அன்புள்ள அம்மாவுக்கு...(27/08/2011)





உன்னிடம் நிறைய விஷயங்களை உன்னோடு நிறைய பகிர்ந்து கொள்ள உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்..
ஆனால் யாழினி வந்தவுடன் சிஸ்டம் பக்கம் உட்காரவே முடியவில்லை.. இருவர் மட்டுமே இருப்பதால் குழந்தையை யாராவது ஒருவர் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கின்றது...அதனால நிறைய உன்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய செய்திகள்.. பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விட்டன.. இனி  நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்கின்றேன்.. என்னிடம் கோபம் வேண்டாம்...வீட்டில் அனைவரும் நலம் நீயும் நலத்தோடு இருப்பாய் என்று நம்புகின்றேன்....

எங்கள் ஐவரை பெற்று எப்படி சமாளித்தாய்? என்று எனக்கு இன்னும் வியப்பாக இருக்கின்றது... எனக்கு தெரிந்த ஒரு பாட்டி சொன்னார்... பிள்ளை வளர்ப்பதை காட்டிலும்  நாலு வீட்டில் யாசகம் கேட்டு பசி போக்கிக்கொள்வது  எளிது என்று சொல்லுவார்... அந்த அளவுக்கு பெண்டு நிமிரும் வேலையாக இருக்கின்றது..இப்போது யாழினி கவிழ்ந்து கொள்ளும் தொழில்நுட்பம்  எளிதில் அவளுக்கு கைவரபெற்றுவிட்டதால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை....

என்னை தவிர தங்கைகள் நால்வரையும் அரசு மருத்துவமைனையில் பெற்றவள் நீ..


நமது கூத்தப்பாக்க கிராமத்தில் டாக்டர்களே கிடையாது...1985க்கு பிறகுதான் மணி டாக்டர் மற்றும் அவர்மனைவி வித்யா டாக்டர் நமது கிராமத்துக்கு கிளினிக் வைக்க வந்தார்கள் என்பதை நீ அறிவாய்......

எந்த காயச்லுக்கும் உன் கை வைத்தியம் ஒன்று போதும்...நம் சுற்றத்தினர் அனைவருடைய குழந்தைகளுக்கும் நீதான் எம்பிபிஎஸ் படிக்காத டாக்டர்...காரணம் நம் வீட்டுக்கு  பக்கத்தில் இருக்கும் அனைவரயும்விட உனக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும்....

எத்தனை டீஸ்பூன் மருந்து கொடுக்க வேண்டும்... காலை, மாலை,இரவு  கொடுக்க வேண்டிய மாத்திரை குழப்பங்களை நம் பகுதி மக்களுக்கு நடு இரவிலும் சந்தேகங்களை தீர்த்து வைப்பவள் நீயே...



நம் வீட்டில்  எனக்கு தெரிந்து யாரையும் எந்த  தனியார் கிளினிக்குக்கோ அல்லது  டாக்டரிடமோ நீ அழைத்து சென்றதில்லை....எல்லாத்துக்கு நம்ம கடலூர் பகுதி மக்கள் செல்லமாக பெரிஆஸ்பத்திரி என்று அழைக்கபடும்.. கடலூர் அரசு பொதுமருத்தவமைனைதான்...

நான் மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன்.. எனக்கு பயங்கர ஜுரம்... ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை...இரவில் தூக்கி தூக்கி போட்டு கொண்டு இருக்கின்றது... காய்சல்...மறுநாள் காலை  என் நிலையை பார்க்கும் எந்த அம்மாவும் ஆட்டோ வைப்பாள்..நீ வைக்கவில்லை..


காலையில் எட்டேகாலுக்கு அரசமரத்து ஸ்டாபிங்க்கு வரும் எஸ்விஎம்எஸ் 3ஆம் நம்பர் பஸ்சுக்கு  நாம் இருவரும் எட்டு மணியில் இருந்து காத்து இருக்கின்றோம்..

மூனாம் நம்பர் பஸ் செமை ரஷ்... அடித்து பிடித்து ஏறுகின்றோம்.. வேலைக்கு போகின்றவர்கள் அனைவரும் செல்லும் சிங்கில் என்பதால் நல்ல கூட்டம்... 30 பைசா டிக்கெட் இரண்டு எடுக்கின்றோம்...என் ஜுரம் சூட்டு காரணமாக பேருந்தில் என்னை விட்டு விலகி நிற்கின்றார்கள்.. என்னால் நிற்க்க முடியவில்லை...என் நிலை பார்த்து ஒருவர் எழுந்து இம்ட கொடுக்கின்றார்..


என் உடல்வலி வேதனையோடு போஸ்ட்டாபிஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று நம்மை இறக்கி விட்டு பேருந்து மஞ்சகுப்பம் நோக்கி செல்கின்றது...அங்கிருந்து பெரியாஸ்பத்திரிக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடக்க  வேண்டும்... அபபோதும் என் மேல் பரிதாபப்பட்டு ஆட்டோவைக்கவில்லை..


நீ ஒன்றும் வச்சிக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை... அப்பா 20ரூபாய் எடுத்து வந்து கொடுத்தாலும் எங்கள் ஐவருக்கும் பசியில்லாமல் கஞ்சி ஊற்றியவள் நீ.. அந்த அளவுக்கு சிக்கனம்.


ஜுரத்தில்  நான் நடக்கின்றேன். என் வேதனை மறக்க ஏதோ ஒரு ரஜினி படத்தின் கதையை எனக்கு வெகுசுவாரஸ்யமாக சொல்கின்றாய்.. நானும் கதையின் பால் ஈர்க்கபட்டு நடக்கின்றேன்..

பெரிஆஸ்பத்திரிக்கு போய்விட்டோம்...எடுத்ததும் போய் டாக்டரைபார்த்து விட முடியாது...ஓபி கியூவில் நின்று முதலில் ஓபி சீட்டு வாங்க வேண்டும்... காக்கி சட்டை அணிந்த ஒருவர்..பேர், வயசு எழுதி எந்த வார்டுக்கு போகவேண்டும் என்று எழுதி கொடுக்கும் கீயூவில் கால் கடுக்க நின்று ஓபி சீட்டு வாங்கி, அவர்கள் சொன்ன வார்டில் டாக்டரை பார்க்க இருக்கும் பெரிய கியூவில்  காத்து இருந்து, வானாகி மண்ணாகி ஒளியாகி போல, மனப்பாடமாக நம் உடல்நோவை நாம் இருவரும் அரசு டாக்டரிடம் ஒப்பிக்கும் போது, அவர் காதில் எதையும் வாங்காமல் ஒரு அலட்சிய பார்வை நம் பக்கம் வீசிவிட்டு, சின்ன சதுரமான ஒரு பேப்பரை விரலில் எச்சில் பட வைத்து அதன் துணை கொண்டு அதனை எடுத்து புரியாத பெயரில்  கிறுக்கி கொடுக்கும் அந்த துண்டு சீட்டினை எடுத்துக்கொண்டு போய், மாத்திரை வாங்கும் பெரிய கியூவில் நின்று மாத்திரை வாங்கினால் எல்லா மாத்திரையும் சமச்சீர் மாத்திரை போல த/அ  என்று போட்டு இருக்கும்....

இவ்வளவு தூரம் அலைந்த களைப்பில் என் உடம்பில் அந்த ஜுரம் இருக்கலாமா? வேண்டாமா? என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருக்கும்...

திரும்பவும் நடத்தியே போஸ்ட் ஆபிஸ் பஸ் ஸ்டாப்புக்கு அழைத்து வந்து, அங்கு இருந்து அதே மூன்றாம் நம்பர் பேருந்தில் ஏற்றி வீட்டுக்கு வந்து வீட்டின்  உள்ளே நுழையும் போது ஜுரம் சுத்தமாக போய் இருக்கும்..ஒரு நுரைவராத டீயை போட்டு கொடுத்து த/அ மாத்திரை ஒன்று முழுங்க வைத்து படுக்க வைப்பாய்...தூங்க வைப்பாய் எழுந்து பாத்தால் ஜுரம் காணாமல் போய் இருக்கும்...


எந்த காரணம் கொண்டும். எந்த பசங்களையும் நீ தனியார் மருத்துவமைனைக்கோ அல்லது தனியார்கிளினிக் டாக்டரிடமோ, நீ எங்களை ஒரு போதும் அழைத்து சென்றதே இல்லை.... எல்லாம் கடலூர் அரசு பொது மருத்துவமனைதான்...

எந்த ஊசியாக இருந்தாலும், எந்த சொட்டு மருந்தாக இருந்தாலும் அரசு மருத்துவமனைதான்...பேருந்து கட்டணம் இரண்டு பேருக்கும்  போக 60 பைசா வர 60 பைசா மொத்தம் ஒரு ரூபாய் இருபது பைசாவில் முடிந்து விடும்.


நேற்று பெங்களூருவில் குழந்தையை அழைத்துக்கொண்டு சொட்டு மருந்து கொடுக்க, ஆட்டோபிடித்து ரீபப்ளிக் மருத்துவமணை சென்றோம்  நான்கு சொட்டு அளவுக்கு ரோட்டா என்ற சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்தோம்... அது வயிறு சம்பந்தமான இன்பெக்ஷனை தடுக்குமாம்...



ரோட்டா இன்ஜெக்ஷன் நாலு சொட்டு...1220ரூபாய்
டாக்டர் பீஸ்.....................................................150ரூபாய்
ஆட்டோவில் போக வர................................150ரூபாய்.
எனக்கு மயக்கமே வந்தது...


கடும ஜுரம், எட்டுமணிசிங்கில் ,மூனாம் நம்பர்,முப்பது பைசா டிக்கெட்,ஓபி சீட்டு,காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சிய்த்தோடு மருந்து எழுதி கொடுக்கும் அரசு டாக்டர், மாத்திரை கியூ,த/அ மாத்திரை,நுரைவராத டீ, ஒரு சின்ன தூக்கம்..மொத்தமே1,20 பைசாதான்..

நல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

=========
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

32 comments:

  1. அம்மாவுக்கான பதிவு.. ஏழ்மையை எடுத்துரைத்தாலும் உண்மையை உரைக்க வைக்கிறது.

    சே.குமார்.
    மனசு

    ReplyDelete
  2. நல்ல பதிவு ஜாக்கி. கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  3. மிக நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.

    ReplyDelete
  4. என் இளமைக்கால சம்பவம் என் கண் முன்னே படமாய் ஓடியது.படிக்கும் என் அம்மாவின் அன்பை நெகிழ்வாய் உணர்ந்தேன்.

    ReplyDelete
  5. மனதை கனக்க வைத்து விட்டீர்கள்..

    ReplyDelete
  6. அந்த கால வாழ்க்கையயும் இந்த கால வாழ்க்கையையும் அம்மாவோடு ஒப்பிட்டு சொன்ன விதம் அருமை சார்.

    ReplyDelete
  7. எல்லாமே மாறித்தான் போய்விட்டது...

    ReplyDelete
  8. மனம் நெகிழ்ந்த பதிவு...

    ReplyDelete
  9. சகோ...நீங்க அம்மாவப்பத்தி எழுதும்போதெல்லாம் என் கண்ணு கலங்கிருது..... அம்மாவோட நினைவுநாள் இந்த மாசம் முப்பத்தோராம் தேதி வருதுன்னு எனக்கு ஞாபகம் இருக்கு(உங்களுடைய ஏதோ ஒரு இடுகையில் படித்தது).....நீங்க இன்னும் எழுதுவீங்கன்னு தெரியும்....ஏன்னா அம்மா என்கிற உறவைப்பத்தி எவ்வளவு வேணுமின்னாலும் எழுதிக்கிட்டே இருக்கலாம்....உங்களுக்கு மட்டுமல்ல...எங்களுக்கும் தாய்தான்...
    என் கண்ணீர் அஞ்சலிகளை நம் தாய் காலடியில் சமர்ப்பிக்கிறேன்....

    அன்புடன்
    செவிலியன்...

    ReplyDelete
  10. ஜாக்கி அண்ணா, இப்பவும் எங்கம்மாவுக்கு த/அ மாத்திரைதான், இன்னைக்கு காலையில அம்மாவுக்காக கியூவுல நின்னு மாத்திரை வாங்கி குடுத்துட்டுதான் வரேன்...., அம்மாக்கள் வாழ்க!(சத்தியம அரசியல் இல்லைங்கோ).

    ReplyDelete
  11. ஒரு சின்ன விசயத்த இவ்ளோ நுணுக்கமா யாரலையும் சொல்ல முடியாது.... இதான் எங்க ஜாக்கியோட ஸ்பெஷல்.. நீங்க இவ்ளோ பிரபலமா இருக்க காரணம் இப்ப தெரியுது...

    //*நல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......*//

    அதன் யாழினி பாப்பா இருக்காலே...

    அன்புடன் சதீஷ் மாஸ்......

    ReplyDelete
  12. inum pervenar try panaliya sir..athu Rs 4000..

    ReplyDelete
  13. நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு .
    வாழ்த்துக்கள் தமிழ்மணம் 2 போட்டாச்சு சகோ .
    நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  14. Hi Jackie Sekar

    i am really very sorry for my last comment. came to know that some one else using your name and posting comments in my blog. i m really sorry again for pointing you and came for early judgement. as i m not aware of those things , hope you will understand.

    ReplyDelete
  15. and about the hospitals in bangalore, ST Jhon's hospital & university in koramangala gives better service. their quality and treatment is very good .same time the amount charged is nominal. last year there was an sudden emergency thing which we faced in my family. called st jhons hospital ambulance , they reached quickly then gave excellent treatement. finally they charged the amount less than 1000 ( including everything for 2 days).

    please enquire about the st jhon's and take your kid there

    ReplyDelete
  16. நம்மை வளர்க்க, ஆளாக்க பெற்றோர்கள் பட்ட துயரங்களை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  17. Yes, just a generation ago, such medical treatment and facilities were common. We used to have family doctors; at times, they were only LMPs (Licenced Medical Practitioners), not MBBS. Our family used to go to one Dr Rishi in Triplicane. He lived upto 100 years almost. As a young boy, when I went to him for any treatment, he used to ask about details of all my family members and their welfare. Such kind inquiries would become a tonic for our illness. The present day doctors have no time to ask us even about our own illness.

    ReplyDelete
  18. மிக நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.

    ReplyDelete
  19. இது எல்லா அம்மாக்களுக்குமான பதிவு. இப்போதைய நகரத்து அம்மாக்களின் பரிவும் பாசமும் தியாகமும் கொஞ்சம் வேறுமாதிரியாக இருந்தாலும் குறைந்ததல்ல!

    ReplyDelete
  20. மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன் ஜாக்கி அண்ணே!

    அம்மாதான் உங்களுக்கு மகளாப் பிறந்திருக்காங்களே!

    பத்திரமா பாத்துக்குங்க!

    ReplyDelete
  21. அண்ணே... மறக்க முடியுமா நம்ம ஊர் பெரிய ஆஸ்பத்திரியை, இருந்தாலும் மிக நெகிழ்ச்சியான பதிவு...

    ReplyDelete
  22. இப்படி ஏதாவது எழுதி கலங்க வச்சிடுறீங்க.. வேற என்னதா சொல்லுறதுன்னு தெரியல :(

    ReplyDelete
  23. வாழ்வின் மாறுதல்களை அம்மாவெனும் மையப்பொருளூடாகச் சொல்லியபாணி அற்புதம்

    ReplyDelete
  24. அருமை ஜாக்கி என்ன ஒரு பதிவு...(அன்புள்ள அம்மாவுக்கு...(27/08/2011)), அதுவும் அந்த இறுதி வரி (நல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......)...என் கண்களை குளமாகி விட்டது

    அர்விந்த்

    ReplyDelete
  25. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete
  26. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete
  27. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner