வாவ் என்று விசில் அடிக்க வேண்டும் போல
இருக்கின்றது...
இந்த படத்தை பார்த்த்தில்
இருந்து அப்படி ஒரு சந்தோஷம்... சமீபகாலங்களாக மலையாளப்படங்கள் நிறைய பார்த்து
வருகின்றேன்...மனதுக்கு நிறைவாக இருக்கின்றது... மனித உணர்வுகளையும் தவிப்புகளையும்
மிக அழகாக செல்லுலாய்டில் பதிய வைத்து நம்மை கவனிக்க வைக்கின்றார்கள்.
இதே மலையாளபடங்களை கடலூரில் இருந்த முத்தையா தியேட்டரில்
பார்த்து விட்டு பிட் எதுவும் இல்லை என்றால்.... குடும்பத்தோட பார்க்கற படத்துக்கு
எதுக்கு ஏ சர்ட்டிப்பிக்கேட் கொடுத்து இருக்கானுங்க என்று முனறிக்கொண்டே தியேட்டர்
ஓனரை சபித்து இருக்கின்றேன். ஆனால் இந்த படங்கள் நிச்சயம் பெரிய விஷயங்களை ஜஸ்ட்
லைக் தட்டாக மனதுக்கு நிறைவாக சொல்லி விட்டு செல்லுகின்றார்கள்.
ஒரு நாளைக்கு 5
வீடியோக்கள் வீதம் புதிது புதியதாய் புது வீடியோக்கள் காதலர்கள் அந்தரங்க
வீடியோக்கள் நெட்டில் உலவுகின்றன... விளையாட்டாக எடுக்கப்படும் இந்த வீடியோக்கள்
எந்த அளவுக்கு அது பெரிய பிரச்சனையை உண்டு பண்ண போகின்றது என்பதை வீடியோ எடுக்கும்
போது காதலனோ காதலியோ உணருவதேயில்லை.
ஸ்கேன்டல் வீடியோக்களில்
வரும் அத்தனை காதலிகளும் முதலில் வேண்டாம் என்று மறுக்கின்றார்கள்.ஆனால் உடல் சூடு
ஏற்றப்பட்ட பிறகு அவர்களல் மறுக்க முடியவில்லை.. அதன் பின் அவர்களே அவர்கள் உடலில்
பார்த்திராத அந்தரங்க பாகங்களை உலகமே பார்க்க கேமராவை அனுமதித்து விடுகின்றார்கள்... கடைசியில் வெளியே தெரிந்து தற்கொலை செய்து
கொள்ளுகின்றார்கள்.
ஆனால் செல்போன் செக்ஸ் ஸ்கேன்டல் பிரச்சனையை முதன் முதலில் இந்தியில் தோல்
உரித்தவர்கள் அனுராப்கஷ்யாப் குரூப் தான்... தங்களது படமான தேவ் டி என்ற படத்தை
எடுத்து பரபரப்பை உண்டு பண்ணினார்கள்... அப்புறம் Chaappa Kurishu என்ற இந்த மலையாள படம்.... அடுத்து தமிழில் வழக்கு
எண் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்..
===============
Chaappa Kurishu என்றால் என்ன? பூவா தலையா
என்பதுதான் படத்தின் தலைப்புக்கான மலையாள
அர்த்தம்.
================
Chaappa Kurishu படத்தின் ஒன்லைன் என்ன?
ஒரே வயதுடைய இரண்டு இந்திய இளைஞர்கள் வாழ்வின்
ஏற்றதாழ்வுகள்தான் கதை.
==============
Chaappa Kurishu படத்தின் கதை என்ன?
அர்ஜூன் (Fahad Fazil), பண்கார
பையன் நிறைய பிசினஸ் பண்ணும் பையன்.. அவன் கூட வேலைபார்க்கின்ற சோனா
(ரம்யா நம்பீசன்) காதலிக்கின்றான்... ஆனால் வீட்டில் பார்க்கும் பெண்ணையும்
கல்யாணம் செய்துக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவில்லை....அன்சாரி. (Vineeth
Sreenivasan), அன்னாடங்காட்சி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவன்....
பிக் பஜார் போன்ற கடையில் ஹவுஸ் ஸ்கீப்பிங் வேலை
செய்து வயிற்றை கழுவிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் கூட வேலை செய்யும் நபிசாவை
(Niveda)
காதலிக்கின்றான்...
அர்ஜுன் ரம்யா இரண்டு பேரும் தனிமையில் இருக்கும் போது
வீடியோடிவில் அதனை படமாக எடுத்து வைக்க, அதே போனில் பலவ பிராஜெக்டுகளின் வரைபடங்களையும் வைத்து
இருக்கின்றான்...ஆனால் அந்த போன் தொலைந்து
போய் விடுகின்றது.. அந்த போனை அன்சாரி எடுக்கின்றான்.. தொலைந்த போனை எப்படி
அர்ஜூன் எப்படி கண்டுபிடித்து வாங்கினான்
என்பது மீதிக்கதை.
=====================
படத்தின் சுவாரஸ்யங்கள்.
வேவ்வேறு சூழ்நிலையில்
வாழும் இரண்டு இந்திய இளைஞர்களின்
வாழ்வை சுற்றி திரைக்கதை அமைத்து இருக்கின்றார்... இயக்குனர் சமீர் தாகீர்
அடூர் கோபால
கிருஷ்ணன் பாடங்களையும் பிட்டு படங்களையும் பார்க்க கண்ணுக்கு பிரெஷ்
லுக்கை மலையாள சினிமாவுக்கு கொடுத்த சினிமா என்றால் நான் பிக் பி படத்தை
குறிப்பிட்டு சொல்லுவேன்.. அத்ன் ஷாட்
டேக்கிங் கட்டிங் எல்லாவற்றையும் பார்த்து விட்டு எங்கே
சேட்டன்கள் நம்மை பீட் பண்ணி விடுவார்களோ என்று அச்சத்தை உண்டு பண்ணி இருந்தார்கள்... அந்த படத்தை இயக்கியவர்
ஆமல் நீரத்.. பட் அந்த படத்துக்கு சினிமோட்டோகிராபர் நம்ம சமுர் தகீர்தான் அசத்தி
இருப்பான் மனுஷன்...
இவருடைய படம்
தான்.. டைமன்ட் நெக்லஸ்.... இந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்.http://www.jackiesekar.com/2012/10/diamond-necklace-2012_4.html
21 கிராம்ஸ் படத்தின் பேசிக் லைன்னை எடுத்துக்கொண்டு வேறு
மாதிரி திரைவடிவம் கொடுத்து இருப்பதை இயக்குனர் எந்த மழுப்பலுமின்றி ஒத்துக்கொண்டு
இருக்கின்றார்..
இந்த காலகட்டத்தில் கொடுத்து வைத்த மனுஷன் யார் என்றால்
இயக்குனர் பாசிலின் பையன்
பஹத்பாசில்தான்... மனிதர் தேர்ந்து எடுக்கும் கதாபாத்திரங்கள் ஆண்கள்
மத்தியில் வறிற்று எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கின்றன...
வினீத் சீனுவாசன் அப்பாவின் பெயரை மிஞ்சுவிடுவார் அந்த அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட கேரக்டரை
உள்வாங்கி செய்து இருக்கின்றார்... ரப்பர் பேன்ட் போட்டு செல்போன் பேசும் ஏழ்மை வினீத்துக்கு ஒரு ஐ
போன் கிடைத்தால் எப்படி ரியாக்ட் செய்வான் என்பதை வாழ்ந்து காட்டி இருக்கின்றார்
என்றே சொல்ல வேண்டும்..
பெண்களை ஜஙஸ்ட் லைக்தட் மேட்டர் பண்ணும் ஒரு பண்ணார இளைஞன்.. பெண்ணை பார்த்தே காதலில் சொக்கும் ஏழை
இளைஞன் என்று இரண்டு எக்ஸ்ட்ரீம் கேரக்டர்களை உள்வாங்கி இருவருமே நடித்து இருக்கின்றார்கள்.
ரம்யா ந்நம்பீசன் உதட்டை இரண்டு நிமிடத்துக்கு படாத பாடு
படுத்தி கமலுக்கு சவால் விடுகின்றார் பஹத் பாசில்... ஒரு நடிகையாக இந்த படத்தில் இந்த காட்சிக்கு
ஒத்துக்கொண்ட ரம்யாவுக்கு வாழ்த்துகள்.. இன்பேக்ட் இந்த சீன் எடுக்கும் போது நான்
என்ஜாய் பண்ணேன்... 21 ஆம் நூற்றாண்டில் இந்த காட்சிக்கு யோசிக்க வேண்டுமா>? என்று டைரக்டத் கேட்டதும் ஒரு
நடிகையாக ஓகே சொன்னேன் என்கின்றார்.. ரம்யா..
குள்ள நரிக்கூட்டம் படத்தில் பார்த்த
ரம்யா தமிழ் ரசிகன் இந்த படத்தில் பார்த்தால் கொஞ்சம் ஹார்ட் பீட் எகிறும் என்பதை
நாம் மறுப்பதற்கில்லை... நம் கோபம் பஹத்
பாசிலின் மீது திரும்புவது நியாமே.,
கடைசி அந்த டாய்லட் பைட் ஒரு அற்புதமான காட்சி....
இந்த படம் முழுக்க முழுக்க 5டி மற்றும் 7டியில் ஷூட் செய்து இருக்கின்றார்கள்...
இன்னும் படத்தை பற்றி சொல்லி படத்தின் சஸ்பென்சை கெடுக்க
நான் விரும்பவில்லை.
/================
படத்தின் டிரைலர்.
============
படம் வென்ற விருதுகள்.
Award Category Result Recipient Ref.
Kerala State Film Awards 2011
Second Best Actor Won Fahad Fazil
Ramu Kariat Memorial Cultural Forum Awards
Best Second Film Won Chaappa Kurish
Film Guidance Society of Kerala Film Awards
Best Supporting Actress Won Remya Nambeesan
Vayalar Ramavarma Chalachitra Television Award
Best Actress Won Remya Nambeesan
Best Character Actress Nominated Remya Nambeesan
Asiavision Movie Awards
Trendsetter Award Won Listin Stephen
Vanitha Film Awards
Best supporting Actress Won Remya Nambeesan
Mathrubhumi Kalyan Silks Film Awards
Best Path Breaking Movie of the Year Nominated Chaappa Kurish [
Amrita Film Awards
Best Film Won Chaappa Kurish
Kochi Times Film Awards
Best Youth Film Won Chaappa Kurish
References
===============
படக்குழுவினர் விபரம்.
Directed by Sameer Thahir
Produced by Listin Stephen
Written by Sameer Thahir
Unni. R
Starring Vineeth Sreenivasan
Fahad Fazil
Roma Asrani
Remya Nambeesan
Nivetha
Music by Rex Vijayan
Cinematography Jomon T. John
Editing by Don Max
Studio Magic Frames
Distributed by Central Pictures
Release date(s)
July 14, 2011
Running time 130 minutes
Country India
Language Malayalam
==========
படத்தின் தீன் சாங்...
===============
பைனல்கிக்.
இந்த படத்தின் டிவிடி வாங்கி வைத்து இருந்தாலும் நான் இந்த
படத்தை பார்க்கவில்லை.. பட் தம்பி கார்த்தி என்னிடம் இந்த படத்தை பார்க்க சொல்லி
பரிந்துரைத்தார்.. லேப்பில் போஸ்ட் போட்டு இருக்கும் நான் முதன் முதலில் முழு
நீளதிரைப்படத்தை லேப்டாப்பில் இதுவரை நான் பார்த்து இல்லை....முதல் முறையாக
லேப்டாப்பில் முழு நிள திரைப்படத்தை பார்தேன்..
ஒரு பிளாஷ் பேக்..
அண்ணே ஏன் இப்ப எல்லாம் போஸ்ட் அதிகம் போடறதில்லை..
என்று தம்பி முகமது சேட்டுக்கு வந்தான்.
என் டெஸ்ட்டாப் மக்கார் பண்ணிய கதையை சொன்னேன்... அண்ணே நேரா திநகர் கே செவன் ஆபிஸ்ல
என் லேப்டாப் கொடுத்துட்டு போறேன் வந்து
வாங்கிக்கோங்க என்றான்...
இரண்டு பேரும் இன்னும் சந்தித்தது கூட இல்லை... போனேன் லேப்டாக் வாங்கி அதில் சில போஸ்ட்டுகள்
போட்டேன்..
முகமது தம்பி என் சிஸ்டம் ரெடிஆகிடுச்சி... பட் உன் லேப்பில
நைட்டு படம் பார்க்கிறேன்... ரொம்ப வசதியா இருக்கு என்றேன்... என் கிட்ட இரண்டு
லேப்டாப் இருக்கு... எப்ப வேணுமோ வாங்கிக்கறேன்... நீங்களே வச்சிக்கிட்டு படம்
பாருங்க என்றான்...
அப்படி பார்த்த
படம்தான் இந்த படம்..
இந்த படத்தை
இன்னும் இரண்டு மணி நேரத்தில் கிரிஸ்ப்பாக எடுத்து இருந்தால் இன்னும் பெரிய வெற்றியை இந்த படம் அடைந்து இருக்கும்
என்பதில் ஐயம் இல்லை... இந்த படம்
கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம்.
நன்றி கார்த்தி மற்றும் முகமுது..
=============
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஆறு மதிப்பெண்கள்.
==============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
adappaavikala padam paakka sonna ennayum marathuttiye nanbaaa
ReplyDeleteAppadiye TRIVENDRUM LODGE yum paathuttu oru vimarsanam . . .
Thanks Jackie for recomending films. I am having a long list of Malayalam movies to watch. ustad hotel, salt and pepper,22 female kottayam, this one and many.
ReplyDeleteநன்றி ராஜோலன்.... நியாபகம் இல்லை. அந்த படம் எல்லாம் எப்பயோ பார்த்தாச்சி.. எழுத நேரம் இல்லை.
ReplyDeleteboss,
ReplyDeletealso try trivandrum lodge, david and goliath,amen, ustad hotel.
Very Good Film.. i also written one post abt this movie..
ReplyDeletehttp://riyasdreams.blogspot.com/2013/02/3.html
thanks for sharing
ReplyDeleteAnnaiyum rasulum,Daimond Necklace, ustad hotel, celluloid padangalaum paakka try pannunga sekhar.
ReplyDelete