Lost Paradise (2012) "Paradis perdu" (original title)உலக சினிமா/பிரெஞ்சு/கிராமத்து விவசாயியும் அவர் மகளும்.


தனிமை போன்ற கொடுமை உலகத்தில் ஏதும் இல்லை... 
உதாரணத்துக்கு cast away படத்தில்  யாருமற்ற தனிமையான தீவில் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் ஒரு  ரக்பி பாலை மனிதனாக உருவகப்படுத்திக்கொண்டு அதனோடு பல வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டு இருப்பார் டாம் ஹேங்ஸ்... காரணம் தனிமை கொடுமையானது.. வேலை விட்டு வீட்டுக்கு வந்த உடன் நாம் என்ன செய்வோம் இன்ற அலுவலகத்தில் நடந்த விஷயங்களை தன் துணையோடு பகிர்ந்து கொள்ளுவோம்...

 எந்த இனத்தையும் விட  மனிதனுக்கு கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம்..,, அப்படி ஒரு விஷயம் நமக்கு இல்லை என்றால் டிப்ரஷன் அதிகமாகி மென்டல் ஆக ஆகிவிடுவோம்... அப்படி தனிமையில் வாழும் ஒரு கிராமத்து விவசாயி மற்றும் அவர் மகளின் கதைதான் இந்த திரைப்படம்.

===================
Lost Paradise (2012) "Paradis perdu" (original title) படத்தின் ஒன்லைன்.
தனிமையில் வாழும் அப்பா மகளுக்கு இடையே ஓடிபோன அம்மா திரும்ப வந்தால்...-?

=================
Lost Paradise (2012) "Paradis perdu" (original title) படத்தின் கதை என்ன?


17 வயசு லுசியா அப்பா  ஹூகோ கூட கிழக்கு பிரான்சின் புறநகர் பகுதியில்   அப்பாவோடு தனியாக வசித்து வருகின்றாள்.... அக்கம்  பக்கத்தில் மருந்துக்கும் கூட வீடு இல்லை.  வார இறுதியில் தோட்டத்தில் விளைந்த பொருட்களை  சந்தையில் எடுத்துபோய்   விற்று விற்று விட்டு வருவதுதான் வேலை... ஒசூர ஒரு வேலையாள் தோட்டத்தில் வேலை செய்கின்றான்.. அவனிடம் கூட பேசக்கூடாது என்று கட்டளை இடுகின்றார்... 


லுசியா எல்லா வற்றையும் பொருத்துக்கொண்டு அப்பாவின் தேவையையும்   நர்சரி வேலைகளையும் கவனித்து வருகின்றாள்.. ஆனால் இந்த பாசம் யாருமற்ற தனிமைகாரணமாக  இறுகிகொண்டு இருக்கும் கணத்தில் ஓடிப்போன லுசியா அம்மா திரும்ப வருகின்றாள்.. ஆனால் மகளை பார்க்கவிடாமல் தொட்டத்தின் ஒதுக்குபறமான மோட்டர் கொட்டகையில் அடைத்து  வைக்கின்றான் லுசியாவின் அப்பா... மூன்று நாட்களுக்கு மேல் மோட்டர் கொட்டகையில் அடைந்து கிடக்கும் அம்மாவை லுசியா மீட்கின்றாள்.. லுசியா  அப்பா சும்மா விடுவானா,? என்னவானது என்பதை வெண்திரையில் காணுங்கள்...

===============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

 கிழக்கு பிரான்சின் புறநகர் எப்படி இருக்கும் என்பதை இந்த ஜென்மத்தில் நம்மில் பலருக்கு பார்க்க வாய்ப்பு இருக்கின்றதா என்பது தெரியவில்லை... ஆனால் அப்படி ஒரு அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் இடம்...  சின்ன சுனை போன்ற மலைப்பகுதி என்று அற்புதமாக இருக்கின்றது...

 நம்ம ஊர் விவசாயத்தையும் அவர்கள் ஊர் விவசாய வேலைகளையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்...


 எப்போதுமே  பாரின் படங்களில் காரணத்தை பட்டவர்தனமாக சொல்லவே மாட்டார்கள்... லைட்டா கொடுகிழிச்சிட்டு போயிடுவாங்க... அது போல லுசியா அப்பா எப்படி பட்டவர்ன்னு லைட்டா சொல்லி இருக்காங்க... புரிஞ்சிக்கறது உங்க பொறுப்பு...

அப்பா லோடோட தனியா போகும் போது வளைவுல ஸ்பிட்  கம்மி பண்ணி போங்கன்னு சொல்லறதல இருந்து பார்த்து பார்த்து  பணிவிடை செய்வதில் இருந்து லுசியா சிறப்பாக செய்து இருக்கின்றார்...

மோட்டர் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட இருந்த மனைவியை சின்ன சாரளத்தின்   வழியே காம வேட்கையை தீர்த்து கொள்ள நினைத்தாலும், மோட்டர் கொட்டகையின்  கதவை கடைசிவரை திறக்காமல் இருப்பதிலேயே அவன் மனநிலையை உணர்த்தி விடுகின்றார்கள்...

தனிமை என்ன மாதிரியான  விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதையும் லுசியாவுக்கு தனிமை காமத்தை கிளர்வதையும் காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..


அடைத்து வைத்த தனிமை யாரிடம் வேண்டுமானாலும் அடைக்கலம் காட்டும் அது போல அந்த தோட்டத்தில் வேலை  செய்யும் இளைஞனிடம் மனதை பறிகொடுப்பது அதை அவள் அம்மா  ஒத்துக்கொள்ளாமல் பின் மகளின் நிலைமையை புரிந்து கொள்வது அழகு.. எல்லா ஊர்களிலிலும் அம்மாக்கள் ஒரே மாதிரியானவர்கள்தான்..

 கடைசியா கிளைமாக்சில் லுசியா சந்தோஷமாக ஒடுவது... ஏ கிளாஸ்.

=========================
படத்தின் டிரைலர்..




=====================
படக்குழுவினர் விபரம்.


DramaRelease Date: July 4, 2012 > All releases of the weekDirected by: Deboise With: Pauline Etienne , Olivier Rabourdin , Florence Thomassin ...> All the cast Duration: 1h33min Country of production: France Year of production: 2010 Original title: Paradise Lost Distributor: Epicentre Films

=================


பைனல் கிக்..
 இந்த படம் பார்க்கவேண்டிய படம்....ரொம்ப நாள் கழித்து லைவ்வாக கேரக்டர்களோடு டிராவல்  ஆகி கொண்டே அவர்களோடு நம்மையும் இழுத்துக்கொள்ளும் திரைப்படம் இந்த திரைப்படம்... வயது வந்தவர்களான திரைப்படம் ...முதல் முறை பார்க்கும் போது இந்த படம் புரியவில்லையா? திரும்பவும் ஒரு  முறை பாருங்கள்  கண்டிப்பாக  விளங்கும்.

===================
 படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஐந்து.


====================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

2 comments:

  1. மகேஷ் மூன்று பேர் மூன்று காதல் படம் பார்த்தேன்... நொந்துட்டேன்..

    மற்றவர்களுக்கு மட்டும் ரெப்லி பண்றீங்க. எனக்கு மட்டும் பண்றதில்ல? ஏன் இந்த ஓர வஞ்சன?

    ரெண்டு படம் பாத்துட்டு விமர்சனம் பண்ணுங்கனு ஒரு மாசமா கேக்றேன்

    1). The Martyrs
    2). The Human centipede

    ReplyDelete
  2. யோவ் சிவா நானும் அப்பையிலேர்ந்து பார்த்துகிட்டே வரேன் இந்த ரெண்டு படத்தையும் ரெவ்யு பண்ணுங்க ரெவ்யு பண்ணுங்கன்னு ரொம்பத்தான் - நம்ம சேகரு அண்ண சாப்பிடவேனாமாப்பு... மொதொபடம் ஒரே ரத்த குளியல் - ரெண்டாவது படம் (ரொம்ப நாள் சிரமப்பட்டு தான் கிடைச்சது)அத விமர்சனம் பண்ணுனாலே பாதிபேறு சாப்புடுரதையே விட்டுடுவான். படத்தோட ஒன் லைன் கேட்டாலே அவனவன் வாந்தி எடுத்துடுவான். இந்த லச்சனத்துல ரெண்டு பார்ட் இருக்கு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner