கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி (கம்பியம்பேட்டை)
பத்தாம் வகுப்பு டி பிரிவு... ஆசிரியர் முத்துக்குமார சாமி பாடம்
நடத்திக்கொண்டு இருந்தார்....
அப்போதும் இப்போதும் எனக்கு சினிமா சினிமா சினிமாதான்.. முன் இரவில் பார்த்த படத்தை பின்பகலில் வகுப்பறையில் ஆக்ஷனோடு சினிமாகதையை சொல்லுவேன்... அதை கேட்க என்னை சுற்றி மிகப்பெரிய கூட்டம் இருக்கும்...
மதியம் சாப்பிட்டு முடித்து அரைமணி நேரம் சினிமா கதைதான்...
பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே சின்ன சின்னதாய் பேச்சுக்கள் சினிமாவை பற்றியே
இருக்கும்.
ஆங்கில படத்தில்
ஒரு பாடத்தை ஆசிரியர் மூத்துக்குமாரசாமி
எடுத்துக்கொண்டு இருந்தார்.... பாடத்தின் தலைப்பு என்ன என்று தெரியவில்லை... மோடி
வித்தைக்காரன் பெயர் கன்ஜூரர்.. அவன் ஒரு நகரத்துக்கு வந்து வித்தை
காட்டுவதுதான் பாடத்தின் கரு.
அவர்
நடத்திக்கொண்டு இருந்தார்... தொண்டை தண்ணி
வற்ற கத்திக்கொண்டு இருந்தார்... பேச்சினுடே திடிர் என்று பாதியில் பாடத்தை
கவனித்தேன்... கன்ஜூரர் என்றால் என்ன என்று தெரியவில்லை...?
பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தத்தாதிரேய பாலமுருகனிடம் கன்ஜூரர்
என்றால் என்ன என்று ரகசியமாக கேட்டேன்... அவன் ஐயர் பையன் அவனுக்கு தெரியும்
இருந்தாலும் சொல்லாமல்... நீ வாத்தியாரையே கேளு என்றான்..
45 நிமடத்தில் அரைமணி நேரம் பாடம் நடத்தி பாடத்தை முடிக்க
போகும் ஆசிரியரிடம் கேட்டேன்...
சார் ஒரு டவுட் என்று எழுந்தேன்.
உனக்கே டவுட்டா ? என்ன டவுட்?
சார் கன்ஜூரர் என்றால் யார் என்றேன்...
வாத்தியார்
டென்ஷனில் தலையை பிடித்துக்கொண்டார்...
உம்.... உங்க அப்பா உட்காரு என்று சொல்லி என்னை உட்கார வைத்து விட்டார்.........
பத்தாம் வகுப்பில்
நான் பாஸ் செய்வேன் என்று நினைக்கூட இல்லை.. ஆனாலும் நான் பாஸ் ஆனேன்...
டோட்டல் 277 ஆங்கிலத்தில் 41 மார்க்.......
என் அப்பாவுக்கும்
என் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம்,...
ஆனால் இப்போது பிள்ளைகள்.... நன்றாக படிக்கின்றார்கள்...
படிக்கும் பிள்ளைகளை பார்க்கும் போது அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது ஒரு
மனநிறைவு ஏற்ப்படுகின்து.
=======================
மைதிலி ராகவி பற்றி தெரியாதவர்கள் எனது இந்த முந்தைய பதிவைவாசித்து விடுங்கள்..இங்கே கிளிக்கவும்.
===========
வாசகர்கள் பலருக்கு
ராகவியை நினைவில் வைத்து இருக்கலாம்...... ஈரோடு பக்கத்தில் கோவில் குருக்கள் பெண்.... அவளுக்கு கேன்சர்..
அவளை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை
செய்ய சொல்லி எழுதிஇருந்தேன்..
நம் வாசக நண்பர்கள் 64 ஆயிரம் வரை அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவினார்கள்...
அந்த பெண் டென்த்
பாஸ் செய்த விட்டாள்...
எவ்வளவு மார்க் தெரியுமா?
500க்கு 491 மார்க்....
==========
முதல் முறையாக அந்த பெண்ணிடம் போனில் இன்று பேசி வாழ்த்து சொன்னேன்..
ஜாக்கிசார்...
ஹலோ ராகவி...
நல்லா இருக்கியாம்மா-?
நல்லா இருக்கேன் சார்...
உடம்பு இப்போ எப்படி இருக்கு?,
நல்லா இருக்கு...
அடுத்து என்ன படிக்க போறே..?
கம்யூட்டர் சயின்ஸ்
எந்த ஸ்கூல்....?
ஈரோடு பக்கத்தில் தாமரை மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்க
போறேன்...
ஆல் த பெஸ்ட்மா...491 மார்க் வாங்கறது சாதாரண விஷயம்
இல்லை... நோயோடு போராடி இத்தனை மார்க்
வாங்கறது பெரிய விஷயம்.. நான் டென்த்ல என்ன மார்க் தெரியுமா?
தெரியாது சார்..
277... அதனால் பீயூட்ச்சர்ல இன்னும் நல்லா படிச்சி நிறைய
மார்க் வாங்க இந்த ஜாக்கி அங்கிளின் வாழ்த்துக்கள் என்றேன்..
ராகவியை என்னிடத்தில் அறிமுகபடுத்திய நண்பர்கள்... எனக்கு எழுதியவை.
==========
Hi Friends,
This is to inform you that Ragavi has scored 491/500 in SSLC.
Today I had spoken with Ragavi's father. He would like to
convey this information to all of you and he wants to convey his thanks once
again to all.
I am so happy for her. Thanks a lot for your help.
Please pass this information to your friends if i missed
any contributed people in my to list.
Thanks,
Ramesh k
========
Dear Jackie anna
This is for your kind info.Thanks a lot for your
contributions .
Regards
Duraimurugan
===========
இந்த சந்தோஷமான தருனத்தில் பணம் கொடுத்து அந்த ராகவி பிள்ளை வாழ்வில் ஒளியேற்றிய நல்ல
உள்ளங்களுக்கு நெடுஞ்சான் கிடையான என் வணக்கத்தை உங்கள் திசை பார்த்து வணங்கி
கொள்கின்றேன்.. ஓத்தா பணம் எல்லாருகிட்டயும் இருக்கும்.... ஆனா நல்லவங்க கிட்ட
இருக்கும் போது அது நல்லகாரியங்களுக்கு பயண்படும்..... மிக்க நன்றி நண்பர்களே..
======================
அடுத்து இன்னோரு
மகிழ்வான செய்தி...
மைதிலி எனக்கு
போன் செய்தார் மெயிலும்
அனுப்பினார்..
இரண்டாம் ஆண்டில் 84
விழுக்காடு மதிப்பெண் பெற்று இருக்கின்றார்...
Sir, i am glad to inform you that i have scored 84% in my third semester.i am the class topper. thank you so
much for your help. i assure you that i ll score good marks in dis sem also:)
here i have attached my 3rd sem results.
with regards,
mythili.
-
==========
Anna University, Chennai
UG Nov/Dec 2012 Chennai/Madurai
HALLTICKET NO
Hall Ticket No 112711104029
Name MYTHILI J
Course B.E.
Computer Science and Engineering
Marks Details
Subject Grade Status
CS2201 A PASS
CS2202 D PASS
CS2203 C PASS
CS2204 B PASS
CS2207 S PASS
CS2208 S PASS
CS2209 S PASS
GE2021 B PASS
MA2211 S PASS
====================
நிறைய பிரச்சனைகளை
சந்தித்துக்கொண்டு இருக்கும் போது, இந்த மகிழ்வான இரண்டு செய்திகள் என்னை
மகிழ்விக்கின்றன.
அடுத்த மாதம் மைதிலியின்
முன்றாம் ஆண்டு படிப்பு செலவுக்கு உதவிய உங்களிடம் உரிமையோடு கேட்க
இருக்கின்றேன்..
உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் சாத்தியபடுத்திய பரம்பொருளுக்கும் என் நன்றிகள்.
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு!
ReplyDeletethanks for sharing this good news jackie anna
ReplyDeleteஇவர்களுக்கு தொடர் உதவி புரிந்து வரும் ஜாக்கி அண்ணே வாழ்த்துக்கள் இதற்கும் ஒரு மனம் வேண்டும்
ReplyDeleteThanks to you for your initiative and efforts , hats off to those children who are studying well .
ReplyDeleteThanks to you for your initiative and efforts , hats off to those children who are studying well .
ReplyDeleteTHAT LESSON IS "CONJUROR'S REVENGE.CONJUROR=MAGICIAN CORRECTA ANNE?
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி,.
ReplyDeleteசங்கர் கரெக்ட்.
ReplyDeleteHello Sir
ReplyDeleteIt was nice talking to you. Thought of discussing a lot of things with you but not able to. I am working in Thuraipakkam, OMR. If you get a chance to come to OMR, pls give me a call.
Bye
Lakshmi Narayaan Ayyasamy
9600055973