BIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) கொள்ளாதுசில நேரத்துல நமக்குன்னு இப்படி வாய்க்கும்...
காலையில் எழுந்து குளிச்சிட்டு டிரஸ் பண்ணிக்கிட்டு ஆபிசுக்கு  பரபரன்னு கிளம்பி போகும் போதுதான் உதறி போடாத ஜட்டி நினைப்புக்கு வரும்... சித்தெறும்பு கடிச்சி உயிரை எடுக்கும், அப்பன்னு பார்த்து  செருப்பு பிச்சிக்கும், பஸ்ஸூக்கு சில்லரையை  மறந்து வச்சிடுவோம். பைக் டயர் பஞ்சராயிடும்... சட்டையில அக்கிள் பக்கம் தையல் விட்டு போயிருக்கும். ஆபிஸ்ல உயரதிகாரிங்க கிட்ட ஓத்தம்பட்டு வாங்குவோம்...


 லஞ்ச் பாக்ஸ் திறக்கும் போது கீழ கொட்டிக்கும், பாக்கெட்டுல  5 ரூபாய்க்கு வாங்கி வச்ச மை பேனா லீக்காக்கி 500 ரூபாய் சட்டையை பாழ் பண்ணி இருக்கும், எல்லாத்துக்கும் மேல.. பொண்டாட்டி போன் பண்ணி நீங்க  முன்ன போல இல்லை.... எங்கிட்ட அன்பே இல்லைன்னு போனை  பண்ணி நேரங்காலம்  தெரியாம  உயிரை வாங்குவா...

இப்படி எல்லாம் ஒரே  நாளில் நடந்தால் ,ஒரு மனுஷனால தாங்க முடியுமா-? அப்படி  எல்லாம் சேர்ந்து ஒட்டுக்கா ஒரு சாதாரண மீடில் கிளாஸ்  கொரியாவில் வசிக்கும் மாதவனுக்கு வந்தா- அவன் என்ன பண்ணுவான்.??????

===============
BIG BANG/2007 படத்தின் ஒன்லைன் என்ன?

 சுனாமி போல பிரச்சனைகள்.... ஒரே நாளில் ஒரு சாதாரண மனுஷன தண்டிச்சா என்ன செய்வான்..?
============
BIG BANG/2007 படத்தின் கதை என்ன?

காலையில கார் எடுக்கும் போது பார்க்கில் பிரச்சனை... வீட்டில் பொண்ட்ட்டி பிரச்சனை ஆபிசில் அதிகாரிகள் பிரச்சனை, எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு போவும் போது சரக்கு அதிகமாகி,   போலிஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருக்கும் சுவத்துல மூத்திரம் பேய.... ஒரு சைக்கோ இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டு ஒரு சாமானியன் படும் பாடுதான் இந்த திரைப்படம்.. முடிவு என்ன என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

======================
ஆங்கிலத்தில் மைக்கேல் டக்லஸ் நடித்து ஒரு படம்...தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்று  ,இந்த படத்தின் ஆதாரகருவை  எடுத்துக்கொண்டு அவர்கள் அவர்கள் மொழிக்கு ஏற்றது போல கதை பண்ணி இருக்கின்றார்கள்.. ஆங்கில படம்தான்  முதலில் வந்தது என்று எண்ணுகின்றேன்..


போலிஸ் நிலையத்தில் என்னை ஜெயிலில் போடுங்கள் என்று மன்றாடும் ரவுடி..  மனதில் நிற்கும் கேரக்டர்.. கடைசியில் இரண்டு பேரும்  ஒன்றாக ரவுண்டு கட்டுவது இன்டிரஸ்ட்டிங்.

ஒரு  சைக்கோ இன்ஸ்பெக்டர் கிட்ட மட்டும் நாத மாட்டிக்கிட்டோம்னா.... நமக்கு சங்குதான் என்பதை இந்ததிரைப்படம் பொட்டில் அடித்து புரிய வைக்கின்றது...


ஒரு நாள் இரவில் தீவிரவாதி அளவுக்கு அவனை தேட வைப்பதும்.. பின்னனியில் அவனின் பழைய ரெக்கார்ட்டை எல்லாம் மாற்றி விடுவது என்று ,அந்த சைக்கோ இன்ஸ்பெக்டர் தீயாய் வேலை செய்யும் போது... போலிஸ்காரர்களை மட்டும் அல்ல  அதிகாரம் உள்ளவர்களை  பார்த்தாலே பயம் வந்து விடும்.

கிளைமாக்ஸ்.. நோ அதர் கோ எனும் போது எடுக்கும் முடிவு... அருமை.

==============
 படத்தின் டிரைலர்.


================
படக்குழுவினர் விபரம்

Directed by Jeong-woo Park
Written by Jeong-woo Park
Starring Hang-Seon Jang
Woo-seong Kam
Seong-jin Kang
Su-ro Kim
Jung-Hee Moo
Distributed by Sio Film and Bravo Entertainment
Release date(s) South Korea
14 March 2007
Running time 118 minutes
Country South Korea
Language Korean

=================
பைனல்கிக்..
இந்த படம் பார்க்கவேண்டிய படம்.. ஏற்கனவே இதே கதையமைப்பில் படம் பார்த்து இருந்தால் இந்த படத்தை பார்க்கும் போது  சலிப்பு ஏற்ப்படும்.. பார்க்காதவர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.. படம் முடியும் போது மூத்திரம் பேஞ்சது ஒரு  கொலை குத்தமாய்யா என்ற  கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
=======

படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறு
==========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner