சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்(25/08/2011)

ஆல்பம்.
பெங்களுரில் திருமணத்துக்கு வருபவர்கள் மேல் அவ்வப்போது பன்னீர் தெளிப்பார்களே அவ்விதமாக மழை தெளித்துக்கொண்டு இருக்கின்றது...
==========

ஆட்சிக்கு வந்து ஒருமாதம் கூட ஆகவில்லை... அதனால் அதிமுக  ஆட்சி பற்றி எந்தகமென்ட்டையும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சில நடுநிலையாளர்கள் போர்வையில் இருந்தவர்கள் நேற்றுவரை சொல்லிகொண்டு இருந்தார்கள்,..100நாள் கடந்து விட்டது...,ரெடி ஸ்டார்ட்.

=============
அன்னாஹசரே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. காரணம் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அகிம்சையை கல்லறைக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகின்றன...
============
காசு பணம் இருந்தால், பதவி இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று எனக்கு வெகு நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது.. ஆனால் கலைஞரிடம் இல்லாத பணமா? அவரிடம் பணம் இருந்தது, பதவியும் இருந்தது.. ஆனால் அவர் மகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார்...யாரு சொன்னது பணம், அதிகாரம் இருந்த்தால் சந்தோஷம் இருக்கும் என்று????
============
புதிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றவேன் என்று முதல்வர் ஜெ அறிவித்தது  போல வள்ளுவர் கோட்டத்தை ‘வாயில்லா ஜீவன்கள் வசதிக்காக வள்ளுவர் கோட்டத்தை கால்நடைமருத்துவகல்லூரியாக மாற்ற வேண்டும் என்று யாராவது அம்மாவுக்கு கோரிக்கை வைத்தால் நலம்...
======
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய மழை... சென்னையில் போக்குவரத்து நெரிசலாம்...பல இடங்கள் துண்டிக்கபட்டு இருக்கின்றதாம்.. ஐ மிஸ் யூ சென்னை....
==========
அன்னனா ஹசாரே உண்ணாவிரத்தில் நம்ம நடிகர் விஜய்  கல்நது கொள்ள டெல்லிக்கு இன்று செல்கின்றார்... ஒரு முடிவோடத்தான்.. காய் நகத்தரறோ...எனக்கு இந்தி தெரியாது.. விஜய்க்கு  தெரியுமா?? எனக்கு தெரியலை..தெரியுதோ இல்லையோ மைக்கை புடிச்சி மேரா பாரத் மகான்னு சொல்லிவிட்டு வர வேண்டியதுதான்...

====================
தமிழகத்தில் வறுமையை ஓட ஓட விரட்டுவதே தமது குறிக்கோள் என்று நேற்று சட்டசபையில் நம் முதல்வர் ஜெ சூளுரைத்தார்... அப்படி ஒரு தமிழ்நாட்டை காண எனக்கும் ஆவல்தான்... அவரின் இந்த சீரிய முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல பரம் பொருளை  வேண்டிக்கொள்வோம்...

==============
என்னைக்கும் இல்லாத திருநாளாக நமது பிரதமர்  பாராளுமன்றத்தில் நாட்டில் உள்ள அணுஉலைகள் உலக தரத்துக்கு இணையாக பாதுகாப்பாக  உள்ளது  என்று சொல்லி இருக்கின்றார்...நமது நாட்டு அணு உலை பாதுகாப்பு பற்றி ,நிறைய ஏடுகள் எழுதிவிட்டன...பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொட்ந்து போராடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கின்றன... இயற்க்கை அன்னையே தோனி தொலங்கி  எங்கள் பிரதமர் பாராளுமன்றத்தில் சூளுரைத்ததை தவறாக எடுத்துக்கொள்ளாமல் அவரை மன்னியும்......

=================

மிக்சர்
நேற்று ஈரோட்டில் நடந்த திருமணத்துக்கு  சென்றேன்..ஈரோடு கதிரிடம் மட்டும் சொல்லி இருந்தேன்... செவ்வாய், புதன் ஈரோடு திருமணத்துக்கு வந்தால் வருவேன் என்று...  செவ்வாய் மதியம் பெங்களுரில் இருந்து கிளம்பி ஈரோட்டுக்கு இரவில் சென்றேன..

( செல்வ்வாய மதியம் வழியில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போகும் மலைப்பாதையில் மீடியனில் அரசு பேருந்து ஓய்வெடுக்கும் போது)

ஆக்ஸ்போர்ட் லாட்ஜில் ரும் போட்டு இருந்தார்கள். புதன் காலையில் திருமணம் முடித்து கதிருக்கு போன் செய்தேன்.. கதிர் சவிதா காலேஜ் அருகில் என்னை பிக்கப் செய்தார்... எப்போது ஊருக்கு கிளம்புகின்றீர் என்றார்.. மதியத்துக்கு மேல் என்றேன்.. எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பெங்களுர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மதியம் இரண்டரைக்கு ஈரோட்டில் வந்து கிளம்பும் அதில் டிக்கெட் புக் பண்ணுகின்றேன் என்று சொல்லி புக் பண்ணி கொடுத்தார்....நான் வந்து இருப்பதை ஈரோடு குழுமத்தில் போட்டார்...ஒரு மணிநேரத்தில் நான்கு நண்பர்கள் வந்தார்கள்... ஈரோடு கதிர்,ஜாபர்,ல்வடேஆல் அதே  போல் நான் எதிர்ப்பார்க்காத நபர்.. அமரபாரதி நிறைய முறை அமெரிக்காவில் இருந்து எனக்கு போன் செய்துஇருக்கின்றார்...
(கார்த்தி எடுத்த போட்டோ அதனால் கார்த்தி இல்லை சாரி கார்த்தி)
அவரை இப்போதுதான் நேரில்பார்க்கின்றேன்.. என்னை சந்தித்ததில் மிகுந்த உற்சாகம்.. அவரது பேச்சில்  செயலில் காண முடிந்தது அவர்எடுத்த வந்த ஐகானை கதிர் ஓட்ட மற்ற நால்வரும் அதில் பயணம் செய்தோம்...முதலில் தயிர்வடை சாப்பிடலாம் என்று சென்று அதன் பிறகு டானிக் பாருக்கு சென்றுவிட்டோம்...

எல்லோரும் வேலைநேரத்தில் இருப்பதால் எல்லோரும் ஜுஸ் ஆர்டர்   சொல்ல அமரபாரதி எனக்கு மட்டும்ம மார்பிஸ் ஒரு லார்ஜ் ஆர்டர் செய்தார்... அதன் பின் பயண களைப்பு போக்க மேலும் இரண்டானது வேறுகதை... நிறைய பேசினோம்.... ஜாபர் ஏன் சாண்ட்வெஜ் லேட் என்றார்..குழந்தையைவைத்துகொண்டு குறித்த நேரத்தில் முன்பு போல எழுத முடியவில்லை இரண்டு வாரங்கள் சொன்ன நேரத்தில் எழுத முடியவில்லை... அதனால் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்க்கு நேரம் காலம் எல்லாம் இல்லை இனி இல்ல் என்றேன்... நேரம் கிடைத்தால் தினம் தினம் கூட வரலாம்...2,30க்கு ரயில்நிலையத்தில் கதிர் டிராப் செய்தார்.. பயணத்தை இனிமையாக்கிய கதிருக்கும் வேலை நேரத்திலும், என்னை சந்திக்க வந்த  நண்பர்களுக்கு என் நன்றிகள்.. அமரபாரதி நைட் திரும்ப ரூம் எக்ஸ்டென்ட் செய்து தங்க சொன்னார்...


 சில வேலைகள் பேங்களூரில் இருப்பதால் அவர் வீட்டு கிரகபிரவேசத்துக்கு வருகின்றேன்., என்று சொன்னேன்.தம்பிகள் பிரபா மற்றும் சங்கவி போன் செய்தார்கள்..இரண்டு பேரில் யாரோ மதியம் சாப்பிட்டியா என்றார்கள்.. இனிமேல்தான் என்றேன்... சாப்பாடு அல்லது பீட்சா ஆர்டர் செய்து கதிர்கடைக்கு அனுப்பட்டுமான்னே என்றார்கள்... டேய் அடங்குங்கடா....போதையில் எந்த பயபுள்ள சொல்லிச்சின்னு தெரியலையே..
ஈரோடு டானிக் பார் நன்றாக இருந்தது........
================
பெங்களூரில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்தில் ஏறினேன்...சைடு கண்ணாடி உடைந்து இருந்தது.. அதில் இருந்து கண்ணாடி துகள்கள் பயணிகள கண்ணை பதம் பார்த்தன..பேருந்து வேகத்தில் அந்த கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து  அந்த ஓட்டை பெரிதாகிகொண்டு வந்தன...ஆனால் அதை முழுவதும் உடைத்தால் டிப்போவில் உள்ள அதிகாரிகள் கேள்வி கேட்பார்கள்.. என்று டிரைவர் கண்டக்டர் பயந்தனர்... பயணிக்ள எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.. நான் போட்டோ எடுத்து உங்கள் மெயிலுக்கு அனுப்புகின்றேன்.. எனது எண்ணை கொடுத்தேன்.. உங்கள் அதிகாரிகளுக்கு எதாவது சந்தேகம் என்றால் எனக்கு போன்   செய்ய சொல்லுங்கள் என்றேன்..  என்னை போல சிலரின் டிக்கெட் வாங்கி அவர்கள்  செல் எண்களை கண்டக்டர் குறித்துக்கொண்டார்.. எனது வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியால் அந்த  கண்ணாடிகளை அடித்து நொறுக்கினோம்...

================
சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் ஏறினேன்.. நல்ல இளையராஜாவின் பாடல்கள் ஒளித்துக்கொண்டு இருந்தன..  நல்லபயணம்.. இரண்டு பசங்க வழியில்  ஏறினார்கள்.. தலைவர் படத்தை போடச்சொன்னார்கள்.. எந்த தலைவர் என்பது எனக்கு தெரியாத காரணத்தால் எனக்கு பீதி கிளம்பியது... சிவகாசி என்ற ஒப்பற்ற காவிய்த்தை கண்டுகளிக்கவைத்தார்கள்.. அந்த சிறப்பு வாய்நத படத்தை ஓடவிட்ட கண்டக்டர் இவர்தான்...

மறக்க முடியாத பயணமாக மாற்றிவிட்டடார்கள்..படுபாவிகள்..

==============
இந்தவார கடிதம்.


டியர் சேகர்,

உங்களுக்குப் போன் செய்து நாட்கள் பல கடந்து விட்ட பின்னர் மிகவும் தாமதமாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதற்கு மன்னிக்கவும். சில எதிர்பாராத தடங்கல்கள் வந்து விட்டன. உங்கள் பதிவுகளைப் படித்தவுடன் உடனுக்குடன் கமெண்ட் இட வேண்டுமென்று விருப்பம். இனி அடிக்கடி எழுதுகிறேன்.

1)
எழுத்தாளர் பாலகுமாரனை அவர் பிறந்த நாளன்று சந்தித்ததைப் பற்றி மகிழ்ந்து ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அன்பாக நடந்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். அம்மட்டில் நீங்கள் பாக்கியசாலிதான். என் அனுபவம் என்னவெனில்: கோவையிலிருந்து என் நண்பர் சென்னை வருவதாகவும் பாலகுமாரனைப் பார்க்க விருப்பம் என்றும சொன்னார். பாலகுமாரன் பைத்தியமான அவருக்காக நான் பாலகுமாரனுக்கு போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அழைத்துச் சென்றேன். அவர் பாலகுமாரனுடன் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருக்க, நான் எதுவும் பேசாமல் நொடிக்கு நொடி மாறும் அவர் முகபாவனைகளையும், அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன். (அவரது எழுத்துக்கள் எனக்கும் பிடிக்குமென்றாலும் அப்போது எதுவும் பேசத் தோன்றவில்லை.) நண்பருடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென என் பக்கம் திரும்பி, ‘‘இவன் என்ன புடுங்கி மாதிரி பேசறான்னுதானே நினைக்கிற?’’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவரது எழுத்துக்கள் எனக்கும் பிடிக்குமென்றும், அவரது பேச்சைத்தான் ரசித்துக் கொண்டிருந்தேன் என்றும் அவருக்குப் புரியவைப்பதற்குள் திணறி விட்டேன். அதன்பின் எல்லா எழுத்தாளர்களையும் சந்தித்துப் பேச வேண்டுமென்று எனக்கிருந்த ஆசையே போய்விட்டது. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!

2)
சென்னையில் ட்ராபிக் நெரிசலைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கு ஏற்புடையவையே. எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் தாய்மார்கள் குழந்தைகளிடம், ‘‘ஓரமா வா, சைக்கிள் வருது’’ என்று சாலை ஓரத்திற்கு இழுத்து அழைத்துச் செல்வார்கள். இங்கே சென்னையிலோ லாரியே வந்தாலும் அடிச்சிடுவானா அவன்?’ என்கிற மாதிரி எருமைத்தனமாகத்தான் நடக்கிறார்கள். அதிலும் இன்டிகேட்டர் போட்டுவிட்டு அடுத்த கணமே திரும்பும் மாமிகளைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது... எனக்கும் அனுபவம்தான்! உங்கள் பதிவில் குறிப்பிட மறந்த ஒன்று: ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது முன்பெல்லாம் எண்கள் குறைந்து 3க்கு வரும் போதே வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறப்பார்கள். இப்போதெல்லாம் 7 வரும்போதே பறக்கிறார்கள். அதுதவிர, முன்னால் நிற்கும் என்னையும் ஹாரனை பலமாக அடித்து போடாஎன்று விரட்டுகிறார்கள். பள்ளிகளில் நாம் டிசிப்ளின் கற்றுக் கொடுக்க மறந்து விட்டோமா? புரியவில்லை.

3)
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி அழகாக பதிவிட்டிருந்தீர்கள். அவரின் அம்மா பெயர் தெரியவில்லை என்றும் பின்னர் நீங்கள் சேர்த்ததையும் அறிந்து வியந்தேன். காமராஜரைப் பற்றிய எல்லாப் புத்தகங்களிலும் அவர் அம்மாவின் பெயரும் இருக்கும். ஒரு அன்பரின் கமெண்ட்டுக்கு நீங்கள் பதிலளித்திருந்ததும் நன்றாக இருந்தது.

4)
மோட்சம் தியேட்டர் அருகில் ஒன்வேயில் சில அடிகள் செல்ல நீங்கள் முயன்றதையும், ட்ராபிக் போலீஸ் நடவடிக்கை(?)யையும் எழுதியிருந்தீர்கள். எதையும் மறைக்காமல் நானும் சராசரி மனிதன்தான்என்று நீங்கள் எழுதியிருந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது. உங்கள் பதிவுகளின் சிறப்பம்சமாக நான் குறிப்பிடுவதும் இதைத்தான்.

5)
உங்கள் அப்பா காலத்தில் பதிவுகள் எழுதும் பழக்கம் தோன்றவில்லை. இருந்திருந்தால் அவர் பதிவில் தனசேகர் இரவெல்லாம் அழுகிறான். முதுகில் சாத்தலாம் போலிருக்கிறது. ஆனால் முகத்தைப் பார்த்தால் பாசம் வருகிறதுஎன்று எழுதியிருப்பார்.

6)
யுவகிருஷ்ணா ஒரு முறை உங்கள் பதிவில் பின்னூட்டமிடும் போது, ‘பல நல்ல சிறுகதைகளை தவற விடுகிறீர்கள் ஜாக்கிஎன்று குறிப்பிட்டிருந்தார். சதாப்தி ரயிலில் நீங்கள் பெங்களூர் பயணித்த பதிவுகள் இரண்டையும் படித்தேன். எதையும் தவறவிடாமல் அழகான சிறுகதை போலவே எழுதியிருந்தீர்கள். பாராட்டுக்கள்!

7)
நான் போனில் சொன்னது போல், நான் இளவயதில் ரசித்த திருச்சி மாநகரத்தை பல கோணங்களில் எடுத்த உங்கள் புகைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஸேவ் செய்து கொண்டேன். நன்றி!

இவ்வளவு நேரம் பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. முன் சொன்னது போல் இனி உடனுக்குடன் கருத்தை தெரிவிக்கிறேன். வேறென்ன..? நானும் கொஞ்சம் பதிவுகளில் கிறுக்கலாமென்றால் உங்கள் கடைக்கண் பார்வைதான் இன்னும் என்மேல் விழுந்த பாடில்லை. அதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும்...

பா.கணேஷ்


மிக்க நன்றி கணேஷ்.. விரிவான கடிதத்துக்கு... நீங்கள் என்னிடம் பேசியதாக ஞாபகம் இல்லை... நேரம் கிடைக்கும் போது பேசவும்.,.பாலகுமாரனை பற்றி பலர் பலவிதமான அனுபவங்களை சொல்லுகின்றார்கள்..நண்பர் வீடுதிரும்பல் மோகன்குமார் கூட அவர் பாலகுமாரனை சந்தித்த கசப்பான அனுவபவத்தை சொல்லி இருந்தார்...பாலகுமாரன் என்னை காட்டி .....இவர் ஜாக்கி இணைய எழுத்தாளர் என்று முன்னாள் பைலட் ஒருவரிடம் அவர் வீட்டில என்னை அறிமகபடுத்தினார் பாருங்கள்.. அது போதும்..ஒருவேளை இன்று இருக்கும் பாலகுமாரன் இன்னும் பக்குவபட்டு இருக்கின்றாரோ???

==========
ஹீரோ ஹோண்டாவுக்கான ரகுமானின் இந்த புதிய விளம்பர பாடல் அசத்தல்...


============

பிலாசபி பாண்டி..
எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில் உன் வருத்தங்கள் மட்டும எப்படி நிரந்தரமாக இருக்கும் என்று எப்படி நம்புகின்றாய்..?? பீ சீயர்ஸ்

===============

நான்வெஜ்18+


 செக்கரட்டிரிக்கும், பர்ச்னல் செக்கரட்டிரிக்கும்  என்ன வித்யாசம்...?? செக்கரட்டிரி காலை வணக்கம் என்பாள்..பார்சனல் செக்கரட்டிரி வணக்கம் இது காலை என்பாள்..





================
பிரியங்களுடன்
ஜாக்கிசசேகர்


==========
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

17 comments:

  1. உங்களுக்காவது பரவாயில்ல... ரெண்டு படம் போட்டு பெங்களூர்ல இருந்து சேலம் வரை வண்டி ஓட்டும் கொடுமை எல்லாம் நடந்திருக்கு... அதுவும் அரசு பேருந்துல... என்ன... ஒரு படம் போடும் போது நல்லா தூங்கிட்டேன்... ஆனா மற்றொரு படம் போடும் போது தூங்க முடியலை...

    நீங்க பார்த்த பேருந்து மீடியன்ல உக்காந்து ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கு... சில நேரங்களில் படுத்து ஓய்வு எடுக்கும் பேருந்துகளும் உண்டு...

    ReplyDelete
  2. புதிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றவேன் என்று முதல்வர் ஜெ அறிவித்தது போல வள்ளுவர் கோட்டத்தை ‘வாயில்லா ஜீவன்கள் வசதிக்காக வள்ளுவர் கோட்டத்தை கால்நடைமருத்துவகல்லூரியாக மாற்ற வேண்டும் என்று யாராவது அம்மாவுக்கு கோரிக்கை வைத்தால் நலம்..


    SOOOOOOPER

    ReplyDelete
  3. இந்தக் கடிதங்களை நீங்களே உங்களுக்கு எழுதிக் கொள்கிறீர்களா? :) ஜஸ்ட் ஜோகிங்..

    ReplyDelete
  4. // ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போகும் மலைப்பாதையில் மீடியனில் அரசு பேருந்து ஓய்வெடுக்கும் போது //

    கலக்கல் ஜாக்கி

    ReplyDelete
  5. நன்றி முரளி சமுத்ரா...

    ReplyDelete
  6. சமுத்ரா உங்களுக்கு எப்படி தோனுதோ அப்படியே வச்சிக்கிங்க...எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை

    ReplyDelete
  7. எப்போதும் நீங்கள் ஆராதிக்கும் பிம்பங்களை தூரத்தில் வைத்து ரசிப்பதுதான் நல்லது. அருகில் நெருங்கினால் பிம்ப்ம் உடைந்து விட வாய்ப்பு அதிகம் உள்ளது. பா. கணேஷ்க்கு நடந்தது மாதிரி

    ReplyDelete
  8. // ‘‘இவன் என்ன புடுங்கி மாதிரி பேசறான்னுதானே நினைக்கிற?//
    பால குமாரன், இப்போ ஒரு ஞானி போல வெளித் தோற்றத்துடன் இருப்பதால், தனக்கு மன ஓட்டத்தையும் படிக்கத் தெரியும் எனப் போக்குக் காட்ட , இப்படிக் கேட்டாரோ?

    அவர் அனுபவத்துக்கும், வயதுக்கும் இது தேவையற்ற உதார்!!!

    ReplyDelete
  9. கொடுத்து வைத்தவர் ஜாக்கி நீங்க!எங்கே சென்றாலும் நண்பர்கள்!எப்பேர்பட்ட பயணத்தையும் இனிமையாகும் நட்பு!

    அப்பறம் நானும் தலைவர் படத்த பல தடவ ஆத்தூர்ல இருந்து சிதம்பரம் போகும் போது அனுபவிச்சிருக்கேன்.அதுவும் சொல்லி வச்சாப்ப்ள நான் ஏறும் போதெல்லாம் அதே படம் தான்!
    சேம் பிளட்.

    ReplyDelete
  10. அன்புடன் ஜாக்கி tamil nadu fisherman என்று ஒரு தடவை இ மெயில் அனுபியது மாதிரி திரு அன்னா ஹசாரா வுக்கும் நாம் மெயில் அனுப்பி ஆதரவு அளீக்கலாமே. எப்படி செய்வது தகவல் தரவும். நட்புடன் நக்கீரன்.

    ReplyDelete
  11. I am glad to read that you have friends all over the place. It is a gift by itself.
    :-) for 'நான்வெஜ்18+'

    ReplyDelete
  12. சென்னை மழையைத் தவற விட்டதற்கு இந்தளவு வருத்தமா ?

    பேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்

    ReplyDelete
  13. பதிவுலகத்துல கிடைக்காத சந்தோஷம் எங்கயும் கிடைக்கறது இல்ல...

    \\*எல்லோரும் ஜுஸ் ஆர்டர் சொல்ல அமரபாரதி எனக்கு மட்டும்ம மார்பிஸ் ஒரு லார்ஜ் ஆர்டர் செய்தார்... அதன் பின் பயண களைப்பு போக்க மேலும் இரண்டானது வேறுகதை... *\\

    \\*சாப்பாடு அல்லது பீட்சா ஆர்டர் செய்து கதிர்கடைக்கு அனுப்பட்டுமான்னே என்றார்கள்... டேய் அடங்குங்கடா....போதையில் எந்த பயபுள்ள சொல்லிச்சின்னு தெரியலையே..*\\

    ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் எனக்கு பிடிச்சது இது தான்...

    நான்வெஜ் 18+, ஏற்கனவே இந்த மேட்டர நீங்க பதிவு பண்ணியாச்சு.. இது ரிப்பீட்டு...

    அப்புறம் நீங்க, என்னை பற்றி (about me) பகுதிய திருத்தம் செய்து உள்ளீர்.. ஏன் இந்த மாற்றம்.. இதுக்கு முன்னாடி என்ன இருந்துச்சுனு கூட எங்களுக்கு தெரியும்... பதில் நேரம் இருந்தால் சொல்லவும்....

    ReplyDelete
  14. நேத்து தான் விஜய் அன்னாவ மீட் பண்ணுனாரு. அதுக்குள்ளே அத வெச்சு ஜோக்கா ? என்ன கொடுமை விஜய் இது ?

    விஜய் : அய்யா இந்த 75 வயசுல சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகும் ? யாரும் உங்க கோரிக்கைய ஏத்துக்க மாட்டாங்க. நான் ஒரு ஐடியா சொல்றேன். ஜன் லோக்பால் கோரிக்கைய நிறைவேற்றவில்லை என்றால், என் தம்பி விஜய் படத்த பார்லிமென்ட்ல போடுவேன்னு அறிக்கை விடுங்க.

    அன்னா ஹசாரே : தம்பி வன்முறை தப்பு. நாம காந்தி வழியிலேயே போவோம்.

    ReplyDelete
  15. விஜய் எந்த தகுதில டெல்லி போய் அன்னா-வை சந்திக்கிறார். வாங்குற சம்பளத்தில் பாதிக்கு மேல் கருப்பாகத்தான் இருக்கும். இவரோட வருமான வரிக்கணக்கை பார்த்தாலே இவரோட லட்சணம் தெரிந்து விடும்...

    ReplyDelete
  16. //காசு பணம் இருந்தால், பதவி இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று எனக்கு வெகு நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது.. ஆனால் கலைஞரிடம் இல்லாத பணமா? அவரிடம் பணம் இருந்தது, பதவியும் இருந்தது.. ஆனால் அவர் மகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார்...யாரு சொன்னது பணம், அதிகாரம் இருந்த்தால் சந்தோஷம் இருக்கும் என்று????//

    கூடவே ”தான்” என்ற திமிரும், மமதையும் இருந்தால், ஆட்டமான ஆட்டம் ஆடினால், அந்த திமிர் வாழ்க்கை அடங்கத் தானே செய்யும் ஜாக்கி?

    ReplyDelete
  17. பாஸ் என்ன பத்தி உங்களுக்கு கண்டிப்பா தெரியாது, ஆனா எனக்கு உங்கள தெரியும், அத விட உங்க எழுத்த நல்ல தெரியும்...
    எங்க ஊருக்கு வந்தும் (ஈரோடு) என்னால உங்கள பார்க்க முடியல.... இருந்தாலும் அடுத்த முறை கண்டிபாக சந்திக்குறேன்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner