Theeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யணும் குமாரு, திரைவிமர்சனம்.



தெலுங்கு ஸ்டைலில் படம் எடுத்து  தமிழ் சூழலில் கலக்குபவர் இயக்குனர் சுந்தர் சி.. 
அவர் இயக்கிய அன்பே சிவம் படத்துக்கு அப்புறம் அவர் படம் எதையும் தியேட்டரில் போய் பார்க்கவில்லை..


இந்த படம் பார்க்க வேண்டும் என்று இருந்தேன்..  பொதுவாய்  என் அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் சொல்லும் படங்களைதான் தியேட்டரில்  போய் பார்ப்பேன்... ஆனால் நண்பர்  ஒருவர் கடநித வெள்ளியன்று 15 வரிக்கு மிகாமல் தில்லுமுல்லு மற்றும் இந்த படத்துக்கும் விமர்சனம் எழுதி இருந்தார்... தில்லு முல்லு ரொம்ப சூப்பர் .. இந்த படம் காலி என்று எழுதி இருந்தார்... காசு கஷ்ட்டமான நேரத்துல  எதுக்கு போய் ரிஸ்க் எடுக்கனும்னு தில்லுமுல்லு பார்த்து தொலைச்சேன்.. புதுசா  பாட்டு எழுதறவனை நம்பக்கூடாதுன்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்..  நேற்று  உலக சினிமா பாஸ்கர் தன் தளத்தில் பட்ம் நன்றாக இருக்கின்றது என்று எழுதி இருந்தார்...


ஹேராம் நல்லா இருக்குன்னு சொன்னவரு... அப்ப இந்த படமும்  அப்படித்தான் இருக்கும் என்று இன்று படத்துக்கு போனேன்...சுந்தர் சீ ஏமாற்றவில்லை....ரொம்ப நாளைக்கு பிறகு அவர் இயக்கிய படத்தை தியேட்டரில் பார்த்தேன்... இந்த படம் ஏதாவது ஒரு வெளிநாட்டு படத்தின் பாதிப்பு இல்லாமல் இருக்காது .. ஆனாலும் வசனங்கள் மற்றும் பிக்சரைசேஷனில் கலக்கி இருக்கின்றார்கள்.

==========
 Theeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் ஒன்லைன்.

காதல்
புனிதமானது
தெய்விகமானதும் கூட....
என் வீட்டு
சகோதரிகள்
காதலிக்கபடாதவரை...

 என்று  என் முதல் கவிதையை எழுதினேன்... அதுதான்  இந்த படத்தின் ஒன்லைன்.

================

Theeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் கதை என்ன?

குமார் (சித்தார்த்)  ஐடி ஆபிஸ்ல வேலை செய்யறார்...சஞ்சனா(ஹன்ஷிகா) அவர் வேலை செய்யற ஆபிஸ்ல புதுசா வேலைக்கு வராங்க... அவரை காதலிக்க காதலுக்கு ஐடியா கொடுக்கும் சந்தானம் கிட்ட சித்தார்த்  ஐடியா கேட்கின்றார்... ஐடியா வாங்கி தகிடுத்த்தம் செய்த சித்தார்த் காதல் ஜெயித்ததா இல்லையா...? படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...ஆசை  தோசை விமர்சனம்ன்ற பேர்ல முழுக்கதையும் சொல்லுவேன் எதிர்பார்த்திங்களா? அசை தோசை அப்பளம் வடை...

=========
 படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்தியில் யூடிவி எடுக்கற எல்லா படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.... பட் தமிழ்ல அது எடுத்து இருக்கற பல படங்கள் தோல்வியலதான் முடிஞ்சி இருக்கு... பட் இந்த படம் அந்த திருஷ்ட்டியை போக்கி இருக்குன்னு சொல்லலாம்.

முதன் முறையாக சுந்தர் சி... படம் ரொம்ப ஸ்டைலிஷ்ஷா ரிச்சா இருக்கறது எனக்கு தெரிஞ்சி இந்த படம்தான்... மத்த  எல்லா படமும் லோ பட்ஜெட்ல ஷூட் பண்ணிக்கிட்டு வந்தது போல இருக்கும்... பட் இந்த படம் ஒரு பிரஷ் பீலிங்கை கொடுக்குது. அதுக்கேனும் சுந்தர் சி க்கு வாழ்த்துக்களை  தெரிவிப்போம்.


 எப்படி படம் நடிக்க சுந்தர் போனாரோ அப்பவே அவர் டவுன் அக ஆரம்பிச்சிட்டார்ன்னு சொன்னாங்க... ஆனாலும் அவர் மினிமம் கியரண்டிக்கு  உத்ரவாதம் கொடுத்த இயக்குனர்.

இந்தபடத்துல சித்தார்...  முதல் பாதியில் எலும்புறுக்கி நோய் வந்தத்து போலவே காணப்படுகின்றார்... முதலில் அவரை பார்க்கும் போது ஒட்ட மறுக்கின்றார்..  சந்தானத்துடன் சேர்ந்து அவர்  பியூட்டி பார்லர் போன பிறகுதான் அவர் பார்க்கவே சகிக்கின்றார்....எதையோ பரிக்கொடுத்த டயர்ட் அல்லது தூங்கமல் விடிய விடிய சமந்தாவுடன் போட்ட கடலையாகவும் இருக்கலாம்... பட் செம டல் பீலிங்... கேரக்டருக்கா அப்படி இருந்தேன் மட்டும் சொன்னா,? என்ன பண்ண முடியும் ..?, விதியேன்னு கேட்டுக்க வேண்டியதுதான்..

ஹன்ஷிகா என்று எழுதுவதற்கு சின்ன குஷ்ப்பு என்று எழுதி  விடலாம்.... பிரம்மா படத்துல இவளோரு இளங்குருவி பாட்டுல வர்ர குஷ்பு போலவே இந்த பொண்ணும் இருக்குது... 



படம் நெடுக காஸ்டியும் அளவெடுத்த டைலர் ஓவர் ஷார்ப்பா ஸ்கர்ட் மிடிகளை தைத்து வைத்து ,அவர் வரும் இடங்களில் டயலாக்கை கூட கவனிக்க விடாமல் ஒரே இடத்தை நிலைக்குத்தி பார்க்க வைத்து இருக்கின்றார்கள்...


சந்தானம் ரொம்ப நாள் கழிச்சி இந்த படத்துல பார்ம்ல வந்து இருக்கார்...
“”கருப்புராஜா நான் பின்னாடியே போவட்டுமா?
ஏன் லூஸ் மோஷன் போல பின்னாடியே போற.... யூரின்போல முன்னாடி வா...””

“”ஏவன் வேண்டுமானாலும் போடலாம் கொட்டா....
எல்லாருக்கும் கிடைச்சிடமா பட்டா??””  என்று டயலாக்குகளை பின்னி இருகின்றார்..

 ""நான் வில்லனா-? டேய் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை... கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ.... கசமுசா பண்ணிட்டு  கல்யாணம்  பண்ணா வில்லன்""

போன்ற டயலாக்குகள் ஒரு உதாரணம்.

அதே போல ஹன்சிகா தங்கி இருக்கும் லேடிஸ்  ஹாஸ்ட்டலில் பேபிஜெனிபர் ஹன்சிகா அந்த குண்டு பெண் பேசும் டயலாக்குகள் பிலாசிபியாக பேசுகின்றார்கள்.... டயலாக் வெரி வெரி இன்டரஸ்டிங்..  டயலாக் ரைட்டர் வெங்கட்  அவர்களுக்கு ஒரு பொக்கே பார்சல்... இது போன்ற திறைமையான ஆட்களை   கூடவே வைத்தக்கொள்ள வேண்டும்.



கேமராமேன் கோபி அமர்நாத்.... கிராமத்தில் இருந்து  மிக கடுமையாக  போராடி  முன்னனி இடத்துக்கு வந்து இருக்கின்றார்... கோபி இதுக்கு முன் எடுத்த பல படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான் பிட்சா,மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களை சொல்ல்லாம்.

முக்கியமாக  செட்இன்டோர் சாங்கில் லைட்டிங் அருமை... மூங்கில் கழி வைத்து போட்ட செட்டும் ஏ கிளாஸ்... படத்தோட ரிச் நஸ்சுக்கு கோபியோட கேமரா அங்கிள் மற்றும் லைட்டிங் என்று சொன்னால் மிகையாகது..


 சந்தானத்தை  ஹண்ஷிகா கத்தியால்  குத்த தொள தொள  மினி ஸ்கார்ட்டில் மேல்பாகம் அதிர  அரங்கம் ஸ்பித்து சுதாரித்து விசில் அடிக்க சட்டென கேமராமேன்  சந்தானம் பாயிண்டாப்  வீயூவில் தாவ... சார் சென்சார்ல சிக்கலாயிடும் என்று சொல்லி எடிட்டரும் லோ ஆங்கிள் ஷாட்டை தேடி பிடித்து போட்டு இருக்கின்றார்கள்.

பாடல்கள் ஹாஹா ஒஹோ  என்று இல்லை என்றாலும் ஒருமுறை கேட்கலாம்.


எப்ப பார்த்தாலும் சுந்தர் ஹன்சிக்கா போன் பண்ணிடறார்ன்னு இண்டஸ்ட்டிரியில ஒரு ரூமர் இருக்கு...குஷ்பு , ஹன்சிகா ரெண்டு பேரும் ஓரே மாதிரி இருக்காங்க அவ்வளவுதான்.... அதே போல அந்த டைட்டில் என்ட் சாங்... சூப்பர்.

மனோபாலா போர்ஷன் சூப்பர்.

 எப்எம் பாலாஜியில் இருந்து ஹன்சிகா வரை கண்ணாடிக்கு அந்த பக்கம் நின்னே உள்ளே என்ன பேசிக்கறாங்கன்னு  காதால கேட்டுறாங்க.... செம ஷார்ப்பு  போல....

போங்கையா எழுதி கைவலிக்குது மிச்சத்தை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..
============
படத்தின் டிரைலர்.



==========
படக்குழுவினர் விபரம்.

Directed by Sundar C.
Produced by Ronnie Screwvala
Siddharth Roy Kapur
Khushboo Sundar
Written by Sundar C. (Screenplay)
Venkat (Dialogues)
Screenplay by Nalan Kumarasamy
Story by Sundar C.
Starring
Siddharth
Hansika Motwani
Santhanam
Ganesh Venkatraman
Music by C. Sathya
Cinematography Gopi Amarnath
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio UTV Motion Pictures
Avni Cinemax
Release date(s)
June 14, 2013[1]
Country India
Language Tamil
=============
படத்தோட மேக்கிங் தமக்கா...


================

பைனல்கிக்.
இந்த படம் பார்க்க வேண்டிய படம்... செம ஜாலியா இருக்கு... கவலைகளை மறந்து  சிரித்து விட்டு வரலாம். முக்கியமா சந்தானம் புபல்பார்ம்ல இருக்காப்புல..
===============
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஆறு...

============



 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்(சமந்தா) - பத்தி நீங்க சொல்லவேயில்ல பிரதர்

    ReplyDelete
  2. nanum sundar c padangalai comedykkagave parppen...nall vimarsanam anne..

    ReplyDelete
  3. நீங்க எழுதுற விமர்சனம் ரொம்ப புடிக்கும் எனக்கு. நியாயமா எப்படி விமர்சனம் எழுதனமோ அப்படி எழுதுவிங்க. நீங்க இப்பெல்லாம் படத்துக்கு மார்க் போடா ஆரமிச்சதுல இருந்து, நீங்க எழுதுற விமர்சனத்த படிக்கிற ஆர்வம் கொஞ்சம் குறைந்திருக்கு எனக்கு. அழகான விமர்சனத்த ஆனந்த விகடன் மார்க் போட்டு கெடுக்குற மாதிரி கெடுகாதிங்க ப்ளீஸ். பழைய பார்முலாவையே பாலோ பண்ணுங்க சேகர்.

    ReplyDelete
  4. i think little part one of the willsmith movie.

    ReplyDelete
  5. i think, one part of willsmith movie.

    screen writing super (suner.c)

    ReplyDelete
  6. புவன் உங்க கருத்துக்கு மிக்க நன்றி... என் முதல் விமர்சனத்தை நேரம் இருந்தால் படித்து பாருங்கள்... அதுக்கு இதுக்கும் எவ்வளவு வித்யாசம் என்று.... அப்படி பார்த்தால் சமீப காலமாக பைனல் பஞ்ச் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்... அதுக்காக உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்க்காக அதை எழுதாமல் இருக்க முடியுமா? ஒரு படத்தின் தரம் என்ன என்பதை என் பார்வையில் குறிக்க அதனை உபயோகபடுத்தகின்றேன்...சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது ஒவ்வோருவருக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது... கடைசி வரியை படிக்காதிங்க...;-) உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. புவன்..

    ReplyDelete
  7. " அவர் இயக்கிய அன்பே சிவம் படத்துக்கு அப்புறம் "


    படத்தை விட இது

    செம காமெடி அண்ணே . .

    ReplyDelete
  8. விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. Hola Jackie, You are back to track now.. I love you because of your world movies reviews. You know, Sunder C made his last movie Kalakalappu after read your soul kitchen movie's review only.

    ReplyDelete
  10. Hola Jackie, You are back to track now.. I love you because of your world movies reviews. You know, Sunder C made his last movie Kalakalappu after read your soul kitchen movie's review only. Now I have to watch his movie after ullathai allithaa.. immm

    ReplyDelete
  11. SIR MARIYAN PADA VIMARSANAM INNUM VARLA

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner