THE CAR-1977/பழிவாங்கும் டிரைவர் இல்லாத கார்.


 காரை மையமாக  வைத்து 1971 ஆம் ஆண்டு டுயல் படத்தை  ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் பட்ம் எடுத்தாலும் எடுத்தார்...
அதன்  பிறகு காரை   பின்புலமாக வைத்து  ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்து விட்டன... தற்போது  பாஸ்ட் பியூரியஸ் திரைப்படம்.. ஆறு பாகங்கள் வந்து விட்டன..  இந்த படத்தில்  கார்தான் பிரதான பின்புலமாக இருக்கும்... நம்மவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல...  பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் காரை இரண்டு பாகமாக  பிரித்து ரோட்டில் ஓட விட்டவர்கள்தானே நாம்...  இதில் ஏவிஎம் அந்த காரை தன் பட விளம்பரத்துக்கு ஊர் ஊராக லாரியில் வைத்து டிஸ்ப்ளே செய்தார்கள்... அந்த படத்தை  அப்படி சிலாகித்து  அந்த வயதில் நான் பார்த்து இருக்கின்றேன்... இப்போது அந்த விடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது. கார் கார் சூப்பர் கார் கார் சூப்பர் கார் என்ற தீம் பாடல் வேறு.... அப்போது மிக பிரபலம். நாஸ்டாலஜிக்காக கீழே.


=======================
THE CAR-1977/ படத்தின் கதை என்ன?

ஆள் ஆராவரமற்ற அழகான மாலை சாலை இரண்டு பேர் சைக்கிளிங் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.... ஒரு கார் வேகமாக வந்து வேண்டும் என்றே அவர்களை இடித்து சகாடித்து   விடுகின்றது... அத்தோடு அது நிறுத்தவில்லை... பலி  எண்ணிக்கை தொடர நகர போலிஸ் விழித்துக்கொண்டு அந்த காரை கண்டுபிடிக்க தலையால் தண்ணி குடிக்கின்றார்கள்..ஒரு கட்டத்தில் போலிஸ் மிக  மிக  நெருக்கத்தில் இந்த காரை நெருங்க.. அந்த காரில் டிரைவர் இல்லை.. அப்புறம் எப்படி? வெண்திரையில்  காணுங்கள்.


===========

படத்தின் சுவாரஸ்யங்கள்..

டூயல் வந்த பிறகு அது போல ஒரு மிரட்டல் படம் எடுக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இந்த  படத்தை ஐந்த வருடம் கழித்து  எடுத்து இருக்கின்றார்கள்...


பட் மிரட்டி இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது..5.1 இல் சவுண்ட் வைத்து கேட்டால் பயப்படாமல் இருக்க முடியவில்லை....  முதல் அந்த  மலைகாட்சியும் அந்த சைக்கிள் பயணிகள் செல்லும் குகை பாதை ரம்யமாக இருக்கின்றது...

டைட்டில் பேர் போட்டு லாங் ஷாட்டில் புழுதி கிளப்பி வரும்த அந்த காட்சி செமை..
==========
படத்தின் டிரைலர்..


==============
படக்குழுவினர் விபரம்..

Directed by Elliot Silverstein
Produced by Marvin Birdt
Elliot Silverstein
Written by Michael Butler &
Dennis Shryack (story)
Michael Butler &
Dennis Shryack and
Lane Slate (screenplay)
Starring James Brolin
Kathleen Lloyd
John Marley
Ronny Cox
R. G. Armstrong
John Rubenstein
Elizabeth Thompson
Music by Leonard Rosenman
Cinematography Gerald Hirschfeld
Editing by Michael McCroskey
Distributed by Universal Studios
Release date(s) May 13, 1977 (USA)
Running time 96 min.
Country United States
Language English
Budget $5 million
Box office $35,978,453
====================
பைனல்கிக்.

டைம்பாஸ் படம்தான்... என்ன கொஞ்சம் லாஜிக்காக எடுத்து இருந்தால் இந்த படம் கிளாசிக்  வரிசையில் நிச்சயம் இடம் பெற்று இருக்கும்... அந்த காலத்தில் விஷயம் இல்லாமல் எப்படி மிரட்டினார்கள் என்பதை  பார்த்து  ரசிக்கலாம்.

===================

படத்தின்   ரேட்டிங்.
பத்துக்கு நான்கு.

========



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner