சினிமாவில் சேர ஒரு எளிய வழி. சார் எனக்கு சினிமான்னு உசிறு....
நான் கள்ளக்குறிச்சி பக்கம்  சின்ன கிராமம்.... கையில மஞ்சப்பையோடு சினிமாவில் சேர ஆசையா இருக்க்கேன்...  நான் இந்த கட்டுரையை வாசிச்சா உபயோகமா இருக்குமா?-

இல்லை தம்பி இது உனக்கு சரிபட்டு வராது.. அதுவும் இல்லாம சினிமாவில் சேர போறவன் வரலாமா கூடாதான்னு   அடுத்தவன் கிட்ட ஜோசியம் கேட்டுகிட்டு இதுவரைக்கும் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க மாட்டான். வெறியோடு பஸ் ஏறினவன்தான்  கோடம்பாக்கத்துல வெற்றிக்கொட்டி நாட்டி  இருக்கான்....

  சார் நிறைய சினிமா பார்த்து இருக்கேன்...  நிறைய ஸ்கிரிப்ட் எழுதி வச்சி இருக்கேன்... எனக்கு சினமாவில சேர்ரதுக்கு   ஈசியான  வழியை சொல்லுங்க சார்...

தம்பி கரையில  உட்கார்ந்துக்கிட்டு ஈசியா நீச்சல் அடிக்க கத்துக்கொடுன்னா எப்படி  கத்துக்க முடியும்....???துணிஞ்சி எறங்கி முட்டி மோதுங்க... வாய்ப்பும் அதிஷ்டமும் இருந்தா  வெற்றி நிச்சயம்.... ஆல் த பெஸ்ட்...

 சார் நான் கோவில் பட்டி பக்கம்  எனக்கு பதினாறு வயசாகுது... எங்க கிளாஸ்ல இருக்கற ஆம்பளை பசங்க எல்லாம் என்னை சின்ன குஷ்புன்னு சொல்லுவாங்க... நான் இந்த கட்டுரையை படிச்சா எனக்கு உபயோகமா இருக்குமாசார்..?

 தாயி  கோவில் பட்டி சின்ன குஷ்பு......வீட்டுல பார்க்கற பையனை கட்டிக்கிட்டு குஷ்பு இட்லி கடை போட்டு ஹன்சிகா போல ரெண்டு பொட்ட புள்ளைய பெத்து பெருவாழ்வு வாழு தாயி... இது  உனக்கான கட்டுரை இல்லம்மா...

 சரி... இது  யாருக்கான கட்டுரை... நீங்கள் ஓரைளவுக்கு அறியப்பட்ட நபராக இருக்கவேண்டும்...

நீங்கள் சிறுகதை எழுத்தாளராக இருக்கலாம்....
நீங்கள் இலக்கியவாதியாக இருக்கலாம்....
 நீங்கள் பேஸ்புக்கில் அறியபட்ட நபராக இருக்கலாம்....
நீங்கள் டூவிட்டர் வலைதளத்தில் நிறைய பாலோயர் பெற்றவராக இருக்கலாம்.
நீங்கள் நல்ல டிரான்சிலேட்டராக இருக்கலாம்...
நீங்கள் ரேடியோ ஆர்ஜேவாக இருக்கலாம்....
நீங்கள் தொலைகாட்சியில் விஜேவாக இருக்கலாம்.
சினிமா எழுத்தாளராக இருக்கலாம்...
சினிமா   விமர்சகராக இருக்கலாம்.
அல்லது என்னை போல  மொக்கையாக  பிளாக்கில் எழுதுபவராக இருக்க வேண்டும்...


சினிமாவில் சேர  எளிய வழியில்....... முதல் விதி...

முதல் விதி... நீங்கள் அறியபட்ட நபராக இருக்கவேண்டும் என்பது முதல் விதி முதல் தகுதி...

நீங்கள் மாஞ்சி மாஞ்சி உயிரைக்கொடுத்து ஒரு சமுகக்கட்டுரை எழுதினால் கூட படிக்க நாதி இருக்காது.. ஆனால் நீங்கள் சினிமா எழுதினால்  நிறைய பேர் வாசிப்பார்கள்...  அப்படி எழுதும்   நீங்கள் சினிமாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்க வேண்டும்... சகட்டு மேனிக்கு என்றால் கடுமையாக விமர்சனம் இருக்க வேண்டும்... 

படம் எடுத்த டைரக்டர் நீங்கள் விமர்சித்த வரியை படித்து சரக்கு அடிக்கும் படி அந்த விமர்சனம் இருக்கவேண்டும்....  சமுக இணையதளங்களில்  ரேடியோக்களில்  தொலைகாட்சியில் அந்த விமர்சனம் கடுமை காட்ட வேண்டும்...

 சார் நான்  சினிமாவுல வேலை செஞ்சது இல்லை....  அப்புறம் எப்படி  விமர்சிக்கறது..? தம்பி  உலகம் தெரியாத புள்ளையா இருக்கியே... கமல் சொன்னது போல தமிழ்  நாட்டு இருக்கற ஏழு கோடி பேரும் விமர்சகர்தான்....so  அந்த ஏழுகோடி பேர்ல  நீயும் ஒருத்தன்.... உனக்கு அந்த தகுதி இருக்குன்னு  மட்டும் மறவாதே..........

கடுமையா  விமர்சிச்சா போதாது... நீயா நானாவுல அறிவாளியா ஆக்ட் கொடுக்கறது எப்படின்னு ஒரு டாபிக்ல பேசினது போல  விமர்சிக்கும் போது ஹாலிவுட் படத்தோட  பேமஸ் படங்களை நியாபகம் வச்சிக்கிட்டு அடிச்சிவிட்டுக்கிட்டே இருக்கனும்... முக்கியமா இயக்குனர்கள்.... குவன்டின் டொரன்டினோ, கியூசிப்பி டோரனேட்டர்,  கிம்கிடுடுக், மாட்டின் ஸ்கார்சசி, ரெட்லி ஸ்கார்ட், குரோசோவா, ரித்வின் கட்டக், மீராநாயர், ரே, அனுராக்கஷ்யப், ரோமன் போலான்ஸ்கி போன்ற பெயர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சிக்க வேண்டும்....

அவ்வளவு ஏன் தனிமனித தாக்குதல் கூட நடத்தினால் நலம்.....

 சார் இப்படி  தனிமனித தாக்குதல் நடத்தி விட்டு பின்னாடி சினிமாவில் சேர்ந்து பெரியாள ஆகும் போது பிரச்சனை வராதா?

 நேர்ல பார்த்து ஒரு அசடு சிரிப்பு சிரிச்சி... சாரி சார் கொஞ்சம் கடுமையா விமர்சிட்டேனன்னு சொன்னா போவுது... இன்னோவா கார் வாங்கறதுக்கு முன்ன  எப்படியெல்லாம்  அம்மாவை  விமர்சிச்சி இருப்பார் அந்த அரசியல் வாதி... அரசியல் எப்படி அது சகஜமோ ??அது போல சினிமாவுல இது சகஜம்...

 சினிமாவை யார்  தீவிரமா விமர்சிப்பாங்க....

 சினிமாவுல சேர்ந்து, தோத்து போய்.... எனக்கு இருக்கற தெறமைய விட ஒன்னும் தெரியாத முண்டங்க எல்லாம் சினிமா டைரக்டர்ன்னு சொல்லும் போது... நாம ஏன் ஜெயிக்கலைன்னு ஒரு ஈகோ... ஒரு கடுப்பு தோத்து போனவங்ககிட்ட இருக்கும்.....  கூட இருந்து பெரிய ஆளா அவனவன்  படம் ரிலிஸ் ஆகும் போது..... சிக்கிட்ன்டா சீனுன்னு அடிச்சி காலி பண்ணறது ஒரு வகை....

ரெண்டாவது வகைதான் நம்ம ஆட்கள்.... அவுங்களுக்கு சினிமா ரொம்ப பிடிக்கும் அதனாலதான்  நிறைய சினிமா பார்ப்பாங்க..அவுங்களுக்கு நல்லா தெரியும்... ஹாலிவுட் படத்தோட நம்மை படத்தை ரொம்பவும் கம்பேர் செய்யக்கூடாதுன்னு இருந்தாலும் வரி க்கு வரி கம்பேர் பண்ணி  நம்ம இயக்குனரை கதிகலங்க வைப்பாங்க...

 சினிமாவை ரொம்ப புடிச்சாலும் சினிமா புடிக்காத  மாதிரி நடிப்பாங்க.... என்னோட ரத்தத்திலே இருக்கற வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்களில்  எல்லாம் மாற்றுசினிமா மட்டுமே குடிகொண்டு இருக்கின்றது... என்று பரப்புரை செய்வ்வார்கள்.. நம்மை நம்ப வைக்க    நான் மேற்க்குறிப்பிட்டஇந்திய மற்றும் பாரின் இயக்குனர்கள் பெயர்களை சொல்லி அவர்கள் பாருங்கள் எப்படி எல்லாம் எடுத்து இருக்கின்றார்கள்.. ?? இவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்று கேள்வி கேட்பார்கள்... அதாவது மொக்கை படத்தை மொக்கை படம்ன்னு சொன்னா எவன் மதிப்பான்.. அதனால் நல்ல இருக்கற படத்தை மொக்கைன்னு சொல்லனும்... அப்பதான் திரையுலகம் உன்னை கவனிக்கும்....

உதாரணத்துக்கு நல்லா இருக்கற பொண்ணு எதிர்க்க போய் படு கேவலமான லுக் விட்டு பாருங்க...? நல்லா இருக்கற  பொண்ணுக்கே டவுட் வந்துடும்... நான் ஏன் அவ்வளவு நல்லா இல்லாமையா இருக்கேன் என்று அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கறது போலத்தான்...

ஏற்க்கனவே இருந்த உங்களின் கவனிக்க தக்க வைத்த புகழ், மாற்று சினிமா பற்றிய உங்கள் தேடல், பாரின்  இயக்குனர்கள் பரிட்சயம் எல்லாம் சேர்ந்து, உங்களை அறிவாளியாக கவனித்துக்கொண்டு இருக்கும் போது.... நீங்கள்  சினிமா மீது கடுமையான  விமர்சனத்தை வைத்தாலே போதும்... இவ்வளவு ஏன்... டாஜிக்கா கூட இல்லை... நக்கலாக  ஒரு படத்தை விமர்சித்தாலே கூட்டம் அம்மும்... அதை பேஸ்புக்கில் ஷேர் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்ளுவோர்கள் இங்கே அதிகம்.

So இந்த மாதிரி விமர்சிக்கும் போது என்ன நடக்கும்?   அடுத்த புதுசா  படம் எடுக்க்கற டைரக்டர் அல்லது பழைய டைரக்டர் என்ன செய்வான்.. ???உங்களை கூட்டு படத்துல நடிக்க, வசனம் எழுத, திரைக்கதை எழுத, எழுதிய திரைக்கதையை சரிபார்க்க, என்று வாய்ப்புகள்  உங்கள் வீட்டுக்தவை அதுவா தட்டும்...

இதுல ஒரு டைரக்டர் எப்படி காம்பரமைஸ் ஆகின்றார் என்றால்,.. அடுத்த படத்திலோ அல்லது அதே படத்தையோ  நடிக்கவோ அல்லது படத்தில்  வசனம் எழுதவோ வேலையை கொடுத்து விட்டால்.... மோசமாக விமர்சனம் செய்யாமல் தடுக்க முடியும்... அல்லது கடுமையான  விமர்சனத்தில் இருந்நது தப்பிக்க முடியும்...  அடுத்து எதிர்குரல்ன்னு  ஒன்னை இல்லாம செஞ்சாச்சி இல்லையா?  என்று ஒரு டைரக்டரே சொன்னதாக காத்து  வழி செய்தி... நாய் கொலச்சிக்கிட்டு இருக்கு.... கல்ல எடுத்து அடிக்கறோம்.. ஓடிப்போயிடுச்சின்னா பிரச்சனை இல்லை.... திரும்ப குலைச்சா ரொட்டி துண்டு போடறதில்லை... அது போலத்தான்... இதுவும்  என்று அதே  இயக்குனர் வச்ச பஞ்சுதான்...

 சரி நாடி நரம்பில் எல்லாம் மாற்று சினிமா தாகத்தோடு இருக்கின் றேன் என்று சொன்னவர் இதே தமிழ்சினிமாவில் மொக்கை படத்தில் வேலை செய்து இருப்பார்..

 என்னங்க இப்படி விமர்சிட்டு  இந்த படத்துல வேலை  செஞ்சி இருக்கிங்க என்று கேட்டால்..? நான்  என்ன பாரின்லயா இருக்கேன்? என்று நக்கலாக கேள்வி கேட்பார்...  சரி சார் அந்த படத்தை இந்த வாரு வாரினிங்க.... உங்க படத்துலேயும் அந்த டைரக்டர் செஞ்ச  அதே தப்பை செஞ்சி இருக்கிங்களே என்று கேட்டால்....?

  காம்பரமைஸ்மேன்..  காம்பரமைஸ் இல்லாம யாராலையும் படம் எடுக்க முடியாது....சும்மா சினிமாவை பத்தி எதுவும் தெரியாம என்கிட்ட கேள்வி கேட்காதிங்க...  என்று  எகிறி விழுவாவர்..

. இவர் கடுமையாக விமர்சித்த இயக்குனர்களும் காம்பரமைஸ் பண்ணி எடுத்தேன்  சொதப்பிடுச்சி.. என்று அன்றைக்கே சொல்லி இருப்பார்கள். ஆனாலும் அன்று வானத்துக்கும் பூமிக்கு  குதித்து இருப்பார்... விமர்சனம் என்ற போர்வையில்   நக்கல் விட்டு ரேடியோ, இணையம் தொலைகாட்சி , யூடியூப் என்று கிழித்து இருப்பார்....

சரிங்க அப்படி விமர்சிச்சவங்க நீங்க சொன்ன  சினிமாவில் சேர எளிய வழி மூலம் சினிமாவுக்கு போன  ரெண்டு பேர் உதாரணத்துக்கு  சொல்லுங்க...

பாஸ்கி.....மிக கடுமையாக  அரோகனம் படத்தை விமர்சிச்சார்  என்று பேசிக்கிட்டாங்க.. அதே போல ஆர்ஜே பாலாஜி மேல யூடிவி தனஞ்செயன் பெருங்கோபத்தில் இருந்ததா சொன்னாங்க...

 ஓகே  காய்ஸ் இனி... எந்த படத்தையும் விட்டு வைக்காதிங்க.... காட்டு காட்டுன்னு காட்டுங்க... வெற்றி நிச்சயம்...

நானும் பார்த்துட்டேன் தீயா வேலை செய்யனும் குமாரு படம் பார்த்தப்ப... தோன்றியது... சினிமாவை யார் கடுமையா விமர்சனம் செய்யறாங்களோ? அல்லது நக்கல் விடறாங்களோ அவுங்க  ஆர் ஜே, வீஜே,இலக்கியவாதி , சமுகவலைதைளங்களில்  எழுதுபவர்கள் என்று எல்லோருமே கடுமையாக விமர்சித்த சினிமாவில் தங்கள் பங்களிப்பை  கொடுக்கின்றார்கள்.... இதை தவறு என்று சொல்லவரவில்லை...  இப்படியும் ஒரு வழி இருக்கின்றது என்று சொல்ல வருகின்றேன்.


நானும் இனி சினிமாவில் நுழையும் இந்த எளிய வழிய  பின் பற்றலாம் என்ற முடிவில் இருக்கேன்...

 ஹா  ஹா  ஹா.....
(குறிப்பு.
இந்த கட்டுரையை ரொம்ப சீரியாசா எல்லாம் எடுத்துக்காதிங்க... நீங்க நக்கல்விட்டு   படத்தை காலி பண்ணது போல நானும் ஜாலியா டிரைபண்ணது இது..)


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

13 comments:

 1. அட நம்ப கேபிள் சங்கர்

  ReplyDelete
 2. அட நம்ப கேபிள் சங்கர்

  ReplyDelete
 3. Jackie, miga sariyaga solli irukkinga!

  ReplyDelete
 4. அருட் செல்வம்... கேபிள் பேரை ஏன் போடலைன்னா... கேபிளுக்கு சினிமா ,அனுபவம் , ரெண்டும் இருக்கும்,.. அதுல வேலை செஞ்சி இருக்கார்.... எனக்கு அவரோட விமர்சனத்துல நிறைய முரண்பட்டு இருக்கார்,..ஆனா வரிக்கு வரி கலாய்ச்சி இதையே ஒரு பொழப்பாய் செஞ்சது இல்லை....

  ReplyDelete
 5. Jackie Aiya , Bosskey has more than 25 years of media experience. He has done 1000’s of stage shows ,dramas, TV anchoring etc.

  ReplyDelete
 6. Jackie Aiya , Bosskey has more than 25 years of media experience. He has done 1000’s of stage shows ,dramas, TV anchoring etc.

  ReplyDelete
 7. Anna...

  eppadi irukkirenga...
  Romba thanksnna...
  officela irunthathala romba pesa mudiyala.. Sorrynna..

  comedy try panni irukkirenga..

  nan padichathula neenga solliirukkira mathiriyee oral vimarsanam ezhuthuvanga.. namakku puriyura satharana vishayam kooda puriyalayee.. athayum nakkal panrangale entru thonum...

  ReplyDelete
 8. Jackie,
  The top 100 movies selection most will be
  1. Only run on film festivals
  2. No climax nor confused climax
  3. Dull photography
  4. Exaggeration of painful life of third world country.
  The movie highlighted not by movie goers , It is by critics.
  So producers to decide Flop+Award or Money+Criticized

  see the example Priyadharsan Kanjeevaram and other masala flicks

  ReplyDelete
 9. அண்ணே நீங்களுமா..............வாழ்த்துக்கள்

  நல்லா வருவீங்க

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner