விநாயகர் சதுர்த்தி...சில நினைவுகள்..


சென்னை பெருநகர  வாழ்க்கையில், நான் இழந்த விஷயங்கள் நிறைய...
பள்ளி காலங்களில்  எந்த  ஒரு பண்டிகை வருகின்றது என்றாலும், அந்த விழா குறித்த சந்தோஷம் இரண்டு வாரத்துக்கு முன்னயே சிறு வயதில் மனதில் வந்து சம்மனமிட்டு உட்காரும்..ஆனால் இப்போது அப்படி இல்லை. சரி பால்யக்கால வயது இப்போது இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.. ஆனால் இப்போதைய நகர வாழ்க்கை பிள்ளைகளுக்கு கூட பண்டிகை குறித்தான  சந்தோஷம் போய்விட்டது.. என்பதுதான் பெரிய சோகம்...

பிள்ளையார் சதுர்த்திக்கு இரண்டு வாரத்துக்கு முன்னே பிள்ளையார் கண்ணுக்கு குண்டுமணி கொடியில் இருந்து கண் எடுத்து பத்திரபடுத்தி வைப்போம்.. அதை அதிகமாக எடுத்து அரைத்து குடித்தால் இறந்துவிடுவார்கள் என்று, கொடியில் இருந்து குண்டு மணி எடுக்கும் போதே பயத்துடன் பசங்களுடன் பேசிக்கொள்வோம்.

சதுர்த்திக்கு இரண்டு நாளைக்கு முன்பே விளாம்மரத்தில் இருந்து கல்லால் அடித்தோ அல்லது மரத்தில் ஏறியோ அந்த பழங்களை சேகரிப்போம்..காலையில் போய் எருக்கம் பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை தயார் செய்வோம் ..சதுர்த்தியின் காலையில் மனப்பலவை எடுத்து அதை நன்றாக கழுவி அதில் கோலமிட்டு அதனை எடுத்து சென்று குயவர் வீட்டுக்கு போவோம்...
காலையிலேயே நல்ல கூட்டம் இருக்கும்...


 ராகுகாலம் எமகண்டம் பார்த்து விட்டுதான் பிள்ளையார் வாங்கவே வருவார்கள்..
இரண்டு வகையான பிள்ளையார்கள் விற்பனைக்கு  இருக்கும்.. ஒன்று அச்சுபிள்ளையார்... மற்றது கை பிள்ளையார்..


அச்சு பிள்ளையார் என்பது பிள்ளையார் அச்சு போல இருக்கும் இரண்டு பாகத்துக்கு நடுவில் களிமண்ணை வைத்து அழுத்தி எடுத்தால் அதுக்கு பெயர் அச்சு பிள்ளையார்..சில நேரங்களில் அச்சு பிள்ளையார் மூக்கறுந்து ஒரு ஆப்கான் பெண்ணுக்கு தாலிபான்கள் கொடுத்த தண்ணடனை போல சில நேரங்களில் மூக்குடைந்து காணப்படுவார்..

 அதைவிட குயவரின் பசங்கள் கொஞ்சம் களிமண் வைத்துக்கொண்டு விளையாட்டுக்கு பிள்ளையார்களை உருவாக்கி சிதைத்து உருவாக்கி சிதைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

கைபிள்ளையார் என்பது களிம்மண்ணில் குயவர் தன் கையாலே செய்து கொடுப்பது..சில கை பிள்ளையார்கள் கலைநயம்மிக்கவையாக இருக்கும்.. சில கை பிள்ளையார்கள் போலியோ அட்டாக்கில் மாட்டியது போல இருப்பார்..அவரை வாங்கி எடுத்து கொண்டு வீட்டுக்கு போனாலும் அவர் இருக்கும் நிலையில் நமக்கு அருள்பாலிப்பது சந்தேகமே...

எப்படி கலைநயமாக இருந்தாலும் அது இரண்டொரு நாளில் நல்ல நேரம் பார்த்து கடலூரில் இருக்கும் வங்காள விரிகுடாவிலோ, அல்லது கடலூரில் இருக்கும் கெடிலம் ஆற்றிலோ அல்லது கிணறு போன்ற நீர் நிலைகள் இருக்கும் இடத்திலோ அவர் பொதுமக்களால் கை கழுவி விடப்படுவார்....

சில நேரங்களில் பயபக்தியோடு நடு வீட்டில் வைத்து பூஜித்த பிள்ளையார் செய்வதற்கு எடுத்த களிமண்... நாங்கள் வருடம் முழுவதும் காலையில் காலைக்கடன்கள் முடித்த களிமண் மேட்டில் இருந்து எடுத்து இருப்பார்கள்..ரொம்ப  கொடுமையா இருக்கும்.
காலையில் சாதாரணமாக வாங்கி வந்த பிள்ளையார் பூஜை அறையில் வைத்த பிறகு குண்டுமணி கண் எல்லாம்  வைத்து.
, அருகம்புல் மாலை மற்றும் எருக்கம் பூ மாலை எல்லாம் போட்டு சந்தனம் மற்றும் குங்குமம் எல்லாம் வைத்த பிறகு பார்த்தால் காலையில் விளையாட்டுக்கு வாங்கி வந்த களிமண் பிள்ளையார் தெய்வகடாட்சியமாக காட்சி அளிப்பார்...

சாமி கும்பிட்டு விட்டு இரண்டு கொழுக்கட்டையை வயிற்றின் உள்ளே தள்ளினால் சுகமா இருக்கும்.ஆனால் பதினைந்து வருடங்களில் பிள்ளையார் சதுர்த்தி  ஊர்வலம் என்ற பெயரில் சென்னையில் வேறு முகத்தை காட்டிக்கொண்டு இருக்கின்றது...எல்லாவற்றையும் விட கடலில் கரைத்து விட்டு அந்த பிள்ளையார்கள் படும் அவமானம் சொல்லிமாளாது...

சின்னதாக களிமண்ணில் செய்து அது கடலில் போட்டால் அது பிரச்சனை இல்லை கரைந்து விடும்.. ஆனால் பிளாஸ்டாப் பாரிசில் செய்யும் மிக பிரமாண்ட பிள்ளையார்கள்.. எளிதில் கரைய மறுத்து அவமானபடுத்தபடுகின்றன.. சென்னை போன்ற பெருநகர பெரிய பிளாஸ்டாப் பாரிஸ் பிள்ளையார்கள் ஏரியா கெத்துக்காக தயாரிக்கபடுகின்றது.. அதனால்தான் பிரச்சனை..

சென்னையில் இப்படி பிள்ளையார் வாங்கி ஒரு சிலர் வழிபடுகின்றார்கள்.. ஆனால் சென்னையில்  நண்பர்  வீட்டில் பார்த்தேன்..கிருஷ்ணா ஸ்வீட்டில் பிள்ளையார் ஆர்டர் செய்து விட்டேன் என்றார் எனக்கு ஆச்சர்யம்... என்ன ஸ்வீட் ஆர்டர் செய்வது போல செய்து விட்டேன் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்டேன்..

கிருஷ்ணா ஸ்வீட்டில் இருந்து பிள்ளையார் வந்தார்..மண் பிள்ளையார் சின்ன சைஸ்....ஒரு ஹைடெக்கான பிள்ளையார் படம் போட்ட தகர டப்பாவில்...

1. மண் பிள்ளையார்
2.இனிப்பு மோதகம்
3. கார மொதகம்
4. கைமுருக்கு
5. திரட்டி பால்
6.லட்டு
7. எள்ளு மிளகு தட்டை
8.பிள்ளையார் ஸ்லோகம் அடங்கிய சிடி
காலையில் குளித்து பூஜை தட்டை விளக்கி வைத்தால்  போதும் 285 ரூபாய் செலவழித்தால் கிருஷ்ணா  ஸ்வீட் கடைக்காரர்கள் பிள்ளையார் வீடு தேடி வருகின்றார்...

பிள்ளையாரின் குண்டுமணி கண் எடுக்க நெரிஞ்சி முள் குத்தியும் நாயுருவி செடிகள் உடைகளில் சிக்கியும், கால் முட்டிவரை நாயுருவி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து எடுத்து போட்டு விட்டு,எருக்கம் பூப் பறிக்க போய் மலம் மிதித்து  பக்கத்தில் இருக்கு பில்லாமூச்சியில் காலால் தேய்த்து முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வீடுவருவதும்... பிள்ளையார் சதுர்த்திக்கு இரண்டு வாரத்துக்கு முன் இருந்தே இருக்கும் அந்த மெல்லிய சந்தோஷம் இப்போதைய கிருஷ்ணா ஸ்வீட் பிள்ளையார் வந்த பிறகு சுத்தமாக போய் விட்டது..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

 1. ஜாக்கி,
  Nice post.
  சென்னையில் வசிப்பதால் நீங்கள் at least விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடிகிறது.
  By living far away from India, all I get to do is to reminisce about the celebration.

  ReplyDelete
 2. in my village we dont celebrate ganesh chathurthy, i just getting know of it when i come to chennai....

  anhow its too bad for ecology and somehow someone do it to show how the festivals are. what to do we had to accept it

  ReplyDelete
 3. முற்றிலும் உண்மை. ஸில சம‌யங்களில் நாங்களே பிள்ளயார் செய்வோம். களிமண் எடுத்து, குண்டு மணி கண்களோடு,
  கொட்டாங்கச்சி வயிறு என்று பிள்ளையார் செய்வோம். இதை பால கங்காதர திலகர் ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறேன். இன்னும் 20 வருடங்களில் மறக்கப்படுமென்று நினைக்கிறேன்.

  அரவிந்

  ReplyDelete
 4. .எல்லாவற்றையும் விட கடலில் கரைத்து விட்டு அந்த பிள்ளையார்கள் படும் அவமானம் சொல்லிமாளாது...

  ReplyDelete
 5. அருமையான பதிவு ஜாக்கி. இந்த இளைய தலைமுறை இழக்கும் விஷயங்கள் அதிகம்.

  ReplyDelete
 6. 100 சதவிகிதம் உண்மை.... எல்லா பண்டிகைக் காலத்தில்லும் மக்களின் முகத்தில் ஏதோ ஒரு சந்தோசம் குடிகொண்டிருக்கும்.... இப்பொழுதோ கையில் ஒரு கோடியை கொடுத்தாலும் அந்த சந்தோசம் வராது போலிருக்கு .... எல்லாம் இந்த நகர (நரக) வாழ்க்கை கொடுத்த அனுபவம் :(

  ReplyDelete
 7. நன்றி நண்பர்களே நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு...

  ReplyDelete
 8. Jackie...Pazhaya ninaivugalil muzhga adithuvittirgal.....very nice post.

  ReplyDelete
 9. boss movie vimarsanam panrathu ilaya...

  ReplyDelete
 10. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை நான் கொண்டாட முடியவில்லை... நீங்கள் கடைசி பத்தியில் சொன்ன அனுபவம் எனக்கு நடந்து இருக்கு...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner