உயர்
பொறுப்பில் இருக்கும் பெண்களிடம் ரிப்போர்ட்டிங் செய்ய வேண்டும்
என்றால்
நிறைய பேர் முனறி தள்ளி விடுவார்கள்... பொதுவான ஆண்கள் வைக்கும் குற்றசாட்டு
அவர்கள் தங்கள் பதவியையும், தங்கள் அதிகாரத்தையும் தவறாக பயண்படுத்துகின்றார்கள் என்பது...
பெண்களை விட, உயர் பொறுப்பில் இருக்கும்
ஆண்கள் இன்னும் கேவலமாக கூட நடந்து
கொள்வார்கள் ஆனால் அதை பெரியதாய்
பேசமாட்டார்கள்.. ஆனால் ஒரு பெண் அப்படி நடந்து
கொண்டால் அதை பெரிதாய் பேசுவார்கள்... பரிகாசிப்பார்கள்.. காரணம் ஆண்களின்
ஈகோ...
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக
சொல்லமுடியும்.... இயற்கைக்கு மாறான
வாழ்க்கை வாழும் பெண்கள்... அடமென்ட்டாக
இருப்பார்கள் என்பது எனது அனுபவம்.. இல்லை
அப்படி இல்லை என்று சொன்னால்
எனக்கு எதிர் கருத்து ஏதும் இல்லை... அப்படியா?- என்று கடந்த போய்
விடுகின்றேன்...
நான்
சென்னை கேளம்பாக்கம் படூர் அருகில் இருக்கும் இந்துஸ்தான் கல்லூரியில் வேலை
பார்த்த போது, எனக்கு ,மை பாஸ் என்ற கேட்டகிரியில் மூன்று லேடிபாஸ்கள்
இருந்தார்கள்...எலிசெபத் வர்கீஸ் ( சேர்பர்சன்)... சூசன் மார்த்தான்டன்.. மற்றவர்
ஆனி மேம். மூன்று பேருமே தேவையில்லாமல் ஒருவரையும் கடிந்து பேசி நான் பார்த்து இல்லை....
5 வருடகாலம் அவர்கள் கல்லூரியில் பணி
புரிந்து இருக்கின்றேன்.. வாத்தியார் வேலை போரானது.... நான் வேலையை ராஜினாமா
செய்கின்றேன் என்று சொன்ன போது சேர்பர்சன். சட்டென 5000 ரூபாய் பணத்தை
எடுத்துக்கொடுத்து போக வேண்டாம் என்று
தடுத்தவர்.... அதே போல எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள சூசன் மேம் மறுத்தவர்....
1000 கோடிக்கு மேல் அதிபதிகள் அவர்கள்...
ஆனால் யாரையும் எடுத்து எரிந்து பேசியதில்லை. எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக
இருந்தார். ஆனால் நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால் ஆல் த பெஸ்ட் சொல்லி
கையெழுத்துப்போட்டுக்கொடுத்தார்... சூசன் மேம், ஆனிமேம் ரெண்டு பேருமே அவர்களிடம் வேலை செய்தவர்களை மதித்த்தார்கள்..
உதாரணமாக பார்ட்டி நடக்கும் போது நான் போட்டோ
எடுத்துக்கொண்டு இருந்தால்.. போய்
சாப்பிட்டு விட்டு வேலையை பார் என்று
அன்பாக சொல்லுவார்கள்...
அதே போல பொது இடத்தில் பெரிய பொசிஷனில் இருப்பவர்கள் தங்கள்
வேலையாட்களை பார்த்தால்.... பார்த்தும்
பார்க்காதது போல
செல்வார்கள்...ஆனால் சூசன் மேம், ஆனி மேம்,இருவரும் அப்படியில்லை....
ஒருமுறை காமராஜர் அரங்கத்தில் நான் என் மனைவியோடு
சென்ற போது , காரை நிறுத்தி, பேசி,நலம் விசாரித்து சென்றார்கள்...
இன்றைக்கும் எனக்கு தாய் வீடு எது என்று
கேட்டால்? அது கேளம்பாக்கம் படுரீல் உள்ள
இந்தஸ்தான் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் கட்டிடம்தான் என்று அடித்து
சொல்லுவேன்... அங்கேதான் கம்யூட்டர்
கற்றுக்கொண்டேன்.. பிளாக் எழுதும் ஆர்வம் அங்கே இருந்த்தான் தொடங்கியது...எனக்கு
கல்வியை வழங்கியதும் சமுகத்தில் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்ததும் அந்த கல்லூரியில்
அதன் முதலாளிகளும்தான்
நேற்று மைபாஸ் மலையாளபடத்தை பார்த்துக்கொண்டு
இருந்த போது எனக்கு கிடைத்த தங்கமான லேடி பாஸ்கள் நினைவில் வந்து போனார்கள்… டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில்
இருக்கும் மிக உயர்ந்த கட்டிடம் அது....காலை பதினொன்னரை மணிக்கு அந்த கார் உள்ளே
நுழைவதாக போனில் கேட் செக்கியூரிட்டி
சிக்னல் கொடுக்கின்றான்... அந்த உயர் அதிகாரி பெண்மணியின் அசிஸ்டென்டுகள்... கார்
வந்து நிற்கும் போர்ட்டிகோவில் பரபரப்பாய்
எல்லா ஆட்களையும் அப்புறபடுத்துகின்றார்கள்... கவர்மென்ட் கொடுத்த அந்த
காரில் புல் ஏசி போட்ட படி அந்த பெண்மணி
இறங்குகின்றார்..50 வயது மதிக்கதக்க பெண்மணி அவர்...
ஒரு அசிஸ்டென்ட் கார் கதவை திறந்து
விடுகின்றார்... டிரைவர் டிக்கியை ஓப்பன் செய்ய 55 வயது மதிக்க தக்க இரண்டாவது அசிஸ்டென்ட் ஒரு கையில் பைலையும், ஒரு கையில்
சாப்பாட்டு பையையும் எடுத்துக்கொள்கின்றார்... அவர் எகிப்து ராணி போல கம்பீரமாக
நடந்து போகின்றார்.... பத்தாம் மாடிக்கு செல்ல நாலு லிப்ட்டுகள் இருக்கின்றன...
ஆனால்ஒரு லிப்ட் அரசு உயர் அதிகாரிகளுக்கு என்று ஒதுக்கி வைத்து
இருக்கின்றார்கள்... அவர் அந்த லிப்ட் வாசலில் நிற்கின்றார்..
உள்ளே உட்கார்ந்து
இருந்த லிப்ட் ஆப்பரேட்டர் அவர் வருகைக்காக எழுந்து நிற்கின்றார்... தனியான
லிப்ட்டில் மக்கள் பணி செய்வதற்க்காக பதினோரு மணிக்கு வந்து தனி லிப்ட்டில் செல்கின்றார்...ஒரு
அனுமதிக்காக நான் அவரை சந்திக்க சென்ற போது நான் பார்த்த காட்சிகள்... சில பெண்
பாஸ்கள் வேறு மாதிரியாக இருக்கின்றார்கள்.,... அப்படி ஒரு லேடி பாசின் கதை இது..
=========
MYBOSS/2012 /மலையாளம்
படத்தின் ஒன்லைன்.
வேலையில் கரார்ரான ஒரு லேடிபாஸ் தன்
உதவியாளனை ஒரு சிக்கலில் கணவன் என்று சொல்ல... அந்த பொய் எப்படியெல்லாம் சிக்கி
தவிக்க விட்டத என்பதுதான் ஒன்லைன்.
========
MYBOSS/2012 /மலையாளம் படத்தின்
கதை என்ன?
மனுவர்மா (திலிப்) கேரளாவில்
இருக்கின்றார்.... பாம்பேயில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் அவருக்கு வேலை
கிடைக்கின்றது,. பிரியா நாயர் (மம்தா) உயர் பொறுப்பில் இருக்கின்றார்... அவருக்கு
அசிஸ்டென்ட்டாக வேலை பார்க்கின்றார். மிம்தா வேலையில் மை கெட்டி, கொஞ்சம் மிஸ்டேக் நடற்தாலும்
பொறுத்துக்கொள்ளும் ரகம் அல்ல...
தப்பு செய்த ஆளை ஒரு வழி பண்ணிவிட்டுதான் ஓய்வார்.. ஆபிசில் அவருக்கும்
டெவில் பாஸ் என்று செல்ல பெயரும் உண்டு.. மம்தா திலிபையும் விட்டு
வைக்கவில்லை...மம்தா ஆஸ்திரேலியன் சிட்டிசன்..
அவருக்கு விசாகாலம் முடிவடையும் சமயத்தில் பாஸ்போர்ட் ஆபிசில் தன்
அசிஸ்டேன்ட்டை காதிலிக்கின்றேன்... திருமணம் செய்து கொள்ள போகின்றேன் என்று
அடித்து விட... அந்த பொய் உண்மையானதா? அப்பாவி திலிப்பின் நிலை என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்.
=============
படத்தின் சுவாரஸ்யங்கள்.
இந்த படம் புரபோசல் என்ற ஆங்கில படத்தின்
தழுவல்...
பட் எனக்கு மம்தாவை ரொம்ப பிடிக்கும் அதனால்
இந்த படத்தை பார்த்தேன்.... மம்தா அருமையாக நடித்து இருக்கின்றார்... பர்ஸ்ட் இன்ட்ரோ ஷாட்டுல அந்த தெனவெட்டு நடை
என்று அமர்க்கள படுத்தி இருக்கின்றார்..
சூர்யனே கைதோடா.... சாங்கும்.... எப்போது என்று தெரியவில்லை ஏன் என்ற தெரியவில்லை... எப்போது நீ எனக்கு இஷ்டமானவளாக மாறினாய் என்ற பாடல்.... என்ட பேவரிட் கானம்.
திலிப் அவர் பாத்திரத்தை ஏற்று நன்றாக செய்து இருக்கின்றார்.... சின்ன சின்ன விஷயங்களில் அவர் காட்டும்
எக்ஸ்பிரஷன் அருமை. முக்கியமாக பிளவர் வாழ் புதியதாக வைத்து விட்டு அதன் மீது
ஸ்பிரே செய்ய வாயில் நீரை வைத்துக்கொண்டு
ஸ்பிரே செய்வது அருமை.
மும்பை மற்றும் அலப்புழாவில் இந்த
படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.. மும்பை
காட்சிகள் படமாக்கிய விதமும் அலப்புழா
கிராமத்து சைடு லொக்கேஷன்களை சுருட்டி அசத்தி இருக்கின்றார்கள்...
முக்கியமா திலிப் வீடு அருமை.
பாதையில்
இருக்கும் ஒரு கட்டையை திலிப் தாண்டி விட, பொடவை கட்டி இருக்கும் மம்தா
தாண்டமுடியாமல் நிற்கம் காட்சியும்... புடவையை முட்டி வரை வழித்துக்கொண்டு
நிற்க்கும் காட்சியில் என் ஊர் கிராமத்து
பெண்கள் வாய்காலில் புல் அலவி விட்டு நிமிர்ந்து
ரிலாக்ஸ் ஆக அப்படித்தான்
நின்றுக்கொண்டு இருப்பார்கள்.
சீதா திலிப் அம்மாவாக நடித்து
இருக்கின்றார்... யார் கட்டிலில் படுப்பது என்று அடித்துக்கொள்ளும் போட்டி அருமை.
===========
படத்தின் டிரைலர்.
===================
படக்குழுவினர் விபரம்
Directed by Jeethu Joseph
Produced by East Coast Vijayan
Written by Jeethu Joseph
Starring Dileep
Mamta Mohandas
Music by Sejo John
M. Jayachandran
Cinematography Anil Nair
Editing by V. Saajan
Studio East Coast
Distributed by East Coast Release
Manjunatha & Kas
Release date(s)
10 November 2012
Running time 150 minutes
Country India
Language Malayalam
Budget 7 crores
========
படத்தின் மேக்கிங்
=========
பைனல்கிக்.
இந்த படம் டைம்பாஸ் படம் என்றாலும் அவசியம்
பார்க்க வேண்டிய படம்.. செம ஜாலியாக மனதை இலகுவாக்கின்றது... படம் போர் அடிக்காமல் செல்கின்றது.
===============
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு நான்கு.
========
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இந்த லின்க்ல ஆங்கிலம் மட்டும் மலையாளம் ரெண்டையும் கலந்து கட்டி போட்டிருக்கானுங்க. பாருங்க
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=vBV8oYXcG8w
ReplyDeleteஇந்த லின்க்ல ரெண்டு படத்தையும் கலந்து கட்டி போட்டிருக்கானுங்க.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=vBV8oYXcG8w
My BOSE endru malayalathil ezhuthiyirukkirathu!!
ReplyDeletethanks for sharing
ReplyDelete