THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...



எச்சரிக்கை... இந்த படம்  வயதுக்கு வந்தோருக்கானது.. 


ரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒரு துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..
நள்ளிரவில் ஒரு மணிக்கு சும்மா பார்க்கலாம் என்று ஓட விட்ட இந்த படம் பத்தாவது நிமிடத்தில் தூக்கத்தை போக்கவைத்து விட்டது.. அப்டி ஒரு பரபரபப்பான திரைக்கதை.. சான்சே இல்லை..

வேலையில் உயர்வு தாழ்வு என்பது இந்த உலகத்தில் இல்லை.. கால் வயிற்று பசியை போக்க எதையும் செய்து இருக்கின்றார்கள், தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள பிடிக்காத தொழிலையும்  பலர் செய்து இருக்கின்றார்கள்..சமுகத்தில் தலைநிமிர்ந்து வாழ எந்த தொழிலையும் இந்த  உலகில் மனிதர்கள் செய்து இருக்கின்றார்கள்.. இன்னமும் செய்து வருகின்றார்கள்..

யாருமே எந்த தொழிலையும் வேண்டும் என்று செய்வதில்லை சூழ்நிலை செய்ய வைக்கின்றது.. அது எப்படிங்க?? ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்...?? சூழ்நிலை...

=========
அவன் நல்ல டேலன்ட்டான பையன்தான்..இளம்வயது. காமத்தை அனுபவிக்க ஒரு விபச்சார பெண்ணை போனில் அழைக்கின்றான்.. அவளோடு உறவு கொள்ள முயற்ச்சிக்கும் போது அவனுக்கு சமாச்சாரம் எழுந்திருக்கவில்லை... இம்போனன்டான அவனது இயலாமை  கோபமாக மாறுகின்றது... கோபமாக மாறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??? பொத்திகிட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்... ஆனால் ஒரு விபச்சார பெண் இவன்  பொட்டைதனத்தை கேலி செய்ய.. அவனுக்கு கோபம் வருகின்றது.. கோபம் என்றால் சாதாரண கோபம் அல்ல.. கொலை செய்ய வேண்டிய அளவுக்கு  கோபம்... ஒரு விபச்சார பெண்ணை  வர வைத்து கைகாலை கட்டி போட்டு சுத்தியால் தலையில் அடித்துக்கொள்வதுதான் அவனது ஸ்டைல்...ஒன்னு இல்லை இரண்டு இல்லை 12 கொலைகள் செய்கின்றான்..போலிஸ் என்ன பூப்பறித்துக்கொண்டு இருந்ததா??

 ===========================

THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா படத்தின் கதை என்ன???

இயோம் (Kim Yoon-seok)  ஒரு டிடெக்டிவ்..பணப்பிரச்சனையால் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமாவேலைக்கு மாறுகின்றான்...

இயோம்க்கு ஒரு உதவியாளன்... அவனது வேலை பார்க்கிங்கில் இருக்கும் எல்லா காரிலும்  வைப்பரில் ஒரு பிட்டு நோட்டிஸ் வைப்பான்... அதில் இப்படித்தான் எழுதி இருக்கும்... இந்த நம்பருக்கு போன் செய்தால் இந்த பிகர் கிடைக்கும் என்று போன் நம்பர் மற்றும் அந்த பெண்ணின் அரை நிர்வாண போட்டோ அதில் இருக்கும்....போன் செய்தால் வீடு தேடி வரும் என்பது போலான சேவை....

ஆனால் அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் இதுவரை வீடுதிரும்பவில்லை... அவர்கள் என்னவானார்கள் என்பது இயோமுக்கு தெரியாது..அவனை பொறுத்தவரை அந்த பெண்களை கடத்தி வேறு யாருக்கோ யாரோ விற்று விட்டார்கள் என்று மட்டும் அவனுக்கு புரிகின்றது... முக்கியமா குறிப்பிட்ட நம்பரில் இருந்து  பெண் வேண்டும் என்று  கேட்டு போன் வந்தால், அவர்கள் சொன்ன அட்ரசுக்கு பெண்ணை அனுப்பிவைத்தால் அந்த பெண் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.. அந்த குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வருகின்றது.. வேலை பிசியில் இயோம் மறந்து விட்டான்.. கிம் ஜி என்ற பெண் தனது ஐந்து வயது பெண்குழந்தையை வளர்க்க  விபச்சார தொழில் செய்கின்றாள்..அவளுக்கு அன்று உடல்நிலை சரியில்லை.இயோம் வலுக்கட்டாயமாக அவளை தொழிலுக்கு அனுப்புகின்றான்.  ண்கள் காணமல் போகும் அந்த குறிப்பிட்ட போன் நம்பருக்குதான் கிம் ஜி அனுப்பப்பட்டதை உணர்ந்து அவளை எச்சரிக்கின்றான். ஆனால் அந்த சைக்கோ அதுக்கு இடம் கொடுக்கவில்லை... ஆனால் இயோம் தனது டிடெக்டிவ் மூளையை வைத்து தன் பெண்களை யார் கடத்துகின்றார்கள்.. என்று கண்டு பிடிக்கின்றான்...அவனை துரத்தி போலிசில் ஒப்படைக்கின்றான்.. இருந்தாலும் வலுவான ஆதாரம் இல்லாத காரணத்தால் அந்த சைக்கோ வெளியே வருகின்றான்..ஆனால் விட முயற்சியுடன் கிம் ஜியை தேடுகின்றான்.. அந்த பெண் கிடைத்தாளா? என்பதை வெண்திரையில் காணுங்கள்..


=======================

வெகு நாட்களாகவிட்டது விரல் நகம் கடித்துக்கொண்டு அடுத்து  என்ன என்ற ஆர்வத்துடன் படம் பார்த்து......... அந்த குறையை இந்த சவுத்கொரியன் படம்  நேற்று இரவு தீர்த்துவிடடது.. இன்னும் நிறைய படங்கள் பார்த்து விட்டு எழுதாமல்  வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் முதலில் முந்திக்கொண்டு விட்டது...

அதீத வன்முறை காட்சிகள் படத்தில் இருந்தாலும்.. அதை தூக்கி சாப்பிடும் விதமாக  படத்தில் இருக்கும் சேசிங் இந்த படத்தை தூக்கி நிறுத்துகின்றது...

முதல் காட்சியில் ஒரு விபச்சார பெண் காணாமல் போகும் காட்சியை ஸ்டாப் பிளாகில் காட்டும் அந்த காட்சியும், அந்த மழைகாட்சியும் இணைந்து இருக்கும் போது இயோம் வந்து நான் துரத்தி கண்டுபிடிக்கின்றேன் என்று சொல்லும் காட்சியில் படம் வேகம் எடுக்கின்றது..

நம் ஊர் குழந்தையை விட கொரிய குழந்தைகள் இன்னும் டெலன்ட்க இருக்கின்றார்கள்.. டிஎன்ஏ டெஸ்ட் போன்றவற்றை ஒரு சின்ன பெண் பேசுகின்றாள் என்பதை விட அந்த அளவுக்கு அவள் கவனிக்கின்றாள் என்று சொல்லும் காட்சி அருமை..
இந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் துரத்தல் காட்சிகளை உள்ளடக்கியது என்பதால் படத்தில்  வேலை செய்த டெக்னிஷியன்களின் பருப்பு பரதநாட்டியம் ஆடி இருக்கும் என்பதை காட்சிகளை பார்க்கும் போது தெரிகின்றது....மிக முக்கியமாக ஸ்டேடிகேம் ஆப்பரேட்டர்...அந்த உழைப்பை நல்ல எடிட்டிங் காப்பாற்றி இருக்கின்றது...

இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னோருவர்...இயோமின் உதவியாளராக வரும் அந்த பிட் நோட்டிஸ் கொடுக்கும் அந்த பையன்..கொத்து சாவியை கொடுத்து எந்த வீட்டில் அது பொருந்துகின்றது என்று சொல்லியதை அப்படியே பின்பற்றுவது சிறப்பு...

 அந்த பெண் தப்பித்து விட்டாள் என்று நினைக்கும் போது அந்த பெண்ணின் மண்டையில் சுத்தியலால் அடித்து தெரிக்கும் ரத்தம் நாம் மனதில் நினைக்கும் திரைக்கதைக்கு கொடுக்கும் மரணஅடி...ங்கோத்தா நீங்க என்ன பெரிய மயிறா?? இங்க நான் டைரக்டரா? இல்லை படம் பார்க்கும் நீங்க டைரக்டரா? என்று  இயக்குனர் Na Hong-jin நம்மை பார்த்து நக்கலாக வைச்ச ஷாட்டுதான் அது....

படம் நெடுகிலும் நிறைய டுவிஸ்ட்டுகள்.. அந்த கார் மேதலில் ஏற்ப்படும் ஓட்டம் படம் நெடுகிலும் இருப்பது இந்த படத்தின் சிறப்பு..


இந்த படத்தின் ஹீரோவுக்கும் அந்த சைக்கோவுக்கும் நடக்கும் அந்த கடைசி கட்ட சண்டைகாட்சியில் நீங்கள் ஹீரோவாக மாறி வெறிப்பிடித்தது போல வில்லனை அடிக்க நினைப்பது இந்த படத்தின் திரைக்கதை வெற்றி..

கடைசி காட்சி நெகிழ்ச்சியான காட்சி....

இந்த படத்தை வார்னர்பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கின்றது..ஹீரோ லியினர்டோ டிகாப்பிரியோ நடிக்க இந்த படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றது...
 ====================

இந்த படம் வாங்கி குவித்த விருதுகள்...


    2008 Puchon International Fantastic Film Festival
        Best Film
        Best Actress (Seo Yeong-hee)
        Asian Award
    2008 Daejong Film Awards
        Best Film
        Best Director
        Best Actor
        Best Production
        Best Cinematography
        Popularity Award (Kim Yoon-seok)
    2008 Blue Dragon Film Awards
        Best Actor (Kim Yoon-seok)
    2009 Yubari International Fantastic Film Festival
        Yubari Fantaland grand-prix:
    2009 Deauville Asian Film Festival
        Best Action Asia Film
    2009 Asian Film Awards
        Best Editor (Kim Sun-min)

====================

படக்குழுவினர் விபரம்
 Directed by     Na Hong-jin
Produced by     Kim Su-jin
Yun In-beom
Written by     Na Hong-jin
Lee Shin-ho
Starring     Kim Yoon-seok
Ha Jeong-woo
Music by     Kim Joon-seok
Choe Yong-rak
Cinematography     Lee Seong-jae
Editing by     Kim Sun-min
Distributed by     South Korea:
Showbox
United Kingdom:
Metrodome
Release date(s)     South Korea:
14 February 2008
United Kingdom:
19 September 2008
Running time     123 min.
Country     South Korea
Language     Korean
Admissions     5,120,630
Gross revenue     US$35,760,133

==================
படத்தின் டிரைலர்...


================
பைனல்கிக்...

இந்த படம்  பார்த்தே தீர வேண்டியபடம்...ஒரு படத்தை பதபதைப்பாக பார்க்க வைக்க ஒரு தில் வேண்டும்.. அந்த தில் இந்த படத்தில் இருக்கின்றது.. வழக்கமான கொரிய வன்முறை இந்த படத்திலும் இருக்கின்றது...நீங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ஒன்று நினைத்தால் அதை திரைக்கதையில் மாற்றும் இயக்குனர்..இயக்குனருக்கும் நமக்கான சேசிங்தான் இந்த படத்தின் வெற்றி... சியோலில் இருந்த உண்மையான சீரியல் கில்லர் யோ யங் சூல் என்பவன் மபோ கு மாவட்டத்தில் நடத்திய  கொலைகளின் சம்பவங்களின் கோர்வை இந்த  விறு விறுப்பான திரில்லர் படம்..



இந்த படம் சென்னை முவிஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது தற்போது புளுரே டிவிடிக்களும் கிடைக்கின்றது..அலிபாய் செல்..9003184500


========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


6 comments:

  1. ippadathaithaan samipathil murder2 endru eduthuthu vittarkal.

    ReplyDelete
  2. இப்படத்தை ஹின்தியில் சுட்டு விட்டார்கள். படம் பெயர் "மர்டர்2".

    ReplyDelete
  3. அதிக வயலன்ஸ் என்றாலும், நீங்கள் சொன்ன மாதிரி, திரைக்கதை, எடுத்த விதம் மற்றும் வில்லனுக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதிலும் அந்த கடைசி சீன் அற்புதம்.

    ReplyDelete
  4. HI JACKIE,

    I SAW THIS MOVIE CHASER ( 2008) LAST WEEK. DO YOU KNOW OUR BOLLYWOOD COPIED THIS MOVIE IN THE NAME OF MURDER2 .....

    HOPE U TOO KNOW THAT.

    THIS IS MY FIRST COMMENT..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner