Raanjhanaa-2013/ நடிகர் தனுஷின் முதல் இந்தி படம்.






 இயக்குனர் Anand L. Rai  இயக்கிய தனு வெட்ஸ் மனு படம் பார்க்கவில்லை...
அதனால் அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது... பட் தனுஷ் நம்ம ஊர் புள்ள... இசை ஏஆர் ரகுமான்... அப்ப இந்த படத்தை இந்தி தெரிஞ்சிலும் தெரியாவிட்டாலும் பார்த்து விட வேண்டியதுதான். என்று கங்கனம் கட்டிக்கொண்டேன்..  டிரைலர் இன்னும் அசத்தியது...  படத்தையும் பார்த்தாச்சி.
=========

Raanjhanaa-2013/ படத்தின் ஒன்லைன்..

சிறுவயதில் காதலித்து  பெண்ணை  மறக்க முடியாமல் அவள் வேறு ஒருவனை காதலித்தாலும் காலம் முழுக்க அவளுக்காக காத்திருக்கும் காதலனின் கதை.

==========
Raanjhanaa-2013/ படத்தின் கதை என்ன?


தனுஷ்(குந்தன்) வாரனாசியில் இருக்கும் தமிழ் பூசாரி பையன்... சோனா( சோயா)வாரனாசியில் வசிக்கும் முஸ்லிம் புரொ பசரின் மகள்...  சின்னவயிதில் இருந்தே சோனாவின்  மீது தனுஷ்க்கு  பிரியம் அதிகம் ...

அது அடலசன்ட் வயதில் காதலாக மாறி  , சோனா தன்னை காதலிக்க வைக்க கையை அறுத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றான்... அவளும் தனுஷை காதலிக்கின்றாள்.. இந்த காதல் தெரிந்த சோனா பேமலி அவளை மேல் படிப்புக்கு  வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்..

 எட்டு வருடம் கழித்து சொந்த ஊருக்கு  வரும்  சோனா தனுஷை மறந்தே  போகின்றாள்.. ஆனால் தனுஷ் அவளை நினைத்து உருகுகின்றான்..  தனுஷ் வசிக்கும் அதே வீட்டில் வசிக்கும் நண்பனின் தங்கை ஸ்வரா தனுஷை விழுந்து விழுந்து காதலிக்கின்றது.. இந்த வேளையில் மேல் படிப்பு படிக்கும் போது  அபய் டியோலை சோனா காதலித்த கதை தெரிய வருகின்றது...தனுஷ் சோனா இருவரும் இணைந்தார்களா? என்பது மீதிக்கதை.

==========
படத்தின் சுவாரஸ்யங்கள்..

மலையாள படமான தட்டத்தின் மறையத்து படத்தினை போல ஒத்திருக்கும்  முதல்  காட்சி....பட் ஹீரோ நரேட்டிவ் ஸ்டைலில் கதை விரிகின்றது.

ஆடுகளம் பார்த்து விட்டு இந்த படத்தில் தனுஷை நடிக்க வைத்தேன் என்று இயக்குனர் ஆனந் குறிப்பிட்டு இருக்கின்றார்... அதனால்  படத்தில் வெளிப்புறகாட்சிகளில் தனுஷ் ஆடுகளத்தில் ஆடியது போல ஆடித்தீர்க்கின்றார்...





இன்டர்வெல் வரை முதல் போர்ஷன் செம கலரிங்.. மற்றும் உற்சாகத்தை கொடுக்கின்றது.,. அதற்கு தனுஷின்  மேனாரிசம் என்றால் அது மிகையாகாது.. இந்த படத்தில் நிறைய ரஜினி மேனாரிசங்களை டிரை செய்து இருக்கின்றார்.

முதல் பாதி  முழுக்க சோனாவிடம் அடி வாங்கி தள்ளுகின்றார்...அபய் தியோல் வரும் காட்சிகள் குறைவு ...அதுவும் மவுனராகம் காத்திக்கை நியாபகபடுத்துகின்றார்..

 ஆனால்  சோனாவுக்கு தனுஷ் மீது கையறுத்துக்கொண்டதால் வந்த பரிதாபகாதல் என்பதை இயக்குனர்  புரிய வைத்தாலும்  சோனா தனுஷிடம் அவ்வளவு நெருக்கம்  காட்டும் போது... தனுஷ் உட்பட்எல்லோருக்கும் தன்னை காதலிப்பதாகதான் நினைத்துக்கொள்வார்கள்..

இடைவேளைக்கு பிறகு காதலை விட்டு விட்டு, புரட்சி, போரட்டம் ,நம்பிக்கை துரோகம் என்று கதை வேறு பக்கத்தில் பயணிப்பதை  சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதல்பாதியில் தனுஷ்  என்டர் ஆகும் இடங்களில் ரகுமானின் இன்ட்ரோ மீயூசிக் சான்சே இல்லை..

பாடல்களில் மூன்று  நன்றாக இருக்கின்றது...தனுஷ் தோன்றும் காட்சிகளில் உற்சாக பின்னனி
================
படத்தின் டிரைலர்...



=================
படக்குழுவினர் விபரம்.



Directed by Anand L. Rai
Produced by Krishika Lulla[1]
Screenplay by Himanshu Sharma
Story by Himanshu Sharma
Starring Dhanush
Sonam Kapoor
Abhay Deol
Music by A. R. Rahman
Cinematography Natarajan Subramaniam
Vishal Sinha
Editing by Hemal Kothari
Distributed by Eros International
Release date(s)
June 21, 2013 (Hindi)
June 28, 2013 (Tamil)[2]
Running time 140 minutes
Language Hindi
Budget 35 croreRichard D'Ovidio

===================
பைனல்கிக்

இந்த படம் டைம்பாஸ் திரைப்படம்.. பட் எனக்கு படம் பிடிச்சி இருந்துச்சி... ரொம்ப நாளைக்கு பிறகு தேவி தியேட்டரில் மனைவியோடு போய் பார்த்தேன்...விண்ணைதாண்டி வருவாயாவுக்கு பிறகு இப்போதுதான்   தேவி வளாகம் செல்கின்றேன்... ரொம்ப நாள் கழித்து படத்துக்கு  சென்றதால் அப்படி இருந்து இருக்கலாம்.. முதல் பாதி ரொம்பவே என்ஜாய் பண்ணி பார்த்தேன்...
========
படத்தோட ரேட்டிங்

பத்துக்கு நான்குதான்... ஆனால் 5 கொடுக்கலாம்... முதல் பாதிக்கும், ஏஆர் ரகுமான் இசைக்கும், நட்ராஜ்  கேமராவுக்கும், வாரனாசியின் லைவ் லோக்கேஷனுக்கும்,   சோனவின் அழகுக்கும் முக்கியமாக அந்த பட்டம் விடும் காட்சி... தனுஷின் இந்தி பேசும் நடிப்புக்காக.... அறை வாங்குவதற்க்காகவும்தான். தனுஷூக்கு இந்தியில் சிறப்பான எதிர்காலம் இருக்கின்றது.

==========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. ur nt written abt the love in the film ...that nly big matter in the movie...

    ReplyDelete
  2. பாலகணேசன்.. எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கேன்.

    நன்றி கலிய பெருமாள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner