இன்றாவது உன் நினைவுகளை....



இன்றாவது
உன் நினைவுகளை
கழற்றிவைத்து
உறங்க நினைத்தேன்.....
முடியாது என்பது போல
உறுத்தியது
நீ தலையில் வைத்துவிட்ட மல்லிகை.
===========


என் தனிமை என்பது
யாருமில்லாத போதுஅல்ல....
நீ இல்லாத போது...
==========

அன்பே
சூரியனாய் நீயும்
சந்திரனாக நானும்
இருந்திருந்தாலாவது
நிச்சயம்
சேர்ந்து இருப்போம்
வருடத்துக்கு ஒருமுறையேனும்
கிரகணத்திலாவது????


============

தென்றல்
தொடுகையில் கூட
சிணுங்கும் என் உடல்....
நீ தொட காத்து இருக்கின்றதே?
நீ  என்ன அவ்வளவு
மென்மையானவனா????

=============


உச்சி முகர்ந்து
கண்களை வருடி
உதட்டில் ஒத்தி
கழுத்தில் கரைந்து
தயக்கமாய் இறங்கி
தலைவனை நினைவூட்டியபடி
தொடைதொட்டு
தரையிறங்கியது
தனித்துவம் வாய்ந்த
மழைத்துளி.....


======

தூங்குவதாய்
பாவித்தேன்
என் நெற்றியை உன் உதடுகள்
ஈரமாக்க...

=========


உன் பிரிவை
நினைத்து வந்த கண்ணீருக்காக
முகம் அலம்பினேன்.
தண்ணீரோடு கண்ணீரையும்
எவர் அறியாமல்
துடைக்கமுடியும் என்பதால்....


=========


நீ
என்று நினைத்து கொஞ்சவதும்
உன் இதழ் என்று எண்ணி
முத்தமிடுவதும்
உன் மடி என நினைத்து
தலைசாய்ந்து அழுவதும்
உன்னுடன் இருப்பதாய் எண்ணி
கதகதப்பாய் கட்டிக்கொள்வதுமாக
இராஜவாழ்க்கை
வாழ்ந்து தொலைக்கின்றது...
என் வீட்டு கரடிபொம்மை.

==========

மேலுள்ள கிறுக்கல்கள் என் மூன்றாம் காதலி, எனக்காக என்னை நினைத்து எழுதிய வரிகள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

===========

இழப்பது
என்னையே என்றாலும்
சம்மதிப்பேன்
ஏமாற்றுவது
நீயென்றால்....

==============
கடைசி மட்டும் என் மூன்றாம் காதலியின் நண்பி வித்யா எழுதியது.....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

32 comments:

  1. நல்லாத்தான் இருந்தீங்க ஜாக்கி :)

    ReplyDelete
  2. என்னாச்சு ஜாக்கி அண்ணா....

    சரி... சரி....

    நடக்கட்டும்...

    கவிதைகள் அருமை.


    நம்ம பக்கம் வரவேயில்லை... வாரது

    ReplyDelete
  3. கவிதைகள் அருமை

    ReplyDelete
  4. கிருஷ்ணா கிருஷ்ணா.......
    (புல்லாங்குழல் வாசிக்கிறேன்)

    ReplyDelete
  5. ஜாக்கி .... இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல??

    ReplyDelete
  6. நீங்கள் சொன்னபடி என் பெரியம்மா மகனிற்கு 10 உலகத்திரைப்படங்களின் டிவிடிக்களை வாங்கி கொடுத்துவிட்டேன்... அவனுக்கும் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி...

    1. Gone with the Wind
    2. Philadelphia
    3. Pulp Fiction
    4. Forrest Gump
    5. Blood Diamond
    6. City of God
    7. Hotel Rwanda
    8. The Bone Collector
    9. Downfall
    10. Apocalypto

    மேலே குறிப்பிட்டுள்ள படங்களெல்லாம் எந்தப்பிரிவின் கீழ் (பார்த்தே தீர வேண்டிய படங்கள், பார்க்க வேண்டிய படங்கள், டைம்பாஸ் படங்கள்) வருகிறது என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
  7. என்ன நடந்தது? கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. என் தனிமை என்பது
    யாருமில்லாத போதுஅல்ல....
    நீ இல்லாத போது...]]

    அருமைங்க ...

    ReplyDelete
  9. என் தனிமை என்பது
    யாருமில்லாத போதுஅல்ல....
    நீ இல்லாத போது...


    அருமை, அருமை .

    ReplyDelete
  10. அது சரி! அந்த மழைத் துளி பாராவும் கரடி பொம்மை பாராவும் சூப்பர் ஜாக்கி!!

    காதலிகள்ள கூட கவுண்டிங்கா ஜாக்கி!!!

    ReplyDelete
  11. //
    மேலுள்ள கிறுக்கல்கள் என் மூன்றாம் காதலி, எனக்காக என்னை நினைத்து எழுதிய வரிகள்...
    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.
    //

    இந்த கவிதைதான் பிரமாதம்

    அன்பு நித்யன்

    ReplyDelete
  12. பார்த்தே தீர வேண்டியபடம்..

    கான் வித் வின்ட்
    பல்ப்பிக்ஷன்
    பிளட் டயமண்ட்
    பாரஸ்ட் கேம்ப்
    டவுன் பால்
    அப்பகலிப்டோ
    ஹோட்டல் ருவாண்ட்...
    சிட்டிஆப்காட்

    பார்க்க வேண்டிய படம்
    போன் கலெக்டர்

    பிலெடில்பியா அந்த படம் நான் பார்க்கவில்லை.

    ReplyDelete
  13. அருமை...

    //வண்ணம் பூசி அலையும் இந்த உலகத்தில்
    பவர்ணமி நிலவு போன்ற முகம் உடையவளே
    ஏன் கருநீல மேக திரை கொண்டு
    முகத்தை மூடி செல்கிறாய்...

    உன் திரை விலகி முகம் கண்டேன்
    என் கற்பனைக்கு எட்டா கன்னியடி நி

    உன் விழியால் என்னை விழுங்கி
    இதழ்லால் உயர்மூச்சு கொடுத்தவளே
    தேன் சுவைக்கும் உன் இதழை நான் சுவைத்தேன்.

    வெள்ளை மலர்களுக்கு மத்தியில் சிரிக்கிறாய் நான் இருக்கும் போது நி இறக்கும் போது
    அதே சிரிப்புடன் செல்கிரேன் - பித்தனாய் //

    ReplyDelete
  14. //சினுங்கும் என் உடல்....//

    சிணுங்கும்.

    கவிதைகள் அருமை நண்பா..

    ReplyDelete
  15. உன் பிரிவை
    நினைத்து வந்த கண்ணீருக்காக
    முகம் அலம்பினேன்.
    தண்ணீரோடு கண்ணீரையும்
    எவர் அறியாமல்
    துடைக்கமுடியும் என்பதால்.... superb anna
    ama inda post anniku terinja potinga?2awadu 3wadunu ellam poduringale adan keten.......... heeeee

    ReplyDelete
  16. ஒண்ணு, ரெண்டு,மூணு.... ம்ஹும்... இங்க ஒண்ணுக்கே வழியைக்காணோம்...
    அந்த ரசசியத்தை கொஞ்சம் "ஜொல்லு"வீங்களா ஜாக்கி...

    ReplyDelete
  17. பின்னட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
    கவிதைகள் அதிகம் எழுதியதில்லை.. காரணம் நேரமின்மை..இனி நீங்கள் திடுக்கிட வண்ணம் இவைகள் தொடரும் எனக்கு நிறைய காதலிகள்.. இது என் மனைவிக்கும் தெரியும். காரணம் நான் எவர் மீதும் காதல் கொண்டதில்லை. அவர்களாக வந்து சொன்னதுதான்...

    ReplyDelete
  18. appo second lover yaru jacky annayey , jacksan kavithai soinan nalla than eruku

    ReplyDelete
  19. //அன்பே
    சூரியனாய் நீயும்
    சந்திரனாக நானும்
    இருந்திருந்தாலாவது
    நிச்சயம்
    சேர்ந்து இருப்போம்
    வருடத்துக்கு ஒருமுறையேனும்
    கிரகணத்திலாவது???? ///

    ரொம்ப நல்ல கவிதை வரிகள்.

    ReplyDelete
  20. Philosphy Prabhakaran,

    About Hollywood Movies listed..It depends upon
    your nephew's age..

    I will tell you about theses movies in short.

    1. Gone with the Wind
    Good one for all ages.

    2. Philadelphia
    About AIDS and Law Corporate Firm and how explot AIDS patient.Cast by Tom Hanks/Denzel Washington/Antonio Banderas. If your nephwe is < 16 Yrs,he may not like this.

    3. Pulp Fiction
    Quentin Tarantino Movie.. Multi Starrer, Bruce Willis, Samuel L Jackson, Uma Thurman, John Travolta, Harvey Keitel
    Gangster, Drugs, Violence but the story was told in non-liner way. Not suitable for <18 Yr old.

    4. Forrest Gump
    A must watch by one and all.


    5. Blood Diamond
    Violence, Cruelity, etc. Notsuitable for <16 Yr old.

    6. City of God
    A must watch by one and all.


    7. Hotel Rwanda
    Violence, Cruelity, etc. Not suitable for <16 Yr old.


    8. The Bone Collector
    Good one but not suitable for <16 Yr old sincethe killer (ex-policeman) uses hard method to kill the people. Denzel Washington'sacting is good. (most of the movie, he is in hospital bed)


    9. Downfall
    No idea

    10. Apocalypto
    Good one. Said to be mayan civilization.Movie directed by Mel Gibson..Must watch but some scenes are not suitable for <15 yr old.

    ReplyDelete
  21. ஒவ்வொன்னும் சூப்பர் தல.

    ReplyDelete
  22. //பின்னட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
    கவிதைகள் அதிகம் எழுதியதில்லை.. காரணம் நேரமின்மை..இனி நீங்கள் திடுக்கிட வண்ணம் இவைகள் தொடரும் எனக்கு நிறைய காதலிகள்.. இது என் மனைவிக்கும் தெரியும். காரணம் நான் எவர் மீதும் காதல் கொண்டதில்லை. அவர்களாக வந்து சொன்னதுதான்... //

    என்னண்ணே இவ்வளவு வெள்ளந்தியா இதைப் போயி பப்ளிக்ல சொல்லிகிட்டு..

    நெசமாவே நீ ஒரு குழந்தைண்ணே...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner