Kutti Puli-2013/குட்டிப்புலி திரைவிமர்சனம்.வெற்றி பெற்றவர்களை மட்டுமே தலையில் வைத்து இந்த உலகம் கொண்டாடும்...
போட்ட காசை எடுத்துக்கொடுப்பவனே  நல்ல நடிகன் என்று  தமிழக தயாரிப்பாளர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அவர்களின் மினமம் கேரண்ட்டி தற்போதைய  சாய்ஸ் சசிக்குமார்தான்.


தனக்கு என்ன வருகின்றதோ அதை மட்டுமே செய்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை  ஆட்டையை போட்டவர்கள்  மூன்று பேர் அவர்கள் முறையே எம்ஜிஆர், ரஜினி, விஜய்...


விஜய்  சில  தோல்வி படங்கள் கொடுத்தாலும் மாஸ் ஹீரோவாகத்தான்  இன்னும் வலம் வருகின்றார். பெரிய பரிட்சார்த்த முயற்சிகள் இதுவரை  நான் மேலே சொன்ன மூன்று பேரும்  அதிகம் செய்து கையை சுட்டுகொண்டதில்லை...


அந்த வரிசையில் சசிக்குமாரும்...சசிக்குமாரின் பலம் என்ன என்பது அவருக்கு தெரிகின்றது.. அதனால் அதே  பார்முலாவில் ஓடும் வரை ஓடுவோம் யார் என்ன சொன்னா நமக்கு என்ன? கலெக்ஷன் டல் அடிக்கும் போது ரூட்டை மாற்றிக்கொள் வோம் என்று  நினைத்து இருக்கின்றார்.


50 படங்களில் ஜேம்ஸ் பாண்ட்   தன்னை மாற்றிக்கொண்டாரா,150 படங்களுக்கு மேல் நடித்த எம்ஜி ஆர் தன்னை மாற்றிக்கொண்டாரா? அல்லது இதுநாள் வரை நடித்து வரும்  ரஜினி தன்னை மாற்றிக்கொண்டாரா? நான்  வளர்ந்து வரும் ஆள் நான் மட்டும் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சசிக்குமார் நினைப்பதில் ஆச்சர்ய பட ஏதுமில்லை.
 எம்ஜிஆர் மற்றும் ரஜினி படங்களின் சக்சஸ் பார்முலாதான்  சசிக்குமார் படத்தின் வெற்றியின் அடிநாதம்...


 நண்பர்கள் பார்முலாவில் இருந்து சற்றே விலகி  இந்த படத்தில்  தாய்பாசத்தில் இறங்கி இருக்கின்றார் சசிக்குமார். 

======================
 Kutti Puli-2013/குட்டிப்புலி படத்தின் ஒன்லைன் என்ன?

 தென்மாவட்டங்களில் வழிபாடு செய்யப்படும் பெண் குலசாமிகளின் வரலாறு என்ன-? அவைகள் எப்படி தோன்றின..  அந்த பெண்கள் இந்த சமுகத்துக்கும் குடும்பத்துக்கும் ஆற்றிய பங்களிப்பு என்ன? என்பதின் ஒரு லைன்தான் இந்த  படத்த்தோட கதை.

=======================
Kutti Puli-2013/குட்டிப்புலி படத்தோட கதை..

சசிக்குமார் (குட்டிப்புலி)  அப்பா தன் ஊர் பொண்ணோட மானம் காக்க போய் உயிர் விடுகின்றார்.. அம்மா சரண்யாவோடு   சண்டியராக வசித்து வருகின்றார். திருமணம் வேண்டாம் என்கின்றார். காரணம்  சண்டித்தனத்தால் நிறைய எதிரிகள்... எவனாவது  தன்னை போட்டுட்டா  அம்மா போல  தன் பொண்ட்ட்டியும் வாழ வெட்டியா நிற்க வேண்டிய நிலை வேண்டாம்ன்னு தனக்கு கல்யாணம் வேண்டாம் என்கின்றார்..


 அவர் தெருவுக்கு லக்ஷ்மிமேனன் புதிதாய் குடி வருகின்றார். சசிக்குமாரின் அக்மார் நல்ல  எண்ணங்களை  கண்டு மனதை பரிகொடுத்து காதலிக்கின்றார்...  ஆனால் சசிக்குமார் லக்ஷ்மி மேனனை ஏறேடுத்தும் பார்க்கவில்லை....எதிரிகளால் கத்தி குத்துப்பட்டு  சசி உயிருக்கு போராடுகின்றார்.  மருத்துவசெலவுக்கு லக்ஷ்மிமேனன் தன் நனை விற்று பணத்தை கொடுக்கின்றார்.... சசி எதிரிகளிடம் இருந்து தப்பித்தாரா? 

சசி, மேனன் காதல் நிறைவேறியதா  வெண்திரையில்  பாருங்கள்.
===================

 படத்தோட சுவாரஸ்யங்கள்.

 குட்டிப்புலி கேரக்டருக்கு பாந்தமா பொருந்தகின்றார்.. சசி.   இன்டர்வலுக்கு முன் குட்டிப்புலி  இண்டர்வெலுக்கு பின் குட்டிப்புலி என்று இரண்டு கேரக்டர்கள்  மாறுதலுக்கு உடம்பை எல்லாம் இளைத்து அசத்தி இருக்கின்றார்.

லக்ஷ்மிமேனன்... பெரிய ஸ்கோப் இல்லை.. ஆப் சாரியில்  கிராமத்து  பிகரை நினைவுக்கூற வைக்கின்றார்.

 சரண்யா அம்மா  கேரக்டருக்கு   ஆப்டாக இருக்கின்றார் என்றால் நாக்கு அழுகி விடும்... அம்மாவாக வாழ்ந்து இருக்கின்றார் என்று சொல்வதே சரி..

 படத்தின் அம்மா  செண்டிமென்ட் , காதல், தாய்பாசம், வீரம் , தியாகம்  எல்லா மேட்டரையும் இந்த  ஒரே படத்துல கொஞ்சம் தூக்கலா போயிட்டுமோ என்று ஒரு நினைப்பு... அதனாலே புதுமுக இயக்குனர் முத்தையா கொஞ்சம் தடுமாறி இருக்கின்றார்...

கழி சண்டை திடிர் என்று ரோட்டில் ஒரு ஈகோ மோதலில் ஈடுபட்டு எதிரியாவது எல்லாம்   வலிந்து திணிக்கப்பட்டது போலவே  இருக்கின்றது.

கழி சண்டையில் அந்த பெரியவரும் அந்த பையனும் சுற்றும் காட்சிகள் ரசிக்க  வைக்கின்றன... அந்த பையன் பூந்து விளையாடுகின்றான்..ஹேட்ஸ் ஆப்.

லக்ஷ்மி மேனனிடம் காதலை சொல்ல வேண்டும்.. ஆனால் படிப்பறிவில்லாதவன் எப்படி காதலை சொல்லுவான்.. ஆனால் அந்த பெண் அழகு படிப்பு எல்லாத்திலேயும் ஒசத்தி... அப்ப அந்த பட்டிக்காட்டான் என்ன  செய்வான்...  அந்த பெண்ணை மரியாதையா பார்ப்பான்...  நல்ல புள்ளை போல நடந்துக்குவான் இல்லையா? அதைதான் காட்சியா  வச்சி இருக்கின்றார் இயக்குனர்... கைலியை அவுத்து விட்டு அவளுக்கு வணக்கம் வைக்கிறது காதலை சொல்ல  என்பதை உன்னை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது என்று சொல்ல அவனுக்கு தெரிந்த வழி என்று அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார் இயக்குனர்.

 படத்தை பெரியதாய் தூக்கி  நிறுத்துவது, லன்ஷ்மிமேன்னை  காதலிக்க துடிக்கும் அந்த ஏரியா பசங்க நான்கு பேர்... அவர்கள்தான் படத்தை  ஒரு கட்டத்தில்  தூக்கி நிறுத்துகின்றார்கள்...

படத்தில் பாடல்கள் அப்படி ஒன்றும் சுகமாக இல்லை...

 அம்மா சேலைபாடல் அசத்தல் என்று சொல்லலாம்

இடைவேளைக்கு பிறகு வரும் பழைய பாடல்கள்.. ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள உதவுகின்றன. முக்கியமாக பொண்ணோவியம்  சாங் அசத்தல்.

முறுங்கை காய்  குழம்பு எடுத்து ஊத்தி பேசும் டயலாக்கும் அந்த சீனும்.. அருமை...

டேய் நெஞ்ச்க்கிட்ட கையை எடுத்துக்கிட்டு போயிட்டா என்று ஒரு  நண்பன்  சொல்ல அதுக்கு அந்த அறந்வால் பையன் அடிக்கும் மியூட் கமென்ட் அருமை.

நாடோடியில் போட்டோ எடுத்து பிளக்ஸ் வைப்பர் வரும் காட்சியில் விசில் காதை கிழிக்கின்றது.. அந்த அளவுக்கு பி சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கின்றார்.... எச்சில் துப்பிய இடத்தில் வாந்தியிலேயே உட்காருவோம் என்று  லந்து செய்வது கலகல....

படத்துல இன்னும் குறிப்பிட படவேண்டி விஷயம் வசனம்... சிலது சான்சே இல்லை..  ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லறதை விட பொண்டாட்டி ஆம்பளைன்னு சொன்னதான்யா அவன் ஆம்பளை இதுக்கு அப்புறம் உன்க்கிட்ட வாழ முடியாதுன்னு ஒருத்தி செத்துப்போறான்னா? எப்படி   உன்னை ஆம்பளைன்னு சொல்ல முடியும்.

கேமராமேன் மகேஷ்முத்துசாமி, வம்சம் படத்துக்கு அப்புறம் மதுரை பக்கம் கேமரா எடுத்துக்கிட்டு போயி அழகாக காட்சிகளை கம்போஸ்  செய்து இருக்கின்றார்.

கிளைமாக்ஸ் காட்சியில் எந்த மாஸ் ஹீரோவும் இது போன்ற காட்சிக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.... இந்த படத்தின் பலம் கிளைமாக்ஸ் என்பதையும் குறிப்பிட வேண்டும்..
===============
படத்தோட டிரைலர்.


=================
படக்குழுவினர் விபரம்

Directed by M.Muthaiah
Produced by S. Muruganandam & N. Puranna
Screenplay by M.Muthaiah
Story by M.Muthaiah
Starring M. Sasikumar
Lakshmi Menon
Music by M Ghibran
Cinematography Mahesh Muthuswamy
Editing by Gopi Krishna
Studio Village Theaters
Distributed by Red Giant Movies
Sun Pictures
Release date(s)
May 30, 2013
Country India
Language Tamil
============
படத்தோட மேக்கிங்.

===============
பைனல்கிக்.

 சென்னையில் மட்டும் வியாழக்கிழமையே இந்த படம் ரிலிஸ் ஆகி இருக்கு... சென்னையில் மட்டும் 90 தியேட்டர்ல பிரிண்ட் இறக்கி இருக்காங்க... நேற்று காலை காட்சிக்கு உள்ளகரம் குமரன் தியேட்டர்ல  பால்கனி ரொம்பி பார்ஸ்ட் கிளாஸ் பாதி  அளவு, அதுவும் காலைகாட்சிக்கு மக்கள் கூட்டம் வந்து இருக்கின்றது என்றால் அது சசிக்குமாருக்காகத்தான் என்பதில் ஐயம் இல்லை... அதை தக்க வைக்க இந்த படத்தில் பேராடி இருக்கின்றார்.. 


மதுரை வன்முறை இந்த படத்திலும் இருக்கின்றது... சினிமா பார்த்து கெட்டு போய் விட்டார்கள் என்று ஒரு போதும் நான் சொல்லமாட்டேன்.... ஆனால் அது போல காட்சிகளில்  தொடர்ந்து நடித்தால்  அருவா சசி என்று பெயர் வைத்து விடுவார்கள் என்பதை  நினைவில் வைத்தக்கொள்ளுங்கள் சசி.... 
 படத்தின் நீளம் அதிகம்... இன்னும் கிரிஸ்ப்பா சொல்லி இருந்தா அடுத்த பெரிய வெற்றிய இந்த திரைப்படம் அமைந்து இருக்கும். 

இந்த படம் எனக்கு பிடித்து இருக்கின்றது..  மொக்கை என்று சொல்ல  முடியாது. குட்டிப்புலி வயித்துல வலி என்று  சிலர் எழுதலாம்... எனக்கு  இந்த படம் பிடித்து இருக்கின்றது... ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.
=========
ரேட்டிங்....


பத்துக்கு ஐந்து

=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

 1. ஏவி எம் தயாரிப்பில் முதலிடம் என்று ஒரு படம் வந்தது. அடற்க்கு நீங்கள் விமர்சனம் எழுதியிருந்தால் மறுபதிவு செய்யுங்கள்.பெண் தெய்வங்கள் பற்றிய அறைகுறை தகவல்கள்,எந்த தென்மாவட்ட சாமியும் பட்டப்பகலில் நாக்கை முறுக்கிக் கொண்டு ஊர் சுற்றாது.தீப்பந்தமோ அரிவாளோ சாட்டையோ இல்லாமல் கக்கத்தில் கைவைத்து குளிர் காயும் சாமி என்ன மொக்கைச்சாமியோ தெரியவில்லை. 10 வருடங்களுக்கு முந்தைய படம்போல ஒரு உணர்வு.சசிகுமார் ராஜ்கிரண் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்லா உக்காந்து ரசிச்சிருக்கீங்க எசமான்

  ReplyDelete
 2. அதுல இன்னொரு வசனம், படம் பாத்து முடிச்சி நைட் படுக்கிற வரைக்கும் கூடவே வந்துகிட்டு இருந்தது. ஊர் பூரா வீடு வீடா தகவல் சொல்ற காட்சியில, சரண்யாகிட்ட மட்டும் சொல்லாம போயிடுவான் ஒருத்தன். அப்போ அவன் சொல்வான் நான் ஒண்ணுமே பண்ணலக்கான்னு, சரண்யா திரும்ப சொல்வாங்க, அதானே நீ ஏதாவது பண்ணியிருந்தாதான் கோயிந்தம்மா மூணு நாலு புள்ளய பெத்திருப்பாளேன்னு. சட்டுன்னு புரியாம யோசிச்சப்புறம்தான் புரிஞ்சது.

  ReplyDelete
 3. என்ன ஆச்சு ஜாக்கி?

  விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம். ஒரு விமர்சனத்துல என்ன எழுதனுமோ அதை சரியா எழுதி இருக்கீங்க...... கதையே இல்லாத படத்துக்கூட, விமர்சனம் என்ற பேருல படத்தோட கதைய மட்டுமே இருபத்தி ஐந்து வரியா விமர்சனம் எழுதறவங்க மத்தியில, விமர்சனம் எழுதுவதற்கான விதிமுறைகளோடு விமர்சனம் எழுதினது ரொம்ப சந்தோசம் சேகர்....இது போன்ற விமர்சனங்கள் தொடரட்டும்.......வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. "மருத்துவசெலவுக்கு லக்ஷ்மிமேனன் தன் நனை விற்று பணத்தை கொடுக்கின்றார்...."

  It's mistake Jackie :-))

  Thanks 4your preview

  and write new doubing movie "karimedu" yesterday I saw that movie in original kanada version - Dandupalya ( its based on the real life incidents gang murder story)
  the film poster look like a Adult movie but it travel different.

  ReplyDelete
 6. அருமையான விமர்சனம் புதிய புதிய டைரக்டர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது சாதாரண விஸயமில்லை அந்த வகையில் சசிகுமாருக்கு இதுவும் ஒரு வெற்றி படம் தான்

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம். விமர்சனம் எழுதுவதற்கான விதிமுறைகளோடு விமர்சனம் எழுதியது மிக அருமை. இது போன்ற முறையான நடுநிலையான சினிமா விமர்சனம் தொடரட்டும் சேகர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. முறையான நடுநிலையான சினிமா விமர்சனம் நன்றி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner