KARUNGALI-2010/கருங்காலி/ திரைவிமர்சனம்



பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையான படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் களஞ்சியம்...
இவர் இயக்கிய பூந்தோட்டம் எனக்கு ரொம்பவும் பிடித்த படம்... மிக மென்மையாக நகரும் திரைக்கதையும் முரளி பாத்திரமும் ரசிக்க வைப்பதாக இருக்கும்...தேவயானிக்கு முரளிக்கும் காதல் பூக்கும் அந்த கணம் மிக நன்றாக இருக்கும்.. கடலில் பேசிக்கொண்டு இருக்கும் போது மழை வந்து விட இருவரும் ஒரே குடையில் நடக்கும்  அந்த காட்சி   என்  நெஞ்சில் நிலைத்தக்காட்சி...

இப்பவும்  இரவு நேரங்களில் பூமணியில் வரும் எம்பாட்டு எம்பாட்டு பாடலை கேட்டுக்கொண்டு இருந்தால் தூங்கம் நம்மை அறியாமல் நம் கண்களை தழுவும்... அப்படி பட்ட மென்மையான  கதைகளை தன் படத்தில் சொன்ன இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கி கதையின் நாயகனாக நடித்து வெகு நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த படம்தான் கருங்காலி...


 ===============
கருங்காலி படத்தின் கதை என்ன??

பொட்டலம் ரவி (களஞ்சியம்) இரக்கமற்ற ஒரு ரவடி.. அனாதையான அவன், சென்னையின் குடிசைபகுதியில் சின்னவயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, அங்கு இருக்கும் ஒரு  கம்யூனிஸ்ட் பெரியவர் எல்லா அனாதை குழந்தைகளையும் அரவனைத்து வளர்க்கின்றார்.. 

நாம் உயிரோடு இருக்க இருப்பவனிடம் இருந்து எடுக்கலாம் என்ற கொள்கையை பசங்களிடம் போதிக்க... அவர்கள் அது போலவே செயல்படுகின்றார்கள்.. ஒரு கட்டத்தில் கிழவர் இறந்து விட, அனாதை பசங்கள் அத்தனை பேரும் பசியில் துடிக்க...  வயிற்று பிழைப்புக்கு கஞ்சா பொட்டலம் விற்கும் வேலை செய்கின்றார்கள்..நல்ல காசு வருகின்றது... மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகின்றார்கள்... இந்த அனாதை சிறுவர் கூட்டத்தில் செங்கி என்ற பெண் இருக்கின்றாள்.. சின்ன வயதில் இருந்தே ரவி மீது காதலாய் இருக்கின்றாள்...செங்கியோடு பொட்டலம் ரவி உடலுறவு வைத்துக்கொண்டாலும் அவளை திருமணம் செய்ய மறுக்கின்றான்..சாப்பாட்டுக்கு கஷ்ட்டபட்டார்கள்... காசு கிடைத்தது.. ஆனால் சுபிட்ச வாழ்வை போட்டலம்ரவியால் வாழமுடியவில்லை காரணம் என்ன என்பதை திரையில் பாருங்கள்..

=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையாக படம் எடுத்த இயக்குனர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கதாநாயகனாக மாற்றிக்கொண்ட படம்..


குப்பத்தில் போடும் முதல் குத்து பாடல் நன்றாகவே இருக்கின்றது.. ராபர்ட் மாஸ்டர் குருப் நன்றாகவே  உழைத்து இருக்கின்றார்கள்..

செங்கேவி (அஸ்மிதா) கேரக்டரில்  நடித்த பெண் ரொம்ப நன்றாக நடித்து இருக்கின்றார்கள்..




களஞ்சியம் முதல் பாதியில் நன்றாகவே அவருக்கு அந்த கேரக்டர் சூட் ஆகின்றது ஆனால் இரண்டாம் பாதியில் பல இடங்களில் வேண்டாம்....போதும். ஒரு விரகதாப பாடலில் அஞ்சலியோடு பின்னி பெடலெடுக்கின்றார்...


நிஜமாதான் சொல்லறியா அஞ்சலியா இப்படி?? நிஜமாலுமே அஞ்சலிதான்....குடும்பபாங்காய் வருகின்றார்.. சின்ன எக்ஸ்பிரஷன்களில் தேர்ந்த நடிகை என்று நிருபித்து இருக்கின்றார்...இது அவருக்கு இரண்டாம் படமோ அல்லது முதல்படமோ என்று தெரியவில்லை.. இயக்குனர் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நடித்து இருக்கின்றார்..அதனாலே கதையின் நாயகனின் கை பல காட்சிகளில் கரகாட்டம் ஆடி இருக்கின்றது

டாக்டராக நடித்தவர் சுனிதா.. அவருடன் நடித்த பல காட்சிகள் திரையில் கானோம்... எடிட்டிங்?? 

அஞ்சலிக்கு கணவனாக நடித்த சீனு....டைரக்டா என்ன சொன்னாரோ அதை செய்து இருக்கின்றார்..

விபத்தில் காப்பாற்றிய ரவுடியையே கல்யாணம் செய்து கொள்ளும் டாக்டர் என்று ஜாலியாக கதை சொல்லி இருக்கின்றார்கள்..

இது பெண் பித்தன் கதையா? ரவுடி கதையா? ஒரு பெரிய குழப்பம்...

இந்த படம்  நிறைய ராவான காட்சிகளை கொண்டது..உதாரணத்துக்கு இறந்த நடிகை உடலோடு உறவு கொள்வது போன்ற காட்சிகள் தமிழ்சினிமாவுக்கு புதுசு..

படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய லாஜிக் ஓட்டைகள்..

முதல் காட்சியில் விபத்தில் காப்பாற்றும் டாக்டரை  செம கட்டை என்பதறக்காகதான் பொட்டலம் ரவி   காப்பாற்றினான் என்று காட்டி விட்டு, பொட்டலம் ரவி பிளாஷ்பேக்கை இழுக்காமல் சின்னதாக வைத்து இருக்கலாம்..


முதல் பாதிவரை கதையில்  இடைவேளைவரை சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்  ரசிக்க முடிகின்றது..ஆனல் இரண்டாம் பாதி ஒரே விஷயத்தை இழு இழு என்று இழுத்துவிட்டார்கள்.. பின்பாதியில் இதுதான் கதையாக சொல்ல போகின்றறோம் என்றால் முன்பாதியில் பசி ,பட்டினி, என்று நீட்டி முழங்கி இருக்க வேண்டாம்..

=======

படக்குழுவினர் விபரம்..

Banner:            Sri Guru Jothi Films
Cast:    Mu.Kalanjiam, Srinivas, Anjali, Sunitha Varma, Asmitha, Alex
Direction:        Mu.Kalanjiam
Production:     Vivekanandan
Music: Srikanth Deva


பைனல்கிக்...

இந்த படத்தை நான் அஞ்சலிக்காக போய் பார்க்கவேண்டும் என்று இருந்தேன்.. இந்த படத்தை பிரான்சில் இருக்கும் நண்பர் லிங்கம் அஞ்சலிக்கா பார்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.. இந்த படம் டைம்பாஸ்படம்.... அஞ்சலிக்காக போவேன் என்று அடம்பிடித்தால் போய் வாருங்கள்...இயக்குனர் மு.களஞ்சியத்தின் கலைத்தாகம் இந்த படத்தின் மூலம் நிறைவேறிஇருப்பது கண்கூடாக தெரிகின்றது....


 ==========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


4 comments:

  1. நல்ல விமர்சனம் நண்பரே..

    ReplyDelete
  2. இயக்குனரின் “கலைத்தாகம்” இப்படத்துடன் தணியுமா?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner