சென்னை பிலிம் சேம்பர்ல
ஒரு உலக படவிழாவில் ஒரு டாக்குமென்ட்ரி
பார்த்தேன்…அதுல மேக்சிக்கோவுல இருந்து எப்படி பார்டரை கிராஸ் பண்ணி அமெரிக்காவுக்கு மெக்கிச்கோக மக்கள் போறாங்க… என்பதுதான் முழு டாக்குமென்ட்ரியும்…
அந்த
டாக்குவை பார்த்தா கண்ணுல தண்ணி வந்துடும்…அதுல அவுங்க பார்டர் கடக்க எவ்வளவு
துன்பத்தை அனுபவிக்கிறாங்க…,? எத்தனை பேர்
சாகறாங்க… நம்பிக்கை துரோகங்கள், கொலைகள், கொள்ளைகள்…. வயது பெண்களை கற்பழிப்புகள் என்று அந்த டாக்கு மிக விரிவாய் விவரிக்கும்…
சரி அப்படி அமெரிக்காவுக்கு போக வேண்டிய கட்டாயம் என்ன? மெக்சிக்கோ ஏழை நாடு…ஆனா அமெரிக்கா சொர்கபூரி….
சிம்பிளா சொல்லனும்னா… எல்லாமே இங்கேயே கெடைக்குதே செவ்வாழை எதுக்கு பாண்டிச்சேரி போய்
சரக்கு அடிக்கனும் அது போலத்தான் இதுவும்.
==================
The Mule (Border Run)-2012
காணாமல் போன அண்ணனை கண்டு பிடிக்க மெக்சிக்கோ சொல்லும் அமெரிக்க
டிவி ரிப்போர்ட்டர்.
=====================
The Mule (Border Run)-2012 படத்தின் கதை என்ன?
சோபியா (ஷரன்ஸ்டோன்)…. அமெரிக்க டிவி பெண் ரிப்போர்ட்டர்.
பார்ட்ர் கிராசிங் பற்றி செனட்டரிடம் கேள்வி மேல் கேட்கும் ரிப்போர்ட்டர்... ஆனால்
மெக்சிக்கோவில் மிஸ் ஆகி போன தன் அண்ணனை
தேடி மெக்சிக்கோ வருகின்றாள்.. அங்கே பார்டர் கிராஸ் செய்ய மக்கள் எவ்வளவு
கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நேரில் பார்க்கின்றாள்.... அண்ணனை தேடி
கண்டுபிடித்தாளா என்பதை வெண்திரையில் காணுங்கள்.
================
ஒரு காலத்தில் பித்து
பிடித்து வைத்த உடம்புதான் ஷெரன் ஸ்டோன்
உடம்பு... பேசிக் இன்ஸ்டிங்ட் படம் பார்த்து விட்டு வெளிறிய முகத்துடன்
தன் கை ரேகை அழித்தவர்கள் உலக அளவில் அதிகம்... அப்படி பட்ட
பெண்மணியை வயதாகி கைகள், மற்றும் கண்கள் பக்கம் சுருக்கத்துடன் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கின்றது...
எதுவும் இந்த உலகில்
நிலையில்லை என்பதைதான் இந்த படம் பார்க்கும் போது உணர்ந்தேன்....
கொடுமை கொடுமை கோவிலுக்கு
போனா அங்க ரெண்டு கொடுமை அவுத்து போட்டு ஆடுச்சாம்.. அது போல கஷ்டத்துக்கு உயிரை
பணயம் வச்சி பார்டர் கிராஸ் பண்ண வர்ற மக்களை அடித்து துன்புறுத்தி அவுங்க வயிற்று எரிச்சலை மேலும் கொட்டிக்கொண்டு
அலட்டும் கொலைக்கார கும்பல் ஏராளம் என்பதை பார்க்கும் போது புரிகின்றது.
வயதுப்பெண்ணை பார்டர்
தாண்டி அழைத்து வரும் போது அவர்கள் சொல்வது கொடுமை.. இவளுடைய அழகுக்கு அமெரிக்காவில்
நல்ல விலை போகும்... பார்டர் கிராஸ் பண்ணும் போது யாராவது அவளை ரேப்
பண்ணா கூட, அவ கர்பம் தரிக்காம இருக்க மாத்திரை மட்டும் அவளுக்கு கொடுத்து ஹெல்ப்
செய்யுங்க என்று சொல்லும் இடம் கொடுமை.
வீசிங் பிரச்சனையில்
பினமான சகபயணியுடம் பயணிக்கும் அந்த
கொடுமையான பயணத்தை மிக அழகாக காட்சி
படுத்தி இருக்கின்றார்கள்.
வில்லி அந்த பெண்ணிடம்
வந்து மார்பகத்தையும், பிறப்புறப்பையும் தடவி எல்லோருடைய முன்னிலையிலும் மோந்து
பார்த்து விட்டு இவன் கன்னி கழியாத பொட்டநாய் என்று எள்ளிநகையாடும் இடங்கள் அங்கத்திய படங்களில் மட்டும் சாத்தியம்
இந்த கும்பலில் ஒரு
கர்பவதி.. அவள் படும் துயரங்கள்... தன் பிள்ளை அமெரிக்க சிட்டிசனாக பிறக்க வேண்டும் என்ற பேராவல்....
என்று பார்டர் கடக்கும் மக்களின் மறுபக்க துயரங்களை சொல்லி இருக்கின்றார்கள்.
ஷரனுக்கு இந்த படத்தில்
உரு ரேப் சீன் இருக்கின்றது... ஆனாலும் துணிந்து நடித்து இருக்கின்றார்கள்...வயது
காரணமாக பொலிவிழந்த அங்கங்களோடு
போராடுகின்றார்,,, ஆனால் நமக்குதான் அவர் மீது பரிதாபம் வர மறுக்கின்றது...
காரணம் ஆவர் மீதான பொது புத்தி என்றால் அது மிகையாகது.
================
படத்தின் டிரைலர்.
=============
படக்குழுவினர் விபரம்.
Directed by Gabriela Tagliavini
Produced by Lucas Jarach
Written by Don Fiebiger & Amy Kolquist
Starring Sharon Stone
Billy Zane
Rosemberg Salgado
Miguel Rodarte
Music by Emilio Kauderer
Sebastián Kauderer
Marco Werba
Ana Bárbara
Cinematography Andrew Strahorn
Editing by James Coblentz
Distributed by Kalinos Filmcilik
Polarstar Films
SND Groupe M6
Scanbox Entertainment
Square One Entertainment
Ster-Kinekor Distribution
Tanweer Films.
Release date(s)
February 26, 2013
Country United States
Language English
==============
பைனல் கிக்.
இந்த படம்... டைம்பாஸ்
படம் தான் என்றாலும் மெக்சிக்கோவில் இருந்து பார்டர் தாண்டி அமெரிக்கா வரும் பொதுமக்களின்
துயர நிலை தொடர்கதைதான்.,. அப்படி என்னற்ற
ரத்த சம்பவங்களில் இந்த படத்தின் சம்பவமும்
ஒன்று... ஆம் இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்ப்பட்டது.
======================
ரேட்டிங்...
பத்துக்கு மூன்று... ஆனால்
அவசியம் ஒரு முறை இந்த படத்தை பாருங்கள்..
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment