Iddarammayilatho-2013 /தெலுங்கு/ இரண்டு பெண்கள்.
அல்லு அர்ஜூனை
ஆர்யா முதல் மற்றும் இரண்டு பாகங்கள் மூலம் எனக்கு அவரை  ரொம்ப வே பிடிக்கும் .இன்றும்  மிகச்சிறந்த திரைக்கதைக்கு ஆர்யா 2 படத்தை சொல்லுவேன் ... கொண்டாடுவேன்... 

இந்த படம் வெளிவரும் முன்னே இந்த படத்தை பற்றிய காசிப் டோலிவுட் முழுக்க வலம் வந்தது உண்மைதான்.... ஆனான பட்ட மகேஷ்பாபுவே டைரக்டர் பூரிஜெகன்நாத்திடம் எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை..  வைத்த ஷாட்டை மாற்றி எடுத்து இருக்கலாம் என்று  அட்வைஸ் செய்ததில்லை... போக்கிரி படம் இதற்கு நல்ல உதாரணம்...


பூரிஜெகன்நாத் தன் குரு ராம்கோபால் வர்மாவிடம் தொழில் கற்றவர்... வர்மா மாதத்திற்கு ஒரு படம் தன் பேனரில் அல்லது தன் டைரக்ஷனில் ரிலிஸ் செய்ய வேண்டும் என்ற நிறைவேறாத போங்கு ஆசை கொண்டவர் என்றாலும் ,  அப்படி இருக்க வேண்டும் என்று இன்று வரை போரடிக்கொண்டு இருப்பவர். 

அவரிடம் தொழில் கற்ற பூரி மட்டும்  எப்படி இருப்பார்... ?அவரும் தன் குரு போலவே  குறித்த நேரத்தில் படம் ரிலிஸ் செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டாரா? எஸ் ... பூரி  மகேஷபாபுவை வைத்து   இயக்கிய பிசினஸ்மேன் திரைப்படம் எழுபத்தி நாலு நாளில் எல்லவற்றையும் முடித்து விட்டார்..


 சரி  பிலிமை ஓடவிட்டு சுருட்டி கொடுத்து விடும் ரகமும் அல்ல பூரி...  எல்லா ஷாட்டுலேயும் ரிச்னஸ் தெரியும்... ஸ்டைல் இருக்கும், கிளாமர் இருக்கும்... தெலுங்கு நாயகர்களை பூஜிக்கும் அளவுக்கு தான் ஷாட் வைப்பார்... 90 நாட்களில் மொத்த படத்தையும் முடித்து விட்டு பூசனிக்காய்  உடைத்து அடுத்த படத்துக்கு போகும் இவர்.......... இந்த படத்தை எடுக்க 5 மாதம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்.. காரணம் ஹீரோவின் தலையீடு என்று  டோலிவுட் பத்திரிக்கையில் இருந்து தமிழகத்து தினகரன் வெள்ளிமலர் இலவச இணைப்பு வரை கூவிக்கொண்டு இருக்கின்றன....


சரி படம் எப்படின்னு பார்த்துடலாம்.

==============
Iddarammayilatho-2013 /தெலுங்கு படத்தோட கதை என்ன?

 கேதரின் மத்திய அமைச்சர் பொண்ணு... ஸ்பெயின்ல போய் ஒரு வீட்டு அறையில் தங்குகின்றாள். அங்கே இதற்கு முன் தங்கி இருந்த பெண்ணின் (அமலாபால்) டைரி கிடைக்கின்றது அதை படிக்க ஆரம்பிக்கின்றாள்...   அமலா பால்  அல்லுவை காதலிக்கின்றார்...நல்ல இண்டிரஸ்ட் ஆக போகும் அந்த டைரி பாதியில் நின்று விடுகின்றது...  அந்த டைரியில்  அமலாபால் காதலித்த அல்லுவை  கேதருன் ஸ்பெயினில் சந்திக்கின்றார்......  அமலாபால் என்னவானார் என்பது சஸ்பென்ஸ் கலந்த மீதிக்கதை.

===========
 படத்தின் சுவாரஸ்யங்கள்.

 டோபிகாட்ன்னு ஒரு இந்தி படம் வந்து இருக்கும் அதை பல பேர் பார்த்து இருப்பிங்க.. அந்த படத்தோட  ஒன்லைனை  வச்சிக்கிட்டு சின்ன சின்ன மாற்றங்களோடு கலந்து கட்டி  திரில்லர் கொடுக்க முயற்சி  செய்து இருக்கின்றார் பூரி.

ஒரு 5 மாதத்துக்கு முன்  இதே போல கதையம்சமுள்ள தெலுங்கு படம் வந்து இருக்கும்.. அப்படி 150 நாள் ஓடிய ரீலில்தான் கதை பண்ணி இருக்கின்றார்.. ஆனால்  அல்லுவை ரொம்ப ஸ்டைலாக காட்டுவதில் நிறைய மெனக்கெட்டு இருக்கின்றார்.. அதனால் மட்டும் அதிக நாள் ஆகி இருக்க  வாய்ப்பு இருக்கின்றது.

 காஸ்ட்யூம் சான்சே இல்லை... அல்லு ,அமலா டிரீம் சாங்கில் அமலா காஸட்யூம் சான்சே இல்லை..

மற்ற படங்கள் போல ஹீரோயின்களை  கறிக்கோழி போல  இந்த படத்தில் பூரி உரிக்கவில்லை...

இண்டர்வல் பைட் ரசிக்க தக்க அளவில் இருந்தாலும்  அதீத வன்முறை என்று சொல்லலாம்... பூசனிக்காய் உள்ளே கத்தி சொருகுவது போல,  மனித உடல்களில்  சொருகி தள்ளுகின்றார்..
அல்லுவுக்குதான் அத்தனை பாட்டுகளும்...  

பெண்களை  நக்கல் விட்டு சில டயலாக்குகள் பூரி படத்தில் இடம் பெறும் ....இந்த படத்திலும் உண்டு.. எந்த பெண்ணாவது லவ்யூன்னு ஆம்பளை போல முதல்ல சொல்லி இருக்கிங்களா? என்பது போன்றவை..

பிரம்மானந்தம் வயலின் வாத்தியாராக வந்து கிச்சி  கிச்சி மூட்டுகின்றார்.

‘===============
 படத்தின் டிரைலர்.===========
படக்குழுவினர் விபரம்

Directed by Puri Jagannadh
Produced by Bandla Ganesh
Screenplay by Puri Jagannadh
Starring Allu Arjun
Amala Paul
Catherine Tresa
Music by Devi Sri Prasad
Studio Parameswara art Productions
Distributed by Blue Sky (overseas ) 
Release date(s)
May 31, 2013[2]
Running time 2hr 20mins
Country India
Language Telugu
Budget 45 crore (US$8.2 million)(including prints)


=================
பைனல் கிக்..

தெலுங்கு ரசிகர்கள்  இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். சலித்து போன கதை.. பட் மேக்கிங் ஸ்டைல் அட்டகாசம்...  ஒவ்வொரு காட்சியிலும் அல்லு வரும் போது  விசில்  அடித்து காதை கிழிக்கின்றார்கள்..டைம்பாஸ் படம்.

================
 படத்தோட ரேட்டிங்

 பத்துக்கு ஐந்து.

=============
பிரியங்களுடன்


ஜாக்கி சேகர்.

நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

3 comments:

  1. font ஐ மாத்துங்க பாஸ்

    ReplyDelete
  2. nammalala masam oru padam pakka mudiyala..neenga eppadi daily oru padam pakkareenga..

    ReplyDelete
  3. இந்த Font-ல படிக்க கஷ்டமா இருக்கு சேகர். பழைய font-யையே பாலோ பண்ணுங்க.படம் பார்த்தேன்... பூரி ஜெகனாத்தோட மேக்கிங் காக ஒரு முறை தாராளமா பார்க்கலாம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner