A Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா/ விசுவாசத்தின் விலை ஒரு கொலைஷேர் ஆட்டோவில் அருகில் அமரும் பெண், 


ஒரு பனகல் பார்க் என்று 12 பி பேருந்தில் பத்து ரூபாய்  நோட்டு நீட்டும் பெண், 

கடைசி இரண்டு முழம் மல்லிப்பூ பத்து ரூபாய் வாங்கிகோங்க என்று மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் மன்றாடும் பெண், 

ஒரு கையில் குழந்தையோடு மறுகையில் சிமென்ட் கலவை சுமக்கும் பெண்...

லட்ஜை இல்லாமல்  தெருவில் எது பற்றியும் கவலை படாமல் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டே நடந்து போகும்  நரிக்குறவபெண்,

துப்பட்டா செயின்ல மாட்டிக்க போவுது என்று எச்சரித்து விட்டு சிக்னலில் நிக்கும் போது ரொம்ப  நன்றிங்க என்று சினேக பார்வையோடு நன்றியை வீசும்  பெண்...

எலக்ட்டிரிக் டிரெயினில் ஆண்கள் போல புட்போர்டு அடித்து செல்லும் பெண்கள்... 

துணிக்கடையில் 32 சைஸ் பிரா என்று ராணுவ ரகசியம் போல மிக மெதுவாக கேட்டு விட்டு தான் கேட்டது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதா? என்று திருட்டு பார்வையை  வீசும் பெண்,

 என்று நம் வாழ்க்கையில் கடந்த போன நிறைய பெண்களை பார்த்து இருக்கின்றோம். ஏதோ ஒரு செயலால் அவர்கள் நம்மை கவர்ந்து இருப்பார்கள்... அதுக்கு பெரிய காரணம் ஏதும் தேவையில்லை.

சில பெண்கள்  மீது ஏன்  ஈர்ப்பு ஏற்ப்படுகின்றது என்று   என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? அதுக்கு காரணம் நமக்கு உடனே புரிவதில்லை...

ஈர்ப்பு ஏற்ப்பட்டு விடுவதாலே  அந்த பெண்ணோடு உடை அவிழ்த்து புணர ரெடியாகி விடுகின்றதாக எண்ணக்கூடாது... அது ஈர்ப்பு அவ்வளவே.. அவர்கள் சின்ன உதவி கேட்பின்.. மறு பேச்சி இன்றி அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்வோம்... காரணம் அந்த பெண்ணை நமக்கு ரொம்பவே  பிடிக்கும்... அது அவள் மேனாரிசம் ,  அவள் நடத்தை, சிரிப்பு, வெட்கம், எதுவாக வேண்டுமானாலும்  இருக்கலாம் அல்லவா?

ரைட் லெட்மீ கம் டூ த பாயிண்ட்... 

நீங்கள் ஒரு விசுவாசி... உங்கள் தலைவனுக்காக எதையும் செய்ய துணியும் விசுவாசி... உங்கள் தலைவன் உங்களிடம் ஒரு கட்டளை இடுகின்றான்.... உதாரணத்துக்கு  நான் மேலே குறிப்பிட்ட ஒரு பெண்கள் லிஸ்ட் இருக்கின்றதே.. அதில் ஒரு பெண்ணை கொலை செய்ய சொன்னால் உங்களால் செய்ய முடியுமா?


 எப்படி முடியும் அவர்கள் செய்த தவற என்ன, ?ஏன் கொலை செய்ய வேண்டும்??? என்று குழப்பிக்கொள்வீர்கள் அல்லவா?  அப்போது என்ன  செய்வீர்கள்... ?தலைவன் சொன்னதை செய்யாமல் அவன் போட்ட கட்டளையை மீறுவீர்கள் அல்லவா? அப்படி  தலைவன் சொல்லும் கட்டளையை  மீறும் ஒரு விசுவாசியின் கதை இந்த  கொரிய திரைப்படம்.
==========

A Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா படத்தின் ஒன்லைன்.

ஆயிரம் சல்லது செய்யலாம்... ஒரு தப்பு செய்தால் அனைத்தையும் மறந்து விடும் இந்த நன்றிகெட்ட உலகம்...  இதான் இந்த படத்தின் ஒன்லைன்.

=================
A Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா படத்தின்  கதை என்ன?

Kim Sun-woo(Lee Byung-hun ) ஒரு விசுவாசமான  வேலையாள்... கட்டிக்கொண்டு வா  என்றால் வெட்டிக்கொண்டு வந்து  காலடியில் வைத்து விட்டு அடுத்த  வேலை பார்க்க போகும் ரகம்... K. Kang (Kim Young-cheol) பெரிய டான்  மற்றும் பிசினஸ் மேன்... கிம் அவனிடம் வேலை செய்யும் விசுவாசி...காங் அவன் மீது அதிகமான நம்பிக்கை வைக்கின்றார்.... எல்லா விஷயத்தை விசுவாசி கிம்மோடு டிஸ்கஸ் செய்யாமல் எந்த முடிவையும் காங்  இதுவரை எடுத்ததில்லை. கிம்மிடம்  மூன்று நாள் டைம் கொடுத்து காங்.. ஒரு வேலையை ஒப்படைக்கின்றார்... அதாவது ஒரு  சின்ன பொண்ணை  நான் வச்சி இருக்கேன்.. ஆனா அவளுக்கு ஒரு லவ்வர் இருக்கான் நினைக்கிறேன்... அப்படி இல்லாமலும் இருக்கலாம்.. பட் இருந்தா அவளை சாடிச்சிடு... என்ன எதுன்னு எனக்கு மேட்டரை கன்வே பண்ணு... ஓகேன்னு போறான்...


 அங்க  போய் பார்த்தா  அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு...  அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இருக்கான்...இரண்டு பேரையும்  கையும் கலவுமா பிடிச்சிட்டான்.. பட்... கொலை செய்யமா? வார்னிங் மட்டும் பண்ணி விட்டு விடறான்.. கட்டிக்கிட்டு வான்னா வெட்டிக்கிட்டு வராம அங்க என்ன மயிறு நியாயம் வேண்டி இருக்குன்னு கோவமாகின்றான்... அந்த விசுவாசி  கிம்மை   அந்த டான் காங் ஈவு இரக்கமின்றி கொலை செய்ய சொல்லறான்....  விசுவாசி கிம் என்ன  ஆகின்றான் ?என்பது   திரையில். காணுங்கள்.
============

கிம் பாத்திரத்தில் Lee Byung-hun புகுந்து விளையாடி இருக்கின்றார்..  தொடர்ந்து கொரிய படங்கள் பார்த்து இருந்தால் இந்த மனிதரை மிஸ் செய்த இருக்க வாய்ப்புகள் குறைவு...  

 இயக்குனர் Kim Ji-woon னின் செல்ல பிள்ளை Lee Byung-hun என்றும் சொல்லலாம்...1998 இல் தன் திரையுலக இன்னிங்சை  துவங்கி... ராம் கோபால் வர்மா போலவோ.. அல்லத  தேவர் போலவோ வத வதவென்று படங்கள் செய்யும் ஆள் இல்லை.. நிறுத்தி நிநதானமாக காய் நகர்த்துபவர்.... இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று மிக மெதுவாக திரையுலக  ரன்னிங்கில் கலந்து கொண்டாலும் இன்றுவரை சோடை போகாமல் இன்று வரை சவுத்  கொரியன் பிலிம் இன்டஸ்ட்டிரியில் வெற்றி கொடியை  பறக்க விடுபவர்.      
2005   A Bittersweet Life, 2008 The Good, the Bad, the Weird, ( 2010) I Saw the Devil      போன்ற படங்கள் நாம் நினைவு அடுக்குகளிவ்ல நீக்கமற நிறைந்து இருக்கும்.... 


முக்கியமாக ஐசாவ் த டெவில் திரைப்படம் அற்புதமான படம்... அந்த திரைப்படத்தில் விமர்சனத்தைவாசிக்க இங்கே கிளிக்கவும்.


 ஒரு  டான் அவன் மேல் அதிகம் மதிப்பு  வைத்து இருக்கும் ஒரு விசுவாசி இதில் பிசினஸ்  சைடில் இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. எட்டுவரடம் நாயாக உழைத்து இருக்கின்றான்.. அனால் அதில் பர்சனல் சைடு வரம் போத்தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆகின்றது...

அதவும் சாதாரணமாக  அல்ல டார்ச்சர் செய்து கொல்லும் அளவுக்கு பெண் பித்து   அந்த மாபியா டானுக்கு தலைக்கு ஏறுவதை காட்டி இருக்கும் காட்சிகள்.. அருமை..
அவன் கேட்பது மன்னித்து விடு என்ற சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ஆனால் தவறே  செய்யாமல் ஏன் மன்னப்பு  கேட்க வேண்டும் ? என்பது கிம்மின் நிலைப்பாடு..

டார்ச்சர் காட்சிகள் ரொம்பவும் கொடுமையாக இருக்கும்...

துப்பாக்கி வாங்க கிங் ஒரு மாபியா கும்பலை மீட் செய்ய வரும் காட்சிகள். குவன்ட்டின் பிலிம் மேக்கிங் ஸ்டைவை ஒத்து இருக்கும் காட்சிகள்......

யாரோ ஒரு சின்ன பெண்... இந்த கிழடானிடம் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக்கொள்கின்றாள்... அவளை ஏன் கொலை செய்ய வேண்டும்.. என்று அல்லாடும் அந்த இடமும்.. அந்த பெண்ணின் மீது பரிதாபமும் கூடவே சின்ன பாசமும் வரும் காட்சிகள் அருமை...

அவள் நினைவாய் லைட் போட்டு ரூமில் ஆப் செய்து கொண்டு இருக்கும் போது அடுத்த முறை  லைட் போடும் போது சுற்றி ஆட்கள் நிற்கும் காட்சிகள்  பெஸ்ட் மேக்கிங்.

தன் வீசுவாசி தன்னை பார்க்கவே பயப்படுகின்றவன்.. தன்னை கொல்லமாட்டான் என்று  நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் போது டொப்  என்று நடுமார்பில் சுட்டு தள்ளும் போது நாமே  வெற்றி பெற்றது போல இருக்கும்... அதுதான் அந்த டார்ச்சர் காட்சிகளின் வெற்றியும் கூட.
===========
 படத்தின் டிரைலர்.==============
படக்குழுவினர் விபரம்
Directed by Kim Ji-woon
Produced by Park Dong-ho
Eugene Lee
Written by Kim Ji-woon
Starring Lee Byung-hun
Kim Yeong-cheol
Shin Min-ah
Hwang Jung-min
Kim Roe-ha
Lee Gi-yeong
Music by Jang Yeong-gyu
Dalparan
Cinematography Kim Ji-yong
Editing by Choi Jae-geun
Distributed by CJ Entertainment
Release date(s)
April 1, 2005 (South Korea)
Running time 120 minutes
Country South Korea
Language Korean, Russian
Box office $7,582,393

=====
படம் வாங்கி தள்ளி விருதுகள்.


2006 8th Deauville Asian Film Festival[10]
LOTUS ACTION ASIA – Grand Prix Action Asia, Action Asia Prize
2006 Fant-Asia Film Festival[11]
Silver Prize Best Asian Film
Best photography – Ji-yong Kim
2005 Sitges Film Festival[12]
Best Original Soundtrack – Dalparan and Jang Young-Gyu
Nomination – Best Film
2006 42nd Paeksang Arts Awards[13]
Best Actor – Lee Byung-hun
2005 26th Blue Dragon Film Awards
Best Cinematography – Kim Ji-yong
Nomination – Best Director – Kim Ji-woon
Nomination – Best Leading Actor – Lee Byung-hun
Nomination – Best Supporting Actor – Hwang Jung-min
Nomination – Best Music – Dalparan and Jang Young-gyu
Nomination – Best Art Direction – Ryu Sung-Hee
Nomination – Best Lighting – Shin Sang-Ryeol
2005 25th Korean Association of Film Critics Awards
Top 10 Films
Best Actor – Lee Byung-hun
Best Music – Dalparan, Jang Young-gyu
2005 13th Chunsa Film Art Awards
Best Actor – Lee Byung-hun
2005 42nd Grand Bell Awards[14][15]
Best Supporting Actor – Hwang Jung-min
Nomination – Best Actor – Lee Byung-hun
Nomination – Best Film
Nomination – Best Director – Kim Ji-woon
Nomination – Best Cinematography – Kim Ji-yong
Nomination – Best Art Direction – Ryu Sung-Hee
Nomination – Best Editing – Choi Jae-geun
Nomination – Best Music – Jang Young-gyu
Nomination – Best Sound
2005 4th Korean Film Awards

Best Supporting Actor – Hwang Jung-min
===================
பைனல் கிக்..

இந்த படம் பார்த்தே  தீர வேண்டிய திரைப்படம்... நம்பிக்கையற்ற மனிதர்கள் மத்தியில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.. என்னதான் புலிக்கு புல் போட்டு வளர்த்தாலும் அது புத்தியை ஒரு நாள் காட்டியே தீரும் என்பதும்.. எதுவும் இந்த உலகில் நிலையல்ல... நாமே  சிவனேன்னு போனாலம் நமக்கு ஆப்பு ரெடியாடிச்சின்னா ஒன்னும் புடுங்க முடியாதுன்னு சொல்லும் திரைக்கதை..  இந்த திரைப்படம் வயதுக்குவந்தோருக்கானது.. அந்த அளவுக்கு வயலன்ஸ்...  டோன்ட் மிஸ் இட்.
============

படத்தின் ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. முதலிலும் கடைசியிலும் கூறப்படும் சின்ன கதைகளும் அற்புதமானவை. இந்தத் திரைப்படத்தில் இருக்கும் ஒரு சண்டைக்காட்சியை அப்படியே இம்ரான் ஹஷ்மியின் "ஆவாரபன்" திரைப்படத்தில் (படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும்) உபயோகித்திருப்பார்கள். இருந்தாலும் இத்திரைப்படத்தில் இருக்கும் ஒருவிதமான "வன்முறையின் அழகியலை" ஆவாரபனில் நாம் பார்க்க முடியாது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner