An Open Heart (2012)("À coeur ouvert")/உலகசினிமா/பிரான்ஸ்/குடிகார டாக்டர்.




வசூல் ராஜா எம்பிபிஎஸ்  படத்தில் ஒரு காட்சி வரும்... 
பிரகாஷ் ராஜ் ஒரு கத்தியை  கமல்கிட்ட கொடுத்து மார்புல ஒரு கீனு கீனி  ஆப்பரேஷன் செய்ய சொல்லுவார்.  கத்தியை வாங்கினதுமே கமல்  பயத்துல மயக்கம்  அடிச்சி விழுந்துடுவார்...

ஒரு டாக்டர் பயப்படவும்  கூடாது.. தண்ணி அடிக்கவும் கூடாது... தண்ணி ஒரு பெக் அடிக்கலாம்... பட் டெய்லி  தண்ணி அடிச்சி மொடாக்குடிகாரனாக மாறினால் எப்படி டாக்டர்  தொழில் விளங்கும்..   அதுவும் உயிரோடு போராடும் வேலை,.... எந்த ஆஸ்பிட்டல் இதையெல்லாம் பார்த்துக்கிட்டு சகிச்சிக்கும்...???அதுவும் ஹார்ட் சர்ஜன் டெய்லி குடிச்சா  கை நடுங்கும்.. அப்படி நடுங்கிச்சின்னா..? எப்படி ஆப்பரேஷன்   செய்யறது...?  அப்படி குடிச்சி குடிச்சி கைநடுங்கி ஆப்பரேஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கும்  டாக்டர்  பற்றிய கதைதான்   இந்த an Open Heart (2012)("À coeur ouvert") திரைப்படம்.

===============
An Open Heart (2012)("À coeur ouvert")திரைப்படத்தின் கதை என்ன?.

மிலா அண்டு ஜோவிர்  ரெண்டு பேருமே ஹார்ட்  ஓப்பன் சர்ஜரியில  பெஸ்ட்  டாக்டர் கப்பிள்... , இரண்டு  பேருக்கும் பாரின்ல போய் படிக்கனுமின்னு அப்படின்னு திட்டம் இருக்கு , கனவுகள் இருக்கு....

பட் எதிர்பாராத விதமா மிலா கர்பம் ஆயிடுற... அதனால் இரண்டு பேருக்கும் ஈகோ கிளாஷ். எல்லாம் வருது... இதனால குடி அதிகமா  குடிக்க ஜோவியர் குடிகாரன மாறிடுறான்... அவனால எந்த சர்ஜரியும் செய்ய முடியலை.. கை நடுங்குது... வேலையை விட்டு தூக்கிடறாங்க...இந்த நேரத்துல  குழந்தை பிறக்கும் சமயம் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு பிரியாறாங்க..  இரண்டு பேரும் சேர்ந்தாங்களா என்பதுதான் மீதிக்கதை.
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில,

 முக்காவாசி ஆப்பரேஷன் தியேட்டர் செய்லபாடுகளை மிக அழகாக காட்சி படுத்தி இருக்காங்க..



மிலா, ஜோவியர் இரண்டு பேருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி சான்சே இல்லை... அந்த அளவுக்கு நெருக்கம் தாம்பத்தியத்திலும் விட்டுக்கொடுத்தல் சண்டை போடுதல் என்று வாழும் அந்த  காதல் வாழ்க்கை மிக அழகு..



 கர்பம் ஆனாது முதல் மிலா குழந்தைக்காக மாறிக்கொள்ளும் விஷயங்கள் கவிதை.அதே போல வேறு ஒரு  கர்பவதி பொண்ணுக்கு  உள்ளாடை எல்லாம்  போடுவதை காண்பித்து விட்டு  சீட்டிங்கை சாமர்தியமாக செய்து இருக்கின்றார் இயக்குனர்..

உண்மையில் கிளைமாக்ஸ் நம்மை  நெகிழ செய்து விடும்...

====================
படத்தின் டிரைலர்..




====================
படக்குழுவினர் விபரம்..

chievement Marion Laine
Scenario Marion Laine
Main actors
Juliette Binoche 
Édgar Ramírez 
Hippolyte Girardot
Production Companies Thelma Films 
Movies Manchester 
mk2
Country of origin France
Genre Drama
Output 2012
Duration 87 minutes

=================
பைனல்கிக்.
 இந்த படத்தை பார்க்கவேண்டிய படம் என்று பரிந்துரைக்கின்றேன்... காரணம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மனதை உருக்கும்... நிச்சயம் ஹஸ்பென்ட் அண்டு ஒய்ப் சேர்ந்து இந்த படத்தை பார்த்தல் நலம்.... வயதுக்கு வந்தோருக்கான படம் இது.

===============
படத்தின் ரேட்டிங்.

பத்துக்கு நான்கு.

===========
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

11 comments:

  1. பான்ட் சைஸ் மாறி தொலைச்சிடுச்சி.. என்ன செஞ்சும் மாறலை இட்ஜஸ்ட் பண்ணி படிக்கவும்... பான்ட் சைஸ் மாற்றவும் என்று நொய் நொய்ன்னு இம்சிக்காதிங்க நண்பர்களே,

    ReplyDelete
  2. I don't have any font problem ..( iPhone )

    ReplyDelete
  3. இல்லை பிரபு இதை ஒரு பிரச்சனையா எடுத்துக்கிட்டு வருவாங்க.. அதுக்குதான்.

    ReplyDelete
  4. jackie sir Moondru Per Moondru Kaadhal padathukku vimarsanam ezuthungalen plz.

    ReplyDelete
  5. Only 5 lines in small font. That too I can able to read in my mobile (Sony). So no problem jackie sir.

    ReplyDelete
  6. Only 5 lines in small font. That too I can able to read in my mobile (Sony). So no problem jackie sir.

    ReplyDelete
  7. மகேஷ் மூன்று பேர் மூன்று காதல் படம் பார்த்தேன்... நொந்துட்டேன்..

    ReplyDelete
  8. நன்றி ரமேஷ் பாபு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner