சில வேலைகள் ரொம்பவே ஆத்மார்த்மானது...
மாட்டை மேச்சோமா கோலை போட்டோமா என்று சில வேலைகள் இருப்பதில்லை...
மாட்டை மேச்சோமா கோலை போட்டோமா என்று சில வேலைகள் இருப்பதில்லை...
20 வருடத்துக்கு முன் கடிதங்கள் பொது மக்களுக்கு செய்தியை சொல்ல முக்கிய பங்கு
வகித்தன... நகரத்தில் ஒரு படித்த பிள்ளை
போட்ட கடிதத்தை தபால்கார்ர் கொடுக்க
பத்து கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து உரியவரிடம் சேர்த்த ,அந்த கால
தபால்காரர் பணி எவ்வளவு உன்னதமானது...
எவ்வளவு மேன்மையானது. உரியவரிடம்
அந்த தபாலை சேர்க்கும் போது ஒரு
முக்கியமான சேதியை சேர்த்த சந்தோஷம் அவரிடத்தில் இருக்கும் தானே...???
சென்னை அரசு மருத்துவமணையில் டாக்டர் தம்பி பாலாவை பார்க்க போய்
இருந்தேன்... கொஞ்சம் லேட்டா வந்தான்...
என்னடா வேலை அதிகமா-?
ஆமாம்ண்ணே.. அதான் லேட்டாயிடுச்சி... சாரி...
ச்சே எதுக்கு சாரியெல்லாம்
சொல்லிக்கிட்டு....
என்ன
கேஸ் ? ரொம்ப வேலையோ?
ஆமாண்ணே
ஈசிஆர்ல ஒரு டூவிலர்காரர் மேல, ஒரு பஸ் அவரோட இடுப்புல
ஏறிடுச்சி... ரொம்ப கிரிட்டிக்கல் அதான் போட்டோ எடுத்த
வச்சேன்.......போட்டோ காட்டினான்.... தொடையில் இருந்து மார்புவரை பேருந்தின் டயர் தடம் ஓராமாக தெரிந்தது...
நடுவே சுத்தமாக மேல் தோலே இல்லை.... உள்ளே
சதை அப்பட்டமாக தெரிந்தது. ஸ்குரு போட்டு, அங்காங்கே கம்பி வச்சி கட்டி
இருந்தார்கள்...
அண்ணே அப்பரேஷன் முடிய 5
மணிநேரம் ஆயிடுச்சி..... 5 மணி
நேரம் நின்னுக்கிட்டே பண்ணதால
கால் எல்லாம் மறுத்துடுச்சி... செம டயார்ட இருக்கேன்..
ரொம்ப கொடுமைடா பாலா....
ஆமாண்ணே இதுல வொர்ஸ்ட் கேஸ் சினாரியோ
என்னன்னா?? அந்த பையன் நாளைக்கு மதியம்
தாண்டறது கஷ்டம்...
என்னடா சொல்லறே...???
ஆமாண்ணே நிறைய பிளட் லாஸ் ....என்று சொல்லி
விட்டு டெக்னிக்கலா நிறைய பேசினான்...
சிக்னலில் பிச்சை எடுக்கும் பெண்குழந்தைகளை
பார்த்தாலே நமக்கு பக்குன்னு இருக்கு...
இதுங்க யாரு ? மழைக்கு இதுங்க எங்க
தங்கும் ...?
இரண்டு வயசு பிள்ளைங்களை கூட விட்டு வைக்காத சண்டாளுனுங்க... இந்த புள்ளை வேற பாக்க
கண்ணுக்கு லட்சனமா இருக்கே... ,யாராவதுஏதையாவது இந்த புள்ளைய செஞ்சு வச்சா... ??அல்லது கடத்திக்கிட்டு போய் பாம்பேல வித்துட்டா என்று யோசனை வீடு வரை நம்மை துரத்தும்....
ஆனால் உயிர் போன்ற விஷயத்தில் டாக்டர்கள்
மனநிலை எப்படி இருக்கும்...?
ஏன்டா??? 5
மணி நேரம் ஆப்பரேஷன் செஞ்சி.. நாளைக்கு மதியம் உயிர் போறதுக்காக? இப்படி போராடினிங்க....?
ஒரு நாளைக்கு லட்சகணக்குல பேஷன்ட் வர்ராங்க...
எல்லார் பிரச்சரனையும் என்னால தீர்க்க முடியாது..?
நான் ஒன்னும் கடவுள்
இல்லைண்ணே....
கண் எதிர்க்க உயிர்
துடிச்சிக்கிட்டு இருக்கு.... ஐந்து மணி நேரம் என் கடமையை நான் செஞ்சிட்டேன்...
நான் இன்னைக்கு நல்லா தூங்குவேன்.... நாளைக்கு மதியம் வரை என்பது அந்த பாடியோ
கண்டிஷனை வச்சி சொல்லறோம்... பட் அவன் உயிர் பொழச்சி இரண்டு வாரத்து டிஸ் சார்ஜ்
ஆனாலும் ஆகலாம்... நாங்க கடவுள் கிடையாது.. என் கடமையை நான் செஞ்சிட்டேன்..
என்றான்.
கேட்க ரொம்ப பெருமையாக இருந்தது..... சில
இடத்துல நம்ம கடமையை நாம சரியா செஞ்சிட்டா போதும்... நிம்மதி இருக்கும்.
தண்டையார் பேட்டைல பிரபல ரவுடி அவன்.....
பொண்டாட்டியோட வெளியே போயிக்கிட்டு இருந்தான்...
புதுப்பேட்டை தனுஷை போடறது போல, ரவுண்ட்
கட்டி கத்தியால அவன் உடம்புல பாலம் பாலமா
வெட்டிட்டாங்க.. உயிரை காப்பாத்திக்க அந்த ரவுடிங்க கிட்ட இருந்து தப்பிச்சி, பொண்டாட்டியும் அவனும் ஒரு அப்பாட்மென்ட்
கார் பார்க்குல மறைஞ்சிக்கிட்டாங்க...
ரவுடி இன்னும் சாகலை குத்து உசிறும் கொலை
உசிறுமா தப்பிச்சாட்டான்னு வெட்டன
ரவுடிங்களுக்கு தெரிஞ்சிடுது... பப்ளிக் நடமாட்டம் இருக்கறதாலே கெடைச்ச இடத்துல பதுங்கிட்டு, வெட்டு பட்டவன் தலை தெரியுதான்னு பார்த்துக்கிட்டு
இருக்காங்க.... தெரிஞ்சுதுன்னா கசாப்பு கடை கத்தியால நடு மண்டையில வெட்டி ஒரே
அடியா சாய்க்கனும்ன்னு பிளான் போட்டுக்கிட்டு மறைஞ்சிக்கறாங்க...
வெட்டு பட்ட ரவுடி துடிக்கறான்.. அவன் பொண்டாடி எதிர்ல உயிருக்கு போரடி வலியை
கட்டுப்படுத்திக்கிட்டு துடிக்க....108 க்கு ரவுடி பொண்டாட்டி அழுதுக்கிட்டே பொண்
பண்ண்றா.... நடந்த எல்லாக்கதையும் சொல்லிட்டா....
தகவல் தொழில் நுட்ப துணயோடு இரண்டு நிமிஷத்துல அந்த
ரவுடி பொண்டாட்டி சொன்ன இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் போயிடுச்சி....108 இருக்கற ஆட்களுக்கு ரவுடி
வெட்டப்பட்டு இருக்கான்... வெளிய வந்தா போட ஒரு கூட்டமே ரெடியா மறைஞ்சி இருக்கு. அப்டின்னறற விஷயம் தெரியும்....
இப்போ
எப்படி போய் உ தவி செய்யறது... ?அவனை போடும் போது ஹெல்ப் பண்ண போன நம்மளையும் நடு மண்டையில போட்டு விட்டா?
இருந்தாலும் நாகேந்திரன் ஒரு அட்டென்டர்
துணிஞ்சி களத்துல இறங்கினார்...
காரணம் அவர் தன்
வேலையை உறுத்தல் இல்லாம செஞ்சாதான்
நிம்மதியா அன்னைக்கு நைட்டு டிநம்மதியா தூக்கம் வரும்... உயிரை துச்சமென மதிச்சி அப்பாட்மென்ட் உள்ள போய்
வெட்டு பட்ட ரவுடியை தூக்கிகிட்டு வந்தாங்க...
வண்டியில போட்டுக்கிட்டு போய் ஆஸ்பத்திரியில வச்சி சிகிச்சை கொடுத்து மறுநாள் சாயங்காலம்தான் அந்த ரவுடி இறந்தான்.... ஆனா நகேந்திரன்
எந்த உறுத்தலும் இல்லாம அன்று இரவு அவர் தூங்கி போனார்....
டெய்லி இது
போல பல கதைகள் வந்தாலும் நோபிள் புரோபஷனில் வேலை செய்பவர்கள் தன் மனசாட்சிக்கு
விரோதம் இல்லாமல் வேலை செஞ்சிட்டா
நிம்மதியா தூக்கம் வரும் அப்படி இல்லைன்னே... அவுங்க மிடில் கிளாஸ்
மனசாட்சி கொண்ணுடும்.... அப்படி அமெரிக்காவில் 911 எமர்ஜன்சி காலில் வேலை
செய்யும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இந்த திரைப்படம்.
=====================
The Call /2013/ தி கால்/ படத்தின் ஒன்லைன்.
எமர்ஜென்சி காலில் வேலை பார்க்கும் ஹல்லி
பேரி சந்திக்கும் பிரச்சனைகள்தான் படத்தோட ஒன்லைன்.
==============
The Call /2013/ தி கால்/
படத்தின் கதை என்ன?
ஹல்லி பேரி (Jordan Turner) 911 எமர்ஜென்சி
கால் ஆப்பரேட்டர்.... அவளுக்கு ஒரு கால் வருது... பதட்டத்தோட இவின்னு ஒரு பெண் பேசறா..
எங்க வீட்டுல என்னை கொலை
செய்ய ஒரு கொலைக்காரன் உள்ளே
நுழையரான்னு... ஹல்லி பேரி அவளுக்கு தைரியம் கொடுக்கறா... அவ
மாடிக்கு ஓடி ஜன்னலை திறந்து வச்சிட்டு
கட்டிலுக்கு- அடியில படுத்துக்கறா...
கொலைகாரன் மாடி வழியா
தப்பிச்சிட்டான்னு நினைச்சி கீழ இறங்கி போகும் போது , இவியா போனுக்கும் ஹல்லி போனுக்கும் சிக்னல் கட்டாக ,பதட்டத்துல ஹல்லி ரீடயல் செய்ய...
கட்டுலுக்கு பதிங்கியவயோட போன் சத்தம் கொலைகாரனுக்கு
காட்டிக்கொடுத்துடுது... எதுக்கு போன் பண்ணிங்க,.. அவன் இந்த போன் ரிங் சத்தத்தை கேட்டுட்டான்... என்னை கொலை பண்ண போறான்னு சொல்லி அழ...
.... ஹல்லி
அப்படி இல்லைன்னு நம்பிக்கை சொல்லறா.,.,? ஆனா அவன் அவளை பிடிச்சி இழுத்து போன
வாங்கி லைனில் அல்ரெடி டன் அப்படின்னு சொல்லி போனை வைக்க...
மறு நாள் அந்த பெண் சடலமாதான்
மீட்கபடறா.. அந்த பெண் சாவுக்கு அவதான்
காரணம்ன்னு ஹல்லியோட மிடில்கிளாஸ் மனசாட்சி உறுத்துது...
ஆறு மாசம் கழிச்சி.... ஒரு பொண்ணுக்கிட்ட
திரும்ப பதட்டமா போன் 911க்கு வருது ..மால்க்கிட்ட என்னை
கடத்திட்டாங்கன்னு அந்த காலை ஹல்லி பேரி
அட்டன்ட் பண்ணாற... ஆறு மாசத்துக்கு முன்ன செத்த பொண்ணை போல இந்த பொண்ணை
அந்தக்கொலைகாரன் கிட்ட காவு கொடுக்க கூடாதுன்னு
சபதம் எடுத்துக்கிட்டு வேலை செய்யற... அவள் முயற்சியில் வெற்றி பெற்று அந்த
பெண்ணை காப்பாற்றினாளா ? என்பதை வெள்ளிதிரையில்
கண்டு களியுங்கள்.
=======================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
911 எமர்ஜன்சி கால்...108 அட்டேன்டிங் கால்
என்று மிக சாதாரணமாக கடந்து போகின்றோம்..
பட் அந்த கால் சென்டரில் வேலை செய்யும்
பெண்களின் அடுத்த பக்கத்தை அவர்கள் மென்ட்ல் ஸ்டெரேஸ் போன்றவற்றை நாம் உணருவதே இல்லை... இந்த படம் அவர்கள் பின்புலத்தை விஸ்தாரமாக விவரிக்கின்றது.
பொதுவாய் கால் சென்டரில் வேலை
செய்பவர்கள்...கூடுமானவரை
பெண்களைத்தான் தேர்ந்து எடுக்கின்றார்கள்.. காரணம்... பொறுமை...
உதாரணத்துக்கு எர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்ய 1 ஐ அழுத்தி இரண்டைஅழுத்தி ,ஒன்பதை அழுத்தி லைன் கிடைச்சி ஒரு ஆம்பளை
பையன் போனை எடுத்தான்னா.... நம்ம பிரச்சனையை கேட்பான்... சப்போஸ் அவனை இரண்டு வார்த்தை கடுமையா பேசினா.. போனை
வச்சிடுவான்... ஆனா பொண்ணுங்க அப்படி இல்லை இரண்டு வார்த்தை கடுமையா பேசினா கூட
சார்.. உங்க பிரச்சனை புரியுது...24 மணி நேரத்துல சரி செஞ்சிடுறோம்ன்னு சொல்லி
வைப்பாங்க...,
இந்த
படத்தோட ஸ்கீரின் பிளே ரைட்டர் Richard D'Ovidio வின்....ஒய்ப்தான் 911 கால்
சென்டர் பெண்களோட வேலைபளுவையும் ,அந்த வேலை
காரணம அவுங்களுக்கு இருக்கற மன அழுத்தத்தையும் புருசன் கிட்ட சொல்லி இருக்காங்க...
அதை வச்சி திரைக்கதை மூளை சுவாரஸ்யமா கதை
பண்ணிடுச்சி.
ஹல்லி பேரி ... நிறையவே இளைச்சி போயிட்டாங்க.... என்னமாதிரி
கட்டைன்னு ஜேம்ஸ்பான்ட் படம் பார்க்கறப்ப... தியேட்டர்ல ஒருத்தர் கமென்ட் அடிச்சார்.. இந்த படத்துல ஹல்லியை பார்த்தா ,அவர்
இதயம் சுக்கு நூறா வெடிச்சிடும். பட்
பர்பாமென்ஸ்ல பின்னி எடுக்கறா பொம்பளை... அந்த இரண்டாவது கால் வரும் போது ஹல்லி காட்டும் படபடப்பையும்
பேச்சு குழறலையும், வரும்கால நடிகைகள் திரும்ப
திரும்ப பார்ப்பது நல்லது...
இரண்டாவது பொண்ணு மேல இன்னும் பரிதாபம்
வரவேண்டும் என்பதாலே... அழகான பெண்ணாக
தேர்ந்து எடுத்து போட்டு இருக்கின்றார்கள்...அந்த பெண்ணும் சும்மா
சொல்லக்கூடாது... அழகோடு நடிப்பையும் வாரி வழங்கி இருக்கின்றாள்.
அந்த இரண்டாவது பெண்ணை கடத்தியதில் இருந்து படம்
திரைக்கதையில் வேகம் எடுக்கின்றது...
இண்டிகேட்டர் லைட் உடைப்பது.. கை காட்டுவது.... காரில் போகும் பெண் போன் செய்வது ,வழிப்போக்கன்
உதவிக்கு வருவது, கார் மாற்றுவது, பெயிண்ட் ஊற்றுவது என்று திரைக்கதையில் நிறைய டுவிஸ்ட்டுகளை தூவி இருக்கின்றார்கள்.
அதுவே படத்தை பேய் வேகத்தில் இழுத்து
செல்கின்றது...
இயக்குனர் Brad Andersonனின் சிறந்த படைப்பாக இதுவரை மெக்கானிக் படம்
இருந்து வந்தது... அவரது கேரியரில் இந்த
படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.அல்ரெடி டன் என்ற வார்த்தையை கிலி
ஏற்ப்படுத்தி அதன் மூலம் கிளைமாக்ஸ்
முடிப்பது சிறப்பு.
=========
படத்தின் டிரைலர்
================
படக்குழுவினர் விபரம்.
Directed by Brad Anderson
Produced by Bradley Gallo
Jeffrey Graup
Michael A. Helfant
Michael Luisi
Robert Stein
Screenplay by Richard D'Ovidio
Story by Nicole D'Ovidio
Jon Bokenkamp
Richard D'Ovidio
Starring Halle Berry
Abigail Breslin
Morris Chestnut
Michael Eklund
Michael Imperioli
David Otunga
Music by John Debney
Cinematography Tom Yatsko
Editing by Avi Youabian
Studio Troika Pictures
WWE Studios
Stage 6 Films
Distributed by TriStar Pictures
Release date(s)
March 15, 2013
Running time 94 minutes
Country United States
Language English
Budget $13 million[2]
Box office $58,938,768
===================
படத்தின் மேங்கிங்.. காட்சிகள்.
=============
பைனல்கிக்..
இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய படம்...ஒரே ஒரு மைனஸ்... எவ்வளவோ
தொழில் நுட்பம் வளர்ந்தும் அந்த இரண்டாவது பெண்ணை
கோட்டை விடுவது ஏற்புடையது அல்ல... இருப்பினும் அதை யோசிக்க வைக்காத அளவுக்கான திரைக்கதை.. அவசியம் இந்த படத்தை
பார்க்கவும்...உடனே பர்மாபஜார் அலிபாய்
கடைக்கு செல்லவும். இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படத்திய வானம்பாடி ஆசானுக்கு நன்றிகள்.
=============
படத்தின் ரேட்டிங்.பத்துக்கு ஏழு மதிப்பெண்கள்.
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
பதிவின் முன்பகுதியில் எழுதிய விசயம்தான் எனது வயிறைக் கலக்கி விட்டது.
ReplyDeleteவெட்டுபடும்போது அந்த மனிதனின் மனது என்ன பாடுபட்டு இருக்கும்.
எல்லாவற்றுக்கும் காரணம் முன்கோபம்,பொறுமையின்மை.
ஆண் பெண் இல்லாமல் ஒரு உயிரை உருவாக்க நமக்கு அருகதை இல்லாதபோது ஒரு உயிரை எடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.
என்னமோ என்னால் தி கால் சினிமாவின் விமர்சனத்தை படிக்க இயலவில்லை.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
romba periiiiiiiiiiiyaaaaaaaaaaaaaaaaaaa introduction.....
ReplyDeleteநன்றி சிவா....
ReplyDeleteதேவதாஸ் உலகம் அப்படி இயங்குகின்றது... நான் என்ன செய்ய... நிறைய நேரங்களில் உண்மை சுடும்.
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் விமர்சனம் படித்தவுடன் எதேசையாக படம் கிட்டியது நல்ல விறுவிறுப்புடன் வேகமாக உள்ளது. நன்றி ஜாக்கி அன்னே.அப்படியே பயமான படத்தை குறிப்பிடவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete