்லிட்டாருன்னு ஆளு ஆளுக்கு அந்த ஓவியத்தை நக்கலா கேலி பேசினாங்களாம்.. அதுமட்டும் அல்ல இதுவரை அந்த ஓவியத்தை பற்றி வாய திறக்காதவனுங்க எல்லாம் சாய்வான கண் என்ற தலைப்பில் 400 பக்கத்துக்கு கட்டுரை எழுதினானுங்களாம்.. அது போல கதைதான் தமிழ்நாட்டுல சமச்சீர்கல்விக்கு ஏற்பட்டுச்சி....
================================
கேன்சருக்கு சின்னதாக... நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு படம்.
மிக்சர்
சென்னை நேப்பியர் பிரிட்ஜுக்கு ஒயிட் வாஷ் பண்ணறாங்க என்னன்னு பார்த்தா? சுதந்திரதினம் வருது இல்லை...
தலைமைசெயலகவாசலில் சிக்னல் ரெட்டில் இருக்கும் போது ஒரு ஊனமுற்ற பையன் தரையில் தவழ்ந்து தலைமைசெயவகத்துக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு சென்றான்... நிறைய பேர் பொறுமைகாக்காமல் பைக்கின் திராட்டிலை திருகிக்கொண்டு இருந்தார்கள்.. ஒரு சிவப்பு விளக்கு பொருத்திய காரில் அதிகாரியோ அல்லது அமைச்சரோ இருக்க வேண்டும்.. அந்த தரையில் தவழ்ந்து போன பையன் அந்த காரை கடந்த உடன் சிக்னல் ரெட்டில் இருக்கு போதே விசுக்கு என்று கிளம்பி டிராபிக் போலிசையே மிரள வைத்தது...
இன்னைக்கு சாயங்கலாம் 5,30 மணி சதாப்தியில் குடும்பத்துடன் பெங்களூர் பயணம்..ஒரு வாரம் பெங்களூரில் டேரா...
==================
சரியாக இரண்டுமாதம் ஆகிவிட்டது..பெங்களூரில் இருந்து வந்து...சீரியல் சத்தமே இல்லாமல் இனிதாய் இரண்டு மாதம் கழிந்தது.. எப்போதாவது சேனல் மாற்றும் போது நாதஸ்வரம் பார்ப்பேன்..ஆனால் நாளையில் இருந்து பெங்களூரில் மாமியார் வீட்டில் காலை பத்துமணிக்கு, ஆரம்பித்து இரவு பத்து மணிவரை சீரியல் தொல்லையில் மாட்டிக்கொள்ளபோகின்றேன் என்று நினைக்கும் போதே வயிறு கலங்குகின்றது...
===============
சரியாக இரண்டுமாதம் ஆகிவிட்டது..பெங்களூரில் இருந்து வந்து...சீரியல் சத்தமே இல்லாமல் இனிதாய் இரண்டு மாதம் கழிந்தது.. எப்போதாவது சேனல் மாற்றும் போது நாதஸ்வரம் பார்ப்பேன்..ஆனால் நாளையில் இருந்து பெங்களூரில் மாமியார் வீட்டில் காலை பத்துமணிக்கு, ஆரம்பித்து இரவு பத்து மணிவரை சீரியல் தொல்லையில் மாட்டிக்கொள்ளபோகின்றேன் என்று நினைக்கும் போதே வயிறு கலங்குகின்றது...
===============
வாழ்த்துகள்.
நண்பர் கென்னுக்கு பெண்குழந்தை பிறந்த இருக்கின்றது.. அவரது துணைவியார் மற்றும் தேவதைக்கு வாழ்த்துகள்..
==========
இந்தவாரக்கடிதம்
நண்பருக்கு
சும்மா சும்மா சின்ன புள்ள மாதிரி கேட்கரேன்னு தப்பா நினைக்காதீங்க
ரொம்ப நாளா சிங்கப்பூரில் வேலை தேடிகிட்டு இருக்கேன்
கடன் வாங்கி கன்ஸல்டன்சில கொடுத்த பணமும் நாசமாபோச்சு
வீட்டுலயும் கழுத்துல கயிரு மாட்டர அளவுக்கு நிலமை
உங்கள் நண்பர்களிடம் ஏதேனும் வேலை செய்தி இருந்தால் சொல்லவும்
தொந்தரவிற்கு மண்ணிச்சுக்கங்க
வாழனும்னு ஆசப்பட்டு இருக்கேன்
Thanks & Regards
Syed Musthafa.K
Mobile: +91- 98425 54215
சும்மா சும்மா சின்ன புள்ள மாதிரி கேட்கரேன்னு தப்பா நினைக்காதீங்க
ரொம்ப நாளா சிங்கப்பூரில் வேலை தேடிகிட்டு இருக்கேன்
கடன் வாங்கி கன்ஸல்டன்சில கொடுத்த பணமும் நாசமாபோச்சு
வீட்டுலயும் கழுத்துல கயிரு மாட்டர அளவுக்கு நிலமை
உங்கள் நண்பர்களிடம் ஏதேனும் வேலை செய்தி இருந்தால் சொல்லவும்
தொந்தரவிற்கு மண்ணிச்சுக்கங்க
வாழனும்னு ஆசப்பட்டு இருக்கேன்
Thanks & Regards
Syed Musthafa.K
Mobile: +91- 98425 54215
வெளிநாட்டுக்கு அனுப்பும் யாராவது இந்த தம்பியின் சலிப்பை போக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
===============
இதப் பாருங்க நிச்சயம் ரசிப்பீங்க..
================
ஒரு விண்ணப்பம் கடிதம் ..
Dear ஜாக்கிசேகர்,
How are you and How is your family. I hope every one fine in your family. My name Satish working with BPO Company. Am your blog follower and reader. I never commend your site due to company blocking the opinion.
How are you and How is your family. I hope every one fine in your family. My name Satish working with BPO Company. Am your blog follower and reader. I never commend your site due to company blocking the opinion.
I always admire with your way of open talk writing skill and am big fan of your world cinema reviews.
Here this mail for your Poor Girl Education
I believe your blog readers and friends will help to shine her life. I financially help her for studies. Now she got B E Computer science in counseling with St Peters College.
I have attached her Educational certificate and all documents. Please publish your Blog and help her studies.
Her BE fees is 34000. With few help she paid around 18000 and she looking help to pay the balance amount. Please help some one to keep study
Regards,
Satish Uthanda
=========
இப்படி ஒரு கடிதமும் டாக்குமென்டுகள் இணைத்து வந்தாலும் யார் பெயருக்கு டிடி எடுப்பது என்ற குழப்பம் இருந்த படியால் திரும்ப நண்பரை தொடர்பு கொண்டேன்..
Dear Jackie Sekar Anna,
College name only DD needs take and amount is Rs. 9500.
32000 she paid around 22500 balance 9500 + Books she couldn't able collect the money
Her mobile number -
DD needs to take name of - St Peter's College of Engineering and Technology
Kindly help and i will call you
Regards,
Satish Uthanda
College name only DD needs take and amount is Rs. 9500.
32000 she paid around 22500 balance 9500 + Books she couldn't able collect the money
Her mobile number -
DD needs to take name of - St Peter's College of Engineering and Technology
Kindly help and i will call you
Regards,
Satish Uthanda
நண்பர் சதிஷும் அந்த பெண் பிள்ளைக்கு உதவி செய்து இருக்கின்றார்...22500 ரூபாயை கடன் உடன் வாங்கி நண்பர்களிடம் புரட்டியும் நகைகளை அடகு வைத்தும் பணத்தை கட்டி இருக்கின்றார்கள்.. இப்போது தேவை 9500ரூபாய் மட்டுமே அந்த பெண்ணின் குடும்பத்தால் முடியவில்லை...பொது இடத்தில் ஒரு பெண்ணின் செல்நம்பர் போடக்கூடாது என்பதால் எடுத்து விட்டேன்... உதவி செய்ய விருப்பம் இருப்பவர்கள்..தொடர்பு கொண்டால் நம்பர் கொடுக்கின்றேன்...
==========
பிலாசபி பாண்டி
காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தயாசம் என்று இதயத்தை கேட்டேன்..அது ரொம் நேரம் யோசித்து சொல்லியது.. நான் உடலுக்கு ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையை செய்கின்றேன்.. அவுட்ஆப் சிலபசில் இருந்து கொஸ்ட்டின் கேட்கவேண்டாம் என்றது...
==========
இப்படியும் ஒரு டீ விளம்பரம்..
=================
நான்வெஜ்18+
ஜோக்........1
ஒரு அரேபியன், இந்தியன், அமெரிக்கன் மூன்று பெரும் பஞ்சாப் பக்கம் காரில் பயணம் செய்தபோது வழியில் கார் மக்கர் ஆகி நின்றுவிட்டது.
நடுராத்திரி ஆகிவிட்டதால் பக்கத்து கிராமத்தில் தங்கி காலையில் போகலாம்னு முடிவு செய்து மூணு பெரும் ஒரு விவசாயி வீட்டு கதவை தட்டினாங்க.
விவசாயி, வீட்டுக்குள்ள ரெண்டு பேர் தான் படுக்க இடம் இருக்கு, ஒருத்தர் வெளிய கழனியில தங்கிக்கோங்க' என்றார்.
சரின்னு அரேபியன் வெளிய கழனிக்கு போனான். கொஞ்ச நேரம் கழிச்சி கதவு தட்டப்பட்டது.
விவசாயி கதவை திறந்தப்போ அரேபியன்,'கழனியில பன்றி ஒண்ணு இருக்கு, என்னால அதுகூட படுக்க முடியாது' என்று சொல்ல இந்தியன், 'சரி நான் போய் படுத்துகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளிய கழனிக்கு போனான்.
கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடி கதவு தட்டப்பட்டது.
விவசாயி கதவை திறந்தப்போ இந்தியன், 'பன்றி கூட படுத்துக்கலாம், ஆனா கழனியில மாடு ஒண்ணு இருக்கு, என்னால மாடு கூட படுக்க முடியாது' என்று சொல்ல அமெரிக்கன், 'நான் போறேன்' என்று வெளிய போனான்.
கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடி கதவு தட்டும் சத்தம் கேட்டது.
விவசாயி கோபமா கதவு திறந்தப்போ அங்கே அமெரிக்கனை காணோம்.
பன்றியும் மாடும் நின்று இருந்தது.
இரண்டும், 'நாங்க அவனோடு படுக்க மாட்டோம்' என்றது.
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
1.மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் உற்சாகத்தை படிப்பிலும் பரீட்சை ரிசல்ட்டிலும் காட்டினால் இன்னும் சந்தோசப்படலாம்....
ReplyDelete2.கேன்சர் கிளிப் நெஞ்சை பிசைந்து விட்டது....சென்ற மாதம்தான் என் தாய் இரத்தப்புற்று நோயால் மரித்துப்போனார்...
3.நேப்பியர் பாலத்தின் ஒயிட் வாஷ் ...
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையை நினைவுபடுத்துகிறது....
4.தரையில் தவழ்ந்து போனவனைத்தவிர மற்றவர்களெல்லாம் மாற்றுத்திறனாளிகளோ...
5.பெங்களூர் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....
6.நண்பர் கென் அவரது துணைவியார் மற்றும் தேவதைக்கு வாழ்த்துக்கள்..
7.உதவ மனமிருப்பவர்களுக்கு பணமிருப்பதில்லை....
பணமிருப்பவர்களுக்கு உதவ மனமிருப்பதில்லை...
முடிந்தவர்கள் உதவுங்கள்....
8.அனைத்து பதிவுகளும் அருமை....
அடுத்த பதிவை எதிர்பார்த்து
காத்திருக்கும் - செவிலியன்...
டீ விளம்பரத்தைப்பார்த்து ஆண்கள் யாரும் கீழ் நோக்கி முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.....
ReplyDeleteபெண்களூர் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....
ReplyDelete//காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தயாசம் என்று இதயத்தை கேட்டேன்..அது ரொம் நேரம் யோசித்து சொல்லியது.. நான் உடலுக்கு ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையை செய்கின்றேன்.. அவுட்ஆப் சிலபசில் இருந்து கொஸ்ட்டின் கேட்கவேண்டாம் என்றது...//
ReplyDeleteஅருமையாக இருந்தது..........................
Hi Jackie,
ReplyDeletewhat is the best way to help Satish Uthanda?
?
can you please send the details email, so that i can try my best?
and thanks for the cancer awareness video .
Regards,
jay
The cancer video is really touching... And Inspiring as well.....
ReplyDeletewhen student comes to engtineering college ...he will surely suffer .... already state board sylabuss itself worst of its kind ...downgrading student syllabus doesnt gonna help....i will make my children to study in CBSE schools...stay a ahead in competition....samacheer kalvi blessings in disguise for CBSE students.
ReplyDeleteபெங்களூர் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅனைத்து செய்திகளுமே நன்றாக இருந்தது...
ReplyDeleteபிலாசபி பாண்டி குட்..
All news are good thala.
ReplyDeleteஜாக்கி
ReplyDeleteஇமைகள் மூலம் அந்த மாணவிக்கு உதவ முடியும். சதீஷ் அல்லது அந்த பெண்ணின் மெயில்-ஐடி / போன் நம்பர் அனுப்பவும்
Nalla pathivu..nanbare !
ReplyDeleteHi Jackie Anna,
ReplyDeleteBig Thanks for your kind help
Hi Jay and மாதேஸ்வரன்,
Kindly provide the DD in the name of college and my contact number 9840767838 and my mail id sathish.kuamr1984@yahoo.com. If you are in Chennai i will come to collect the DD