கடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன?? அனுபவ அலசல்..
பத்திரிக்கையில் அந்த விளம்பரங்களை பார்த்து இருக்கின்றேன்..பேதமில்லா  பேனாநட்பு பாராட்ட என்று விலசாம் கொடுத்து இருப்பார்கள்...
அது பற்றி என்ன என்று கூட நான் அறிந்து கொள்ள யோசித்தது இல்லை...

1996 அம்மா இறந்து போய் அம்மா இல்லாத வீட்டில் தனியாக இருந்த போது என்ன செய்வது என்று தெரியவில்லை..பெரிய பையனாக இருப்பதால் அதன் பொறுப்புகள் என்னை இன்னும் மிரளவைத்துக்கொண்டு இருந்தன..

பெரிய படிப்பு இல்லை.. கைத்தொழிலும் எனக்கு தெரியாது.. என்ன செய்வது? மனம் தனியாக இருக்கும் போது இன்னும் பயத்தை உருவாக்கி தொலைத்துக்கொண்டு இருந்தது...யாரிடமாவது மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைத்தால் தேவலாம் என்று இருந்தது..


பாலகுமாரன் எழுதிய நிறைய கதைகள் பல்சுவைநாவலில் வந்து கொண்டு இருந்த சமயம்...அந்த கை அடக்க பாக்கெட் நாவ்ல் புத்தகங்கள் வீட்டில் வியாபித்து இருந்த காலம்..ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிய போது பேதமில்லா போன நட்பு வேண்டி என்று பலரது விலாசங்கள் அதில் இருந்தன....

பல பெண் பெயர்களில் விலாசங்கள் இருந்தாலும்.. நான் அனந்தராஜ் என்ற பெயரில் இருக்கும் ஒரு விலாசத்துக்கு 15 பைசா போஸ்ட் கார்டில் என் முகவரியை எழுதி என் சின்ன அறிமுகத்தையும் சேர்த்து எழுதி போஸ்ட் செய்து மறந்துவிட்டேன்...

ஒரு வாரம் கழித்து என் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது... முத்து முத்தான கையெழுத்தில் தன் பெயர் ஆனந்தராஜ் என்றும் தற்போது மங்களூரில் ஒரு ஆயில் பேக்ட்ரியில் ஓர்க் செய்து வருவதாகவும்,பல்சுவை நாவலில் தனது விலாசத்தை பார்த்து விட்டு,  நிறைய கடிதங்கள் வந்தாலும் எனது வெளிப்படையான கடிதம் அவரை ஈர்த்த காரணத்தால் என்னோடு நட்பு பராட்ட வேண்டும் என்று தோன்றியதால் கடிதம் எழுதியதாகவும்  அந்த கடிதம் சொல்லியது....

சென்னையில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த போது நிறைய கடிதங்கள்  அம்மாவுக்கு எழுதி இருகின்றேன்.. நினைத்த நேரத்தில் எல்லாம் அப்போது போனில் பேச முடியாது..1994களில் எங்கள் கடும்ப சூழ்நிலையில் கடிதங்கள்தான் தகவல் பறிமாறிக்கொள்ள ஒரே வழி... சென்னையில் இருந்து 175கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடலூருக்கு எனது கடிதம் போய் சேர மூன்று நாட்கள் ஆகும்..ஆம்மா சொல்லிய முக்கிய விஷயம் 15 நாளைக்கு அப்புறம் கூட எனக்கு கிடைத்து இருக்கின்றது... அதுதான் 1994ல் நிலை.. வைரமுத்து எழுதியது போல தபால்காரன் தெய்வமாக இருந்த காலம் அது..

கடிதங்கள்  என் அம்மாவுக்கு எழுதும் போது சென்னையில் நான் கண்டவற்றை எழுத்தின் மூலம் என் அம்மாவுக்கு விளக்குவேன்.. அவள் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே சென்னைக்கு வந்து இருக்கின்றாள்..தென்வமாவட்டத்துமக்கள் சென்னைக்கு வந்தால் ரசத்துக்கு அப்பறம் மோர்சாதம்  சாப்பிடுவது போல அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,கிண்டி பாம்பு பண்ணை,வண்டலூர் மிருககாட்சிசாலை,விஜிபி என்று பார்த்து விட்டு சென்னைய கண்டு மிரளுவார்கள். அதுபோலான ஒரு அக்மார்க் அப்பாவிதான் என் அம்மாவும்....  சுற்றுலா பேருந்தில் ஊருக்கு  போகும் போது சென்னை நகரத்தின் பரபரப்பை மனதில் அசைப்போட்டுக்கொண்டு செல்லும் ரகம்.

சரி கடிதங்களில் அம்மா நலம் நலமறிய ஆவல் என்று எழுதிவிட்டு செல்லாமே என்று கேட்கலாம்..ஆனால்சின்ன வயதில் ஏதோ ஒரு பாடத்தில், சிறையில் இருக்கும் நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களில் நலம் நலமறிய ஆவல் பேருக்கு  எழுதிவிட்டு கூழாங்கள் தன் வராலறு கூறுதல்.. ஆறு தன் வாராலாறு கூறுதல் போன்றவற்றை தன் மகளுக்கு எழுதியதாக சொல்லி,பாடப்புத்தகத்தில் படித்து இருக்கின்றேன்.. அது என் ஆழ் மனதில் மிக மிக ஆமாக பதிந்துவிட்டது...


1996ல் உறவினர் இல்லாத ஒருவருக்கு நான் கடிதம் எழுதியது அப்போதுதான்..பேனா நட்பில் வந்த முகம் பார்க்காத நட்பான அனந்தராஜ் என்பவருக்குதான்.... நடிகர் ஜாக்கியின் படத்தின் துதி பாடலை விட ஹாங்காங்கில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து ஆசியாவின் சூப்ப்ர்ஸ்டார் ஆனாரே அதனால் ஜாக்கிமேல் நிரம்ப மரியாதை உண்டு அவைகளை  கடிதம் மூலம் அவருக்கு தெரிவித்து இருக்கின்றேன்.. அதனை உணர்ந்து கொண்ட ஆனந்ராஜ் என்னை முதன் முதலில் கடிதங்களில் டியர் ஜாக்கி என்று எழுதியவர் அவரே....

அதே போல நான் அனுப்பும் கடிதங்களில் ஜாக்கி போட்டோவை கார்னரில்வைத்து ஒரு50 பேப்பர் ஏ போர் ஷீட் ஜெராக்ஸ் எடுத்து அதில்தான் நான் கடிதம் எழுதுவேன்...என்றும் அன்புடன் என்று போட்டு,ஜாக்கிசேகர் என்கின்ற தனசேகரன் என்று கையெழுத்து போடுவேன்...

1996ல் டியர் ஜாக்கி என்று எந்த நேரத்தில் நண்பர் அனந்தராஜ் எழுதினாரோ? இன்று உலகம் முழுவதும் என் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் மற்றும் எனக்கு கடிதம் எழுதும் வாசக நண்பர்கள் அவர் 1996ல் எழுதிய டியர் ஜாக்கியை சுவிகரித்து கொண்டுள்ளார்கள்...இது நானே எதிர்பாராத ஒன்று...


கடலூரில் இருக்கும் போது இப்படி அனந்தராஜ் நட்பு கிடைக்க எங்கள் நட்பு வளர்ந்தது.. அவரிடமே வேறு ஏதாவது நல்ல நண்பர்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று சொல்ல அவரே சில விலாசங்கள் கொடுத்தார்.. அவர் அறிமுகபடுத்திய் மற்றோரு நண்பர் சென்னை ஓல்டுவாஷர்மேன் பேட்டில் விஜய் என்பவர் மெடிக்கல்ஷாப் வைத்து நடத்தி வருகின்றார்...

வாரத்துக்கு நான்கு கடிதங்கள் எழுதுவேன்.. அவர்கள் அதே போல கடிதங்களுஙககு பதில் போடுவார்கள்..வீடு முழுக்க கடிதங்கள்  இரைந்து கிடக்க ஆரம்பித்தன... முகம்  தெரியாது ரத்த உறவுகள் இல்லாத மனித்ர்களின் பாசம் என்னை வியக்க வைத்தது... அம்மா இறந்து போது என் வாழ்வில் ஏற்ப்பட்ட வெறுமையை இந்த கடிதங்கள் எனக்கு அரும்மருந்தாகின...

நேரு மகளுக்கு எழுதிய இயற்க்கையை பற்றிய விவரனை கடிதங்கள், என் அம்மாவுக்கு நான்  சென்னை பற்றி எழுதிய விவரனைகள்  பேனா நட்புக்கு கடிதம் எழுதும் போது பெரும் உதவி புரிந்தன...நலம் நலமறிய ஆவலை தாண்டி நிறைய விஷயங்கள் எழுத்தில் பகிர்ந்து கொண்டோம்.. நிறைய சந்தோஷங்கள், கோப தாபங்கள்,அட்வைகள் என்று அவைகள் நிரம்பி இருந்தன...

இப்படி போய்க்கொண்டு இருக்கும் வேளையில் ஆனந்தராஜ்..பெண் நட்பே இல்லை யாராவது பெண் நண்பி இருந்தால் அறிமுகபடுத்துங்கள் என்று சொன்னேன்.. ஜாக்கி நான் நிறைய பேருக்கு கடிதம் எழுதுகின்றேன்..எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து கடிதம் வந்தது.. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால்அவரை உனக்கு அறிமுகபடுத்துகின்றேன் என்று சொன்னார்... எனக்கு பதட்டம்... முதல் முறையாக பெண்ணுக்கு கடிதங்களில் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை... தங்கைகளை தவிர நான் யாருக்கு கடிதம் எழுதியதில்லை... எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் என் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு நான் யாரையும் காதலிக்க முயற்சிக்கவில்லை...அதனால் தமிழ்சினிமாவில் மட்டுமே நான் காதல் கடிதங்கள் பார்த்தவன்நான்.

அந்த பெண்ணுக்கு சொந்த ஊர்  கோபி... பெங்களுரில் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டு இருக்கின்றார் என்று கடிதம் மூலம்  தெரிந்தது...அறிமுகபடுத்திக்கொண்டோம்...நிறைய கடிதங்கள் பறிமாறிக்கொண்டோம்.... அதில் ஒரு கடிதத்தில் இப்படி குறிப்பிட்டார்... ஏன் போனவாரம் கடிதம் எழுதவில்லை..உங்களுக்கு இங்கு நிறைய பெண் ரசிகைகள் உங்கள் கடிதம் வந்தால் அந்த கடிதத்தை 25 பேருக்கு மேல் படிப்பார்கள்...உங்கள் கடிதம் வந்தால் எங்கள் ஹாஸ்டலில் ஒரே உற்சாகம்தான்...போனவாரம் கடிதம் வராத காரணத்தால் எனது நண்பிகள் எல்லோரும் தவித்து விட்டோம்.... உங்களுக்கு எதாவது பிரச்சனையா என்று??என்று எழுதி இருந்தார்....அதன் பிறகு அவர் நெருங்கிய நண்பர் கூட்டத்தில் இருந்த பெண்கள் மூவர் எனக்கு கடிதங்கள் எழுத துவங்கினர்.... அவர்கள் எழுதும் விஷயங்களை வைத்து எனக்கு பெங்களுர்  எப்படி இருக்கும் என்ற ஒரு கற்ப்பனையில் நினைத்து வைத்து இருந்தேன். காரணம் நான் பெங்களூர் பார்த்தது இல்லை...ஒரு கடிதத்தை 25 பேர் படிக்கின்றார்கள் என்றால் நிச்சயம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாரத்துக்கு ஒரு கடிதம் தவறாமல் அவர்கள் படிப்பு முடியும் வரை எழுதிக்கொண்டு இருந்தேன்.. அந்த தொடர்ச்சியான பால்மாறாதா எழுதும் ஒரு உத்வேகம்தான் இன்று தொடர்ச்சியாக தினமும் எனது தளத்தை வந்து  படிக்கும் முகம் தெரியாத நண்பர்களுக்கு எழுதிக்கொணடு இருக்கின்றேன்.. நிறைய அட்வைஸ்கள், சந்தோஷங்கள் நண்பிகள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டது..

டியர் ஜாக்கி என்று அழைத்த அனந்தராஜுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்..தற்போது அவன் அரபு நாட்டில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை செய்கின்றான்... போனவாரம் கூட அவன் சென்னைக்கு குடும்பத்துடன்  வந்தான்.. ஆனால்  சந்திக்க முடியவில்லை...இன்றும் எனது தளத்தின் வாசகன் ஆனந்தராஜ்.... அதே போல வாஷர்மேன் பேட் விஜய் என் திருமணத்துக்கு கடலூருக்கு வந்து நேரில் வாழ்த்தி விட்டு சென்றவர்...இன்றும் தொடர்பில் இருப்பவர்...

எனது  பெண்களுர் நண்பிகள் அத்தனை பேருக்கும் திருமணமாகிவிட்டது.. எனது முதல் நண்பி கோபி பெண்ணுக்கு நடந்த திருமணத்துக்கு மட்டும் சென்று விட்டு வந்தேன்.. அதே போல அவரும் அவரது நண்பியும் எனது திருமணத்துக்கு  கோபியில் இருந்து கடலூருக்கு வந்து வாழ்த்தி விட்டு சென்றார்கள்...

