சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/6/2013)


ஆல்பம்.

கிடக்கறது எல்லாம் விட்டு புட்டு
கிழவனை  தூக்கி மடியிலை வச்சிக்கோன்னு கிராமத்துல ஒரு பழமொழி உண்டு....  பெட்ரோல் விலை இரண்டரை ரூபாய் உயர்த்தி விட்டார்கள்....  சென்னையில் பெட்ரோல் எழுபது ரூபாய்...100 ரூபாய் ஆனாலும் பெட்ரோல் போடத்தான் போறோம்.... ஆயில் கம்பெனிகளின் லாபி காரணமாக  அவர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, அவர்கள் மிரட்டல் விடுக்கின்றார்கள்  என்று மத்திய  அமைச்சர்  விரப்ப மொய்லி சொல்லி வாய் ஈரம் கூட இன்னும் காயவில்லை... அதற்குள் பெட்ரோல்விலையை ஏற்றி விட்டார்கள். நல்லா வருவிங்க சார்.
===============
தனி தெலுங்கான போராட்டம் ஒரு மாணவனின் தற்கொலையில் மீண்டும் உயிர் பெற்று இருக்கின்றது.. திரும்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு இருக்கின்றார்கள்..
இன்னும் பேராட்டம்  அதிகரிக்கும் என்றே தோன்றுகின்றது...உமானியா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் என் மரணத்துக்கு பிறகாவது தனிதெலுங்கான  பிறக்கட்டும்   என்று எழுதி வைத்து விட்டு சென்று இருக்கின்றான்... அதனால்  நீரு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சனை இப்போது கொழுந்து விட்டு எரிகின்றது.
==============

மிக்சர்.
ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் தமிழகம் பரபரப்பாய் மாறி இருக்கின்றது... இளவு காத்த கிள ரேஞ்சுக்கு அம்மா எல்லாருக்கும் அல்வா கொடுத்துட்டாங்க.. இந்த மாதிரி அதிரடி விஷயத்துக்கு  ஐ லைக் அம்மா.... தவுசன்ட் டைம்ஸ்...
=========
 சென்னையில் நேப்பியர்  பாலம் தாண்டி பழைய தலைமைசெயலகம் செல்லும் வழியில்  ஒரு கோடியே 33 லடச்ம் செலவில் சட்டப்பேரவை வைர விழா வளைவு  கட்டி முடித்து விட்டார்கள்... சைடில் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கின்றது... அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் இரவு பகலாக பணி நடந்த வருகின்றது.... சட்டப்பேரவையில் இருந்து  ஒரு கிலோ மீட்டரில் இந்த பிரமாண்ட வளைவை கட்டி  முடித்து இருக்கின்றார்கள்... பார்போம் முதல்வர் வீடியோ கான்பிரசிங்கில் திறந்து வைக்கின்றாரா? அல்லது நேரில் திறந்து வைக்கின்றாரா? என்பது  சில நாட்களில் தெரிந்து விடும்.
============ 
உங்க கிட்ட நகை இருக்குன்னு பட்டை பட்டையா கழுத்துல போட்டு  ஷோ காமிக்காதிங்க.. பட்டபகலிலேயே கழுத்துல  இருக்கறதை அறுத்துக்கிட்டு போறானுங்க... போலிஸ் துறையில் எவ்வளவோ தலைபாடை அடிச்சிக்கிட்டாலும் இதுங்க ஷோ காட்டுறேன் பேர்வழின்னு நகையை போட்டுக்கிட்டு லாத்திக்கிட்டு நடக்கவேண்டியது...  வீட்டுல யாரும் இல்லாத நேரம் பார்த்து  ஸ்கெட்ச் போட்டு கொள்ளை அடிக்கறானுங்க.. சப்போஸ் ஆள் இருந்தா கொலையே பண்ணிடறானுங்க... சென்னை முகப்பேர்ல நேற்று காலையில புருசன் கீழ் புலோர்ல கம்யூட்டர் பார்த்துக்கிட்டு இருக்க சொல்ல.... செகன்ட் புலோர்ல இருந்த மனைவியை கழுத்து அறுத்து கொலை  செய்து விட்டு 30 பவுன் நகையை  கொள்ளை அடிச்சிக்கிட்டு போய்க்கிட்டு இருக்காங்க...  பார்த்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

================
நவரசன் கொலை வழக்குக்கு பிறகு சென்னையை  சேர்ந்த  முட்டை வியாபாரி பீஸ் பீசாக வெட்டிக்கொலை  செய்யப்பட்டு இருக்கின்றார்.. காரணம் அவருடைய கள்ளக்காதலி கணவன் மற்றும் அவனது கூட்டாளியோடு  சேர்ந்துக்கொண்டு  பணத்துக்கும் நகைக்காகவும் முட்டை வியாபாரியை  கொலை செய்து கதையை  முடித்து இருக்கின்றார்கள்...  இப்போதெல்லாம் எந்த கொலை நடந்தாலும் கடைசியா கொலையானவர் செல்போன் எடுத்து  கால் லிஸ்ட்டுல இருக்கற பத்து இன்கமிங் அவுட் கோயிங், நம்பரை சென் பண்ணா... அதுல கண்டிப்பா கொலையாளி இருப்பான் என்பது 21 நுற்றாண்டின் வேதம்.

=========
இயக்குனர் மணிவண்ணன்   நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்... அவருக்கு இறுதி சடங்குகள்  இன்ற நடக்கின்றன.. விகடனில் பாரதிராஜா... மணி நல்ல அறிவாளி ஆனா வாயை தொறந்தா பொய் என்று தன் சிஷயனை  கடுமையாக சாடி இருந்தார்.... எதிர்பாராத விதமாக நேற்று இறந்து விட்டார்..... மணிவண்ணனுக்கு 58 வயதுதான் ஆகின்றது... எதையாவது பேசி  சர்சையை ஏற்ப்படுத்துவது வழக்கம் அதுக்கு பாரதிராஜாவிதிவிலக்கல்ல...
=========
முகநூலில் இயக்குனர் மணிவண்ணன் குறித்து நான் பகிர்ந்து கொண்டவை...
=========
ஏதோ ஒரு கோவத்துல சிஷயன் மணிவண்ணனை பற்றி பேட்டி கொடுத்தாலும், பாரதிராஜாவோட மிடில்கிளாஸ் மனசாட்சி இன்னும் ஒரு வாரத்துக்கு அவரை தூங்க விடாது... — feeling sad.

==========================
குருவானவர்களே, சிஷ்யர்களே உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்...

இரண்டு பக்கமும் கூர் சீவி, தப்பு தப்பா மாத்தி மாத்தி சொல்லி, குரு சிஷ்யனை பத்தியோ,. சிஷ்யன் குருவை பத்தியோ நெகிழ்ச்சியா சொன்ன நல்ல விஷயத்தை சம்பந்த பட்டவங்க காதுக்கு வரவிடாம ,பில்டர் பண்ணி....

முக்கியமா சரக்கு ஏத்தி விட்டு உளறவச்சி அதை ரெக்கார்ட் பண்ணி போட்டுகொடுத்து.... தீ மூட்டி, கும்மி அடிச்சி, பாடைகட்டி,பரலோகம் அனுப்பிட்டுதான் மறுவேலை பார்பானுங்கோ...

குரு சிஷ்யனுங்களா ...... நீங்கதான் சூதான இருந்துக்கோனும்... என்ன பிரிஞ்சிதா?

# ஜாக்கிசேகர் அவதானிப்பு.
==========


நான்கு மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியின் பேட்டிக்காக.... மணிவண்ணன் அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன்.

கோவையில் படபிடிப்பில் இருப்பதாகவும் சென்னை வந்ததும் பிரியாக பேசலாம் என்று சொன்னார்... அதன் பின் வேலைபளுவில் மறந்து விட்டேன். இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

எல்லா சப்ஜெக்டையும் எடுத்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் தமிழ்சினிமாவில் ஒரு சிலரே... அதில் மணிவண்ணனும் ஒருவர்...

தனது இயல்பான நடிப்பிலும் கொடிகட்டி பறந்தவர்.... அவ்வைஷண்முகியில் முதலியாராக பட்டையை கிளிப்பி இருப்பபார்.

கூச்ச சுபாவம் என்று சொல்லும் அந்த ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..=================
விகடனில் பாரதிராஜா பேட்டி வெளியான சில நாட்களுக்கு முன்... மணிவண்ணன் ரேடியோவுக்கு கொடுத்த பேட்டி.


நான் எப்பவுமே பாரதிராஜா அசிஸ்டென்ட், பாரதிராஜா அசிஸடென்ட்ன்னு சொல்லி இறந்து பின்னும் நம்மை கலங்க வைக்கின்றார்...

இயக்குனர் மணிவண்ணன்.இந்த ஆடியோவை கேட்டு பார்த்தால் பெரிய இயக்குனர்... பொதுவெளியில் தன் ஆசானுக்காக வெட்கத்தை விட்டு அழுது குருவணக்கம் செலுத்தி இருக்கின்றார்...மணிவண்ணன் சாரே இது போதுமய்யா...

விகடன் பேட்டி வந்த பின்பும் எந்த பத்திரிக்கையும் அழைத்து பேட்டி கொடுத்து தன் குருவின் பேரை சிதைக்காமல் செய்ததில் இயக்குனர் மணிவண்ணன் உயர்ந்து இருக்கின்றார்.....


மணிவண்ணன் அன்மா சாந்தி  அடைய பிரார்த்திப்போம்.
=============
பேஸ்புக் மற்றும் முகநூலில் கடந்த வாரம் பகிர்ந்தவை...

காதல் என்பது சத்தியம் தியேட்டர், மால் மற்றும் மகாபலிபுரம் செல்வதும் மட்டுமே காதல் அல்ல.

ஒருவரோடு நீங்கள் இருக்கும் போது மனம் முழுவதும் சந்தோஷத்தில் ரெக்கை கட்டிப்பறந்தால் அதுக்கு பெயர்தான் காதல்.

அவன்தான் காதலன்,

அவள்தான் காதலி......ஜாக்கிசேகர் அவதானிப்பு.
========

பைக்கில் கடந்த புதன் கிழமை விழுப்புரம் போய் வரும் வழியில், மாமன்டூர் அருகே அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கு என்று சூளுரைத்த தேமுதிக கட்சி தலைவர் மனைவிக்கு உரிமையான, கல்லூரி அருகே ஒருவர் இளநி விற்றுக்கொண்டு இருந்தார்...

பீர் எப்படி கூல்டிரிங்ஸ் பட்டியலில் இணைந்ததோ அது போல ஒரு சுப முகூர்த்ததில் சென்னையில் விற்கும் இளநிகள் எல்லாம்30 ரூபாய் என்று ரேட் வைத்துக்கொண்டன.

ஒரு கட் ஷாட். அதுக்கு முன் பத்து கிலோமீட்டரில் ஒன்னுக்கு இருந்த போது மஞ்சள் கலரில் மூத்திரம் என்னிடம் இருந்து சுதந்திரம் பெற்றது... இளநி தேவை என்பதை சிறு மூளை உணர்த்தியது.

இளநி எவ்வளவு அண்ணே....?

12 ரூபாய்ங்க.....

வேறு பேச்சே பேசவில்லை....சென்னைகாரனான நான் பக்கி போல இரண்டு இளநி வெட்ட சொன்னேன்.

வோல்ஸ்வேகன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வந்து நின்றது..அதில் ஒருவன் டீசன்டாக இறங்கினான்...

இளநி எவ்வளவுங்க..?

12 ரூபாங்க...

சின்ன இளநியா இருக்கு பத்து ரூபாய்க்கு வெட்டுங்க.....

சார் இளநி டிமான்ட் இருந்தாலும் இதான் ரேட் என்று இளநிகாரர் எவ்வளவோ சொல்லியும்... பத்து ரூபாயிலே பத்து நிமிடத்துக்கு பேரம் பேசினான் அந்த ஆள்... கடைசியில் ஒரூ ரூபாய் கூட லாபம் இல்லாம என்னால விக்க முடியாது... பத்து ருபாய்க்க காய் வாங்கி இருக்கேன்.. 11 ரூபாய் கொடுங்க என்று இரண்டு இளநி வெட்டப்பட்டது..

ச்சே நாமதான் ரோட்டுக்கடைகாரன் கிட்ட என்ன பேரம் பேசிக்கிட்டுன்னு பேரம் பேசாம விட்டுவிட்டு பைக்ல போய்க்கிட்டு இருக்கோம்..
பக்கி போல ஒரு ரூபாய்க்கு பேரம் பேசறவன்.. புல் ஏசில... ங்கோத்தா ஏசி கார்ல் ஜாலியா போறான்....

என்ன உலகம் டா இது...?

===================

ச்சே இயக்குனர் ஷங்கரா ஒதைச்சா எல்லாம் சரியா போயிடும்...ஒரு நாள் முதல்வர்ன்னு முதல்வன் படம் எடுத்தாலும் எடுத்தாரு....ஆளு ஆளுக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஆவனும்ன்னு ஆசைப்ப்டறாங்க... டேய் அதுக்கு நாங்க எல்லாம் ஓட்டு போடனும்டா....
============
கடந்த புதன்கிழமை காலை 5 மணிக்கு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் பயணம். அத்தை வீட்டு கிரகபிரவேசம் ... மதியம் ஒரு மணிக்கு விழுப்புரத்தில் இருந்து கிளம்பினேன்.

மதியம் மூன்று மணிக்கு மறைமலை அடிகள் நகர் அருகே இருபுறம் ஜிஎஸ்டி சாலையில் பயங்கர டிராபிக்...

எதிர்திசையில் வண்டியை தள்ளிக்குகொண்டு ஒருவர் வந்தார்...

அண்ணே என்ன பிரச்சனை..?? ஏதாவது அக்சிடென்ட்டா?

இல்லைங்க...ஜல்லி ஏத்திக்கிட்டு வந்த டிப்பர் லாரி கவுந்திடுச்சி... ரோடு எல்லாம் ஜல்லி... பின்னாடியே வந்த குட்டியானை அந்த வண்டி மேல மோதிடுச்சி அவ்வளவுதான்....அடப்பாவிங்களா? ஆக்சிடென்ட்ன்னா யாராவது செத்தாதான் அது அக்சிடென்ட்ன்னு நினைக்கற தமிழனின் பொதுபுத்தியை என்னன்னு சொல்லுறது...???? மிடியலை பாஸ்.....

=======================
தத்துவம்.

அதீத நம்பிக்கை வைக்கும் இடத்தில்தான்" தவறுகளும் "அதீத தைரியத்துடன் அசால்ட்டாக நடக்கின்றன. # ஜாக்கிசேகர் அவதானிப்பு
============

சில நேரங்களில் நமக்கு வாய்க்க இருக்கின்ற நல்லா விஷயங்கள் உடனே நடக்காமல் நம்மை விட்டு வெகு தொலைவு செல்வது போல தோற்றமளிக்கும்

ஆனால் உண்மையில் நமக்கு தேவையான நல்ல விஷயங்களை உலகில் எங்கு இருந்தாலும் அதனை தேடிப்பிடித்து, ஒன்று சேர்த்து படைதிரட்டிக்கொண்டு நம்மை வந்து அடையவே நம்மை விட்டு அவைகள் வெகு தூரம் சென்றன என்ற உண்மை உங்களுக்கே ஒரு நாள் புரிய வரும்.....#ஜாக்கிசேகர் அவதானிப்பு.
=============
 கடந்த வாரத்தில் நான் ரசித்த காட்சி.

மீண்டும்  நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் பார்த்தேன்...ஒருவேளை இந்த படம் கவுதம் மேனனின் இரண்டு மூன்று ஆக்ஷன் படங்களுக்கு பிறகு வந்து இருந்தால்....ஒரு வேளை சூப்பர் டூப்பர் ஹீட் ஆகி இருக்கும்...


சமந்தா அழுது ஐலவ்யூ சொல்லிட்டு.....

நான் ஒன்னு செஞ்சி இருக்கனும்... எல்லாம் சரியா ஆகி இருக்கும்.ஏன்னா அப்படித்தான் நாம எல்லா முக்கியமான விஷயமும் பேசி இருக்கோம்... ஒரு வார்த்தை பேசாம... என்று சொல்லி சமந்தா அடிக்கும் கிஸ்...
நிச்சயம் ரொமான்ட்டிக் பிலிங்கை எகிற வைக்கின்றது.

==============
நான்வெஜ்.18+

Q: Did you hear about the guy who died of a Viagra overdose?
A: They couldn't close his casket.

=============
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.

========


நினைப்பது அல்ல நீ

 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. ஒரு நல்ல இயக்குனர், நடிகர் என்பதை காட்டிலும் நல்ல மனிதர் என்று தன்னை நிருபித்து விட்டார்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner