யாராவது ஒருவருக்குதான் அப்படி ஒரு வாய்ப்பு அமையும்...
.
அது கடவுளின் கிருபை என்று கூட சொல்லலாம்... தன் வேலைவெட்டியை விட்டு விட்டு ஒரு தனி மனிதனுக்காக , ஒரு தனி
மனுஷிக்காக அவனது வளர்ச்சிக்கு அயராது
பாடுபட முடியமா? அப்படி மனிதர்கள இருந்து இருக்கின்றார்கள்.. சரித்திரத்தில் இடம்
பெற்று இருக்கின்றார்கள்.
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் ஸ்திரிபாட் வேஷம் கட்டி நாடக அரங்கில் கொடிக்கட்டி பறந்தாலும்...
பிஏ பெருமாள் முதலியார் ஏவிஎம்மோடு கூட்டு சேர்ந்து பராசக்தி படத்தை
தயாரித்தார்...
படத்தில் கணேசனுக்கு நாயகன் வேஷம் என்றாலும் அனுபவம்
வாய்ந்த எவிஎம் மெய்யப்ப செட்டியாருக்கு கணேசன் நடிப்பு எட்டிக்காய் கசப்பாகவே கசந்தது....
எடுத்த படத்தை பாதி போட்டு பார்த்து விட்டு படத்தை நிறுத்தி வேறு நாயகனை போட்டு
தயாரிக்கலாம் என்று ஒற்றக்காலில் தவமே இருந்தார்....
ஆனால் பெருமாள் முதலியார் ஒற்றைக்காலில் கணேசனின் திறமையை
பார்த்து விட்டு கணேசன் மட்டுமே இந்த
பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும்
என்று மலை போல் நம்பினார்.... நிறைய
எதிர்ப்புகள்.. ஆனாலும் ஒற்றைக்காலில்
நின்றார்... அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்பட்ட நடிகர் திலகத்துக்கு அது வாழ்வா
சாவா என்ற நிலை...
அந்த படத்தில்
நடித்த அனுபவத்தை சிவாஜி கூறும் போது ஏவிஎம் ஸ்டுயோவில் நிறைய வேப்ப மரங்கள் இருந்தன... நான் விட்ட
கண்ணீரில் அந்த வேப்பமரங்கள் வளர்ந்தன என்றால் அது மிகையில்லை என்று சொல்லும்
அளவுக்கு சிவாஜியை அந்த படம் ரொம்பவே
படித்து எடுத்தது.. கடைசிவரை நாயகன் சிவாஜிதான் என்று ஒற்றைக்காலில் நின்று
பெருமாள் முதலியார் ஜெயித்தும் காட்டினார்.
பெருமாள் முதலியாரை வளர்ந்த பிறகும் கடவுளுக்கு நிகராக
போற்றினார்.. இன்றுவரை பெருமாள் முதலியார்
குடும்பத்துக்கு சிவாஜிகணேசன் மறைந்த பின்பும் அவர் குடும்பத்தினாருக்கு
அடுத்த தலைமுறையிலும் முதல் மரியாதை
கொடுத்து வருகின்றார்கள் என்பது வரலாறு....
அது போல ஒரு பிரபல
பாடகன் பாரில் பாடிக்கொண்டு இருக்கும் பெண்ணின் குரலில் ஈர்க்கப்பட்டு அவளுடைய வாழ்க்கையை
அடியோடு மாற்றி கதைதான் இந்த படம்.
==================
Aashiqui 2/2013/ படத்தின் ஒன்லைன் என்ன?
திறமையுள்ள ஒரு பெண்ணின் குரலில் வசீகரத்தை பிரபலபாடகன் உலகறிய செய்வதே இந்த படத்தின்
ஒன்லைன்.
===============
Aashiqui 2/2013/ படத்தின் கதை என்ன?
ராகுல்(Aditya Roy Kapoor) பிரபல பாடகன் ஆனால்
குடியினால் தன்னிலை இழந்து போகின்றான்... ஒருநாள் கோவாவில் ஒரு பாரில் பாடும்
Aarohi (Shraddha Kapoor) சந்திக்கின்றான்.. இத்தனைக்கு
இவன் பாடிய பாடலை தான் அந்த பெண் பாடிக்கொண்டு
இருக்கின்றாள்... அவன் அன்னாடம்
காட்சி.. வறுமையில் உழலுபவள்...
அவள் குரல் வெறும் பாரில் மட்டும் கேட்க
கூடாது அகிலஉலக அளவில் புகழ்பெற வேண்டும்
என்று விரும்புகின்றான்... ஆனால் பல
தடைகள் ஏற்ப்படுகின்றன... அந்த பெண் குரல் பிரபலமாகியதா? குடியினால் ராகுல்
என்னவானான் வெண்திரையில் காணுங்கள்..
======================
காதலில் உருகுபவனாலும் காதலை பற்றி அரிச்சுவடி அறிந்தவனால்
மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். அந்த வகையில் இயக்குனர் Mohit
Suri சட்டைகாலரை தூக்கி
விட்டுக்கொள்ளலாம்..
ஆயிரத்தெட்டு முறை பார்த்து
சலித்து போன கதையை ரசிக்க வைக்கவும் அந்த
காதலை முதல் முறையாக பார்ப்பது போன்ற
பிம்பத்தை பார்வையாளனுக்கு உருவாக்குவது
சாதாரண காரியம் இல்லை.. அந்த வகையில் இயக்குனருக்கு ஹேட்ஸ் ஆப்...
படத்தின் பெரிய பலம் பாடல்கள்.... இசையமைப்பாளர்... Mithoon,Jeet Ganguly இரண்டு பேர் இசையமைத்து
இருக்கின்றார்கள்...
இரண்டு நாட்களாய் இந்த
பாடல் என் மனதை வாட்டி வதைக்கின்றது... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை
நிறைய முறை கேட்டு வருகின்றேன்... அர்ஜித் சிங் குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு... "Tum Hi Ho" பாடலுக்கு Mithoon இசையமைக்க Arijit Singh பாடி இருக்கின்றார்... அந்த
பாடல் உங்களுக்காக..
பாடல்களில் இந்தி
காதலர்களை பித்து பிடிக்க வேண்டும் என்று முப்பாத்தா கோவில்
சத்தியம் செய்து விட்டு வந்த இசையமைத்து இருப்பார்கள் போல.. பின்னி இருக்கின்றார்கள்.
இந்த படம் 12 வருடங்களுக்கு முன் வந்த Aashiqui படத்தின் ரீமேக் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் ஹீரோயின்
படம் எடுத்த மதூர் பண்டாபராக்கரிடம்
பேசினார்கள்.. ஆனால் அவருக்கு இருந்த கமிட்மென்ட்டில் இந்த படத்தை இயக்கும்
வாய்ப்பை நிராகரித்தார்..... அப்படி அவர்
இயக்கி இருந்தால் இன்னும் கவர்ச்சி அதிகரித்து இருக்கும் என்பதில்
ஐயம்இல்லை..
இந்த படத்தில்
தற்காலத்தில் வெளியாகும் இந்திபட கவர்ச்சிகள் இந்த படத்தில் கிஞ்சித்தும்
இல்லை... அதுவே இந்த காதல் படத்தின் பெரிய பலம் என்பேன்.
மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்தவனை காதலித்தாலும் அவன்
வாழ்க்கையில் சருக்குகின்றான்... அவன்
காதலை சொல்லி அவளை பாட வைக்க நம்பிக்கை கொடுக்கும் காட்சியிலும், இவள் அவனிடம்
காதலை சொல்லும் காட்சிகளும் ஒன்டர்புல்..
காசு இல்லாமல் பர்சில் இருக்கும் பணத்தை அவன் எடுக்கும்
காட்சியில் கண்ணீல் நீரோடு மறைந்த
கொள்ளும் காட்சிகள் நெஞ்சை விட்டு அகலாது.
பிரபலமானவளின்
வாழ்க்கையை கூட இருக்கும் ஆண் ஈகோ சில
நேரத்தில் சகித்துக்கொள்ளழத அப்படித்தான் பிரபல பாடகி நித்யஸ்ரீயின் கணவர் ஆற்றில்
குதித்து பழி தீர்த்துக்கொண்டார்... அது போலான காட்சி இந்த படத்திலும் நினைவு
படுத்துகின்றன.,
=============
படத்தின் டிரைலர்.
=============
படக்குழுவினர் விபரம்
Directed by Mohit Suri
Produced by Bhushan Kumar
Mukesh Bhatt
Krishan Kumar
Screenplay by Shagufta Rafique
Story by Shagufta Rafique
Starring Aditya Roy Kapoor
Shraddha Kapoor
Shaad Randhawa
Music by Mithoon
Jeet Ganguly
Ankit Tiwari
Cinematography Vishnu Rao
Studio T-Series Films
Vishesh Films
Release date(s)
April 26, 2013
Running time 140 minutes
Country India
Language Hindi
Budget 90 million (US$1.6 million)[1]
Box office 1 billion (US$18 million) (4 weeks worldwide gross)
============
பைனல் கிக்.
இந்த படம்
பார்க்கவேண்டிய படம்... காதலர்கள் அவசியம் பார்க்கலாம்... முதல் பாதியில் பல டுவீஸ்ட்டுகள்...
சத்தியமில் இரவு ஒரு காட்சி மட்டும் தினசரி போடுகின்றார்கள்.. வியாழக்கிழமை
சென்றால் சப்டைட்டிலுடன் பார்க்கலாம்..
அப்படி இல்லை என்றால் பாரிசில் உள்ள அலிபாயின், மூவிஸ்நல் கடையில் புளுரேயில் சப் டைட்டிலுடன்
டிவிடி வாங்கி பார்த்து மகிழ கேட்டுக்கொள்கின்றேன்.
=========
படத்தின் ரேட்டிங்.
பத்துக்கு ஆறு..
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Jackie,
ReplyDeleteஒரிஜினல் Aashiqui வெளி வந்தது 1990ல்..22 வருடங்களாகின்றன...
Gopi