Porfirio/2011/உலகசினிமா/கொலம்பியா/ஒரு மாற்றுதிறனாளியின் கதை.
வாழ்வின் துயரமான கணங்கள்  எது என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்...-?,,
புறக்கணிக்கப்படுவதுதான். முற்றிலுமாக புறக்கணிப்படுவதன் வலியை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். அப்படி அனுபவித்தவன் என்ன வெல்லாம் செய்வான்.... சாது மிராண்டல்...???? அவ்வளவுதான்.

இடுப்புக்கு கீழே  பெராலிஸ் அட்டாக்கில் சுத்தமாக செயல்படாமல் இருக்கும் ஒருவனால் விமானத்தை கடத்த முடியுமா?  நம்பிக்கைகொடுத்த மனிதர்களோ அல்லது அரசோ ஏமாற்றினால் நிச்சயம் முடியும்... அப்படி புறக்கணிக்கப்பட்ட மனிதரின் உண்மைகதைதான் இந்த கொலம்பிய நாட்டு திரைப்படம்..

================
Porfirio/2011/உலகசினிமா/கொலம்பியா/ படத்தின் ஒன்லைன்...

நம்பிக்கை கொடுத்த அரசே  எமாற்றினால் மாற்று திறனாளியாக இருந்தாலும் பழி வாங்கியே தீருவான்.
=========
Porfirio/2011/உலகசினிமா/கொலம்பியா/ படத்தின் கதை என்ன?

1991 ஆம் ஆண்டு  ஒரு போலிஸ் ஆப்பரேஷன் நடக்கும் போது Porfirio Ramirez என்பவரது  முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்து விடுகின்றது.... அது தண்டுவடத்தை பாதித்த காரணத்தால் இடுப்புக்கு கீழே பேராலிஸ் அட்டாக் ஆனது போல ஆகி விடுகின்றது... எல்லா இடத்துக்கும் வீல் சேரில் செல்கின்றார்...

 நன்றாக நடந்தவர் போலிஸ் ஆப்பரேஷனால் இப்படி ஆகி விட்டதே என்று வழக்கு தொடுக்கின்றார்... ஆனால் அவரை அரசு வஞ்சித்து விடுகின்றது... அதுக்கு பழி வாங்க ஒரு பிளைட்டை கடத்தி கொலம்பிய அதிபரை  பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் -? எப்படி என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

=================
 படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

முதலில் இந்த படத்தை வாங்கி பார்க்க தூண்டியது... இந்த படத்தின் போஸ்டர்தான்... ஒரு முதுகு.... அதில் இருக்கும் சின்ன வடு.. இதுதான் போஸ்டர்...


நன்றாக ஓடி ஆடிய மனிதர் விட்டத்தை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற ஒரு கொடுமை இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்பேன்.. மனைவியோடு   பேசிக் கொண்டு இருக்கும் போது விட்டத்தை பார்த்த எத்தனை சட்டம், எத்தனை டைல்ஸ் என்று எண்ணி சொல்வது வேதனை...

குளிப்பதில் இருந்து சிறு நீர் கழிப்பது வரை ஒருவர் உதவிக்கு வைத்துக்கொண்டு காலத்தை நகர்த்துவதை   நெகிழ்ச்சியாய் காட்டி இருக்கின்றார்கள்...

பிள்ளை குளிப்பாட்டி , உடை மாற்றி, ஆய் தனியா துணியில் சுற்றி எடுத்து போய் போடுவதில் இருந்து ,அவ்வளவு பெரிய மணிதருக்கு டயப்பர் ரெடி செய்து அணிவிப்பது வரை அந்த  பிள்ளை அழகாக  கூச்சமில்லாமல் செய்கின்றான்.... அப்படி பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.,

நஷ்ட ஈடு கொடுக்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றி  விட்டது அரசு..பூவாவுக்கு வழி...செல்போனை வாடகைக்கு விட்டு   உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கின்றார்...


நம்ம ஊர் படமாக இருந்தால் காமத்தை மட்டும் பேசாமல் அந்த மாற்றுதிறனாளியின் படத்தை எடுத்து விடுவார்கள்... காமத்தை அவர் எப்படி தீர்த்துக்கொள்கின்றார்... அதற்கு அவர் மனைவி உதவுவது எப்படி என்பது போன்ற விஷயங்களையும் நேர்மையாக  அலசி இருக்கின்றார்கள்...

வண்டி ரிப்பேர் செய்ய போன இடத்தில்  வண்டி ரிப்பேர்  செய்பவரும் ஒரு மாற்றுதிறனாளியாக இருக்க.... அவர்கள் இருவருடைய கனவுகள், அவர்களுடைய எதிர்காலம் என அவர்கள்  இருண்டு பேரும் பேசுவது தனித்துவம்...

படுக்கையில் இருந்து எப்படி சேருக்கு மாற போராடுகின்றார் என்பதை பார்க்க மனம்  கணக்கின்றது.

கேமரா அவர்   பார்க்கும் விஷவலில் மட்டுமே ஷாட்டுகளை வைத்து இருக்கின்றார்கள்..  எல்லா லென்தி ஷாட்டுகள்...  அதுதான் கொஞ்சம் படுத்துகின்றன.

ஒரு மாற்றுதிறனாளி மனிதனின் பின்புலத்தை வேதனையை வெளியுலகுக்கு சொன்ன இயக்குனர்..Alejandro Landes நன்றிகள் வாழ்த்துகள்... இந்த படம் பல உலகதிரைப்பட விழாக்களில் திரையிட்டு பாராட்டு பெற்றது... 


இந்த படம் டாக்குமென்ட்ரி பிக்ஷன்... அதனால் டாக்குமென்ட்ரி வாமைட அதிகம் வீசினாலும் உண்மைக்கதை எனும் போது  ஈர்ப்பு அதிகரிக்கின்றது.. அது மட்டும்  அல்ல சம்பந்தபட்டவரே நடித்து இருப்பது கூடுதல் சிறப்பு.
===========
படத்தின் டிரைலர்.
=================
படக்குழுவினர் விபரம்.


Directed by Alejandro Landes
Produced by Francisco Aljure
Alejandro Landes
Written by Alejandro Landes
Starring Porfirio Ramirez
Cinematography Thimios Bakatakis
Release date(s)
14 May 2011 (Cannes)
Running time 101 minutes
Country Colombia
Language Spanish

=========================
பைனல் கிக்...
இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம் என்பதும்... அதில் நடித்து  இருப்பவரை சம்பந்தபட்டவர் என்பதும் கூடுதல் சிறப்பு.. இந்த படம் பார்க்கவேண்டிய படம்....
==========
படத்தோட ரேட்டிங்.
 பத்துக்கு ஆறு..

======================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. Jackie enna leave aa,niraiya padam varuthu

    ReplyDelete
  2. want to c this movie. mr.jackie romba naala ungala oru rendu padatha paaka solraen.keka maatikireenga. unga pechu ka.

    Movie is 1). Human centipede

    2). The martyrs.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner