அந்த பெண்ணை தினமும் பார்ப்பேன்...
சென்னை கிண்டி ஒலிம்பியா டவருக்கும் பக்கத்து ரோட்டில் இருக்கும் எச்சிஎல்லில்
வேலை செய்கின்றார் என்று நினைக்கின்றேன்.
இன்றும் வியர்வையோடு நடந்து வேலைக்கு போய்க்கொண்டு இருந்தார்... நான் பார்க்கின்றேன் என்பதால் நடையில் ஒரு அலட்சியம் காண்பிப்பார்... அந்த அலட்சியத்துக்காகவே தினமும் அவரை பார்ப்பது உண்டு.
அவசரமாக கிளம்பி இருக்க வேண்டும்.... முட்டியில் சுடிதார் பேன்ட் தையல் விட்டு போனதை அவசரத்தில் கவனிக்கவில்லை போலும்...
என்னை பார்த்தார் அலட்சியத்தை நடையில் காண்பித்தார்... நான் கிழிசலை பார்த்து விட்டேன்.. சின்னதாக கிழிந்து இருந்தால் கூட சொல்லாமல் விட்டு இருப்பேன். முட்டி அருகே அரை அடிக்கு கிழிந்து இருந்தது...
சுடிதார் பேன்ட் போடும் போது போனில் பேசிக்கொண்டே பேன்ட் போட்டு இருக்கலாம் அதனால் கவனிக்காமல் விட்டு இருக்கலாம்..
மனது கேட்வில்லை... என்னை கிராஸ் செய்யும் போது அவரை அழைத்தேன்.
என்னங்க...
என்ன?( குரலில் ஒரு அலட்சியம்...)
உங்க சுடிதார் பேன்ட் முட்டிக்கிட்ட பெரிசா கிழிஞ்சி இருக்கு...
அதிர்ச்சியை கண்ணில் பார்த்து விட்டேன்... ஆனால் ஓ அப்படியா .... தேங்ஸ் என்று சொல்லி விட்டு அதே அலட்சிய நடை...
அதாவது பைக்கில் இருந்து விழுந்து விட்டால் சட்டென எழுந்து நின்று எனக்கு ஒன்னும் நடக்கலை என்பது போல நம் விபத்தை நாமே வேடிக்கை பார்ப்போமே அப்படியாக சட்டென அசடு வழியாமல் தன்னை கெத்தாக காட்டிக்கொண்டார்...
ஆனால் ஐந்தடி நடந்த பிறகு அந்த பெரிய கிழிசலை சுடிதார் ஷால் வைத்து மறைக்க முயற்சி செய்தார்..
ராஜிவ்காந்தி ஒரு அங்கவ்ஸ்திரம் போட்டு இருப்பரே அது போல டிதார் ஷாலை வைத்து கிழிச்சசலை மறைக்க டிரை செய்தார்...
சுடிதார் டாப் வைத்து மறைக்க பார்த்தார்...
நடையில் தடுமாற்றம் எப்படி நடப்பது ? எப்படி மறைப்பது என்று தடுமாற்றம் நடையில்...
திரும்ப ஐந்தடி கடந்து பேக்கை முட்டி வரை தொங்க விட்டு கிழிச்சலை மறைத்த படி மீண்டும் நடக்க ஆரம்பித்தார்...
மீண்டும் நான் ரசிக்கும்...
அதே அலட்சிய நடையில்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நீர் ஒரு மிகபெரிய கலா ரசிகன் தல
ReplyDeleteநீர் ஒரு மிகபெரிய கலா ரசிகன் தல
ReplyDeleteபெண்ணுங்களுக்கு சேவை செய்யறத்துல அப்படி ஒரு மகிழ்ச்சி என்ன தல .... நடகட்டும்.......
ReplyDeleteMay be tat girl would have misunderstood ur sight adichifying....
ReplyDelete