FINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்..




பைனல் டெஸ்ட்டினேஷன் படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டுமே நமது தளத்தில் எழுதி இருக்கின்றேன்.
காரணம் முதல் பாகத்தை விட எனக்கு இரண்டாம் பாகம் ரொம்பவே பயமுறுத்தியது..ஆனாலும் முதல் பாகத்தில் நாயகன் தனது அறையில் உட்காந்து இருக்ககும் போது மரணம் அவனை துரத்துவதும்... அன்றாடம் பயண்படுத்தும் பொருட்கள் முலம் மரணம் அவனை நெருங்குவதும் அதில் இருந்து அவன் தப்பிப்பது சுவாரஸ்யம்தான் என்றாலும் இரண்டாம் பாகம் அதன் திரைக்கதை மிக மிக அசத்தல்..அந்த படத்தை பற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்..

மிக முக்கியமாக முதல் காட்சியில் நடக்கும் ஹேவே விபத்தை அந்த திரைப்படத்தில் பார்த்த யாவரும் வாழ்வில் மறக்கமுடியாது.. பெரிய பெரிய லாரிகளில் மரம் ஏற்றி செல்லும் போது லாரியை கிராஸ் செய்யும்  போது மிக ஜாக்கிரதையாகவும் அக்சிலேட்டரில் இருந்து கால் எடுக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள் என்று அர்த்தம்.


சமையல் கட்டில் ஏற்படும் தீவிபத்தில் இருந்து தப்பிக்கும் ஒருவன் லேடர் வழியாக தப்பித்து நடக்கும் போது அவன் ஜன்னல் வழியாக கொட்டிய நூடுல்ஸ் மீது கால் வைத்து வழக்கி விழ இரும்பு ஏணி சர்ரென அவன்  கண் நோக்கி வர சட்டென
நிற்கும்.அப்பாட தப்பித்தோம் என்று நினைக்கும் போது சட்டென அவட்ன கண்ணில் இருப்பு ஏணி குத்தி இறப்பது பல் கூச வைக்கும்...

இந்த ஐந்து பாகங்களின் ஆதாரசுருதியான திரைக்கதை என்னவென்றால்...உங்கள் இயல்பு வாழ்க்கையில் எதுக்கெல்லாம் பல் கூச வைக்கும்...

சார் எனக்கு சிலேட்டில், போர்டில் எழுதும்  போதும் கீச் சவுண்டு வந்தா எனக்கு தேகமே கூசி விடும்..

சமையல் கட்டில்  அடிப்பிடுத்துக்கொண்ட வாணலியை தேய்க்கும் போது பல் கூசும் சார்...

சிலருக்கு வாயில் பிரஷ் உடன் பேசினாலே சிலருக்கு கூசும்....

சார் கறிக்கடையிலே இரண்டு கத்தியை சொயிங்க சொயிங்ன்னு தேய்க்கும் போது எனக்கு கூசும்...

எவர்சில்வர் தட்டில் கரண்டியால் சுரண்டினால் எனக்கு தேகமே
 சிலிர்த்துடும்...

புளியம்பழத்தை யாராவது தின்னாலே நமக்கு பல் கூசும்.. இந்த கூச்சங்களோடு ரத்தமும் சதையும்தான்.. இந்த பைனல் டெஸ்ட்டினேஷன் படத்தின் பாகங்களின் ஆதார சுருதி திரைக்கதை... கொடுர விபத்துகளில் தையெல்லாம் பார்த்து நீங்கள் முகம் திருப்பிக்கொள்விர்களோ.. அதுதான் இந்த படத்தில் காட்சிகளாகும்.. ஒரு கொடுர மரணம் எப்படி எல்லாம் ஒருவனை வந்து தாக்கும் என்பதை படிப்படிப்டியான சுவாரஸ்ய காட்சிகள் மூலம் சொல்வததான் இந்த படத்தின் திரைக்கதை..

அததனால் இந்த படத்தின் பார்த்தால் நீங்கள் உங்கள் வீட்டு பாத்ரூமுக்கு தனியாக போய்வரவே பயப்படுவீர்கள் என்று...இரண்டாம் பாகத்தின் விமர்சனம் வாசிக்க இங்கே கிளிக்கவும்.

 ==========
FINAL DESTINATION-5(2011) படத்தின் கதை என்ன?,



சாம் மற்றும் அவன் வேலை செய்யும் கம்பெனி  நண்பர்கள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா செல்கின்றார்கள்.. அந்த பேருந்து ஒரு பாலத்தின் மீது செல்கின்றது.. அப்போது அந்த பாலம் உடைந்து நொறுங்குவது போல கனவு காண்கின்றான்.. அவன் கனவில் நடப்பது போலவே நிஜத்தில் நடப்பதால், பேரந்தில் இருக்கும் நண்பர்களை உஷார் செய்ய அந்த பெரிய விபத்தில் இருந்து தப்பிக்கின்றரர்கள்.....

அப்படி தப்பித்த அத்தனை பேரையும் மரனம் துரத்தில் எவ்வாறு கொல்கின்றது என்பதை தியேட்டரில் பார்த்து உங்கள் தைரியத்தை டெஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்..

=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் திரி டி கேமராவால் எடுக்கப்பட்ட படம் இது..

நான் இதுவரை திரி படங்கள் நான்கு மட்டடுமே பார்த்து இருக்கின்றேன்..

=========
மைடியர் குட்டிச்சாத்தான்..கடலூர் பாடலி தியேட்டர்
A Christmas Carol..................ஐதராபாத்தில் பிரசாத் ஐமேக்ஸ்தியேட்டர்
அவ்தார்..............................சென்னை  சத்தியம் தியேட்டர்
FINAL DESTINATION-5.......பெங்களூர் ஊர்வசி தியேட்டர்..
==============

மேலுள்ள நான்கு படங்களில்  மூன்று படங்க்ளை திரி டி யில் பார்க்கும் போது மனதில் பெரிய உற்சாகம் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை..ஆனால் இந்த படம் அஸ்தியில் ஜுரத்துடன் பார்க்கவேண்டியதாகிபோய்விட்டது...

என்னதான் சினிமா என்று மனதுக்கு உறைத்தாலும்.. பயத்தை தவிர்கக முடியவில்லை....

ஓத்தா ஜம்பம் மயிறா எதுக்கு திரி டி தியேட்ருக்கு வரனும் அதுவும் பெங்களுர் ஊர்வசிக்கு எதுக்கு வரனும் என்று நினைத்துக்கொண்டேன்..

படத்தின் முதல் பாலத்தில்நடக்கும் விபத்து  காட்சியில் கீழே விழும் பெண் போட்டில் இருக்கும் கொடி மரத்தில் குத்தி கண்ணுக்கு ஒரு அடியில் கிழி படுவது போல  காட்டும் காட்சிக்கு எல்லோரும் அலண்டு போய் விட்டார்கள்..

இரும்பு கம்பி  குத்துவது, தகரம் பாதியாக உடலை வெட்டுவது, பாலத்தின் பெரிய ரோப் அடித்து தலைமட்டும் கொய்த்துக்கொண்டு போவது என்று ஆரம்ப  காட்சியே அதகளம்...

இந்த படத்தின் முந்தைய பாகங்களில்எதையெல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றோமோ அது மாதிரி இல்லாமல் வேறு மாதிரி ஒவ்வொரு கொடுர மரணமும் நடப்பது இந்த படத்தின் திரைக்கதைக்கும் காதட்சி அமைப்புக்கும் சான்று...

நாலு பாகம் தொடர்ந்து பார்த்துட்டா நீ பெரிய புடுங்கி மயிறா? அடுத்த மரணம் எப்படி நடக்கும்னு நீ கெஸ் பண்ணி கிழுச்சிடுவியா? இங்க நான் டைரக்டரா இல்லை நீ டைரக்டரா என்பது போல காட்சி வைத்து இருப்பது டைரக்டரின் திறமை.. அதுக்கு உதாரணம் ஜிம்னாஸ்ட்டிக் கோச்சிங்கில் ஆணி கிடப்பதும், மின்சாரம் பாய்வதும் இல்லாமல் வேறுமாதிரியான விபத்து..

தலை அடித்து கண் பிதுங்கி அது ரோட்டுக்கு ஓடி வந்து அதை ஒரு வாகன சக்கரம் நசுக்கிவிட்டு செல்வது யப்பா சாமி... நாஸ்தியான காட்சிகள்..

யார் அடுத்து என்று கேடகும் போதே அவரின் முகத்தில் ஸ்பெனர் திடும் என்று அடித்து  மரணத்தை ஏற்படுத்தி இருப்பது கொய்யால அடிவயிற்றில் கத்தி செருகவது போலன காட்சி..

இந்த படத்தின் முடிவில் திரைக்கதையை சுற்ற வைத்து இருக்கின்றார்கள்.. இது போல ஒரு ராம் கோபால் வர்மா பேய் படம் கிளைமாக்சில் பார்த்தது நினைவு..

கடைசியில் ஏரோப்பிளேன் சக்கரம் விழுந்து  ரத்த சகதியான கை உடைந்த எலும்போடு உங்கள் கண் எதிரில் வருவதோடு படம் முடிகின்றது... கடைசி டைட்டில் ஷாட்டுகளை பார்க்க தவராதீர்கள்..

படக்குழுவினர் விபரம்

Directed by      Steven Quale
Produced by     Craig Perry
Warren Zide
Written by        Eric Heisserer
Based on          Characters by
Jeffrey Reddick
Starring            Nicholas D'Agosto
Emma Bell
Miles Fisher
Arlen Escarpeta
David Koechner
Tony Todd
Music by          Brian Tyler


Cinematography           Brian Pearson
Editing by         Eric Sears
Studio  Practical Pictures
Distributed by   New Line Cinema
(Warner Bros.)
Release date(s) August 12, 2011
Running time     92 minutes[
Country            United States
Language          English
Box office         23,335,769

===========
படத்தின் டிரைலர்




=============
பெங்களுர் ஊர்வசி தியேட்டர்..

இந்த படத்தை இந்த தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என்று ஏற்க்கனவே முடிவு செய்து இருந்தாலும் ஒளி ஒளி இரண்டிலும் மிரட்டும் தியேட்டர்..

தியேட்டர் இரண்டு மாதங்களாக இழுத்து மூடி கொஞ்சம் வேலை  செய்தார்கள்..
பஸ்ட்கிளாஸ் டிக்கெட் 100ரூபாய்க்கு இருந்தது..3டி படங்களுக்கு 200 என்றும் 2டி படங்களுக்கு150ரூபாய் என்று உயர்த்திவிட்டார்கள்..

நானும் மச்சானும் படத்துக்கு போனோம்....300ரூபாய் டிக்கெட் 3டிகண்ணாடிக்கு 100ரூபாய்...400ரூபாய் பழுத்து விட்டது..ஆனால் 3டி கண்ணாடி தரமாக இருந்தது..

ஆனால் ஒரு டிக்கெட்டுக்கு 50ரூபாய் என்றால் ஒருவாரத்தில் எல்லா 3டி கண்ணாடிக்கு போட்ட காசை எடுத்து விடுவார்கள்...

என் சீட்டுக்கு பக்கத்தில் ஒரு 12 வயது மதிக்க தக்க சின்ன பெண் உட்கார்நது கொண்டு இருந்தாள்..

பயங்கரமான காட்சிகள் வந்தால் அவள் கண்ணாடியை கழற்றிக்கொண்டு பயத்தை போக்கிக்கொண்டாள்..

ஒவ்வோரு மரணத்துக்கும் தியேட்டர் உஸ், அப்பா, ஓய்,ஆஆ என்று வியப்பு குரல்கள் ஒரு சேர எழுந்தன...

நான் 3டி கண்ணாடி எடுத்து விட்டு எல்லோரையும் பார்த்தேன்.. அவர்களை பார்க்கும் போதே எனக்கு சிரிப்பாக இருந்தது..

தியேட்டரில் உள்ளே நுழைந்ததுமே இந்த படத்துக்கு இடைவேளை கிடையாது சோ தீனிய வாங்கிகிட்டு வந்து உட்காருங்க என்று ஸ்லைடில் போட்டார்கள்.. சொன்னது போல படத்தை ஏக் தம்மில் ஒட்டினார்கள்..

பலர் கொலை நடக்கும் சமயம் பயத்தை போன்ன ஒன்னுங்ககு இருக்க போவது போல கிளம்பிபோனார்கள்..

பெங்களூரில் இருப்பவர்கள் தைரியம் இருந்தால் 3டியில் ஊர்வசியில் இந்த படஇத்தை பார்த்து விட்டு பேசுங்கள்...அல்லது வேறு எந்த ஊரில் இருந்தாலும் 3டியில் தியேட்டரில் இந்த படத்தை பாருங்கள்..
===========

பைனல்கிக்...

இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்தான்...உலகங்ம எங்கும் வாழும் மனித மனங்களின் அடிமனித விகாரங்களுக்கு இந்த படம் ஒரு  அவுட் புட்... மற்றைய பாகத்தை விட இந்த படம் பரபரபப்பு...இளகிய மனம்கொண்டோர் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்..

==========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=======
நினைப்பது அல்ல நீ...
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

  1. //நான் இதுவரை திரி படங்கள் நான்கு மட்டடுமே பார்த்து இருக்கின்றேன்.//

    இது எப்படி படத்தின் சுவாரஸ்யங்களில் சில ஆகும்?

    ReplyDelete
  2. Hi Ji,

    I watched Transformer 3 In URVASI Theater. Summa Sounda Attanga...Chance ah illa... Picture Quality...superb... Theater na urvasi than...

    will watch FD5 in Sathyam Main screen tomw.

    ReplyDelete
  3. What is it ஓத்தா ஜம்பம் மயிறா

    ReplyDelete
  4. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்...

    ReplyDelete
  5. Jackie,
    When you get a chance, please watch 'On the Other Side of Heaven'. Great movie.

    ReplyDelete
  6. pataththea nearula paarthamathiri aachu.thank u

    ReplyDelete
  7. ஒவ்வொரு படத்திலும் சில மாறுதல் இருக்கும், அதுபோல உங்கள் விமர்சனமும் உள்ளது... ஆங்கில படமும் சரி 3டி படமும் சரி இதுவரை பார்க்கவில்லை(தியேட்டரில்).. அதை இந்த படம் நிச்சயம் நிறைவேற்றும்...

    ReplyDelete
  8. நாலு பாகம் தொடர்ந்து பார்த்துட்டா நீ பெரிய புடுங்கி மயிறா? அடுத்த மரணம் எப்படி நடக்கும்னு நீ கெஸ் பண்ணி கிழுச்சிடுவியா? இங்க நான் டைரக்டரா இல்லை நீ டைரக்டரா ..


    chance illa , sema writing

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner