ராகவி...மைதிலி.




ராகவி...மைதிலி இந்த இரண்டு பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....
ஆனால் இந்த வலையில் நான் தொடர்ந்து இயங்குவதால் எனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இந்த இரண்டு பெண்களுக்கும் உதவி என் எழுத்தும் இந்த தளமும் ஒரு சிறு கருவி... அவ்வளவே.. 

ஹலோ ஜாக்கியா?

ஆமாங்க சொல்லுங்க..

நான் ஈரோடு ராகவி பாதர் ரகுநாத் பேசறங்க... என்றதும் எனக்கு சட்டென பயம் வந்து விட்டது...

சார் இன்னைக்கு லண்டனில் இருந்து திரு சார்லஸ் என்பவர் ஒரு 22,000   ரூபாய் அனுப்பி இருக்கின்றார்..உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலைங்க...



இந்த நேரத்துல எங்களுக்கு பெரிய உதவி சார்... இந்த உதவியை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம் என்று சொன்னார்.. எனக்கு போன உயிர் திரும்ப வந்தது...



ஈரோடு கரூர்... ரோடு சாலையில் கொடுமுடி பக்கத்தில்  ஊஞ்சலூரில் இருக்கும் நாகேஸ்வரர் கோவிலில் குருக்களாக வேலை செய்யும் ரகுநாதன் என்பவரது மகள்தான் ராகவி பத்தாம் வகுப்பு படிக்கும் அவருக்கு பிளட்கேன்சர்... அவருக்கு உதவும் உள்ளங்கள் உதவுங்கள் என்று கடிதம் பகுதியில் சொன்னேன்... 
முதலில் சார்லஸ்,சுப்ரமணியன்,சீனுவாசன் போன்றவர்கள் 42 ஆயிரம் ரூபாய் கொடுத்து  உதவினார்கள்.. அதை நான் முன்பே உங்களிடம் தெரிவித்து இருந்தேன்..அதில் சார்லஸ்மட்டும் 27 ஆயிரம் ரூபாய் தன் பணம் மற்றும் தன் நண்பர்களிடம் சொல்லி வசூலித்து கொடுத்து இருந்தார்..



 நண்பர் சார்லஸ் இரண்டாவது தவனையாக இரண்டு நாட்டுகளுக்கு முன், ரூபாய் 22,000 கொடுத்து இருக்கின்றார்.. மொத்தமாக  அந்த பெண்ணுக்கு நம் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் மூலமாக 64,000 கிடைத்து இருக்கின்றது..

மூன்று வாரத்துக்கு முன் ஒரு திருமணத்துக்கு ஈரோடு சென்ற போது ராகவி பெண்ணை போய் ஒருநடை பார்த்துவிட்டு உடல்நலம் விசாரித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன்.. வெறும் கையோடு பார்க்க முடியாது ஒரு 500ரூபாயாவது ஆகும் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டேன். நல்லா இருந்தா சரிதான்..

நாளைக்கு கூட கோவையில் ஒயிட் செல் டெஸ்ட்டுக்கு ராகவி ஈரோட்டில் இருந்து கோவை செல்ல இருப்பதாக அவரின் தந்தை என்னிடம் தெரிவித்தார்..

இந்த நேரத்தில் 22,000 எனக்கு இந்த தொகை ரொம்ப பெரிய விஷயம் என்று ராகவியின் அப்பா என்னிடம்  தெரிவித்த போது உதவிய உள்ளங்கள் இருக்கும் திசைக்கு உளமாற நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

லண்டனில் இருக்கும் நண்பர் சார்லஸ் சொன்னார்..அந்தபெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நீங்க சொன்ன விதம், உதவி செய்ய தோனிச்சு.. இது நான் மட்டும் செய்யலை.. என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து செய்தார்கள் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தார்... நன்றி நண்பர்களே...



=============

மைதிலி...

சில்க் சதிஷ் என்ற தம்பி என்னிட்ம் ஒரு உதவி  கோரியது... அப்பா இல்லாத பெண்ணுக்கு கல்வி உதவி வேண்டும் என்று சொன்னார்.. அதனை கடிதத்தின் மூலம் தெரியபடுத்தினார்...கடிதத்தை வெளியிட்டேன்.. முதலில் 18 ஆயிரம் கட்டவேண்டும் என்று சொன்னார். கல்லூரி நிர்வாகம் அவசரபடுத்திய காரணத்தால் கடனை உடனை வாங்கி மைதிலி அம்மா கட்டி விட்டார்கள்..ஒன்பதாயிரம் பேலன்ஸ் இதுக்கு எதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்க.. அந்த கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் என்னிடம் தொடர்பு கொண்ட நண்பர்கள்.. என் அக்கவுன்ட் நம்பர் கேட்டார்கள்..பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட டிசைனிங் தொழில் செய்யும் நண்பர்..ரூபாய்7500 அனுப்பினார்.இன்னோரு நண்பர்..3000பணத்தை அனுப்பினார்.. இன்னும் சில இடங்களில் நேரடியாக டிடி எடுத்து விடுகின்றேன் என்று சொன்னார்கள்.. உதவி கிடைத்து விட்டதால் நான் மறுத்து விட்டேன்.. அசோக்குமார் என்ற நண்பர் மெயில் தொடர்பு கொண்டு உதவி செய்வதாக சொன்னார்...



நான் அப்போது பெங்களூரில் இருந்த காரணத்தால் அந்த பணத்தை உடனே  என்னால் கொடுக்க முடியவில்லை..ஆனால் அந்த பெண்ணிடம் போன் செய்து உன் கல்வி உதவி தொகை ரூபாய் 10,500 என்னிடத்தில் இருக்கின்றது.. அதனால் கவலை வேண்டாம் டூயூடேட் எதாவது சொல்லி இருக்கின்றார்களா? என்று கேட்டேன்... இல்லை என்றார்..

முதலில் கல்லூரிக்கு போய் பணத்தை கட்டிவிட்டு  வந்து விடுவோம் என்று நினைத்தேன்..பிறகு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்ததும், மங்காத்தா படம் பார்த்து விட்டு நண்பர் நித்யாவை அழைத்துக்கொண்டு அந்த பணத்தை நேரில் கொடுத்து விட்டு அந்த பெண்ணின் குடும்பசூழ்நிலையை பார்த்து விட்டு வந்துவிடுவோம் என்று சொன்னேன்.. ஒரு உதவி சரியாக உரியவரிடம் போய் சேருகின்றதா? என்று அறிய அந்த பெண்ணின் வீட்டுக்கு கிளம்பினோம்...



ஆவடியில் இருக்கும் புதுநகரில் அவர் கொடுத்த விலாசம் இருந்தது..அந்த சாலையில் போவது என்பது ரொம்ப கொடுமையான விஷயம்.. பைக் மட்டும் போகும் ஒற்றையடி பாதை...இங்க மைதிலி வீடு என்று கேட்கும் போதே...காலேஜ் படிக்கற பொண்ணா...?? அதோ அந்த வீடு என்றார்கள்..ரொம்ப ஏழ்மையான வீடு..அது ஒரு கூறை வீடு எதிரில் இருக்கும், மைதிலியின் மாமா தங்க கொடுத்து இருக்கும் பத்துக்கு பத்து அறையில்தான் மைதிலியின் குடும்பம் வசிக்கின்றது..


மைதிலியின் அப்பா சின்ன வயதில் விபத்தில் இறந்து விட்டார்.. அம்மா சித்தாள் வேலைக்கு போய்  மைதிலியை வளர்த்து படிக்க வைத்து இருக்கின்றார்..மைதிலி மாமா ஒரு பெயிண்டர்...அவர் அவ்வப்போது அவர் குடும்பத்தை கவனித்து இவருக்கும் சிறு சிறு உதவிகள் செய்கின்றார்...

அந்த இடத்தை நாங்கள் தேடிப்போனதும் அந்த பெண்ணின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை...ஒல்லியான தேகம்.. கண்களில் வயதுக்கு மீறி வறுமை எட்டிப்பார்த்தது..வீடு கண்டுபிடித்த பிறகு பணம் எடுத்துகொடுக்கலாம். என்பதால் திரும்ப ஏடிஎம்முக்கு அலைத்து பணம் எடுத்துக்கொண்டு போவதற்க்குள்.. பத்துக்கு பத்தில் நாங்கள் போகும் போது கலைந்து கிடந்த அறை.. வெகு நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டு இருந்தது.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் இருவருக்கும் மிராண்டா வாங்கி வந்து கொடுத்தார்..அந்த அன்புக்கு அடி பணிந்தோம்.

 (மைதிலி அவரது மாமாவுடன்)

பத்தாம் வகுப்பில் மைதிலி 425 மதிப்பெண்கள். 12ஆம் வகுப்பில் 1200க்கு1080 மதிப்பெண்கள் என்று சொன்ன போது எனக்கு மயக்கமே வந்தது..அகரம் பவுண்டேஷனுக்கு அப்ளை செய்து உதவி கிடைக்கவில்லை என்று சொன்னார்...

அந்த பெண் வசிக்கும் குடும்ப சூழலில் இந்த 1200க்கு 1080 மதிப்பெண் வாய்ப்பே இல்லை..-மைதிலி வீட்டில் குடிசை வீட்டுக்கு பின் சாக்கினால் அடைக்கபட்ட குளியல் அறை மட்டுமே இருக்கின்றது,.. கழிவறையே இல்லை...அது என் கிராமத்து பழைய வீட்டை நியாபகபடுத்தியது...



தனக்கு டாக்டர் படிக்க ஆசைதான் என்றாலும் ஆறு வருடம் பொருளாதாரத்தை   சமாளிப்பது ரொம்ப கடினம் என்பதால் நான் இப்போது பிஇ படிக்கின்றேன் என்று சொன்னார்... 

பேச்சில் நிறைய வெகுளிதனம்...இன்னும் நல்ல சூழலில் அந்த பெண் இன்னும் உலகம் புரிந்தவளாக நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு சந்தோஷத்தை அளித்தது...

9500ரூபாய் பணம் கல்லூரிக்கும், மீத பணத்தை அந்த பெண்ணின் செலவுக்கும் கொடுத்து விட்டு ,மைதிலி ரெசிப்ட் மட்டும் என் அட்ரஸ்சுக்கு மறக்காம அனுப்பிடும்மா என்றேன்.. கண்டிப்பா சார்.. என்றார்..


(மைதிலி பணம் கட்டி  எனக்கு அனுப்பிய ரெசிப்ட் )

விடைபெற்று  நானும் நண்பர் நித்யாவும் கிளம்பினோம்..


ஜாக்கிசார்..


என்னம்மா?? 


சார் அடுத்து  வருஷம்  எனக்கு ஏதாவது உதவி  செய்யமுடியுமா? என்றார்.. நான் கவலைபடாமல் படிம்மா பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றோம்..


பணம் என் அக்கவுண்டுக்கு அனுப்பியவர்கள்.. இதுவரை ஒரு வார்த்தை கேட்கவில்லை..7500 பணம் அனுப்பிய நண்பர் போனில்  என்னை தொடர்பு கொண்டு பேசும் போது.. ஜாக்கி நான் உங்ககிட்ட கொடுத்துட்டேன்..அது உரியவரை போய் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.. அதனால் அதுபத்தி பேசாதிங்க என்று சொன்னார்...


ஜாக்கிக்கு அந்த நல்ல பெயர்  மற்றும் நம்பிக்கை போதும்...


 ஒரு வாரகாலம் என்னிடம் இருந்த அந்த பெண்ணின் பணத்தை நான் அவரிடம் கொடுத்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது..ஏதோ மனதில் ஒரு நிறைவு வந்து ஒட்டிக்கொண்டது... ஏதோ சாதித்து விட்ட உணர்வு


அன்று இரவு நிம்மதியாக தூங்கினேன்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

40 comments:

  1. Inspirational post, Jackie.
    I am very proud of you.

    -Nadodipayyan

    ReplyDelete
  2. உங்களை உளமார வாழ்த்துகிறேன் ஜாக்கி...

    ReplyDelete
  3. Jackie... Let me know if you need a helping hand for the next year.

    ReplyDelete
  4. ஜாக்கி அண்ணே ..நல்லா இருப்பீங்க. சந்தோஷமா இருக்கு அவங்களுக்கு ஒரு வகைல உதவி கிடைச்சுதேன்னு

    ReplyDelete
  5. ///7500 பணம் அனுப்பிய நண்பர் போனில் என்னை தொடர்பு கொண்டு பேசும் போது.. ஜாக்கி நான் உங்ககிட்ட கொடுத்துட்டேன்..அது உரியவரை போய் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.. அதனால் அதுபத்தி பேசாதிங்க என்று சொன்னார்...////

    இப்படி ஒரு நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். வாழ்த்துக்கள்

    உங்கள் எழுத்துக்கள் மூலம் நிச்சயம் இன்னும் பலர் பயனடைய வேண்டும்..

    இதற்கென உதவின அத்தனை தன்னலமற்ற உள்ளங்களுக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

    ReplyDelete
  6. ஜாக்கி, இந்த மாதிரி எழுதுங்க. உதவி பண்ணுங்க. உலகம் உங்களை வணங்கும். அதை விட்டு விட்டு ..த்தா என்றெல்லாம் எழுதினால் படிக்க அருவெருப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நல்ல காரியங்கள் தொடரட்டும் ஜாக்கி...

    ReplyDelete
  8. சூப்பர் நண்பா...

    வாழ்க பல்லாண்டு...

    ReplyDelete
  9. I am usually a silent reader in your blog. I am so much touched by this entry . I am glad that you have taken your time to publish about them and the trust that everyone has on you helped the two gals. Thank You so much sir .

    ReplyDelete
  10. இது போன்ற நல்ல காரியங்கள் தொடர உங்கள் ப்ளாக்கும் அதன் வாசகர்களும் கண்டிப்பாக உதவுவார்கள் ! ! !

    ReplyDelete
  11. படித்ததும் கண் கலங்கி விட்டது. ஜாக்கி.

    ReplyDelete
  12. thannudaiya metha vilaasatthai velippaduththa blogg-ai upayogapaduththum araikuraikalin maththiyil unkal paniyum paaniyum uyarvaanathu!vaazhththukkal!

    ReplyDelete
  13. நல்ல செயல்களை செய்யும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பிரதிநிதிகள்தான் அப்படிப்பட்ட நண்பர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  14. உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!

    ஜாக்கியைப் பார்த்து இதையும் பின்பற்ற முயல வேண்டும் - என்று எனக்குத் தோன்றியது.

    ReplyDelete
  15. நல்ல காரியம் தொடரட்டும்.. உளமார வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. //இது போன்ற நல்ல காரியங்கள் தொடர உங்கள் ப்ளாக்கும் அதன் வாசகர்களும் கண்டிப்பாக உதவுவார்கள் ! ! !//

    I too support the statement

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  18. ஜாக்கி,
    உங்களை போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை பலரது வாழ்வில் ஒலி பிறக்கும் - உங்களுக்கும் உங்கள் பிராத்தனைக்கும், எல்லாம் வல்ல இறைவன் செவிசாய்ப்பான் !

    ReplyDelete
  19. சிறப்பான பணி ஜாக்கி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. கலக்கிடிங்க தல.... அந்த சகோதரி பின் நாளில் பெரிய இடத்துக்கு போய் வேலை செய்யும் போது தான் நீங்கள் முழு சந்தோஷம் அடைய முடியும்... அடுத்த வருடத்துக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துகள்.. அகரம் பவுண்டேசனால் முடியாதது ஜாக்கியின் வாசகர்களால் முடிந்தது....

    ReplyDelete
  21. suvarasyamaga eluthuvadhi vida indha madhiri uruppadia eluthurathu than best...that is jackie anna

    ReplyDelete
  22. தோழி ராகவிக்கு விரைவில் குணமடைய நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்... விரைவில் அவர் குணமடைவார்....

    ReplyDelete
  23. wonderful work jackie..././
    u have done a great job via this blog while some others r trying to make money by blogging..././
    U r really great bass.././
    my wishes to u..././

    -AnoJan

    ReplyDelete
  24. Iam a silent viewer
    Great job
    Will cal u soon

    ReplyDelete
  25. மிக்க நன்றி நண்பர்கேளே..

    நான் ஒரு கருவி... அவ்வளவே...

    அதே போல நான் ரொம்ப நல்லவன் சொல்லறிங்க.. நான் அக்மார்க் யோக்கியன் எல்லாம் கிடையாது.. குறைந்தபட்ச நேர்மையா வாழ முயற்சிப்பவன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்..

    ReplyDelete
  26. ஜாக்கிசார்.. நான் என்ன சொல்லறதுன்னே தெரியலை ரொம்ப நன்றிசார்..ரொம்ப ரொம்ப நன்றிசார்..இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். உங்க பிரண்ட்ஸ்க்கு எனது நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner