இருபது வருட சென்னை வாழ்க்கையில்
சென்னை
சுவாவசத்தில் கலந்து போன ஆட்டோக்களில் நான் பயணம் செய்தது ஏழு முறை அல்லது எட்டு
முறைதான்... அது என்னவோ ஆட்டோவில் ஏற
அவர்கள் கேட்கும் தொகை மலைக்க வைக்கும்....
அதனாலே சென்னை ஆட்டோக்களில் ஏறியதில்லை....
வேறு வழியில்லாமல் என் மனைவி பிள்ளையை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி இருக்கேன்...
எங்க நான் ராமபுரம் கிட்ட இருக்கேன்... ஒரு ஆட்டோ புடுச்சி வீட்டுக்கிட்ட
வந்துடுட்டமா?
நானே பைக்ல வந்து பிக்கெப்
பண்ணிக்கறேன்..
இல்லைங்க டயர்டா இருக்குன்னு சொன்னிங்களே....
அதான் ஆட்டோவுல வந்துடறேன்னு சொன்னேன்...
நீ சீக்கிரமா வந்து கச்ச தீவு ஒப்பந்தத்துல
கையெழுத்து போட போறதில்லை.....கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு.... தோ வந்துடறேன்.
இப்படித்தான் சென்னையில் நிறைய கணவன் மனைவி, அப்பா, அம்மா,
என்று பிள்ளைகளை அழைத்து வர அசதியிலும் வண்டி எடுத்துக்கொண்டு ஓடுகின்றார்கள்...
நியாமாக இரண்டு கிலோமீட்டர் இருக்கும்...
அதுக்கு மீட்ட்டர் போட்டால் 20 ரூபாய் ஆகும் அதுக்கு மேல் ஆகாது.. ஆனால் 150
ரூபாய் உடம்பு கூசாமல் கேட்டு வைப்பார்கள்.....
சரி
வேறு வழியில்லை என்று பேசிய தொகைக்கு ஏறி நாம் செல்லும் வழியில் கொஞ்சம் ரோடு
சரியில்லை என்றால் வண்டி ஓட்டும் போது மேலும் ஒரு இருபது ருபாய்க்கு ஆட்டைய போட...
ச்சே என்ன ரோடுங்க.. இது ? கேவலமா இருக்கு...
இதுக்குதான் இந்த ஏரியா பக்கம் சவாரி
வரமாட்டேன்னு சொன்னேன்.... இறங்கும் போது
ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க..... என்று கதையை ஆரம்பித்து வைப்பார்...
லக்கேஜ் இறக்கும் போது எழு கிலோ மீட்டருக்கு 400 ரூபாய் கேட்டவர்...
மேலும் 20 ருபாய் வாங்காமல் அந்த இடத்தை விட்டு காலி செய்ய மாட்டார்...
டேஷ் போர்டு
அருகே சுருட்டி வைத்த காக்கி சட்டையை அப்படியே போட்டுக்கொண்டு அதில் இரண்டு
மூன்று நாள் வியர்வையின் வெள்ளைக்கோடுகள் ஒழுங்கற்ற வடிவில் அமீபா டிசைன்
போட்டு இருக்கும்.
கண்கள் சிவப்பாக முதல் நாள் குடித்த வாசம் அப்படியே வீசும் அல்லது
திரும்பவும் கூட் சரக்கு போட்டு இருக்கலாம்.. அது மட்டும் அல்ல.... கஞ்சா புகைத்து
விட்டு சென்னையில் பல ஆட்டோ டிரைவர்கள் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்
என்பதும் மறுக்க முடியாத உண்மை...
அதே போல மனிதாபிமானம் இன்னமும் சென்னையில்
இருப்பது ஆட்டோ டிரைவர்களிடம் மட்டும்தான் விபத்து நடந்தால் பரபரப்பாய் கண்டும்
காணமால் போகுமி பொது ஜனத்துக்கு மத்தியில் தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்தி உயிர் பிழைக்க வைப்பவர்கள்... ஆட்டோ
டிரைவர்கள்தான்....ஆனால் ரேட் மட்டும்
கொள்ளை பணம் கேட்பார்கள்...
ஆனால் இதுவே
பெங்களூரில் ஆட்டோ நிறைய முறை ஏறி
இருக்கின்றேன்... நண்பர்களோடு தீர்த்தம் சாப்பிட
கமர்சியல் ஸ்டிட்டுக்கு போக ஆட்டோதான்... சினிமாவுக்கு போக
ஆட்டோதான்... அங்கே பஸ் கட்டனத்தை விட ஒரு
மடங்குதான் ஆட்டோ கட்டனம்.. கண்டிப்பாக
மீட்டர் போடுவார்கள்.. மீட்டர் போட்டு
விட்டு நாமே பேச்சு கொடுத்தால் பேசுவார்கள்..
அவர்களாக பேசமாட்டார்கள்... அதில் பாதி பேர்
தமிழர்கள்.. அதே போல அங்கே மீட்டர் போடாமல் ஒருவர் பேரம் பேசினால் அது
நிச்சயம் சென்னை ஆட்டோ டிரைவராகத்தான் இருப்பார்.
அதே போல
கேரளாவில் மீட்டர் போடமாமல் ஓட்டினால் ஸ்பாட் பைன்.. அனால் சென்னையில்
யார் ஆட்சிக்கு வந்தாலும் ... இதே
நிலைதான்... இதில் மாறி மாறி ஆண்ட இரண்டு
கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
நானும் கடலூரில் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டி இருக்கின்றேன்... ஆனால்
நல்ல வருமானம்... ஆனால் சமுகத்தில் மதிப்பில்லை.... எவ்வளவு நேர்மையாக இருந்தாலும்
ஆட்டோ ஓட்டுனர் என்றால் ஒரு இளக்காரம்...
மரியாதை குறைவு என்பது பொதுபுத்தியில் ஆழ பதிந்து விட்டது.... அதனாலே அந்த தொழிலை
விட்டேன்...
சென்னையில் சாலிடாக ஒரு நாளைக்கு 1000 ரூபாய்
மீட்டர் இல்லாமல் ஓட்டி சம்பாதிக்கின்றார்கள்... கே கே நகரில் எனக்கு தெரிந்து ஒரு ஆட்டோ டிரைவர்
இருகின்றார்.. காலையில் எட்டு மணிக்கு சவாரி போவார்.... மதியம்... ஒருமணிக்கு
சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து
விடுவார்.... ஞாயிற்றுகிழமை கண்டிப்பாக ரெஸ்ட்... பிள்ளைகள் கேவி போன்ற பெரிய பள்ளியில் படிக்கின்றார்கள்... கெட்ட
பழக்கம் ஏதுமில்லை.. ஆனால் ஆட்டோ ஓட்டுகின்றேன் என்று என்னை பல இடங்களில் மதிப்பதில்லை என்று
வருத்தப்படுவார்...
மீட்டர் போடாமல் பயணிகளிட்ம் கறந்தவரை லாபம்
என்று வாழவதாலேயே பொதுமக்களுக்கு அவர்கள்
மீது ஒரு வெறுப்பு தன்னால் வந்து
விடுகின்றது...
எண்ணெய் வைக்காத தலை... கஞ்சா அடித்த நாற்றம்
துவைக்காத சட்டை, பேச்சில் நோமையின்மை இறங்கும் போது பயணிகளிடம் அடாவடி.... என்று
பல ஆட்டோ டிரைவர்களை சென்ட்ரல் அருகே இன்றும் பார்க்கலாம்...
ஆனால்
மீட்டர் போட்டு இதே
சென்னையில் இரண்டு கிலோ மீட்டருக்கு 25
ரூபாய் அடுத்த ஒவ்வோரு மீட்டருக்கும் பத்து
ரூபாய் என்றால் எப்படி இருக்கும்???? அப்படி ஒரு ஆட்டோ சென்னையில் காலடி
எடுத்து வைத்து இருக்கின்றது.
தினமும்
நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் காலையில் கேஷ்வரகு குடிக்க ஒரு தள்ளு வண்டி கடையை
தேர்ந்து எடுத்து வைத்து இருக்கின்றேன்....
அங்கே ஒரு ஆட்டோ டிரைவர் கூழ் குடிக்க இறங்கினார்... புது ஆட்டோ... மீட்டர் பார்த்தேன் டிஜிட்டல் மீட்டர்.. யூனிபார்மில்
நம்ம ஆட்டோ என்று எழுதி இருந்தது .....ஆட்டோவில் நம்ம ஆட்டோ என்று எழுதி இருந்தது....
அந்த கேப்ஷன் ரொம்ப பிடிச்சி
இருந்திச்சி... சென்னையின் கௌரவம் என்று....
அந்த
டிரைவர் பெயர் சீனுவாசன்... ஈர்க்குச்சியினால் நாமம் இட்டு இருந்தார். உடை மிக
சுத்தமாக இருந்தது... 320 ஆட்டோக்கள் சென்னையில் ஓடுவதாக தெரிவித்தார்.. 18 ஆயிரம்
சம்பளம் கொடுத்துடறாங்க.... பயணிகள் மீட்டருக்கு மேல ஒரு பைசா கொடுக்க வேண்டாம்... பயணித்த தூரத்துக்கான பில்லை கொடுத்து விடுகின்றோம்...
ஆட்டோக்காரர் என்றால் மீட்டர் போடாமல்
கொள்ளை அடிப்பவர்கள் என்ற பொது புத்தியை மாற்றுவது எங்கள் நிறுவனத்தின்
நோக்கம் என்று சொல்லகின்றார்...
ரொம்பஇன்ரஸ்ட் ஆக நம்ம ஆட்டோ ஜென்ட்ரல் மேனேஜர்
மூசா சபீகான் அவர்களை தொடர்பு கொண்டேன்.... சார் இன்னும் நிறைய ஆட்டோக்களை சேர்க்கும் திட்டம் இருக்கு...
அதே போல இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க விரிவு படுத்த இருக்கின்றோம் என்றார்.
டிரைவர் சீனுவாசன் மேலும்
கூறும்போது... மீட்டர் போடாத ஆட்டோ டிரைவர்கள் எங்ளை எந்த எரியாவிலேயும்
உள்ளே விட மறுக்கறாங்க.. தகாத வார்த்தை சொல்ல திட்டுறாங்க.... காதுல கேட்க கூடாத வார்த்தையை எல்லாம் கேட்டுக்குட்டு வண்டியை ஓட்டறோம்...எந்த
இடத்திலேயும் வண்டியை நிறுத்த விடமாட்டேங்கறாங்க....
தீண்டதாகதவன் போல மற்ற ஆட்டோ டிரைவர்கள்
மதிப்பதை சொல்லி ரொம்பவே வறுத்தப்பட்டார்..
மீட்டர் போடாமல் ஓட்டும் ஆட்டோடிரைவர்கள் அல்லது
அந்த லாபியை சேர்ந்தவர்கள் சரக்கு போட்டு
விட்டு பொருளோடு ஆட்டோவில் ஏறி நம்ம ஆட்டோ டிரைவர்கள் முதுகில் கத்தி வைத்து
விளையாடும் சம்பவங்கள் நிறைய நடக்க
வாய்ப்பு இருக்கின்றது... அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நமது கடமையும்
கூட....
இது போன்று நேர்மையாக
இருக்கும் நம்ம ஆட்டோ போன்ற நிறுவனங்களுக்கு ஆதாரவளித்து வளர்த்து விடுவது நமது கடமையும் கூட...
உச்ச நீதி மன்றம் ஆட்டோ கட்டணத்தை
முறைபடுத்துங்கள் என்று மாநில அரசுக்கு
உத்தரவிட்டு வாய் வலிக்க சொல்லி சொல்லி தொண்டை தண்ணி காய்ந்து கிடக்கின்றது.
நாம்
நம் கௌரவத்தை இழக்காமல் இருக்க... மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்களை பொதுமக்கள்
பயண்படுத்த வேண்டும் எனபதோடு மட்டும்
அல்லாமல்... இந்த செய்தியை நண்பர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்ல நியூஸ்...ரேட் அப்படியாவது கம்மியாகட்டும்.
ReplyDeleteSuper da jackkie
ReplyDeleteThank you for sharing this information.
ReplyDeleteThank you for sharing this information.
ReplyDeleteவரவேற்கவேண்டிய விசயம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletegood post jackie..but i think u may have to change ur view on kerala autos..they dont use metres here in most cases (99%)..but the charges are slightly less than our place..
ReplyDeleteமாற நினைத்தாலும் மாற விட மாட்டார்கள்
ReplyDeleteஇந்த ஆட்டோக்காரர்கள் பண்ற அலும்பு பொறுக்காமல்தான் கடவுளாக பார்த்து கால் டாக்ஸி என்றவொரு மேட்டரை மனிதனின் மூளைக்குள் திணித்தாரோ என அடிக்கடி நினைப்பதுண்டு. அதுவும் காஸ்ட்லி என்று நினைப்பவர்களுக்கு ஷேர் டாக்ஸியும் வந்தாச்சி... இனியும் ஆட்டோக்காரர்கள் திருந்தவில்லையென்றால்... அடுத்தடுத்த தலைமுறை பிள்ளைகள் பாடப்புத்தகத்தில் மட்டும்தான் ஆட்டோவை பார்க்க முடியும் என்பது மற்றும் நிச்சயம். சரிதானே நண்பர்களே...!
ReplyDeletehttp://samuthranews.blogspot.in/
நமது நாட்டிலும் சில காலமாக மீற்றர்ஆட்டோக்கள்தான் இதனால் பேரம் பிரச்சனை தீர்ந்தது.
ReplyDeleteமீற்றர் இல்லாத ஆட்டோக்களும் உள்ளன. சனம் உசாராகிவிட்டார்கள் மீற்றர் இருப்பதை பார்த்து ஏறிக்கொள்கிறார்கள்.
Very good , A sweet news to comman public . All should encourage Namma Auto
ReplyDeletegood news thanks for sharing this anna
ReplyDeleteThanks for sharing such a wonderful news Jackie.
ReplyDeleteAll the Best for 'Namma Auto'.
ReplyDeleteKudos to Jackie for sharing :)
All the Best for 'Namma Auto'
ReplyDeleteKudos for Jackie for sharing :)