TRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.





உதவி செஞ்சா உபத்திரவம் வருமா? சர்வநிச்சயமா வரும்.. எப்படி சார் வரும்??




எங்க அம்மா சின்ன வயசுல இருந்தே நல்லொழுக்கம் மற்றும் நீதிக்கதைகள் சொல்லி என்னை வளர்த்தாங்க அதுனால நான் இதை எல்லாம் நம்பவே மாட்டேன்... சக மனிதனுக்கு உதவி செய்வது என் இயல்பு..



அஞ்சு வருசத்துக்கு முன்னே சென்னையில் ஓஎம்ஆர் ரோடு போட ஆரம்பிச்சாங்க... அப்ப மிட் நைட்டு சோழிங்கநல்லூர்கிட்ட ஒரு சேட்டு வந்த கார் விபத்துக்குள்ளாயிடுச்சி.. சேட்டு குத்து உசிரும் கொலை உசிருமா காரு உள்ள ரத்த சகதியா உயிருக்கு போராடிக்கிட்டு கிடந்தாரு.. அந்த பக்கமா போன பல பேர் நமக்கு ஏன் வம்புன்னு போயிட்டாங்க..



சின்ன வயசுலேயே தன் அம்மாவால நீதிக்கதைகள் சொல்லி வள்ர்க்கப்பட்ட அந்த நல்லவன் வந்தான்... செட்டை பக்கத்துல இருக்கற தனியார் மருத்துவமணையில் சேர்த்தான்..



வீட்டு அட்ரசை கொடுத்து விட்டு, வீட்டுக்குபோய் பசியில் ஒரு கவளம் சோத்தை எடுத்து வாயில வைக்கலாம்னு நினைக்கறான் போலிஸ் வந்து  நிக்குது....?



வீட்டை விட்டு வெளிய  வந்தவனை விவரம் சொல்லாமலேயே  அந்த  நல்லவனை  போலிஸ் போட்டு  மிதிக்க ஆரம்பிச்சிடுச்சி..வலி உயிர் போவுது... எதுக்கு சார் இப்படி போட்டு என்னை வெளுத்து வாங்கறிங்க என்று கேட்டான்.. 

சேட்டை காப்பாத்தி ஆஸ்பிட்டல் சேர்த்த சரி.. சேட்டு கார்ல ஒருஅரைகிலோ தங்க கட்டி வச்சி இருந்தார் அது எங்கன்னு கேட்டு அந்த நல்லவனுக்கு செமை உதை...போலிஸ் பையனை பொளந்து எடுத்துட்டானுங்க..



பாவி சேட்டு பத்து நாளைக்கு அப்புறம் கோமா, கோவா எல்லாம் சுத்திட்டு நினைவுக்கு வந்ததும்.. யோவ் அரைகிலோ தங்க கட்டி எங்கய்யான்னு கேட்டா? அன்னைக்கு தங்கம் எடுத்துக்கிட்டு போகலாம்னுதான் பார்த்தேன்.. நைட் நேரம் அதனால எதுக்கு ரிஸ்க்குன்னு லாக்கர்லேயே வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னானாம்..



பத்து நாளா போலிஸ் ஸ்டேஷன்ல பயிறை இரைய உட்டு இரைய உட்டு உதை வாங்கி கிட்டு கிடந்த அந்த நல்லவனுக்கு போன உயிர் அப்பதான் திரும்பி வந்துச்சாம்...



அது போலத்தான் 400 மில்லியன் மதிப்புள்ள பாண்டு பத்திரத்தை ஒருகொள்ளை கும்பல் திருடிக்கொண்டு செல்ல முயற்சிக்க அதை தடுத்தவனை போலிஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்குமா? நல்லதுதானே செஞ்சான் என்று நீங்கள் கேட்கலாம்..அவன் நல்லது செஞ்சானா இல்லையான்னு இந்த படத்தை பாருங்க??



====

TRIBLE TAP-2010/ஹாங்காங் படத்தின் கதை என்ன??



கென் (Louis Koo) ஒரு கம்பபெனியில் பைனான்ஸ் மேனேஜர்..துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம்  வென்றவன்.. ஒரு நாள் 400மில்லியன் மதிப்புள்ள ஒரு பண்டு பத்திரத்தை கொள்ளை அடிக்க நடக்கும் முயற்சியை கென் தடுக்கின்றான்...

இதில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆட்கள் கொல்லப்பட, ஒரு டிராபிக்போலிஸ் நிறைய காயங்களுடன் தப்பிக்கின்றார். கொள்ளை அடிக்க வந்த ஒருத்தன் தப்பிக்கின்றான்.. என்னதான் துப்பாக்கி சுடுவதில் வீரனா இருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்தது தப்பு என்று சொல்லி கென்னை போலிஸ் வட்டம் இருக்குகின்றது...

அதுக்கு  காரணம். கென்னோடு துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவதாக வந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்ரி (Daniel Wu).. ஒரு கட்டத்தில் கென் மீது தவறு இல்லை என்று கோர்ட் விடுவிக்கின்றது... ஆனால் ஜெர்ரி கென் மீது ஒரு கண் வைத்துக்கொண்டுஇருக்கின்றான்... எப்படி ஒரு கண்ணை கென் மீது ஜெர்ரி  வைத்துக்கொண்டு இருந்தான் என்று உங்கள் இரு கண்களால் திரையில் பரபரப்பாய் பார்த்து மகிழுங்கள்.........

=====================



படத்தின் சுவாரஸ்யங்களில் சில..



ரொம்ப நாளைக்கு அப்புறம் பரபரக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் பார்த்த திருப்தியை இந்த படம் கொடுக்கும்...



கென் மூவ் ரொம்ப அபாரம்.. ஜெராக்ஸ் எடுக்கும் போது கை நடுங்கும் காட்சியில்.. முதல் தடவையாக இறப்பை பார்த்த காரணத்தால் கை நடங்குகின்றது என்று சொல்லி சமாளிக்கும் காட்சி அற்புதம்..



ஜெர்ரி தன் போலிஸ் புத்தியோடு கென்னை அனுகும் ஒவ்வோரு காட்சிக்கும்  கென் கவுண்டர் கொடுக்கும் காட்சி படத்தின் பெரிய சுவாரஸ்யம்.



மிகச்சரியாக காய் நகர்த்தும் கென்னை  மடக்க எடுக்கும் பிரயாத்ததனங்களில் தோற்று போக.. அவன் வெளியே வந்து தசறு  செய்ய வேண்டும் என்றால் அவனை எரிச்சல் படுத்த வேண்டும் என்று சொல்லித்தரும் ஜென் குரு போலான போலிஸ் ஆபிசர் நண்பன்...



தான் சிரித்து  பேசிவிட்டால்  எங்காவது எப்படியாவது உளறிவிட வாய்ப்பு இருப்பதாக நினைத்து உம் என்று இருக்கும் கென் கேரக்டரைசேஷன் அருமை.



ஜெர்ரியின் பாடிலாங்வேஜ் அற்புதம்...போலிஸ் ஆபீசராக பிரமாதப்படுத்தி  இருக்கின்றார்..



கிளைமாக்சில் மூளை சாவு அடைந்து இறந்தவன் என்பதால் அந்த குடும்பத்தை சமாதானபடுத்தி அந்த ஆப்பேரேஷனுக்கு ஒத்துக்கொள்ள செய்வதும் அதுக்காக அந்த இறுதி அரசு மரியாதை சூப்பர்...





=========

படக்குழுவினர் விபரம்

Directed by    Derek Yee

Produced by Henry Fong

Written by      Chun Tin-nam

Lau Ho-leung

Derek Yee

Starring          Louis Koo

Daniel Wu

Charlene Choi

Li Bingbing

Music by         Peter Kam

Cinematography       Anthony Pun



Editing by      Kwong Chi-leung

Studio             Beijing Poly-bona Film Publishing Company

Sil-Metropole Organisation

Emperor Motion Pictures

Film Unlimited

Distributed by            Emperor Motion Pictures

Release date(s)           1 July 2010

Running time             118 minutes

Country          Hong Kong

Language       Cantonese

==========

படத்தின் டிரைலர்


=========

பைனல்கிக்.



இந்த படம்  பார்க்க வேண்டியபடம்... நல்ல ஆக்ஷன் நல்ல விறுவிறுப்பான காட்சிகளை கொண்ட ஆக்ஷன் படம்..மூவிஸ் நவ் அலிபாயிடம் இந்த படம் இருக்கின்றதா என்று கேட்டுப்பாருங்கள்..இந்த தளம் உங்களுக்கு பிடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் நாலு பேருக்கு அறிமுகபடுத்துங்க அதுவே போதும்..


====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

5 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner