ஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு கடந்த புதன் சாண்ட்வெஜ் (27,31/07/2011)

ஆல்பம்

கவர்மென்ட் ..யூ வான்ட் லேப்டாப்?
மாணவன்.... நோ

கவர்மென்ட்.. சைக்கிள் வேணுமா?
மாணவன்.... நோ...
கவர்மென்ட்.. செப்பல் வேணுமா
மாணவன்..... நோ
கவர்மென்ட்..இலவச பஸ்பாஸ் ??
மாணவன் .. நோ..
வேற என்னதான் வேணும்...?? எனக்கு புக்கு புக்குன்னு ஒரு சமாச்சாரம் சொல்லுவாங்களே?? அது வேணும்...

தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை இதுதான்.... பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்சியாக இருப்பதாக கேள்வி... காரணம் அவர்கள் ஆல் பாஸ் செய்ய வேண்டும் என்று இப்போதே கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள்.. தமிழ்நாட்டின் மாணவர்கள் நிலைமை அப்படித்தான் இருக்கின்றது...

===========================
ஸ்டாலின் செல்லும் வழியில் மறித்து கைது செய்தார்கள் என்று ஒரு சாரர் சொல்லுகின்றார்கள்.. அவரே போய் போலிஸ் வண்டியில் உட்கார்ந்து கொண்டார் என்று ஒரு சாரர் சொல்லுகின்றார்கள்...நல்லவேளை சென்னாரெட்டி என்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று சொன்னது போல ஸ்டாலின்  ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார் அதனால் கைது செய்தோம் என்று சொல்லாமல் விட்டார்களே.. அந்த வகையில் சந்தோஷபடவேண்டியதுதான்... எது எப்படியோ?? திமுக போராட்டம் என்று சொன்னால் இறங்கி போராட ஆட்கள் இருக்கின்றார்கள்...

====================================
பாமக.. திமுக கூட்டனியில் இருந்து விலகிவிட்டதாக  அறிவித்து இருக்கின்றது.. இது எதிர்பார்த்த விஷயம்தான் என்றாலும்.. இனி அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டனி வைக்க போவதில்லை என்று சொல்லி இருக்கின்றார்கள்...இது ஆச்சர்யமான செய்திதான் என்றாலும் எலெக்ஷன் வர இன்னும் 5 வருடம் இருப்பதால் இந்த செய்தியை  பற்றி பரபரப்பாக பேசப்போவதில்லை...வெயிட் அண்டு சீ...
================
அழுது அழுது எகப்பட்ட சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா ஒரு வழியாக பதவி விலகி இருக்கின்றார்..புதிய முதல்வரை எதிர்பார்த்து கர்நாடகம் காத்து இருக்கின்றது..
================
 இந்த இடம் எந்த இடம் என்று தெரியவில்லை... எதுக்கு இப்படி பாம்பு போல குகையை குடைந்து சாலை அமைத்தார்கள் என்றும் தெரியவில்லை... இதுவே நம்ம ஊராக இருந்தால் காரில் இந்த குகை சாலையை கடக்க ரூபாய் 500 டோல் என்ற பெயரில் கறந்து விடுவார்கள்..ஒரு 70 வருடத்துக்கு டோல் கட்டணம் வாங்கி கொண்டு இருப்பார்கள்... ஒவ்வொரு வளைவிலும் ஒரு சர்பத் கடை மற்றும் டீ, வெள்ளரிக்காய்,மாங்காய் விற்கும் கடை,என்று எல்லா வளைவுகளிலும் கடை வைத்து இருப்பார்கள்..பிளாஸ்டிக் டீ கப்புகள் எல்லா இடத்திலும் இறைந்து கெடக்கும்... எந்த ஊர் என்றுதான்  தெரியவில்லை....கும்பகோணம் அனைக்கரை பாலம் கட்டவே போன ஆட்சியில் துவங்கப்பட்டு இன்னும் கட்டி முடிக்கலை.. இது போல புராஜெக்ட்டு எல்லாம் நம்ம ஊருக்கு வந்தா விளங்கிடும்...
=========
இந்தவாரசலனபடம்..

பூந்தோட்டம் படத்தில் இளையராஜா இசையில் வரும் இந்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்..ரொம்ப கஷ்டமான ராகம் இந்த ராகம் என்று இந்த பாடல் வெளியான போது ஒரு பேச்சு இருந்தது...நமக்கு ராகம் எல்லாம் தெரியாது....இரவில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மழை பேயும் ஒரு இரசில் ஜன்னல் திறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இந்த பாடலை கேளுங்கள்...நீங்களும் ரசிப்பீர்கள்... பாடல் விஷுவலை விட இந்த வீடியோவில் புகைபட விஷுவல்கள் ஏ ஒன்...
=========================
மிக்சர்...
அனானி பதிவுக்கு போன் செய்தும் கடிதத்திலும் உங்கள் ஆதரவை தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்..இன்னும் சில பேர் சில வழிகள் சொல்லிக்கொடுத்தார்கள்.. இன்னும் சில பேர் அனானி அப்ஷனை எடுத்து விட்டால் பாதி குறையும் என்று கருத்து சொல்லி இருக்கின்றார்கள்..  நண்பர்களே அனானி ஆப்ஷன் எப்போதே எடுத்து விட்டேன்....ஆனால் அவர்கள்  எனது பர்சனல் மெயிலில் மெயில் அனுப்புகின்றார்கள்.. அதைதான் சொன்னேன்..நண்பர் டெல்லிக்கு செல்கின்றேன்... அங்கு ஒரு பிராது சைபர் கிரைமில் கொடுக்க போகின்றேன்..உங்களுக்கு எதாவது உதவி வேண்டும் என்றால் சொல்லுங்கள் என்று போன் செய்து சொன்னது ரொம்பவும்  சந்தோஷத்தை கொடுத்தது..வலையின் வீச்சையும் நண்பர்களின் உதவும் குணத்தையும் கண்டு வியக்கின்றேன்..தொடர்ந்து தினமும்  ஒன்றுக்கு மூன்றாய் போட்டி போட்டுக்கொண்டு வந்த அனானி மெயில்கள் குறைந்து இருக்கின்றன...ஆனால் சில விபரங்கள் சேகரித்துக்கொண்டு இருக்கின்றேன்...முழுமையாக கிடைக்கட்டும் பிறகு பார்க்கலாம்.....
==============================
சங்கம்  தியேட்டர் பதிவுக்கு நான் முன்பே  சொல்லிவிட்டேன்... நான் அந்த அளவுக்கு அக்மார்க் யோக்கியன்  இல்லை என்று சொன்ன பிறகும், சில பேர் நீ தவறு செய்துவிட்டாய் மனோகரா.. என்ற ரேஞ்சில் பேசிக்கொண்டு வரும் மெயில்களை பிரசுரிக்கவில்லை...அதில் அனானியாக பிளாக்கரில் இருந்து வருபவர்கள் நிறைய....யோவ் வெண்ணைங்களா நான்தான் தப்பு செஞ்சிட்டேன்... சராசரி மனுஷன் சொல்லிட்டேன்.. அப்புறம் என்ன மயிறுக்கு அட்வைஸ் எல்லாம்??
இந்தியாவில் நேர்மையாக இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?இந்தியன் படத்தில் காட்டிய இந்தியன் தாத்தாவுக்கு ஏற்ப்பட்டகதிதான் சராசரி இந்திய குடிமகனுக்கு ஆகும்...ரொம்ப நேர்மையாக இருந்த காரணத்தால்தான்  எனக்கு கிடைக்கவேண்டிய போலிஸ்வேலை கிடைக்கவில்லை....பெரிய புடுங்கி மயிறு போல அட்வைஸ் செய்யவந்துட்டானுங்க.....

 இங்கே நடு ரோட்டில் எச்சி துப்பி விட்டு பாரின் போய் ரூல்ஸ் மதிக்கும் புண்ணியவான்கள். நான் செய்தது தவறு என்று சொல்லிக்கொண்டு  இருக்கின்றார்கள்..நான் செய்தது சரி என்று எங்கேயும் வாதிடவில்லை.. இந்த இடத்தில் வாசக நண்பர் கோகுல் போட்ட பின்னுட்டம் மிச்சரியானதே...

அது கீழே..

\நான் அந்த அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில் குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்.....\\
உண்மைதான்
எல்லோரும் அந்தந்த சந்தர்ப்பங்களில் நமது மனம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் நாம் செய்கிறோம்.இதில் மாட்டிக்கிரவங்க அயோகியர்களுமில்லை ,எஸ்கேப் ஆவரங்க ஒழுக்க சீலர்களும் இல்லை

நண்பர்களே, யோக்கியம் பேசுபவர்களே.. நான் இருப்பது இந்தியாவில்...அதை அடிக்கடி நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்...

=============

எனது சித்தி மகளுக்கு சிக்கலான உடல்உபாதை காரணமாக மடிப்பாக்கத்தில் இருக்கும் ஐஸ்வர்யா மருத்துவமனையில் அவசரத்துக்கு   சேர்த்து இருக்கின்றார்கள்..ஒரு நாள் ரூம் வாடகை..1600ரூபாய்.. நம்புங்கள் நண்பர்களே.. சென்னையில் இருக்கும் சில மருத்துவமனைகள் இப்படித்தான்  அநியாய கொள்ளை அடிக்கின்றன...பணம் ஒரு பிரச்சனை இல்லை என்று அவசரத்திற்கு பலரும் , உறவுகளின் உயிர்மேல் இருக்கும் பாசத்தினாலும், வேறுவழியில்லாமல் இது போலான மருத்துவமனைகளில் சேர்க்கின்றார்கள்..ஆனால் அந்த அறையில் பாத்ரூமில் தண்ணி வரவில்லை...டாக்டரிடம் கேட்ட போது  அவர் சொல்லி இருக்கின்றார்...பாருங்க காஸ்டமரான உங்களுக்கு நான் தண்ணி ஏற்பாடு  பண்ணித்தருவது எனது கடமை...நானே எனது பாத்ரூமில்  பக்கெட்டில் எடுத்து வந்துதான் உபயோகபடுத்துகின்றேன் என்று நொந்த மனதில் சாக்கு வேறு சொல்லி இருக்கின்றார்...சர்விஸ் ஒரீயன்டேட் துறை எப்போது கஸ்டமர் சர்விசாக மாறியது என்று எனக்கு தெரியவில்லை...அப்படியே  கஸ்டமர் சர்விஸ்  என்று வைத்துக்கொண்டாலும் பாத்ரூமில் தண்ணி வரவில்லை என்ற காரணத்தால் 1600ரூபாயில் இருந்து 200ரூபாய் குறைத்து 1400 வாங்கினார்களா? இல்லவே இல்லை..?? 1600ரூபாய் முள்ளங்கி பத்தையாட்டாம்  தண்ணி வராத ரூமுக்கு வாங்கி இருக்கின்றார்கள்..

=====================

சில செய்திகளை படித்து விட்டு அப்படியே சென்று விட முடிவதில்லை.. அந்த காட்சி  கற்பனையில் ஓடும் அப்படி ஓடிய செய்திதான் இது...

நேற்று பெங்களூர் செல்ல வேண்டிய அரசு பேருந்து ஒன்று ஆம்பூர் அருகே நடு ரோட்டில் பழுதாகி நின்ற இரும்பு கம்பிகள் லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியது.. இதில் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த நடத்துனர் உடலில் இரும்பு கம்பிகள் சொருகி கொள்ள...அவரை மீட்க ரம்பங்கள்  வைத்து அறுத்தும்  சில கம்பிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை...திரும்ப வெல்டிங் மெஷின் கொண்டு வந்து  வெல்டிங்  செய்து அவரை ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் அல்ல... மூன்று மணிநேரத்துக்கு  பிறகு மீட்டு இருக்கின்றார்கள்..

சாதாரனமாக நமது  காலில் முள் குத்திதிக்கொண்டாலே அதை எடுக்கும் போது உயிர் போய் உயிர் வரும்.. ஆனால் அத்தனை இரும்புகம்பிகள் உடலில் குத்திக்கொண்டு மூன்று மணி நேரம் வலிதாங்க முடியாமல் உயிர் போராட்டத்தில் அலறிய அவரை உயிரோடு மீட்டபோது
தான் அங்கு இருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கின்றார்கள்.. அந்த கண்டக்டர் இவ்வளவு வலியை தாங்கி உயிருக்கு போராடி இருக்கின்றார்.. அவர் மருத்துவமைனையில் சேர்த்து இருக்கின்றார்கள்..இவ்வளவு கொடுமையை அனுபவத்த அவர் வெகுவிரைவில் உடல்நலம் தேறிவரவேண்டும் என்று பரம்பொருளை பிராத்திக்கின்றேன்...நிச்சயம் அந்த வேதனையை வாழ்நாளில் அவர் மறக்கவேமாட்டார்..இரும்பு கம்பி எற்றி சென்ற லாரி ஒரு சிகப்பு துணி கூட எச்சரிக்கைக்கு கட்டி செல்லவில்லை என்பதுதான் கொடுமை...

=================


என் மீதான விமர்சனங்கள் நிறைய, என் எழுத்து மீதும் அப்படித்தான்.. ஆனால் நான் யாருக்காகவும் நான் மாற மாட்டேன்..அந்த திமிர்தான்  என்னை இந்த இடம் வரை அழைத்து வந்து இருக்கின்றது...என்ன எழுதி கிழித்தேன் என்று
நான் நினைக்கமாட்டேன்...என்னை பற்றியும்... இந்த வலைமூலம் கிடைத்த உதவிகள் பற்றியும் நான் அதிகம் உணர்ந்து இருக்கின்றேன்..ஆனால் ஈரோட்டில் இருக்கும் ராகவி என்ற பெண்ணுக்கு பிளட்கேன்சர் இளமையில் மரணபயம் ரொம்ப கொடுமை என்று எழுதி இருந்தேன்...இரண்டு மூன்று முறை  அந்த செய்தியை உறுதிபடுத்திக்கொண்டு நான் அந்த செய்தியை  எனது வலையில் பிரசுரித்தேன்..

KKPSK has left a new comment on your post "ஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு புதன் சாண்ட்வெஜ்

Thanks Mr.Jackie for publishing Financial support request for Raghavi.

This case is very much genuine. My close friend's family used to visit temple, where her father serves.

இப்படி உறுதிபடுத்தி சில மெயில்கள் வந்தது.
==========================
அதன்பிறகு எனக்கு வாஷிங்டன்  டிசியில் இருந்து ஒரு நண்பர் உதவி செய்கின்றேன் என்று சொன்னார்...ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசினார்... அவரது மனைவிதான் எனது பதிவை படித்து விட்டு உதவி செய்ய சொன்னதாய் சொன்னார்...அனுப்பும் பணத்தை என்னையே எடுத்துக்கொண்டு போய் கொடுக்க சொன்னார்...நானும் ராகவி பெற்றோர்களுக்கு அந்த செய்தியை சொல்லி நம்பிக்கை தெரிவித்தேன்..ஆனால் அவர்  அதற்கு பிறகு போன் செய்யவில்லை...ஆனால் உதவி செய்யவேண்டும் எனற எண்ணம் வந்ததே அதுவே எனக்கு போதுமானது.....
இருப்பினும்... லண்டனில் இருந்து இந்த செய்தியை வாசித்து விட்டு நண்பர் சார்லஸ் இரண்டு தவனையாக ரூபாய் 27,000 அனுப்பி இருக்கின்றார்...மற்றும் பெங்களூர் சீனுவாசன் அவர்கள் ரூபாய் 10,000 அனுப்பி இருக்கின்றார்கள்..இவர்கள் பணம்  அனுப்பிய விஷயம் எனக்கு எதுவும் தெரியாது, என்னை தொடர்பு கொண்டு எதுவும் சொல்லவில்லை..எனக்கு ராகவி பெற்றோர் சொன்னார்கள்... அதே போல சார்ஜாவில் இருந்து

Dear Mr.Sekar,

This is Subramanian from Sharjah, I am reading your blog for the past few months and in your 13 th July post you have mentioned about a girl Raghavi who need help for her medical treatment, Today I spoke to Raghavi's father Mr.Ragunathan and told him I will send Rs 5000/, also informed him I came to know about this through Jackie sekar blog.
 I have transfered the money to his brother Saravanan Account and given below the Transaction receipt to check their Account and confirm ,

Regards

Subramanian

என்று நண்பர் சுப்ரமணியன்  பணம் அனுப்பிய ரெசிப்ட்டையும் அனுப்பி இருந்தார்...

================
மொத்த தொகை ரூபாய் 42,000 ஆயிரம் ராகவியின் மருத்துவசெலவுக்கு கிடைத்து இருக்கின்றது...ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல நாற்பத்தி இரண்டு ஆயிரம் ரூபாய் உதவியாய் கிடைத்து இருக்கின்றது...நான் என்ன எழுதி கிழித்தேன் என்று யாராவது கேட்டாலும் இனி எனக்கு கவலை இல்லை..நண்பர்களே சார்லஸ்,சுப்ரமணியன்,சீனுவாசன் போன்றவர்கள் இருக்கும் திசைக்கு ஒரு கும்புடு மற்றும் சிரம் தாழ்ந்த வணக்கத்தை போட்டுக்குறேன்...நண்பர்களே உங்கள் உதவியும் ,உங்கள் நல்லமனதுக்கு, உங்கள் எதிர்கால வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்..

=======
ராகவி தற்போது கோவையில் வீடு எடுத்து தங்கி ஒருநாள் விட்டு ஒருநாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்..இன்னும் ஒருமாதகாலம் அவர்தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்ள இருக்கின்றார்..ராகவி நலம் பெற பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.
===========
 இந்தவார சலனபடம்..


நண்பர் பாஸ்டன்  ஸ்ரீராம் மற்றும் இளா எடுக்க இருக்கும் அப்பாடக்கர் என்ற குறும்படம் பட்டையை கிளப்ப எனது வாழ்த்துகள்..டிரைலரே மிரட்டுது...(எதாவது சொல்லிசைக்கனும்  இல்ல....)

இந்தவாரகடிதம்hello Jackie Sir,

I have been reading your site for sometime. I guess I read all your cinema reviews. I love the way you write because You do not write anything just to criticize as other reviewers do. Thanks a lot for introducing the movies from all around the world.

I have a request from my side. I loved the movie "butterfly effect". It is some what a different type of a movie. If you ever get a chance to see this movie, please share the review with us.

Thanks in advance.

yours
kattupoochi
===========
 மிக்க நன்றி நண்பரே...பட்டர்பிளை எபெக்ட் பார்க்கவில்லை பார்த்தஉடன் எழுதுகின்றேன்...
 ======================================================================

============ 

Adriana Lima 29 வயசு பிரேசில் மாடல்...இந்த பெண் அணிந்து இருக்கும் பிராவின் விலை..இரண்டு மில்லியன் ... எல்லாம் வைரம்...
(The 29-year-old Brazilian model modeled this year’s Bombshell Fantasy bra, which weighs in at 142 carats, including 60 carats of white diamonds as well as topazes and sapphires.“It’s really a work of Art.Victoria's Secret Angel Adriana Lima is one of the rare women who literally knows how this feels, having been chosen to wear the lingerie giant's Bombshell Fantasy Bra, which is worth an astounding $2 million."

The Fantasy Bra, designed by Damiani -- the jeweler who shot to fame after creating Brad Pitt and Jennifer Aniston's wedding rings -- is inspired by celestial prints and opulent constellation patterns.

It consists of more than 3,000 brilliant cut white diamonds (60 carats in total), light blue sapphires, and oval-shaped topazes (another 82 carats), which are all set in 18 karat white gold.

According to VS, the masterpiece "took six Damiani craftsmen 1500 hours of full-time labor" to craft, with each diamond being hand-set.)

இரண்டு மில்லியனுக்கு எத்தனை சைபர் ஓய்...இரத்தினம் போன்ற விலைஉயர்ந்த கற்களும் இருக்கின்றன...வைரத்தையே வச்சக்கண் வாங்காமல் பார்த்த காரணத்தால் மச்சமோ,கிச்சமோ எனக்கு எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை..
=========================
பிலாசபி பாண்டி
மீயூட்டுக்கும் கியூட்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன??
கம்முன்னு இருந்தா மீயூட்டு....
அதுவே கும்முன்னு இருந்தா கியூட்டு  என்ன பிரிஞ்சுதா??

 ==============
நான்வெஜ் 18+

ஒரு பெண்மணி ஒன்பது கொழந்தைங்க ....... பத்தாவது குழந்தைக்கு டாக்டர்கிட்ட செக்கப்புக்கு போய் சொன்னாளாம்... டாக்டர் நான் வருஷா வருஷம் கர்பம் ஆகின்றேன்... காற்றில் ஏதோ இருக்கின்றது என்று சொன்னாளாம் அதுக்கு டாக்டர் சொன்னாராம்...உங்க இரண்டு கால்கள் காற்றில் இருப்பதுதான் காரணம் என்றார்...

==============
 
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

2 comments:

 1. Sorry for not informing you regarding the help Jackie...

  I just want to add, the Sum of Rs.27,000 is not only my money. Some my friends also contributed for this. I thought of adding their names, Bharath, Subbramani and Moses. Thanks to every one.
  We are ready to contribute in future also for genuine help. Keep posting like this.

  Last but not least thanks to you for giving us a chance to help some one who is really in need. May God Bless You and Your Family.

  ReplyDelete
 2. Jackie, that road is in Italy.

  http://www.istartedsomething.com/bingimages/#20110722-uk

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner