மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)


நாளை இந்தியாவின் 65வது சுதந்தர தினவிழா..  நண்பர்கள் அனைவருக்கும் 

முன்னதாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
பல மதங்கள், பல மொழிகள் என வேற்றுமையில் ஒற்றுமைகண்டு இத்தனை வருடம் காலம் தள்ளியது பெரிய விஷயம்தான்... மற்ற நாடுகளுக்கு இததான் ஆச்சர்யமான விஷயம்.. எப்போது இந்த பாடலை கேட்டாலும் உடல்சிலிர்க்க ஆரம்பித்துவிடும்..


AR Rahman - Vande Mataram (Tamil) by Jeva75
============
பொதுவாக அமெரிக்கர்கள்  இந்தியர்களை அதுவும் தமிழர்களை பற்றிய  மதிப்பிடு என்ன மாதிரி வைத்து இருக்கின்றார்கள் என்பதை அமெரிக்க தூதர் நேற்று  எஸ்ஆர் எம்  கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பேசும் போது தனது இளைமைகாலத்தில் ஒரிசாவுக்கு ரயிலில் பயணிக்கும் போது ரயில் இலக்கை லேட்டாக இஅடைந்த காரணத்தால் தமிழர்கள் போல, எனது சருமம் அழுக்காவும் கருப்பாகவும் மாறிவிட்டது என்று சொல்லி இருக்கின்றார்.. அதற்கு அங்கு இருந்த வடஇந்திய மாணவர்களை கைதட்டி இருக்கின்றார்கள்..இந்த லட்சணத்தில் நாம் வேற்றுமையில் ஒற்றுமைக்காண நாளை 65வது சுதந்திர தினத்தை கொண்டாட போகின்றோம்..ஒரே ஆறுதல் நமது முதல்வர் உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் என்று  ஜெ கண்டித்து இருக்கின்றார்...
========


ஆட்டோ சங்கருக்கும் அவன் கூட்டாளிக்கும் தூக்கு கொடுத்த பிறகு இப்போது முன்னாள் பிரதமர் ராஜிவ்கொலை குற்றாவாளிகளுக்கு தூக்கு போட தமிழகம் ரெடியாகி வருகின்றது.. இதில்  பேட்டரி கொடுத்தவர்கள் எல்லாம் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு இருக்கின்றார்கள்..சிவராசன், சுபா, இருவர்  தற்கொலைக்கு பிறகு ராஜிவ் கொலைவழக்கு விசாரனை, இதுவாக இருக்கலாம்,இப்படியும் இருக்கலாம், என்ற யூக அடிப்படையில்தான் விசாரனை நடைபெற்று நிறையபேர் மாட்டினார்கள்..நிறைய அப்பாவிகள்  சிக்கினார்கள்..தும்பை பிடித்து விட்டு அது கொடுக்கும் வாக்கு மூல அடிப்படையில் வால்களை கைது செய்து இருந்தால் நியாயம்.. அதனால் இந்த தூக்கு தண்டனையை மத்திய அரசு தடுக்கவும் அதனை  முதல்வர் ஜெ தீர்மானமும் போட்டு தடுக்கவும் வேண்டுகின்றேன்.....


இந்த பதிமூன்று நிமிட வீடியோவை பாருங்கள்.... ஒரு தாயின் கதறலை செவிமெடுங்கள்..==========பெண்களூர் ஊட்டியை போல குளுமையாக இருக்கின்றது. தினமும் இரவில் மழை பெய்கின்றது... கொஞ்சமாவது தூரல் போடவில்லை என்றால் வானிலைக்கு தூக்கம் வருவதில்லை..மழை பெய்தால் மணிக்கணக்கில் டிராபிக் ஏற்பட்டு உயிரை எடுக்கின்றது..என்னதான் மரத்தை வெட்டி ரோட்டை அகலபடுத்தினாலும் பழைய குருடி கதவை திறடிதான்...==============

சென்னையில் ஆட்டோவுக்கு சொத்தை எழுதி தரும் நகரத்தில்தான் வசித்து வருகின்றோம்... ஆனால் இங்கு எங்கு போனலும் மீட்டர்தான்.. சென்னையில் தேவிதியேட்டரில் இருந்து

சத்தியம் போக வேண்டும் என்றால் மனசாட்சி இல்லாமல் 60ரூபாய் கேட்பார்கள்...இருபது ரூபாய்தான் ஆகும்..ஆனால் மீட்டர் போடாமல் பிக்சட் ரேட்தான் சென்னை ஆட்டோவாலாக்கல் வைப்பார்கள்..இங்கு பெங்களூரில் ஆட்டோ எடுப்பது பயத்தை தருவதில்லை.. 
========
சமச்சீர் கல்வி தமிழகத்தில் அறிமுகபடுத்தினாலும் இன்னும் மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் பெயரை மாற்ற மாட்டோம் என்று போர்கொடியை உயர்த்தி இருக்கின்றன...இவனுங்க என்னைக்குதான் அடங்குவானுங்க..??==================

மிக்சர்மைதிலி என்ற பெண்ணின் கல்வி தொகை பற்றி வாசக நண்பர் சதிஷ் அனுப்பிய கடிதத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் உதவிகள் கிடைத்து இருக்கின்றது.. சென்னை சென்று உரியவரிடம் சேர்பித்து விட்டு வேறு ஏதாவது உதவிகள் தேவை என்றால் சொல்கின்றேன்.அதுவரை உதவும்  உள்ளத்துடன் எனக்கு அனுப்பிய மெயில்கள் அப்படியே இருக்கட்டும்..==============================இங்கு வந்ததில் இருந்து நண்பர்களை  சந்திப்பதும் திரைப்படங்கள் பார்ப்பதுமாய் பொழுது போகின்றது... லால்பார்க் ஊர்வசிதியேட்டர் இப்போது கொஞ்சம் வேலை செய்து மாற்றி அமைத்து இருக்கின்றார்கள்..3டி என்றால் 50ரூபாய் எக்ஸ்ட்ரா..டிக்கெட் விலை பால்கனி..200ரூபாய்...பஸ்ட்கிளாஸ்150ரூபாய் என்று விலை ஏற்றி விட்டார்கள்.. இன்று பெண்களுர் லால்பார்க் ஊர்வசியில் 3 மணிக்காட்சியில் 3டியில் பைனல் டெஸ்ட்டினேஷன் பார்ட் பைவ்  பார்த்துவிட்டேன.. விமர்சனம் விரைவில்..=================


நேற்று பிளவர்ஷோ லால்பார்கில் நடந்தது..பெங்களூர் திரண்டு லால்பார்க் என்ற புள்ளியை நோக்கி வந்த காரணத்தால்  கிரைஸ்ட் காலேஜில் இருந்தே செம டிராபிக்.. ஆமை போல மெதுவாய் டிராபிக்கில் ஊர்ந்து லால் பார்க் சேர்வதற்குள் மாலை ஆகிவிட்டது... பார்க்கில் ஒதுக்குப்புறத்தில் எல்லா இடத்திலும் காதலர்கள் வியாபித்து இருந்தார்கள்..நிறைய கூட்டம் மிக முக்கியமாக குட்டி வாண்டுகள் அதிகம் இருந்தார்கள்.. தம்பி ஜுவ்ஸ்க்கு போன் செய்தேன்.. மல்ர்கண்காட்சிக்கு வர வாய்ப்பு இருக்குமா? என்று கேட்டேன்... குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஜுரமாக இருப்பதாக சொன்னார்...  இந்த முறை நேரில் வந்து சந்திக்கின்றேன் என்று சொன்னேன்...==================

இந்தவாரகடிதம்...Dear  தனசேகர்,,என்னை உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை.(Tried to type in tamil...Taking long time.So switching over to English)

My name is K.Venkatasubramanian,I am from K.N.Pettai.We have studied  together in St.Joseph's Hr.Sec.School.Hope you remember me.....Recently I happend to read some of your blogs.I am happy to know that you became a  very famous personality in the Tamil blogger community(நம்ம ஊருக்காரன் என்ற பாசம் தான்)I still remember the way you used to tell the Jackie chan movies stories...Still you have not changed.. Your writing style follows the same traits.It makes the readers hooked to your blogs.

In one of the post I saw your Navy Photo with Lawrence father & Selvaraj Sir.It feels good to see the people after so long time(almost 20 years..).I can vaguely recollect some of the faces in that photo.

Now I am working with Mahindra Satyam and in Hyderabad.All the best Nanba and reply if you have time(I know u r very busy with your little kid and blogging)Happy blogging.Thanks

Venkat============

அன்பின் வெங்கட்... எனக்கு வந்த கடிதங்களில் மிகவும் சந்தோஷத்தை கொடுத்த கடிதம் இதுவே... காரணம் எனது பள்ளி நண்பன் நீ... லாரன்ஸ் பாதர், செல்வராஜ் சாரோடு நான் நேவல் குருப் போட்டோவை எனது பிளாக்கில் பிரசுரித்த  போது யாராவது இதனை பார்த்து விட்டு தொடர்பு கொள்ளுவார்கள் என்று நினைத்து இருந்தேன்... இதோ உனதுகடிதம்.. மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி... 20 வருடங்களுக்கு முன் எடுத்த புகைபடம்.. அந்த புகைபடத்தில் இருந்த பலர் பூந்தளிர்  என்ற அமைப்பை நிருவி சமுகசேவை செய்த நண்பர்கள் பலரை உனக்கு நினைவில் இருக்கலாம்..

  பத்தாம் வகுப்பில் கூட ஜாக்கிசான் படங்கள் பார்த்து விட்டு கதை சொல்லுவேன்.. என்னை சுற்றி கதை கேட்க ஒரு பெரும் கூட்டம் உட்கார்நது இருக்கும்..இப்போது பிளாக்கில் நான் சொல்லும் படங்களை டவுண்ட் லோட் செய்து பார்க்கும் நண்பர்கள் கூட்டம் அதிகம்.. அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும்  போது நான்  பேசியது போலத்தான் இப்போதும் அதே ங்கோத்தா  கொம்மா வார்த்தை பிரயோகங்கள்.. நான் இன்னும் மாறவில்லை , நான் பள்ளியல் படிக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியோ நான் மாறாமல் இருப்பதாக நீ சொல்லியதில் மிக்க மகிழ்ச்சி.. நான் யாருக்காவும் என்னை மாற்றிக்கொண்டதில்லை...இந்த இருபது வருடத்தில் நான் அப்படியேதான் இருக்கின்றேன்... அது ஒரு கர்வம்..அன்று சித்தப்பா  வாத்தியாரை  பள்ளியில் எதிர்த்த அதே தில் இன்னமும் என்னிடத்தில் இருக்கின்றது...  இப்போது யூகேவில் இருந்து இதை படிப்பாய்.... ஹைதரபாத்துக்கு வந்ததும் எனக்கு போன் செய்யவும்...=================

பிலாசபி பாண்டிதிருமணவாழ்க்கை என்றால் என்ன??முதலில் அழகான பார்க்கில் நடப்பது போல இருக்கும் கொஞ்சநேரத்தில் நீங்கள் உணர்வீர்கள் அந்த பார்க்க ஒரு ஜுராசிக்பார்க் என்று...===============

நான்வெஜ் 18+

ஜோக்,,1


முற்றம் துறந்த முனிவர் போல நடிச்ச பிக்காலிபயபுள்ளைங்க பத்து பேரை டெஸ்ட்  செய்ய முனிவர் விரும்பினார்..

ஒரு போட்டி வைக்க முடிவு செஞ்சார். மடத்தின் நடு கூடத்துக்கு தன்னுடைய பத்து யோக்கிய சிஷ்ய முனிவர்களையும் வரவழைச்சார். அதுல ஒருத்தனுக்கு திக்குவாய்..சரளமா பேசமுடியாது...ஆனா அவனுக்கு மத்த  எல்லார் மேலயும் பொறாமை..உங்களுக்கு பெண்களின் மேல் விருப்பம் இல்லையா?? என்றதும்  மற்ற ஒன்பது பேரும் இல்லை குருவே என்றார்கள்..

திக்குவாய் சிஷ்யன் நான் ரொம்ப ரொம்ப யோக்கியம்னு சொல்ல முயற்சித்தான் சரின்னு அவன் சொல்லி முடிக்கும் வரை போட்டி ஆரம்பிக்காம குரு வெயிட் செய்தார்..அவனும் தான் பரம யோக்கியம்னு சொல்லி முடிச்சான்..குருக்கிட்ட நல்லவன் பேரு எடுக்க அவனுக்குள்ள ஒரு வெறி....எல்லோரயும் உடைகளை கலைய சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்தார். ஒவ்வொருத்தரிடமும் ஒரு தப்பு மேளத்தை கொடுத்து அவங்க அடிவயிற்றுல கட்ட சொன்னார்.சிஷ்ய முனிவர்களும் எதுக்குன்னு புரியாம மேளத்தை வாங்கி அடிவயிற்றுக்கு மேல இடுப்புல கட்டினாங்க.குரு தன் கையை தட்டினார்.உடனே ஒரு அழகான பருவப்பெண் தன் உடல் முழுவதையும் போர்வையால் மூடிக்கொண்டு நடுகூடத்துக்கு வந்தாள்.குரு கண் ஜாடை காண்பித்ததும் போர்வையை விளக்கினாள்.  அந்த பருவப்பெண்  நிர்வாணமாக நடு கூடத்தில் நடக்க ஆரம்பித்தாள்.உடனே அங்கே மேள சத்தம் கேட்க ஆரம்பித்தது. சிஷ்ய முனிவர்கள் கிளப்பிய மேளத்தின் ஒலி காதை கிழித்தது.ஒன்பது மேள சத்தம் மட்டுமே கேட்க, குருவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கடைசியா நின்றிருந்த திக்குவாய்  சிஷ்யனிடம் மட்டும் சத்தம் கேட்கவில்லை என்றதும் அவனை தன் அடுத்த வாரிசாக அறிவித்தார்.

ஆனால் குரு அறிவிக்கும் போது திக்கி திக்கி ஏதோ சொல்ல அவன் முயற்ச்சிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடல் முழுவதும் வியர்த்து போனான்..பெண்ணும், தோல்வி அடைந்த ஒன்பது பேரும் நடு கூடத்தை விட்டு சென்றார்கள்.குரு, 'சிஷ்யா உன் மேளத்தை கழட்டிவிட்டு உடையை உடுத்தி கொள்' என்றார்.சிஷ்யன் மேளத்தை கழட்டி குருவிடம் கொடுக்க அதை வாங்கி பார்த்த குரு ஆச்சரியம் அடைந்தார்.மேளம் ரெண்டாக கிழிந்து போய் இருந்தது..

 ========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ..... நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...

9 comments:

 1. மலர் கண்காட்சி புகைப்படங்களை சீக்கிரம் அப்-லோட் செய்யுங்கள் ! ! இங்காவது இல்லையெனில் முகப்புத்தகத்தில் ! ! வழமையாக இருந்தது இந்த வாரம் மி.சா.வெ&நா.வெ

  ReplyDelete
 2. //முதலில் அழகான பார்க்கில் நடப்பது போல இருக்கும் கொஞ்சநேரத்தில் நீங்கள் உணர்வீர்கள் அந்த பார்க்க ஒரு ஜுராசிக்பார்க் என்று...//
  பயபுள்ளை முன்னாடியே சொல்லி இருந்தா ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டம்மல்ல

  ReplyDelete
 3. In “Chake de India”, when everyone introduce themselves with their state name. Oruthi matum Vidhya Sharma India nu soluva. I think that’s day we can pride our Independence.
  Thought this would interest you. Why British government left us in 1947? http://kumkumaa.blogspot.com/2011/08/why-british-government-left-us-in-1947.html

  ReplyDelete
 4. எனக்கு உங்கள் பதிவில் மிகவும் பிடித்ததே, கடைசியாக இருக்கும் அந்த A ஜோக்ஸ் தான். இந்த வார ஜோக்கும் சூப்பர்.

  ReplyDelete
 5. பேரறிவாளன் தாய் பேட்டியை பகிர்ந்ததற்கு நன்றி!!

  ReplyDelete
 6. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க! :-)

  ReplyDelete
 7. நீண்ட நாட்களுக்குப் பின்னான நட்பு... அதுவும் பள்ளிகால நட்பு என்றால் உள்ளத்தில் உண்டாகும் ஒரு இனம் புரியாத சந்தோஷம்.. அதை உங்கள் மறுமொழியில் காண முடிந்தது....

  ஏ,.. ஜோக்... சூப்பருங்க...

  ReplyDelete
 8. Hi Thanks for writing about auto rikxa fare. So many of them suffering due to auto drivers. I heard in mumbai, there union for auto passengers. Same like we need to start at chennai to avoid high fare. If possible write about passenger union. it helps people.

  Regards
  Sankar

  ReplyDelete
 9. மினி சாண்விச் நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner