Broken City-2013/மேயர் மனைவி.


பெரிய பொசிஷனுக்கு வரும் போது எல்லா விஷயத்தையும் கவனிச்சிக்க வேண்டியதாய் இருக்கும்.
முக்கியமா அரசியலுக்கு வந்துட்டா கதை கந்தல்தான்...எதிரிகள் நிறைய பேர் முளைந்த இருப்பார்கள்... வட்டம் , மாவட்டம் என்று பிரச்சனை செய்வார்கள்.  எதிர்கட்சியினர் எதையாவது சொல்லி சீண்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள்.. 

எல்லாத்தையும் கடந்து வென்று மக்கள் பணி ஆற்ற வேண்டும். இதுதான் அரசியல் ஆனால் அரசியல் என்று வெளியே சுற்றும் போது வீட்டை கவனிக்காமல் மனைவி தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? கடுமையான  மன உளைச்சலை ஏற்ப்படுத்தும் அல்லவா? அப்படி மன உளைச்சலுக்கு ஆளான  நியுயார்க் நகரமேயரின் கதைதான் இந்த படம்.


================
Broken City-2013 படத்தின் ஒன்லைன்.

நியூயார் நகர மேயர்   தன் மனைவிக்கு கள்ளகாதல் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வர அவளை கண்கானிக்க ஒரு டிடெக்டிவை அமர்த்துகின்றார்.. கள்ளகாதல் இருந்ததா? இல்லையா? என்பதை கண்டு பிடித்தானா? என்பதுதான் கதை.

============
Broken City-2013 படத்தின் கதை என்ன?

Mark Wahlberg (Billy Taggart) ஒரு போலிஸ்காரர்.. குற்றாவாளியோட நடந்த துப்பாக்கி  சண்டையில குற்றவாளியை சாகடிச்சிடுறான்... பிரச்சனை பெரிசாகம, நகர மேயர் Russell Crowe ( Mayor Nicholas Hostetler) மற்றும் போலிஸ் உயர் அதிகாரி ரெண்டு பேரும் அது செல்ப் டிபன்சுக்கு நடந்த  கொலை என்ற மார்க்கை காப்பாற்றி டிசன்ட்டாக வீட்டுக்கு அனுப்ப வைக்கின்றார்கள்... சரி வீட்டுல சும்மாவா  உட்கார்ந்துகிட்டு பல்லுகுத்திக்கிட்டு  இருக்க முடியும்ன்னு  பிரைவேட் டிடெக்ட்டிவ் வேலை பார்க்கின்றான்....


ஏழுவருஷத்துக்கு பிறகு மேயர் ரஷல் கிட்ட இருந்து போன் வருது.. என்னை நேரில் சந்திக்கவும்ன்னு... மேயர்  ரஷல் பொண்டாட்டி நம்ம கேத்தரின் ஜிட்டா ஜோன்ஸ்... அவ  மேல எனக்கு செமை டவுட்டு....  மேயர் தேர்தல் வேற வரப்போவுது... எதிர்காட்சி ஆள் குருப்ல என் பொண்டாட்டி படுக்கறாளோன்னு எனக்கு டவுட்டு இருந்துகிட்டே இருக்குன்னு நீதான் கண்டு பிடிச்சி கொடுக்கனும்ன்னு சொல்லறார்.. அவனும் கண்டு பிடிக்க போறான்.... கள்ளக்காதலை கண்டு பிடித்தானா என்பதை  வெண்திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
===========
படத்தின் சுவாரஸ்யங்கள்.

ரஷல்  மற்றும் மார்க்  நடித்த படம் என்பதால் மிக ஆர்வமாக பார்த்தேன்..  பட் மிக மெதுவான திரைக்கதை....

கள்ளக்காதலை தேடி அவர்கள் மீட்டிங் பாயிண்ட் எது என்று கண்டு பிடிக்க போகும் காட்சிகள் சுவாரஸ்யம்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கு ரஷல் நடிப்பு ஒரு உதாரணம்.

மார்க் தனக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கின்றார்... படத்தின் போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்துச்சி.

 சில  அரசியல் கொலைகளில் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது  உண்டு என்று சொல்லாமல் சொல்லி முடிகின்றது இந்த படம்...

====================
படத்தின் டிரைலர்


==================
படக்குழுவினர் விபரம்


Directed by Allen Hughes
Produced by Randall Emmett
Mark Wahlberg
Stephen Levinson
Arnon Milchan
Teddy Schwarzman
Allen Hughes
Remington Chase
Written by Brian Tucker
Starring Mark Wahlberg
Russell Crowe
Catherine Zeta-Jones
Jeffrey Wright
Barry Pepper
Music by Atticus Ross
Claudia Sarne
Leo Ross
Cinematography Ben Seresin
Editing by Cindy Mollo
Studio Regency Enterprises
Emmett/Furla Films
Inferno Distribution
1984 Private Defense Contractors
Black Bear Pictures
Distributed by 20th Century Fox
Release date(s)
January 18, 2013
Running time 108 minutes
=======================
பைனல்கிக்.
இந்த படம் என்ன பொருத்தவரை டைம்பாஸ் படம்... பட்  நல்ல திரில்லராக இரந்தாலும் மிக மெதுவான திரைக்கதை என்பதுதான் படத்தின் மைனஸ் என்பது எனது கருத்து... கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்... மேயர்  பொண்டாட்டியை யார் வைத்து இருக்கின்றார் என்பதை தெரிந்துக்கொள்ள...
=======
ரேட்டிங்..
பத்துக்கு நான்கு...


================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. மேட்டர் இருக்கா இல்லையா ஜோன்ஸ் நான் ரொம்ப நாள நெட்டில் தேடி கொண்டு இருக்கிறேன் அவரது அழகை காண

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner