நானும் என் மனைவியும் பெங்களூர் செல்கின்றோம் என்றால் இரவு பண்ணிரண்டரை மணிக்கு பைக்கை...
கோயம்பேட்டில் போட்டு விட்டு, ஒரு மணிக்கு செல்லும் வேலூர் பஸ்சில் ஏறி விடியலில் நாலுமணிக்கு வேலூரில் இறங்கி ஒரு மசாலாபால் சாப்பிட்டு விட்டு நாலரை மணிக்கு ஓசூர் பேருந்தில் எறி..ஜன்னல் ஓரம் உட்கார்ந்து மெல்ல விடியும் விடியலையும் குளிர்காற்றையும் அனுபவத்துக்கொண்டே பயணிப்பது ஒரு பெரிய சுகம்.... காலை எட்டு மணிக்கு ஓசூரில் இறங்கி அங்கே இருந்து ஏதாவது ஒரு தென்மாவட்டத்து தமிழக பேருந்தை பிடித்து பெங்களூர் மடிவாலாவில் இறங்கி செல்வது எங்கள் வழக்கமான நடைமுறை...இப்படி ஒரு பயணத்தை மேற்க்கொண்டு பாருங்கள் இலக்கை நோக்கி மாறி மாறி செல்லும் அந்த பயணம் நிறைய அனுபவங்களை கொடுக்கும், நிறைய புதுமனிதர்களை சந்திக்க ஏதுவாகும்..
நான் பெங்களூர் சென்றாலும் இதுதான் எனது பயணம் செய்யும் முறை.. சென்னை டூ பெங்களூர் பேருந்து கட்டணம் 135ரூபாய்க்குள் முடிந்து விடும்...ஆனால் மறுநாள் முக்கியமான வேலை சென்னையிலோ பெங்களூரிலோ இருக்கின்றது என்றால் ஆம்னி பேருந்திலோ? அல்லது எஸ்இடிசி யிலோ டிக்கெட் புக் செய்து கிளம்புவது வழக்கம்...
இப்படி எத்தனை நாளைக்குதான் தத்தேரியாக திரிவது என்பதால் கடவுள், குழந்தை ரூபத்தில் கடிவாளம் போட்டு விட்டார்..முன்பு போல நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களால் இப்போது எல்லாம் பயணப்படப்முடிவது இல்லை..அவளுக்காக நிறைய மெனக்கெட்டு செல்ல வேண்டி இருக்கின்றது..லாகர்த்ம்மாக கிளம்பவேண்டி இருக்கின்றது.. நிறைய காம்பரமைஸ் செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது..
சதாப்தியில் ஐந்து மணிநேரபயணம் என்பதால் சதாப்தியில் டிக்கெட் புக் செய்தோம்.தக்கலில் என்பதால் அதுக்ககா எக்ஸ்ட்ரா தண்டம்... சதாப்தியில் பல வருடங்களுக்கு முன் பயணம் செய்தது மங்கலான நினைவாக இருக்கின்றது.
யார் சொன்னது இந்தியா ஏழ்மைநாடு சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது,? பிளாடி பெக்கர் பீப்பிள் என்று ????சுத்தம் இல்லாத மூட்டை பூச்சி இரயில் பெட்டிகள்,பேஸ்வாஷ் செய்யும் இடத்துக்கு பக்கத்தில் பான்பராக் எச்சில் துப்பல்கள்,டாய்லட்டில் கெட்டவார்த்தை படங்கள் , கவிதைகள் ரயில் பெட்டிகளில் இருக்கும் என்று எவன் சொன்னான்..
காசு மட்டும் கொஞ்சம் அதிகமா கொடுத்து பாரு.. அதே ரயில்வே துறை சுத்தத்தில் இருந்து சுகாதாரம் வரை எல்லாத்தையும் பார்த்துக்கும்.
ரயிலின் உட்புறம் அவ்வளவு சுத்தம்..முன் சீட்டில் பர்மெனன்ட் மார்க்கரினால் காதலன் காதலி மற்றும் சத்யபாமா காலேஜ் முதலான்டு என்று கல்வெட்டு போல் பொறித்து வைக்கும் நம்மவர்கள் இங்கு தங்கள் வேலையை காட்டவில்லை.. பெட்டியில் குளிர் நன்றாக இருந்தது..
ரயில் பெட்டியின் டாய்லட் சுத்தத்திலும் சுத்தம்..நாப்கின் மற்றும் எல்க்ட்ராணிக் மெஷினில் ஷேவ் செய்து கொள்ள பிளக் பாயிண்ட்..டாய்லட்டில் மூன்று முறை புகைவரும் அளவுக்கு தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்து கொள்கின்றது.
இந்தியன் டாய்லெட்டில் கன்ஷவர் வைத்து இருக்கின்றார்கள்.. சாதாரண ரயிலில் இந்தியா சுதந்திரம் பெற்றும் சுதந்திரம் பெறாமல் சங்கிலியால் இணைக்கபட்ட எவர்சில்வர் மக்குகள் இருக்கும்.. ஆனால் இதில் எல்லாம் ஹைடெக் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்கின்றார்கள்...
ரயிலின் உட்புறம் ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒரு பிளக் பாயிண்ட் கொடுத்து இருக்கின்றார்கள்.. டாய்லட் பக்கம் ஒரு ரெட் லைட் எரியும்.. அப்படி எரிந்தால் டாய்லட் என்கேஜ்டாக இருக்கின்றது என்று அர்த்தம்..ரெட் லைட் எரியாத போது டாய்லட் பிரியாக இருக்கின்றது என்று அர்த்தம் அப்போது எழுந்து போய் நம் உபாதைகளை முடித்துக்கொள்ளலாம்.
மற்ற ரயில் டிடிஆரை விட இந்த ரயிலின் டிடிஆர் கொஞ்சம் பிரஸ்க்காக இருந்தார்கள்..
எனக்கு சரியான நேரத்துக்கு அரைமணிக்கு முன்னதாக வந்து உட்கார்ந்து கொண்டுரயிலை பிடிக்க வேண்டி அவசரம் அவசரமாக வரும் மக்களின் பரபரப்பையும், பிரிவில் வழியனுப்பும் சொந்தங்களின் முக சோகங்களையும் கூர்ந்து கவனிப்பது எனக்கு பிடித்த ஒன்று...
ஐந்தரைக்கு கிளம்ப வேண்டிய ரயிலுக்கு நாங்கள் ஐந்து பத்துக்கு உள்ளே நுழைந்தோம்.. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்த போது வின்டோ சீட் என்று சொன்னார்கள்.. ஆனால் அந்த நம்பருக்கு விண்டோ சீட் இல்லை என்று அங்கே சீட்டுக்கு மேல் ஸ்டிக்கரில் ஒட்டி இருந்தது...ஜன்னல் ஓரம் ஆங்கில காமிக்ஸ் புத்தகம் வைத்துக்கொண்டு ஒரு ஆண்ட்டி உட்கார்ந்து இருந்தார். மிக பிரமாண்டமாய் ஒரு பையன் முன் பக்கம் உட்கார்ந்து அந்த ஆண்டியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.. அந்த பையனின் அக்காவாக அந்த ஆண்டி இருப்பான்க என்று நினைத்தேன்... கொஞ்ச நேரத்தில் ஆந்த ஆண்டி என் மனைவியிடம் திருவாய் மலர்ந்த போது அந்த பையன் ஆண்டியின் மகனாக மாறிப்போனான்..
நிறைய சாப்ட்வேர் மக்கள் எல்லா இருக்கையிலும் வியாபித்து இருந்தார்கள். நிறைய ஆங்கில உரையாடல்கள் ஆங்கில சிரிப்புகள் என்று பெட்டி வியாபித்து இருந்தது...
பாதைக்கு பக்கத்தில் என் சீட் இருந்தாகாரணத்தால் ரயில் பிடிக்க வந்த அவசரத்தில் என் பக்கத்தில் வந்து நின்ற பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் லக்ஸ் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...சட்டை பேண்ட் அணிந்து இருந்தாள்.. அவளுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் செய்து கொண்டு இருந்த காரணத்தால் அவள் வெகுவேகமாய் தன் உடைமைகளை லக்கேஜ் பிளேசில் வைத்துக்கொண்டு இருந்தாள்... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும் பின்னால் நிறைய ஆண்கள் நின்று இருந்தகாரணத்தால் உடை நகரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக இழுத்து விட்டாள்..
ஒரு இளம் அம்மா இரண்டு வயது பையனோடு பயணம் செய்ய வந்து இருந்தார்.. பையன் பின்னாலில் தான் செய்யப்போகும் வால்தனங்களுக்கு சின்ன சேம்பிள் கொடுத்துக்கொண்டு இருந்தான்..பையனின் அப்பா தன் காதல் மனைவியிடம் சைகையில் பேசிக்கொண்டு இருந்தார்.. ரயில் பெட்டி ஏசி என்பதால் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே டிடியில் ஞாயிறு அன்று மதியம் ஒன்றரை மணிக்கு காது கேட்காதவர்களுக்கு சைகையில் செய்தி வாசிக்கும் போது கைகளில் சைகை காட்டி செய்தியை புரிய வைப்பார்களே அது போல இருந்தது...கால் மணிநேரத்துக்கு சளைக்காமல் அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்...ரயில் மெல்ல சிலிர்த்து விட்டு நகரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்.. அந்த வால் பையனின் பிரிவு அந்த தந்தையின் கண்களில் தெரிந்தது..
சதாப்தி அந்த அப்பாவின் பிரிவின் சோகத்தை சட்டைசெய்யாமல் உதாசீனபடுத்திவிட்டு கர்வத்துடன் நகர ஆரம்பித்தது..
தொடரும்.....
============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே IRCTC டாய்லெட் ஜொலிக்குதே!!!!!!!!!!!
ReplyDeleteஎக்ஸ்ட்ரா பிளாஷ் போட்டு போட்டோ எடுத்தீங்களா?
///இலக்கை நோக்கி மாறி மாறி செல்லும் அந்த பயணம் நிறைய அனுபவங்களை கொடுக்கும், நிறைய புதுமனிதர்களை சந்திக்க ஏதுவாகும்..///have a nc journey...நானும் அந்த வகையறா தான் தல....மனிதர்களை படிக்க இது மாதிரியான பயணங்கள் எனக்கு பிடிக்கும்...
ReplyDelete//ஆங்கில சிரிப்புகள் // ;;)))
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நானும் இதுபோல் கவனிப்பது உண்டு..
ReplyDeleteஅடுத்த பாகத்திற்காக waiting...
எப்படிங்க லக்ஸ் வாசனைலாம் பிடிக்கிறீங்க...உங்களுடன் பயணம் போன மாதிரி இருக்கு .
ReplyDeleteரைட்டு! ஆஜர்!
ReplyDeleteகண்டிப்பா ஒரு முறை அந்த வண்டியில போகணும்,,,,
இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
Hi jackie sir, h r u
ReplyDeleteShanker Narayanan
Karaikal
HI JACKIE SIR
ReplyDeleteh r u
Shanker narayanan
Karaikal
பையன் பின்னாலில் தான் செய்யப்போகும் வால்தனங்களுக்கு சின்ன சேம்பிள் கொடுத்துக்கொண்டு இருந்தான்
ReplyDeleteஉங்க எழுத்தின் வசீகரம் கூடிக்கொண்டே போகின்றது
என்னதான் வசதிகள் செய்து கொடுத்தாலும்.... நாம் எப்படி அதை வைத்துக்கொள்கிறோம் என்பதைப்பொருத்துதான் அதின் சுத்தம் எல்லாம். இவ்வளவு இருந்தும்....அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் யாருடைய நுரையீரலையோ கெடுத்த ஒரு ஆயுள் முடிந்த சிகரெட் துண்டு மனதை நெருடுகிறது.....மக்கா தயவுசெஞ்சு திருந்துங்கய்யா...
ReplyDeleteசதாப்தி-யா????????சதாப்சி-யா??????
ReplyDeleteஉபயம் : பதிவில் உள்ள பெயர்ப்படம்.....
காசு மட்டும் கொஞ்சம் அதிகமா கொடுத்து பாரு.. அதே ரயில்வே துறை சுத்தத்தில் இருந்து சுகாதாரம் வரை எல்லாத்தையும் பார்த்துக்கும்! we are proud to say indian!?
ReplyDeleteகாசேதான் உலகம், எங்கும் எப்பொழுதும்...
ReplyDeleteஒரு இரயில் நிலையத்துல போயி இரயில் ஏறுரது சாதாரணமான விஷயம்னு நெனச்சுட்டு இருந்தேன், ஆனா அதையும் இரசிக்கிற மாதிரி சொல்லலாம்னு தெரிஞ்சுகிட்டேன், பயண அனுபவங்கள் பதிவு படிக்கிறதே ஒரு தனி சுகம்தான்
ReplyDeleteதிருமதியே ஒண்ணா வந்தாலும் நீங்க என்ன நினைகிறீர்களோ அதை மறைக்காம எழுதும் இந்த பாணிக்காக மறுபடியும் மறுபடியும் தங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன். மிக சுவாரஸ்யமான எழுத்து நடை
ReplyDeleteபோன வருடம் சதாப்தி எக்ஸ்பிரஸில் மைசூர் சென்றிருந்தேன்... நல்ல சுத்தம், நல்ல சுவையான உணவு, நல்ல உபசரிப்பு... காசு அதிகமாக தந்தால் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது...
ReplyDeleteஉங்களுக்கு புது எதிரி ஒருத்தன் இருக்கான் போலிருக்கே ! ! பயங்கரமா உங்கள நக்கல் விட்டு ப்ளாக் போடுறான். ஆனாலும் உங்க வச்சுத் தான் அவனுக்கு வியாபாரம்..
ReplyDeletenice
ReplyDeleteYour narration is too good . I felt as if I was travelling in that train.
ReplyDeleteHats off to you Mr. Jackie.
One small Request.
Please avoid bad words in your article. I am not mentioning about this article.
nice post . .
ReplyDelete