25 பேர்  ரசித்து படிக்கின்றார்கள் என்று எனக்கு தெரிந்ததும் ஏற்பட்ட சிறு பொறி  இன்று வலைதளத்தில் தினப்பதிவாக மாறி நிறைய வாசகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கபளையும் பெற்று தந்து இருக்கின்றது..தினமும் எனது தளத்தின் பக்கங்களை 19,786 தடவை வாசிக்கபடுகின்றன..15 பைசா கடிதத்தில் ஆரம்பித்த பேனா நட்பு இணையம் மூலமாக இன்று உலகம் எங்கும் விரிவடைந்து இருக்கின்றது...அப்போதும் சில நண்பர்கள் இது வெட்டி வேலை என்று நக்கல் விட்டார்கள்.. 15 வருடம் கழித்தும் அதையேதான் அவர்கள் சொல்லுகின்றார்கள்.. 15 வருடங்களில் அவர்கள் உருப்படியாக செய்த ஒரே விஷயம் என்னை நக்கல்விட்டதுதான்..


 மிகச்சரியாக 15 வருடத்துக்கு முன் அன்று வந்த கடிதங்கள் எல்லாம் என் வீட்டு முக்கிய ஆவனகாப்பக பெட்டியில் தனிதனிபைலில் பெயர் போட்டு  பத்திரப்படுத்தி வைத்து இருக்கின்றேன்...இன்று ரொம்பவும் கடுப்பாக இருக்கும் சமயங்களில் எதாவது ஒரு பைலில் இருந்து ஒரு கடிதத்தை வாசிக்கும் போது கொசுவத்தி சுற்றியபடி நெகிழ்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருக்கும் இப்போது நான் எழுதும்  பதிவுகளை பதினைந்து வருடம் கழித்து வாசிப்பது போல.........

============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

===============
நினைப்பது அல்ல நீ...
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

17 comments:

 1. ஜாக்கி..நீ எழுதியதில் எனக்கு பிடித்த நல்ல பதிவு இது..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. நானும் மிக ஆர்வமாய், பேணா நட்பு கொண்டதுண்டு

  எல்லாம் இப்படி இனிமையாக இருப்பதில்லை தானே ஜாக்கி ...

  அந்த நினைவுகளை மீட்டெடுத்தேன் நன்றி ஜாக்கி

  ReplyDelete
 3. Excellent. so today's Jakie born before blog. Keep rocking and sharing

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  பேனா நட்பு - அப்போது கடிதம் வருவதே ஒரு மகிழ்ச்சியான விஷயம்.
  நன்றி.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  ReplyDelete
 5. அடடா மனச கரச்சிபுட்டிங்க

  ReplyDelete
 6. சுவாரஸ்யம் ஒன்றே எல்லாவற்றிலும் நிலைகொண்டது, உங்கள் பதிவைப்போல.... பழைய நினைவுகள் நானும் சுவைத்தபடி படித்து முடித்தேன் உங்கள் பதிவு மூலம் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 7. அருமையான ஆரம்பம். அதை ஆர்ப்பாட்டமான, யதார்த்தமான கடைசி வரிகள். ரொம்ப தேறிட்டீங்க ஜாக்கி :)

  ReplyDelete
 8. என்னுடைய அதே மனநிலையை பிரதிபலித்திருக்கிறீர்கள். எளிமையான நடை. நானும் உங்கள் தள வாசகன்தான். சில நாட்களாக எனக்கும் இதே போன்ற உந்துதல். பேனா நட்பைப் போன்றதொரு ஆத்ம திருப்தி அந்தக்கால கட்டத்தில் எங்குமே கிடைக்கவில்லை ஜாக்கி அவர்களே! எனவேதான் சில நாட்களுக்கு முன்னால் நானும் இந்தக் கடிதப் பறிமாறல்களைப்பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். உங்கள் வாசகர்களையும் என்பக்கம் கொஞ்சம் திருப்பிவிடுங்களேன்.
  நட்புடன்,
  கவிப்ரியன்.
  வலைத்தள முகவரி;http://kavipriyanletters.blogspot.com/

  ReplyDelete
 9. டியர் ஜாக்கி!
  கடிதங்கள் வெறும் தகவல் தொடர்புக்கு என மட்டுமல்லாமல் எத்தனை உணர்வுகளை தன்னகத்தே தாங்கி உள்ளது.ஒருவரின் வெளிப்பாட்டுக்கு எந்த அளவு ஊன்றுகோலாக இருக்கு!எத்தனை தருணங்களை நினைவூட்டுகிறது!உங்கள் பகிர்வில் உணர்ந்தேன்!நன்றி!

  ReplyDelete
 10. பேனா நட்பு கேள்விப்பட்டதுண்டு.. முயற்சித்ததில்லை. எனினும் என்னுடன் படித்த சக நண்பர்கள் இருவரின் கடிதங்கள் இன்றைக்கும் என் வசம் உள்ளது. அதை என்றாவது படிக்கும்போது உண்டாகும் சுகமே தனிதான்...

  பழைய ஞாபகங்களை மீட்டெடுத்தது உங்கள் பதிவு...

  ReplyDelete
 11. Very nice entry, Jackie.
  I too had penpals in my high school; but not to your extent. I can relate to your story though.:-)

  ReplyDelete
 12. கோடி கோடியா சம்பாதிக்கறது சுத்த வேஸ்ட்.. நாலு உண்மையான நண்பனை சம்பாதி, நீ செத்து சுண்ணாம்பு ஆனாலும் உன் பின்னாலயே நிப்பான்... இது எங்க அப்பா அடிக்கடி சொல்வாறு... நல்ல நண்பர்கள் கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும், உங்கள மாறி... எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை... நட்பை தேடி சதீஷ் மாஸ்....

  ReplyDelete
 13. அன்பின் ஜாக் கி ...
  பேனா நட்பு என்றால் என்ன?? ..
  மிகவும் அருமை..எப்படி முடிகிறது உங்களால்...இப்படி எழுத..
  *-----------------------*
  "1996ல் டியர் ஜாக்கி என்று எந்த நேரத்தில் நண்பர் அனந்தராஜ் எழுதினாரோ? இன்று உலகம் முழுவதும் என் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் மற்றும் எனக்கு கடிதம் எழுதும் வாசக நண்பர்கள் அவர் 1996ல் எழுதிய டியர் ஜாக்கியை சுவிகரித்து கொண்டுள்ளார்கள்...இது நானே எதிர்பாராத ஒன்று..."
  - நிச்சயம்..மனம் நெகிழும் தருணம்..
  *-----------------------*
  "ஒரு கடிதத்தை 25 பேர் படிக்கின்றார்கள் என்றால் நிச்சயம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாரத்துக்கு ஒரு கடிதம் தவறாமல் அவர்கள் படிப்பு முடியும் வரை எழுதிக்கொண்டு இருந்தேன்.. "

  - உண்மை தான் உங்கள் எழுத்துக்களை என் நண்பர்கள் பலரும் வாசிக்கிறார்கள்..(அமைதியாக) . அவற்றையெல்லாம் கணக்கெடுத்தால்..எங்கேயோ போகும்..
  *-----------------------*
  "இன்று ரொம்பவும் கடுப்பாக இருக்கும் சமயங்களில் எதாவது ஒரு பைலில் இருந்து ஒரு கடிதத்தை வாசிக்கும் போது கொசுவத்தி சுற்றியபடி நெகிழ்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருக்கும் இப்போது நான் எழுதும் பதிவுகளை பதினைந்து வருடம் கழித்து வாசிப்பது போல........."

  - அப்ப நாங்க எல்லாம்..கொசுவா...?! (சும்மா தான்..)
  *-----------------------*
  மொத்தத்தில் நீங்கள் நீங்கள் தான்.. நண்பர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை..யாரும் குறை கூற முடியாது. பேனா நண்பர்களை கூட இன்னும் மறவாத உங்களை தங்க பேனாவால் எழுதினால் கூட நிறைவு ஆகாது..

  நன்றி
  என்றும் அன்புடன்..
  NTR.

  ReplyDelete
 14. எழுத்தோடே வாழ்ந்த/வாழ்கிற மனிதரைய்யா நீர்!

  ஜாக்கியின் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. எழுத்துக்காரரின் வெள்ளந்தித் தன்மையும் பேனா நண்பர்களுடைய அக்கறை/ஈடுபாடும் தெளியக் கிடக்கிறது.

  ReplyDelete
 15. I LOVE YOUR WAY OF WRITING. ITS SOMETHING DIFFERENT FROM ALL OTHERS WRITING

  ReplyDelete
 16. நினைவுகளை கிளற செய்த உங்களின் எழுத்துக்கள்.எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் இருக்கின்றன.(1997 நான் எழுதிய கடிதங்களை இன்னும் வைத்து இருக்கின்றேன்)

  ReplyDelete
 17. Really impressing. You are a roll-model in this art of writing-for-keeping happy every body.Wishing you more writing-more friends-more success.
  -Anbudan-Maru.Rama.Shanmugam (Male:58)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner