Thillu Mullu /2013 /தில்லு முல்லு.திரைவிமர்சனம்

  

ரீமேக் என்பது ஆண்டு 
அனுபவித்த  பொண்டாட்டியை கலவிக்கு டிரை பண்ணும் ரகம்.. சூழ்நிலைகள் சுவாரஸ்யம் கொடுக்கும் பட்சத்தில் அசத்தலாய் அல்லது சொதப்பலாய் அமையும் சாத்திய கூறுகள் மிக அதிகம்.. 

ஆனால் ரீமெக் இல்லாத புத்தம் புதிய திரைப்படம்.. புதுக்காதலியை கலவிக்கு  டிரை பண்ணுவது போல.... நிறைய சுவாரஸ்யங்கள் ஒளிந்து இருப்பதாலும், முதல் முறை என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஒரு வேளை சொதப்பினால் கூட ஒரு  சின்ன சிரிப்பு கூட காப்பற்றி விட வாய்ப்புகள் அதிகம். ஆனால் ரீமேக்கில்  அப்படி அல்ல...  சொதப்பினால் சொதப்பியதுதான்... அதுதான் ரீமேக் திரைப்படங்களில் இருக்கும் பெரிய ரிஸ்க்...

32 வருட கழித்து  வெளி வந்து இருக்கும் தில்லு முல்லு ரிமேக் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து விடுவோம்.

=======
தில்லுமுல்லு படத்தின் கதை என்ன?

படத்தின் கதை பார்த்து பார்த்து  நீங்கள் ரசித்த கதையை நான் திரும்பவும் சொன்னால் கோல்மால் படம் பார்த்த இந்திவாலா கூட சண்டைக்கு வர அநேக  வாய்ப்புகள் இருப்தால் கதையை நான் சொல்லவில்லை...
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை  போல  அப்பட்டம்மான  காப்பியை இந்த படம் அடிக்கவில்லை. நிறைய புதிதாய்  யோசித்து இருக்கின்றார்கள்..

சிவா படத்தின் பெரிய பலம் இருந்தாலும் ஒரே  மாதிரியான மாடுலேஷனில்  இருப்பதால் துனுஷ் மீது வைக்கும் விமர்சனத்தை போல இவர் மீதும் வைக்கலாம்... அதனால் உஷராக  கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் மெருகு ஏற்றுக்கொள்வது அவசியம்.

 நாயகி இஷா தல்வார் சின்ன சப்பையான உடம்பில் சிக் என்று இருக்கின்றார்.. சில  நேரத்தில் மொக்கையாகவும் இருக்கின்றார்... ரசிப்பதா வேண்டாமா என்று கற்பனையில்  ஆரம்பிக்கும் முன்னே படம் முடிந்து போகின்றது.

தேங்காய் சீனிவாசன் பாத்திரத்துக்கு ஆப்ட்டாக பிரகாஷ்ராஜ் பொருந்துகின்றார்... அவர் நடிப்பை நன்றாக இருக்கின்றது என்று பாராட்டு பத்திரம் வாசித்தால் நாக்கு  அழுகி போய் விடும்.

பரோட்டா சூரி மற்றும் அவர் காதலியாக சிவாவின் தங்கையாக நடித்து இருப்பவர்.. நன்றாகவே இருக்கின்றார். சூரி லைட்டா கிச்சி கிச்சி  மூட்டுகின்றார்.

இளவரசு நன்றாக   அவர் பாத்திரத்தை உணர்ந்து  நடித்து  இருக்கின்றார்.

இசை... அப்படி ஒன்னும் சிறப்பாய் இல்லை... எம்எஸ் தன் வாழ்நாளில் இப்படியான ரிச் கேள்ஸ் உடன் ஆடி இருக்க வாய்ப்பே இல்லை என்று கேரியரில் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

கடைசியில் வரும் சந்தானம்  தியேட்டரை கலகலக்க வைக்கின்றார்.

வசனம் உதவி  ரமேஷ் வைத்தியா என்று போட்டு இருக்கின்றார்கள்... கடைசியில்  சிவா தாலி காட்டாமல் ஒருத்தவங்க ஏமாறுகின்றார் என்றால் அவர் வைத்து இருந்த அதீத நம்பிக்கை பொய்து போய் விடுகின்றது என்று அர்த்தம்  ஐயம் சாரி சார் உங்க நம்பிக்கை நான் தகர்த்திட்டேன்னு சிவா   சொல்லும் அந்த வசனம் நறுக்..

அரைத்தமாவையை அப்படியே அரைக்காமல் கொத்தமல்லி கருவேப்பிலை  தூவி விட்ட இயக்குனர் பத்ரிக்கு வாழ்த்துகள்.

==============
படத்தின் டிரைலர்.

===========
படக்குழுவினர் விபரம்.

Directed by Badri
Produced by S. Madhan
Story by Sachin Bhowmick
Based on Gol Maal by Hrishikesh Mukherjee
Starring Shiva
Isha Talwar
Prakash Raj
Music by M. S. Viswanathan
Yuvan Shankar Raja
Studio Vendhar Movies
Release date(s)
June 14, 2013
Country India
Language Tamil


===========
பைனல் கிக்.
டிவி பார்க்க போர் அடிக்கின்றது.... பீச் போக போர் அடிக்கின்றது, என்று மனம் விட்டோத்தியாக இருக்கும் போது தில்லுமுல்லு போய் பாருங்கள் கொஞ்சம் சிரித்து விட்டு வரலாம். எனக்கு இந்த படம் டைம்பாஸ் படம் என்று சொல்லுவேன். ஆனால் சிலருக்கு படம் பிடித்து இருக்கின்றது..
=============
ரேட்டிங்
பத்துக்கு ஐந்து
=============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

  1. //ரீமேக் என்பது ஆண்டு
    அனுபவித்த பொண்டாட்டியை கலவிக்கு டிரை பண்ணும் ரகம்.. //

    என்ன ஒரு ஒப்பீடு கலக்கல்

    ReplyDelete
  2. கலவிக்கு ஒப்பிடுவது ரொம்ப ஓவர் பாஸ்

    ReplyDelete
  3. Hai Anna...
    how r you..
    anni, pappa eppadi irukkanga,...
    kettatha sollunga...

    Naan, ennoda husband, 2 pasanga ellararum nalam...
    familiyoda cochi veettukku vanganna.. Nalla Malai..
    climat super...

    appuram eppadinna ippadiyellam example yosikkirenga...
    SPIRIT Malyalam movie review ezhuthunganna...

    -Kavitha Saran

    ReplyDelete
  4. அன்பின் தங்கை கவிதாவுக்கு... இங்கு அண்ணி குழந்தை நலம்.. அது போல என் அன்பை கணவருக்கும் உன் பிள்ளைளுக்கும் சொல்லவும்....

    போன முறை வயநாடு வந்தேன்...

    விலாசமும் போன் நம்பரும் அனுப்பவும்... கண்டிப்பாக குடும்பத்துடன் வருகின்றேன்.

    யோசிக்கும் போது வருவதை எழுதிகின்றேன்... ரூம் எல்லாம் போட்டு யோசிப்பதில்லை...

    ஸ்பிரிட் மலையாளபடம் பார்த்து விட்டேன்.. நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

    பிரியங்களுடன்
    அண்ணன் ஜாக்கிசேகர்

    ReplyDelete
  5. நன்றி பிரேம் நன்றி நைனா.... தொடர்ந்து எழுத உத்தேசம் பரம்பபொருள் அருளோடு..

    ReplyDelete
  6. மிஸ்டர் ராமகிருஷ்ணண் ராமனுக்கு மலை போன்ற தோள்கள்ன்னு சொன்னா நம்புவிங்களா?.

    ReplyDelete
  7. நான் நேற்று படம் பார்த்தேன் சேகர் சார் நல்ல டைம் பாஸ்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner