கொடுமை கொடுமைன்னு
கோவிலுக்கு போனா அங்க
ரெண்டு கொடுமை அவுத்து போட்டு
ஆடுச்சின்னு ஊர்ல சொல்லுவாய்ங்க... அது
போல உத்ரகான்ட் மாநிலத்தில் உள்ள
கேதார்நாத் கோவிலுக்கு சாமி தரிசனம் சென்றவர்கள் எல்லாம் ஆழிப்பேரலை போல ஏற்ப்பட்ட வெள்ள
பெருக்கில் 50 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்ள் இறந்த போய் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லுகின்றார்... இரண்டு
லட்சத்துக்கு மேற்ப்பட்டவர்கள் இந்த
வெள்ளத்தில் பலியாகி இருக்க அனேக வாய்ப்புகள் இருக்கின்றன... வழக்கம் போல இயற்கை மழை வடிவத்தில் படுத்தி எடுக்க மீட்பு
பணியில் தாமதம்...
===========
எப்படி விபத்து நடந்த உடன் உயிருக்கு
போராடிக்கொண்டு இருப்பவர்களிடம் கொள்ளை அடிக்கும் கேவலமான மனநிலை நம்மிடம் வந்து
விட்டதோ ? அது போல கேதார்நாத் சென்று வெள்ளத்தினால் காடுகளிலும் மலை இடுக்களில்
மாட்டிக்கொண்ட பெண்களை ஒரு கும்பல் வன்புணர்வு செய்து கொண்டு இருக்கின்றதாம்... அது
மட்டுமல்ல...இந்த பேரழிவை
பயண்படுத்திக்கொண்டு தண்ணீர் பாட்டில் 200 ரூபாய்க்கும் ஒரு பரோட்டா 300
ரூபாய்க்கும் கொள்ளை விலை வைத்து விற்று லாபம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது ஒரு
கும்பல்.... இதுவரை 17 லட்ச ரூபாய் அளவுக்கு
பாதித்த பக்தர்களை மிரட்டி லபக்கி இருக்கின்றார்கள்.... மனிதாபிமானமற்ற
மிருகங்கள்
=================
40 அடி உயர சிலையில் கழுத்து வரை
தண்ணீர் அடித்துக்கொண்டு செல்கின்றது...சாதாரணமாக
கடலில் முட்டிக்கால் தண்ணியில் கால் வைத்து
நின்றாலே அலை தண்ணி கடலுக்கு செல்லும் போது நம்மை கீழே தள்ள
முயற்சிக்கும்....ஆனால் 40 அடி உயரத்துக்கு தண்ணி
பேய் வேகத்தில் செல்கின்றது... தலை மட்டும்தான் தெரிகின்றது... அந்த வெள்ளத்தில் ஒரு பெரிய மரம் அடித்துக்கொண்டு
வந்தாலும் அந்த சிலை அவ்வளவுதான்.. ஆனால் கம்பீரமாக நின்றது... இப்போது அந்த சிவன்
சிலை இருக்கின்றதா ? இல்லையா ? என்பது தெரியவில்லை.
=================
இன்றைக்கு வரை....80 ஆயிரம் பேரை உத்ரகான்ட் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இருந்து இந்திய ராணுவம் மீட்டு இருக்கின்றது... இரவு பகல் பாராது பணியாற்றிய இராணுவ வீரர்கள் அத்தனை பேருக்கும் சிரம் தாழ்ந்த ஜப்பான் சல்யூட்
============
மிக்சர்.
தண்ணி பாட்டில் பத்து ருபாய்க்கு அரசு
கொடுக்க முன் வந்து இருக்கின்றது.. சத்தமான நீர் , தரமான சாலைகள் கொடுப்பது அரசின்
கடமை என்றாலும்... ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது பொல இந்த
திட்டத்தை கொண்டு வந்த புரட்சி தலைவி அவர்களின் திட்டத்தை தாரளமாக வரவேற்க்கலாம்...
வாழ்த்துகள்.
