35 வயதுக்கு மேலே
உடம்பெங்கும் வலி வியாபிக்கின்றது. புக் பண்ண படத்துக்கு அந்த நேரத்துக்கு தியேட்டருக்கு செல்ல
கடுப்பாய் இருக்கின்றது...
இரண்டு மாதத்துக்கு முன் பார்த்த ஜெர்மன் படத்தின் கதை என்ன
என்று நினைவு படுத்த.... முயற்சித்து தோல்வியில் முடிகின்றது.
சத்தியம்மில் எதிரில் காணும் நன்கு
பழகிய நண்பரின் பெயரை மறைந்த தொலைத்து
விடுகின்றோம்..
நன்றாக எழுதிய
திரைப்பட விமர்சனத்தின் தொடக்க பத்தியை எத்தனை முறை யோசித்தாலும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
முடியவில்லை.
இரண்டு மாடி ஏறி
வாங்கும் எக்ஸ்ட்ரா மூச்சு காற்றை
நினைத்து ,வயதாகி விட்டதோ என்று வருத்தம் கொள்கின்றோம்....
எழுத வேண்டிய விஷயங்கள் என்று மனதில் குறித்துக்கொண்ட
விஷயங்கள் ஆயிரத்துக்கு மேல் பத்துக்கு மேல் உயிர் கொடுத்து இருந்தாலே பெரிய விஷயம்.
விடியற்காலையில் தொப்பையை குறைக்க 5 மணிக்கு எழுந்திருச்சி
நடக்கனும் என்று திட்டமிட்டு, ஆறு மாதத்துக்கு மேல் ஆகின்றது. இன்னும் உதய
சூரியனை பார்க்கவில்லை..
ஆனால் 90 வயதில் கலைஞர்
தினமும் உதய சூரியனை
பார்க்கின்றார்... 4 மணிக்கு எழுந்திருக்கின்றார்.... ஓயாமல்
உழைக்கின்றார்...ஞாபகம் வைத்துக்கொள்கின்றார், உணவுக்கட்டுப்பாட்டோடு இருக்கின்றார்... எ
ஆனால் அவர் அனுபவத்தில் பாதி கூட இல்லாதவர்கள் அவர்களை
விமர்சிக்கின்றார்கள்... விமர்சிப்பதில்
நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை... ஆனால் ஒரு அளவு இருக்கின்றது... பிறந்தநாளின்
போது செத்து தொலைய வேண்டும் என்று
எழுதுகின்றார்கள்...
ஆனால் அவர் இது போல
நிறைய பார்த்தாகி விட்டது.
ஆன் ஊ என்றால் ஈழத்தை எடுத்துக்கொள்வார்கள்... நான் திரும்ப
திரும்ப சொல்லி வருவதுதான் மத்திய அரசை மீறி மாநில அரசு எதுவும் செய்து விட
முடியாது... நம்மவர்கள் தவிர இந்திய பிரதமரை கொன்றவர்கள் விடுதலை புலிகள் என்ற கருத்தை
மற்ற மாநிலத்துகாரர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த அதிகாரிகள் துணையோடு
ஸ்கெட்ச் போட்டு வேலை தீர்த்தார்கள்.. என்பது எல்லோருக்கும்
தெரியும்.. இன்று தமிழன துரோகி என்று வசைபாடுவோருக்கும் தெரியும்...
திடிர் என்று உதயம் ஆனார் ஈழத்தாய்... பிரபாகரன் போட்டோவை
கூட வைக்க விடவில்லை... இந்திய அரசின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு எதை ஒரு மாநில முதல்வர் செய்ய முடியுமோ அதைதான்
கலைஞர் செய்தார். அவர் மேல் வைக்கும் குற்ற சாட்டு எம்பிகள் ராஜினாமா செய்து இருக்க வேண்டும் என்பது...
இரண்டு முறை ஈழத்துக்காக ஆட்சி
இழந்து, ராஜிவ் கொலைக்கு உதவியர்கள் என்று முத்திரைகுத்தப்பட்டு உதை வாங்கி அவமானப்பட்டதுதான்
மிச்சம்...
காவிரி தண்ணிய வாங்கறதுக்கே இங்க நாக்கு தள்ளுது... இதுல கலைஞர் ராணுவத்தை
அனுப்பறதை தடுக்கனும்ன்னு சொன்னா எப்படி முடியும்... கலைஞர் முதல்வரா அல்லது பிரதமரா?
அதே அமைதி படை செய்த அட்டுழியத்தை மனதில் கொண்டுதான்.....
சென்னை வந்த படையினரை வரவேற்க்க செல்லாமல் கலைஞர்புறக்கணித்தார் என்பது வரலாறு... எத்தனை முறை என்ன செய்தாலும்
கடைசிவரை விடுதலைபுலிகள் கலைஞரை
உதாசினப்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
==========
தோழர் கவின் மலர் மிக அழகாக ராஜீவ் கொலையின் போது
நடைபெற்ற சம்பவத்தை தனது முகநுலில் எழுதி
இருந்தார்... எங்கள் ஊரிலும் இப்படித்தான் நடந்தது... கவின் மலர் எழுதிவிடடார்... நான் எழுதவில்லை அவ்வளவுதான்.... அவர் எழுதியது உங்களுக்காக கீழே.
===
மே 21 இரவு 10.20க்கு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட
மறுநாள் காலை 8 மணிவாக்கில் நாகை ஹவுஸிங் யுனிட் அருகே ஓடிவந்த கும்பல் ஒன்று
அங்கிருந்த திமுக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து திமுக கொடியை கொளுத்தியது.
அப்போது நான் பள்ளி மாணவி. எங்கள் குடும்பம்,
அக்கம்பக்கத்து வீடுகள் எல்லோரும் நின்று அந்தக் காட்சியைப்
பார்த்தோம். ‘எனக்கு ரத்தம் கொதிக்கிறது’
என்றார் சிபிஎம் கட்சிக்காரரான எதிர்வீட்டு மாமா.
செய்வதறியாது அந்தக் கும்பல் செய்த அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம்
பால்கனியிலிருந்து. அன்றைக்கு திமுக புலிகளின் ஆதரவுக் கட்சியாக அறியப்பட்டது.
அதனாலேயே ஊருக்கு ஊர் திமுக கொடிகள் எரிக்கப்பட்டன. அந்த நெருப்பின் சாம்பலில்
இருந்துதான் ஜெயலலிதாவுக்கான நாற்காலி செய்யப்பட்டது. இறந்துபோய் தரையில் கிடந்த
ராஜீவ்காந்தியின் உடலை போஸ்டரில் போட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் காங்கிரஸும்
அதிமுகவும் ஓட்டு கேட்டன. அனுதாப அலையில் ஜெ. முதல்வரானதும் நடந்தது. இதெல்லாம்
பழைய கதை. இப்போது ஜெயலலிதா தன் தந்திரத்தால் ஈழத்தாய் ஆகிவிட்டார். கருணாநிதியும்
திமுகவும் வரலாற்றுத் தவறுகளால் துரோகி என்று பெயர்பெற்றாகிவிட்டது. காலம் எவ்வளவு
மகத்தானதோ அதே அளவு கொடூரமானதும்கூட.
===============
பல்பெருகிய குடும்ப உறுப்பினர்களின் தொல்லை அதிகம் என்பதும்
மறுக்க முடியாத உண்மைதான்... ஆனால் குடும்பத்தை மறந்து மக்கள் பணியே என்று கிடந்தவர்கள்.. காமராஜர் , கக்கன்
போன்றவர்கள் ஆனால் நம் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்தானே...?
உத்தமர் அந்திம காலத்தில் கக்கன் அரசு ஆஸ்பத்திரியில்
பாயில் கிடத்தி நாறடித்த படுபாவிகள்தானே நாம்...
ஜெ மற்றும் கலைஞர் இரண்டு பேர் மீதும் விமர்சனங்கள்.. உண்டு
கலைஞரை அக்மார்க் சுத்தம் என்று ஒரு போதும் நான் வாதடியதில்லை... இரண்டு
திருடர்களில் மக்களுக்காக நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு அந்த திருடனை
பிடிக்கும்.
================
சூர்யா பார்ன் டூ வின் என்ற நண்பர் கலைஞர் பிறந்தநாள்
குறித்து எழுதிய முகநூல் செய்தி
சூர்யா
70
,00,000கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகடிதங்கள்
1000த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75திரைப்படங்கள்
72ஆண்டு பொதுவாழ்க்கை
70ஆண்டு பத்திரிகையாளர்
65ஆண்டு கலைத்துறைபங்களிப்பு
60ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல்வெற்றி
50ஆண்டு சட்டசபைபணிகள்
18ஆண்டு தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசுதலைவர்களை
உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
என்றும் தமிழின
தலைவர் கலைஞர்
#பிறந்த நாள் வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன் உங்கள் பொற்பாதம் தொட்டு..!
=========================
சரி கலைஞரை மட்டும்
இவ்வளவு பேர் விமர்சிக்கின்றார்களே.....? ஜெவை விமர்சிக்க வில்லையே என்ன காரணம் என்றால் கலைஞர் மீது பயம் இல்லாததுதான்...
ஜெ வை எதிர்த்த சந்திரலேகா கலெக்டர்
என்னவானர் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்...அதான் காரணம்.
============
ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும்... தமிநாட்டின் தவிர்க்க முடியவே முடியாத சக்தி. கலைஞர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... கலைஞர் அவர்களே....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அருமை மிக அருமை தல,
ReplyDeleteகலைஞர் எதிர்ப்பு என்பது "அவாள்"ஊடகங்கள் செய்யும் வேலை தல,
நீங்க சொன்ன ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க ட்விட்டரில்,
கலைஞர் என்றால் ரவுண்டு கட்டி விமர்சனம் செய்வது,
ஜெயா என்றால் உடம்பில் உள்ள எல்லா ஓட்டையும் பொத்திகிருவாங்க,
கேட்டால் நடுநிலை, சமநிலைன்னு பீலா விடுவாங்க,
ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது, அவர்கள் எல்லாம் அக்மார்க் அதிமுக என்று.
மிகவும் அருமையான பதிவு தல
கலைஞர் திருநாள் வாழ்த்துக்கள்
GOOD POST PLEASE SEE ABIAPPA `S TODAY`S POST IN HIS BLOG.....................
ReplyDeleteGOOD POST PLEASE SEE ABIAPPA `S TODAY`S POST IN HIS BLOG.....................
ReplyDeleteGOOD POST SEE TODAY`POST AT ABIAPPA BLOG.................
ReplyDeleteதமிழனின் ஹீரோ ஒர்சிப்பும் அடிமைத்தனமும் (அதாவது அவர் அரியணை ஏறினால் அனுகூலம் அடையலாம் என்கிற அற்ப புத்தியும் சேர்ந்துதான் )கெட்டவனைக் கூட நல்லவனாக மாற்றி விடுகிறது. அதனால் தானே ஒரு 5000 பேரைக் கொண்டு வெள்ளைனால் 40 கோடி பேரை ஆளமுடிந்தது. அதற்கு நீங்களுமா பலி?
ReplyDeleteநன்மையே வருக.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteJackie, i think you should delete comments like doha which is blatantly anti brahmin. it is somebody who wants to stir up trouble and hatred. i think you are beyond this and i would like to report that post as abuse. please do the needful. you do not need followers of that calibre. i read your blogs regularly and i am pained that you allow such racist comments. thank you...rajamani
ReplyDeleteVery good entry.
ReplyDeleteTo respond to previous commentator, Brahmin caste simply does not oppose Kalainger. He was instrumental in growing an anti-brahmin sentiment to grow a vote bank. As a result, that community usually views him with suspect.
This community does not simply vote for Jayalalitha either.
IMHO, ust like any other Tamilian, they get fed up with one 5 year term of a government and vote for the other party.
nice post, whatever mentioned by you in this letter is exactly correct, nobody have a gets to criticize about Jeya/AIADMK, moreover now the latest trend in fb is almost all sullans criticizing abt DMK especially abt kalinger
ReplyDeleteNice post
ReplyDeleteThe most unforgettable thing done by Karunanithi was liquor shop, because he kept people drunkard. TN owes for him
ReplyDeleteravikumar, i dont know your age. but people still drank when there was prohibition in the 1950s and 60s. i grew up in madras, and all around me, there were illegal stills. and many of them contained poison killing hundreds of known deaths. and i guess thousands of unknown deaths. and as long as pondicherry exists, with wine bars spread over the tamil nadu border, prohibition is not going to work. i think education in how to stretch your drinks and moderation is the key.
ReplyDeleteThose days Drunkard people felt bad hence it was hidden issue. Just because consuming illicit liquor / taking a ride to Pondicherry for that is an excuse for consumption. Govt set for the people to lead good society not to generate rotten society
Deletei think kalaignar is the best CM administration wise we have ever had. not much publicity is given to his administrative skills - he chose top notch bureaucrats to help him run an efficient government which got things done. corruption is an all india thing. the day when it stops, india will be #1 in the world.
ReplyDeleteI believe Kamraj is the best CM than anyone
Deleteநிதர்சனமான உண்மைகள்! கலைஞர் எவ்வளவோஓஓஓஓஓஒ தேவலை ! ---------------------
ReplyDeleteதமிழனின் ஹீரோ பேச்சில்.அரிதாரம் பூசிய அழகில் மயங்கி .சினிமாவில் காண்பது அனைத்தும் உண்மை என நினைப்பது .தன் பிள்ளையை படிக்க வைப்பது, அண்ணன் பிள்ளையை மாடு மேய்க்க வைப்பது . அடிமைத்தனமும் (அதாவது அவர் அரியணை ஏறினால் அனுகூலம் அடையலாம் என்கிற அற்ப புத்தியும் சேர்ந்துதான் )கெட்டவனைக் கூட நல்லவனாக மாற்றி விடுகிறது. அதனால் தானே ஒரு 5000 பேரைக் கொண்டு வெள்ளைனால் 40 கோடி பேரை ஆள முடிந்தது. அதற்கு நீங்களுமா பலி?பொறாமை குணம் ,சாதி வெறியர்கள் ,சதிகாரர்கள் அறியாமை வர்க்கங்கள் ,பொய்யான வசன பேச்சுக்கு அடி பணியும் பாமர மக்கள்கள், நல்ல இளம் தலைவர்களை வளரும் முன்பே கிள்ளி எறிந்து விட ஏவப்படும் கொலை வெறியர்கள் .பணத்துக்காக எதையும் செய்ய
ReplyDeleteதுணியும் எட்டு அப்பனுக்கு பிறந்தவர்கள் ,உண்மையை சொல்லப்போனால் பாதுகாப்பு இன்றி ,தொண்டர் படை இன்றி மொழி வேறுபாடு ,மத வேறு பாடு காட்டாமல் ஒரு மனிதனாக அனைத்து மக்களின் மனதிலும் இடம் பிடித்து ஒரு தலைவன் ,,,இல்லை இல்லை மக்களுக்கு சேவை செய்ய சேவகன் வரும் வரையும் , .அப்படியும் இல்லை என்றால் படைத்த கடவுளே வந்ததால் தான் விடிவு காலம் பிறக்கும் என்பதே உண்மை
They talk of the hero. Turns Painted beauty fainted. Cinema as seen in all the thinking. Their children to keep reading, I put the kid to wrangle cow. Slavery (ie, petty mind that he can be an advantage to the throne erin together) is bad, even good change. So the 40 million people vellain bring himself to rule over a 5000 people. It kills you? Jealousy, caste fanatics, ignorant classes conspirators, false Subtitles speech to the laity in the work, developing good young leaders launch has already killed more than killi fanatics throw. Do anything for money
ReplyDeleteDare eight appan the births, tell the truth, but security without the volunteer force without linguistic, religious and other singing without a man for all people's minds Five caught a leader, not the people to serve the server comes up. Still not created by God since the vitivu The time of birth is