எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும்
கடையில்.
. பொருள் வாங்க வந்த 14 வயது பெண் ஒன்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தாள்... என்ன பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை..
. பொருள் வாங்க வந்த 14 வயது பெண் ஒன்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தாள்... என்ன பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை..
அவரவர் பொருள் வாங்கி கொண்டு ஆபிசுக்கு போகும்
அவசரத்தில் இருந்தார்கள்.. காலையில் எழரை மணிக்கு ஒரு பெண் அதுவும் சின்ன பெண் ஏன்
அழ வேண்டும்.. கடைகாரர் அவர் வேலையில் படு
பிசியாக இயங்கி கொண்டு இருந்தார்..
நான் அந்த
பெண்ணிடம் ஏன் அழுகின்றாய் என்று கேட்டேன்... அவள் மேலும் தேம்பி ழ ஆரம்பித்து
விட்டாள்..? ஏன் என்று திரும்ப கேட்க கேட்க அவள் மீண்டும் மீண்டும் அழுகையின்
சத்தத்தை அதிகபடுத்திக்கொண்டு சென்றாள்...
எனக்கு பொருக்கவில்லை...
கடைகாரரிடம்
கேட்டேன்... ஏதுக்குய்யா இவ அழுதுகிட்டு இருக்கா...? டெய்லி பொருள் வாங்க வரும்
சார்... இன்னைக்கு கொஞ்சம் அதிகமா ஆசை பட்டுடிச்சி... என்ன செஞ்சா.. ? சில்லரை எடுத்து கொடுக்க
திரும்பறதுக்குள்ள ஐஸ்கிரிம் பாக்சை தொறந்து , நாலு கோன் ஐசை தூக்கி காய்கறி பேக்ல போட்டுகிட்டு
ஜூட் உடலான்னு பாத்துச்சி... அதான் மிச்ச
சில்லரை கொடுக்காம நிக்க வச்சிகிட்டு இருக்கேன்....
ஏய் திருடினியா?
என்று கேட்டேன்... அவள் மேலும் அழ
ஆரம்பித்தாள்... நாம் எல்லோருமே பல்பம், பென்சில், மாம்பழம் மரவள்ளி என்று ஏதாவது
ஒன்றை நிச்சயம் திருடி
இருப்போம்...
ஹலோ எந்து
சாரே நீ பரையறது.. எங்கள கள்ளன் என்று
பரையோ?
டேய் நான்
எங்கடா திருடன் சொன்னேன்.. ஒரு உதாரணத்துக்கு
சொன்னேன்.... நாங்க மரவள்ளி கிழங்கு கொள்ளியில இருந்து திருடி சுட்டு சாப்பிட்டு
இருக்கோம்...
நீ பியூர்
யோக்கிய மயிரா இருந்தா இருந்துட்டுபோ...
நல்ல விஷயம்தானே.,..?
மரவள்ளி
கிழங்கு, மாங்கா, தேங்கா போன்றவற்றை, கொள்ளியில இருந்து பறிச்சி திங்க திருடறது கிராமங்களில் ரொம்ப சாதாரண
விஷயம்...ஆனா சாப்பிடற பொருளான நாகரீக கோன் ஐசை கண் எதிரில் திருடுவதை இந்த நகரம்
ஏற்றுக்கொள்ளாது..
தோ பாரு அடுத்து
வாட்டி இது போல செஞ்சே போலிஸ் கிட்ட
புடிச்சி கொடுத்துடுவேன்... என்று சொல்லி மிச்ச காசை கொடுக்க சொல்லி அந்த பெண்ணை விரட்டி விட்டேன்...பசிக்கு
திருடுவது... பெரிய பிரச்சனையே இல்லை.. ஆனால்
கொழுப்பெடுத்து போய் சில விஷயங்கள்
செஞ்சிட்டு அதுக்காக திருடறது எப்போதும்
ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல... அப்படி ஒரு நல்ல டாக்டர் எப்படி திருட்டு டாக்டரா
மாறினான் என்பதுதான் டைமன்ட் நெக்லஸ் படத்தின் கதை ஒன்லைன்..
=============
டைமன்ட் நெக்லஸ் படத்தின் கதை என்ன?
துபாயில் வேலை
செய்யும் இளம் டாக்டர் பக்த் பாசில் (அருன் குமார்) வரவுக்கு மீறி உதாரி தனமாக செலவு செய்கின்றான்...
. நல்லவன்தான் என்றாலும் வயது உதாரிதனமான செலவினங்கள் செய்ய
வழி வகை செய்கின்றது.. பெண்கள்
விஷயத்திலும் அப்படித்தான்.. ஆனால் கூட வேலை செய்யும் நர்ஸ் அதுவும் மதுரைகார
தமிழ் பெண்ணான கவுதமி நாயரை (லட்சுமி)காதலிக்கின்றான்....ஆனால்
அவன் ஊதாரி தனத்துக்கு வாங்கிய கடன்கள்
அவனை நிம்மதியா இருக்க விடவில்லை...
அதன் பின்
அவன் வாழ்வில் மூன்று பெண்கள்
அதாவது நர்ஸ் பெண்ணையும் சேர்த்து குறுக்கிடுகின்றார்கள்.. கடனில் இருந்து
எப்படி தப்பித்தான்..? குறிக்கிட்ட அத்தனை பெண்ணையும் என்ன செய்தான் என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
=========
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில...
லால்
ஜோஸ் மலையாளத்தில் தவிர்க்க முடியாத
இயக்குனர்... இன்னும் பளிச்சென்று சொன்னாள்... கிளாஸ்மெட் படத்தினை இயக்கிய இயக்குனர்.
22 பிமேல்
கோட்டயம் படத்தில் இருந்து பகத் பாசிலை எனக்கு ரொம்பவே பிடித்து போய் விட்டது.. நல்ல இயல்பான உடல்மொழி கொண்ட பையன்... the boy next door கேரக்கடருக்கு நன்றாகவே
பொறுந்துகின்றார்...
கவுதமி
நாயருக்கும், பாசிலுக்கும் முதலில் அரும்பும் அந்த காதல் காட்சிகள்.. படத்தின்
கியூட் கவிதை என்று சொல்லலாம்.
கவுதமிநாயர்
ஓகோ என்று பெரும் அழகு என்று சொல்லாவிட்டாலும்... அவரிடம் இருக்கும் கண்களில் ஒரு
பரவசத்தை வைத்து இருக்கின்றார் என்பதை சொல்லியே ஆக வேண்டும்...
தமிழ் போர்ஷன்கள்
அதுக்கான டயலாக்குகள் எல்லாம் நிறைவாகவே செய்து இருக்கின்றார்கள்...
முக்கியமாக அந்த ரொமான்டிக் கிராமத்து பாடல் நெஞ்சில் தாளாட்டுகின்றது... தொட்டு தொட்டு உன்னை நோக்காமல்.. சாங்... நிச்சயம் ரசிப்பிங்க..
முக்கியமாக அந்த ரொமான்டிக் கிராமத்து பாடல் நெஞ்சில் தாளாட்டுகின்றது... தொட்டு தொட்டு உன்னை நோக்காமல்.. சாங்... நிச்சயம் ரசிப்பிங்க..
ரோகினி, சம்ருத்தா போன்றவர்கள் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
==========
படத்தின்
டிரைலர்..
==============
படக்குழுவினர் விபரம்.
Directed by Lal Jose
Produced by Lal Jose
P. V. Pradeep
Written by Ikbal Kuttipuram
Starring Fahadh Faasil
Samvrutha Sunil
Gauthami Nair
Anusree
Rohini
Music by Vidyasagar
Cinematography Sameer Thahir
Editing by Ranjan Abraham
Studio LJ films
Anitha Productions
Distributed by LJ films
Release date(s)
May 4, 2012
Running time 157 minutes
Country India
Language Malayalam
Box office 13 crore (US$2.46 million
=============
பைனல்கிக்.
================
படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் இந்த
படம் ரசித்து இருக்கலாம்... இந்த படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்று சொல்லுவேன்..
================
இந்த தளத்தின் விமர்சனங்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தி வையுங்கள்..
நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
================
இந்த தளத்தின் விமர்சனங்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தி வையுங்கள்..
நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
மரவள்ளி கிழங்கு, மாங்கா, தேங்கா போன்றவற்றை, கொள்ளியில இருந்து பறிச்சி திங்க திருடறது கிராமங்களில் ரொம்ப சாதாரண விஷயம்..
ReplyDeleteஅதில தானே சுவை அதிகம்
விமர்சனம் விட ஒபனிங் அருமை
இப்பவே கண்ணை கட்டுதே
ReplyDeleteNice Sir..
ReplyDeleteஎங்கள் ஊர் கொய்யா தோப்புkalil .பசிக்கு ஒன்று இரண்டு parithal ஒன்றும் சொல்ல மாட்டார்கள் . நெறய விட்டுக்கு parithal திட்டுவார்கள் .vivasaikalidam oru manitha neyam irudhadhu.
ReplyDelete