===================
ஸ்ரீரங்கத்து முதல் ஹைடெக் பேருந்தினை தொடங்கி வைத்து
இருக்கின்றார்.. முதல்வர்... தன் தொகுதிக்கு
திட்டத்தை தொடங்கி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை... தமிழகத்தின் மத்திய புள்ளியான மதுரைக்கு அதிகமான ஹைடெக்
பேருந்துகள் விரைவில் இயக்கப்பட்டால்
நலம்..
==================
தியேட்டர்ல
அம்மா சாதனை விளம்பரங்கள் பார்த்து கிலியடித்து போய் இருக்கின்றேன்... முக்கியமாக கடல் நீரை
குடிநீர் ஆக்கும் திட்டம் மக்களுக்கு அற்பணித்து அவரே செய்தது போல பெருமையடிக்கும் அந்த விளம்பரம்
கொஞ்சம் ஓவர்தான்.... முக்கியமாக ஏசி பஸ் இருக்கும் விளம்பரங்களில் படுத்தி எடுக்கின்றது... அந்த போர்ஷ்னை இயக்கியவருக்கு தங்க காப்பு இட்டு, இனி இது போல விளம்பரம் ஜென்மத்துக்கு
எடுக்க வேண்டாம் என்று மன்றாடுகள். அதில்
அம்மா மலிவு விலை உணவகம்... தாயே தாயே விளம்பரம்
நன்றாக இருக்கின்றது.... அதே போல தமிழக சுகாதாரதுறை சார்பாக மார்பக புற்றுநோய் மற்றும், தொப்பை பற்றிய விளம்பரங்கள் மிக அருமையாக
இருக்கின்றன...
==============================
எல்லாம் மலவு விலையில் கிடைக்கின்றது.. கலைஞர் ஆட்சியில் இது போல செய்து இருந்தால்... அவ்வளவுதான் மக்களை சோம்பேறியாக மாற்றி விடுகின்றார்.. மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் அது இது என்று ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்து இருப்பார்கள்.
===========
சென்னையில் புதிய சாலை போட்டதோடு மட்டும் அல்லாமல் அதன் இரு புறமும் வெள்ளை கோடுகள் போட்டு இருக்கின்றார்கள்.... சாலைகளை பார்க்கவே அழகாக இருக்கின்றது...இந்த ஐடியாவை தமிழகத்தில் எல்லா இடத்திலும் செயல்படுத்திட வேண்டும் என்பதே நமது அவா.
=============
===============
பேஸ்புக்கில் எனது பகிர்தல்...
கஷ்டம்கறது ஜலதோஷம் போல... நிரந்தரம் கிடையாது.. ஆனா அது நிரந்தரம்
நினைச்சி காலம் எல்லாம் வருத்தப்படற தப்பை
எதையாவது செஞ்சி தெலையாதிங்க...#ஜாக்கிசேகர் அவதானிப்பு.
============
பேஸ்புக்கில் சாட்டில் ஒரு நாள் வந்தார்...
அவரே அறிமுகபடுத்திக்கொண்டார்... தொடர்ந்து
சாட்டில் பேசிய போது வேர்
சொன்னார்...
ஜாக்கி நாளைக்கு பிரியா இருக்கிங்களா?
சொல்லுங்க நான் பிரியாதான் இருக்கேன்..
நாளைக்கு ஒரு நபரை சந்திக்க போறேன்... பிரியா
இருந்தா வாங்க... உங்களுக்கு பிடிச்ச நபர் என்று சஸ்பென்ஸ் வைத்தார்....
மயிலாப்பூர் பக்கம் எங்கள் வாகனம் சென்றது..... அவர் கடைசி வரை
சஸ்பென்சை உடைக்கவேயில்லை.... யார் என்று இரண்டு முறை கேட்டு விட்டு அதன் பிறகு அவரிடம் எதையும்
கேட்கிவில்லை... இன்னும் அரை மணி நேரத்தில் தெரிந்து விடப்போகின்றது என்று
விட்டு விட்டேன்....
ஒரு
அப்பார்ட்மென்ட் முன்னே வண்டி நின்றது...வீடு வரை வந்தாச்சி... இப்பயாவது சொல்லுங்க...
யார்ன்னு.... இத்தான் பாலகுமாரன் வீடு.. அவருக்கு இன்னைக்கு பொறந்தநாளு.... போய்
பார்க்கலாமா? என்றார்... எனக்கு ஒரே சந்தோஷம்... என் அப்பா அம்மா கற்றுக்கொடுக்காத
விஷயங்களை ஒரு தகப்பனை போல பாலகுமாரன்
அவர்கள்.....எழுத்தில் எனக்கு
கற்றுக்கொடுத்த குரு அவர்... அவர் வீட்டில் அதுவும் பிறந்தநாளுக்கு எனக்கு
சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனேன்...
பார்க்கும் எல்லோரிடமும் பாலகுமாரன் அவர்கள்
அறிமுகம் செய்யும் போது... இவர் ஜாக்கிசேகர் இணைய எழுத்தாளர் என்று அறிமுகம்
செய்து வைத்தார்.,.. அவர் பிறந்தநாள் சந்திப்புக்களை புகைப்படம்
எடுத்துக்கொடுத்தேன்...
அதன் பிறகு இன்று வரை என் பிரச்சனை மிகுந்த
காலங்களில் ஒரு சகோதரனாய் தோழனாய் என் மனதில்
உள்ள பல விஷயங்களை கான்கிரிட்
காடான சென்னையில் அவரிடம் மட்டும்தான்
பகிர்ந்து கொண்டு இருந்து இருக்கின்றேன்.. அதே போல எனக்கு தன்னம்பிக்கை அளித்து
பேசுவதில் அவருக்கு நிகர் அவரே...கேமரமேனாக ஓடிக்கொண்டு இருந்தேன்...ஆனால் இந்த ஒன்னரை வருடத்தில் என் கேரியரை
வேறுப்பாதைக்கு மாற்றி விட்டவர் அவரே....
பாலகுமாரன் உதவியாளராக இருந்து திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக
போராடிக்கொண்டு இருக்கின்றார்...
நேற்று பிறந்தநாள் காண்ட நண்பர் @natarajan jegannathan அவர்களுக்கு எனது
மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.... இனி வரும் காலங்களில் அவர் எட்ட வேண்டிய உயரங்களை விரைவில் எட்டி விட
எல்லாம் வல்ல பரம் பொருளையும் , பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களையும்
வேண்டிக்கொள்கின்றேன்...
==============
தமிழ்நாட்டுல நல்ல புருஷனுக்கான அளவுகோல்
ரொம்ப சிம்பிள். 24 மணி நேரமும் கண்ணே
மணியேன்னு கண்ணுலயே வச்சி பார்த்துக்கனா
அவன்தான் நல்ல புருசன். #ஜாக்கிசேகர் அவதானிப்பு.
=============
Annayum Rasoolum படத்தில்
அன்டிரியாவின் நடிப்பை பார்த்து பிரமித்து உட்கார்ந்து இருக்கின்றேன்...
அன்ட்ரியாவின் கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல் என்பேன்... சான்சே இல்லை...
===========
காதலித்த காலங்களில் இருந்தது போல... கேர்னஸ்
தற்போது இல்லை என்பதை ஆண் வாய் திறந்து சொல்வதற்க்குள், வழக்கம் போல பெண்கள்
முந்திக்கொள்ளுகின்றார்கள்... அவர்கள் விவரமானவர்கள் என்று சும்மாவா சொன்னாங்க...???
=====================
யூ கே லாட்டரியில் எனக்கு பத்து கோடி
விழுந்து இருக்காம்... பேர் முகவரி எல்லாம் பில்லப் பண்ணி அனுப்புங்கன்னு ஒரு கேனை
எனக்கு மெயில் போட்டு இருக்கு...
எனக்கு நடக்கற நல்ல நேரத்துக்கு,
கீழ பத்து ரூபாய் கூட கிடைக்காதுன்னு எனக்கு
தெரியாதா?அட்லிஸ்ட் இரண்டு ரூபாய் காயின் கூட
கிடைக்காதுன்னு ..... வேண்டாம் எதுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டு....
டேய்?? யாருக்கிட்ட?? நாங்க எல்லாம் அப்பவே அப்படி....
============================
மேடம் ஒரு சொதப்பல்....
என்ன?
அந்த ஆளு உழவர் சந்தைன்னு ஊர் ஊருக்கு
தெறந்து வச்சிட்டாரு இப்ப இடமே இல்லை...
ரொம்ப சிம்பிள் பேரை மட்டும் மாத்துங்க...
மலிவு விலை காய் கறி கடைன்னு...
எஸ்மேடம்...
‘’புரட்சின்னா சும்மாவா?
============
காலம் காலமாக
பொம்மை துப்பாக்கியால்
அம்மா அப்பாவை பிள்ளைகள்
விபரீதம் தெரியாமல் சுட்டு
வீழ்த்துகின்றார்கள்.
இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில்
சிவாஜி ,ரஜினி,கமல் போன்றவர்கள்
சுடப்பட்டு வீழ்ந்தது போல.....
பெற்ற பிள்ளைகள் எதிரே
அடிமனதில் பொத்தி வைத்திருக்கின்ற
நடிப்பை
நவரசம் காட்டி
ஆக்ஷன், கட் ஏதுமில்லாமல்
அப்பா அம்மாக்கள்
பிள்ளைகள் எதிரே
நடித்து வருகின்றார்கள்
காலம் காலமாக....
# ஜாக்கிசேகர் அவதானிப்பு.
===========
சார் நான் அடையாறு பிலிம் இண்ஸ்டியூட்ல
இருந்து அனந்தன் பேசறேன்... டைரக்ஷன் டிப்பார்ட்மென்ட்...
எங்களுக்கு சினிமாவை பத்தி உங்களுக்கு
தெரிஞ்ச தகவல்களை வச்சி எங்களுக்கு கிளாஸ் எடுக்க முடியுமா?-
கண்டிப்பா செய்யறேன் தம்பி.
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 28
பேர் இருக்கோம்... உங்களுக்கான தோதான நாளை சொன்னால் ஏற்ப்பாடு செய்ய வசதியாய்
இருக்கும்....
இருங்க எங்க துறைதலைவர் மோகனகிருஷ்ணன்
சார்க்கிட்டு கொடுக்கறேன்...
வணக்கம் சார்..
வணக்கம்... ஜாக்கிசார்.. உங்க தளத்தை நான்
வாசிச்சி இருக்கேன்... உங்களை போன்ற சினிமாவை நேசிக்கும் ஆட்கள்... நீங்கள்
நேசித்த சினிமாவையும் உங்கள் அனுபவங்களையும் எங்களுடைய மாணவர்களோடு அவசியம்
பகிர்ந்த கொள்ள வேண்டும்...
சார் இது எனக்கு கிடைத்த பாக்கியம்... அவசியம்
பகிர்ந்து கொள்கின்றேன்..
ஒரு நாளைக்கு முன்ன சொன்னா... ஏற்ப்பாடு
செய்ய வசதியாக இருக்கும். அந்த பொறுப்பை எனது மாணவர் ஆனந்திடம் கொடுத்தள்ளேன்..
அவசியம் தொடர்பு கொள்ளவும்....
கண்டிப்பாக சார்.....
நாம எழுதறத எல்லாம் யார் படிக்க போறங்கன்னு
அவநம்பிக்கையோடு எழுத வந்தவன் நான்...
ஆனா....நாம நம்ம வேலையை உணர்வு பூர்வமா சரிய
செஞ்சா, சரியான அங்கீகாரம் கண்டிப்பா
ஒரு நாளைக்கு கிடைக்கும்...
பரம்பொருளுக்கு நன்றி.
==================
குங்கும்ம் வலைபேச்சில் எனது டுவிட்...
=================
நான்வெஜ் 18+
Q: Did you hear about the guy who died of a Viagra overdose?
A: They couldn't close his casket.
=====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
informative post
ReplyDeleteநன்றி அருள்.
ReplyDelete