Travellers and Magicians-2003-உலகசினிமா/பூட்டான்/ஒரு கிராமத்து அதிகாரியின் அமெரிக்கப் பயணம்.



இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து  வசிப்பவர்களும் சரி கிராமத்துக்கு போகும் போது ஒரு தடிப்போ அல்லது மிதப்போ கண்டிப்பாக இருக்கும்..
அவ்வளவு ஏன் இந்தியாவில் இருந்து வெளிநாட்டி பிழைப்புக்கு போனவர்கள் அத்தனை பேருக்கும் சொந்த  நாட்டுக்கு திரும்பும் போது  ஒரு ஏளனம் மற்றும் தடிப்பு இருக்கத்தான் செய்யும்..

ஹலோ ஜாக்கி  ஒரு நிமிஷம் சொல்லுங்க..

உங்க பதிவை படிக்கும் பல பேர் வெளிநாட்டில்தான் இருக்கின்றோம் எங்களுக்கு அது போல எண்ணம் இருக்கும்னு சொல்லறிங்களா?

இருக்கும் என்று நிச்சயம்  சொல்லுவேன் ஆனால் நீங்கள் அதை ஒரு  போதும் ஒத்துக்கொள்ளப்போவதில்லை..

ஆனால்  நான் பிழைப்புக்காக  சென்னைக்கு வந்து ஒரு வருடம் கழித்து திரும்ப என் ஊருக்கு சென்ற போது பெரிய பருப்பு போல ஒரு எண்ணம் எனக்கு வந்தது... ஏதோ கடலூரில் இருப்பவர்களை விட நான் வேறுபட்டவனாக என் மனதில் தோன்றியது நிஜம்...ஆனால்  அந்த எண்ணத்தை செருப்பால் அடித்து விரட்டியவன் நான்...
நகரத்தில் வாழ்வதாலும் வெளிநாட்டில் பஞ்சம் பிழைக்க சென்றதாலும் இரண்டு கொம்பு யாருக்கும் முளைத்து விடுவதில்லை..ஆனால் சொந்த ஊருக்கு போகும் போது பலர் இரண்டு கொம்புகளுடன் அலைவதை நானே பார்த்து இருக்கின்றேன்..

ஜாக்கி எங்களுக்கும் முதல் முறை போன போது எங்களுக்கு அது போல ஒரு எண்ணம் இருந்தது இப்போது இல்லை...

அப்படியா? ரொம்ப சந்தோஷம்...கிராமங்களில் வசிப்பவர்கள்யாரும் தரம் தாழ்ந்தவர்கள் அல்ல..நகரத்தில் வசிப்பதால் அவர்கள் சிறந்தவர்களும் அல்ல...ஆனால் நகரத்தில் வசிக்கும் பலர் கிராமத்துக்கு செல்லும் போது கிராமத்து நண்பர்களை நக்கலாக பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்..

சரி நகர வாழ்க்கை என்பது எதனால் ஈர்க்கபடுகின்றது.. எனக்கு சென்னையின் பரபரப்பு எனக்கு ரொம்பவும் பிடித்து போனது.. ஒரு தர்பூசனியை பத்துரூபாய்க்கு வாங்கி பத்தை போட்டு 50ரூபாய்க்கு விற்று பிழைத்துக்கொள்ளலாம் என்று சென்னை கொடுக்கும் நம்பிக்கை எனக்கு  ரொம்ப பிடித்தது..சென்னை ஸ்பென்சர்  மற்றும் சத்தியம் தியேட்டர் பெண்களினாலும் எனக்கு சென்னை  ரொம்பவும் பிடித்து போனது..ஆனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு போவதை விட அழகழகான பெண்களுக்காகயாராவது வெளிநாடு செல்ல விரும்புவார்களா? அதுவும் அமேரிக்காவுக்கு.. அப்படி செல்லும் ஒரு இளைஞனின் கதைதான் இந்த படம்..

==============

Travellers and Magicians-2003-உலகசினிமா/பூட்டான் படத்தின் கதை என்ன??

டன்டுப் பூட்டானில் இருக்கும் ஒரு கிராமத்தின் அரசு அதிகாரி... அவனுக்கு அந்த மலைக்கிராமமும் அதன் தனிமையும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..காரணம் அந்த மலைகிராமத்தின் தனிமை மற்றும் கிராமத்து மக்கள்.. எப்படியாவது அந்த கிராமத்தில் இருந்து சென்று விட வேண்டும் என்று குறியாக இருக்கின்றான்.. அவன் அமெரிக்காவில் இருக்கும் தனது நண்பனின் கடிதத்துக்காக தினமும் காத்து இருக்கின்றான்.. அமெரிக்க நண்பனிடம் இருந்து ஒருநாள் கடிதம் வருகின்றது... அதில் அவனுக்கு அமெரிக்கா செல்வதற்க்கான வீசா இருக்கின்றது..மலைகிராமத்தில் இருந்து திம்பு என்ற நகரத்துக்கு போனால்தான் அமேரிக்கா செல்லல முடியும்..


ஆனால் கிராமத்து நண்பர்களிடம் இருந்து விடைபெற்று செல்வதற்குள் அவன் செல்ல  வேண்டிய பேருந்தை தவறவிடுகின்றான்... இருந்தாலும் வேறு ஏதாவது வாகனம் வரும் வரை நடந்தே செல்லுகின்றான்.. அப்போது அவன் பயணத்தின் போதும் சந்திக்கும் கிராமத்து மனிதர்கள் அவனுக்கு புத்தி புகட்டுகின்றார்கள்..அவன் அமெரிக்கா சென்றானா? என்பதை திரையில் பார்த்து மிகிழுங்கள்..

=================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

டன்டுப் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால் ஒரு மாதம் தான் வாங்கும் சம்பளத்தை அமெரிக்காவில் அரைமணிநேரத்தில் சம்பாதிக்க முடியும் என்பதையும் நிறைய அழகழகான பெண்களுக்காகவும் அவன் அமெரிக்கா செல்ல இருப்பதை சொல்லும் போது இன்றைய நவநாகரீக இளைஞர்களின்  வாழ்க்கையையும் அதன் தேடலையும் அந்த கேரக்டர் மூலம் இயக்குனர் வெளிபடுத்துகின்றார்..

ஒரு அரசு அதிகாரியின் எதிரில் எப்படி நிற்க வேண்டும் என்று டன்டுப் நிற்கும் போமு அந்த மக்களின் பழக்க வழக்கங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம்...

வழிபோக்கனாக வரும் துறவி கதைக்குள் ஒரு பெரிய கதை சொல்வது பெரிய சுவாரஸ்யம்...

முதலில் கிராமத்து மனிதர்களை அற்பமாக நினைத்து விட்டு பின்பு இயலாமையில் நட்பு பாராட்டுவது அற்புதம்..
துறவி சொல்லும் கதை  நமக்கு எல்லோருக்கும்  தெரிந்தகதைதான் என்றாலும் அந்த கதையில்  வரும் பெரியவர் கேரக்டர் வாழ்க்கையின் அடிப்படைகளை போகின்றபோக்கில் சொல்லும் கேரக்டர்..


வருடத்துக்கு ஒருமுறை  இந்த படத்தில் காட்டும் கிராமத்தில் போய் ஒருமாதம் தங்கி வாழ்க்கை நடத்தி விட்டு வரவேண்டும் என்று ஆசையை தூண்டும் அற்புதமான ரம்யமான இடங்கள்..


பயணத்தின் போது ஏற்படும் சின்ன காதல் அந்த காதல்   வாழ்க்கையை மாற்றும் வித்தை.. காதல்தான் எத்தனை சக்திவாய்தது??

படம் லோ பட்ஜெட் படம் என்பதால் அவய்லபிள் லைட்டிங்கில் முக்கால்வாசி படத்தை எடுத்து இருக்கின்றார்கள்..

கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் அரகூ அதிகாரியை தெரிந்து வைத்து இருப்பதும்.. திம்பு போய் சீக்கரம் திரும்பி வாருங்கள் உங்களை போன்ற இளைஞர்களின் பங்களிப்பு நம் கிராமத்துக்கு தேவை என்று சொல்லும் கிராமத்துவாசியின் தன் மன் மீதான நேசம் எல்லோரும் வரவேண்டும் என்று காட்சிகளில் சொல்லி இருப்பது அழகு...


 ===============
படக்குழுவினர் விபரம்..
 Directed by     Khyentse Norbu
Produced by     Raymond Steiner
Malcolm Watson
Written by     Khyentse Norbu
Starring     Neten Chokling
Tshewang Dendup
Lhakpa Dorji
Sonam Kinga
Sonam Lhamo
Deki Yangzom
Cinematography     Alan Kozlowski
Editing by     John Scott
Lisa-Anne Morris
Distributed by     Zeitgeist Films
Release date(s)     2003
Running time     108 mins
Country      Bhutan
 Australia
Language     Dzongkha

==============
படத்தின் டிரைலர்..

================
பைனல்கிக்.

இந்த படம் அவசியம் பார்த்தே தீரவேண்டியபடம்.. உலகபடம் பார்த்த டேஸ்ட் இருந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும்.. மிக மெலிதாக நகரும் திரைக்கதை.. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து படம்  வேகம் எடுக்க போகின்றது இந்த படத்தை பொறுத்தவரை சொல்ல முடியாது.. காரணம் படம் ரொம்ப மெதுவாக மிருதுவாக நகரும் திரைக்கதை...இந்த படம் சென்னை மூவீஸ்நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..9003184500

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



1 comment:

  1. அந்த மிதப்பு உண்மை தான் ..
    வெளியூரில் / வெளிநாட்டில் இருக்கும் போது என் ஊரில் இருக்கும் விசயங்களை நினைத்து ஏங்கி இருந்தாலும்,
    சொந்த ஊருக்கு திரும்பி போகும்போது ஒரு மிதப்பு வருவது தவிர்க்கமுடியவில்லை ..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner