நம்பிக்கை நட்சத்திரங்கள்(Fahadh Faasil)பஹத் பாசில்...




 ரன்பீர் கப்பூர் போல  so cute  என்றோ,
மாதவன்,  அரவிந்சாமி போல   அவன் அழகன் அல்ல... சார்மிங் என்று சொல்லப்படும் ஆங்கில வார்த்தைக்கு அவன் ஏற்றவன்  அல்ல....பார்த்த முதல் பார்வையில் கவருபவன் அவன் அல்ல... ஆனாலும் கேரளாவில்  சேட்டன்களும் சேச்சிகளும் அவனை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள்..

 சோப்பு  போட்டு குளிக்கும் போதோ, வாயில்பிரஷ்ஷுடன் கண்டதை நினைக்கும் போதோ,  ஆப் சாரியில் குப்புற படுத்துக்கொண்டு முழங்கால்  வரை கால் ஆட்டிக்கொண்டு புத்தகம் படிக்கும் போதோ,  பெண்களின்  நினைவில் வந்து படுத்தும் அளவுக்கு  அவன் அழகன் அல்ல... முட்டை கண்கள்,பெரிய நெற்றி  ஆனாலும் அவளை கேரள பெண்குட்டிகள் ரசிக்கின்றார்கள்... கொண்டாடுகின்றார்கள்....

கடந்த இரண்டு வருடங்களாக அவன் நடிக்கும் படத்தை பார்த்து விட்டு  கேரள ரசிகர்கள் அவனை  தூக்கி கொண்டு தட்டாமலை சுற்றுகின்றார்கள்.  அவன் பெயர் பஹத் பாசில்... தமிழ் ரசிகனின் மென் சோக பக்கத்தை புரட்டி போட்டு வெற்றிக்கொடி நாட்டிய, பூவே பூச்சூடவா, வருஷம் 16  போன்ற  காலத்தால் மறக்க  முடியாத படங்களை இயக்கிய   இயக்குனர் பாசில் அவர்களின் மகன் தான்  இன்றைய கேரளாவின் நம்பிக்கை நட்சத்திரமான பஹத் பாசில்..

திருபாய் அம்பானி  இறந்த உடன் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என்று பேர்  போட்டுக்கொள்வதில் எந்த சாதனையும் இல்லை... ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் உழைத்து மேலே வந்த திருபாய் அம்பானி பாராட்டுக்கு உரியவர் அல்லவா?...

 பெரிய இயக்குனரின் மகன், பெரிய நடிகர் மகன் , நடிகை  மகள் என்று விசிட்டிங் கார்ட்டு  வைத்துக்கொண்டு புறவாசல் வழியாக  சினிமா பீல்டுக்கு வருவது காலம் காலமாக நடப்பதுதான்... ஆனால் அதை தக்க வைத்து, தன்னை நிலை நிறுத்திக்கொள்பவர்கள் ஒரு சிலரே.

கஸ்தூரி ராஜா இரண்டு பிள்ளைகள்... செல்வா மற்றும் தனுஷ்... ஆரம்பத்தில்  பத்திரிக்கைகளில் இவர்களை பற்றி எழுதும் போது கஸ்தூரி ராஜா பிள்ளைகள் என்று எழுதினார்கள்... அதே போல சிவக்குமார் மகன் சூர்யாவை அப்படித்தான் எழுதினார்கள்... ஆனால் இன்று அவர்கள் அப்பா பெயர்கள் காலப்போக்கில் மறைய வைக்கும் அளவுக்கு  அவர்களது உழைப்பு இருந்தது... 

நடிகர் விஜய் நடிச்சால் எவன் பார்ப்பான் என்று நக்கல் விட்டது ஒரு பத்திரிக்கை அதே பத்திரிக்கையில் பேட்டி வாங்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து காட்டினார் நடிகர் விஜய்... அதுதான் வெறி உழைப்பு...  

ஆனால் இதை விட பெரிய பட்ஜெட்டில் தாஜ்மகால் என்று படம் எடுத்து கை சுட்டுக்கொண்டு,இன்று வரை பாரதிராஜாவின் மகன் மனோஜ் என்றே அறியப்படுகின்றார்...     இது கம்பாரிசன் அல்ல...எல்லா விதைகளும் வீரியம் உள்ளவை என்று எடுத்துக்கொள்ளவும் கூடாது.... ஆனால் இவர்களை விட எந்த பின்புலமும் இல்லாமல் தமிழ் திரைப்பட துறையில் வளர்ந்து வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி, அஜீத் போன்றவர்கள்  மேலே குறிப்பிட்ட எல்லோரையும் விட  அதிகம் பாராட்ட படவேண்டிய நபர்கள்.

அப்பா பாசில் கேரளாவில் பெரிய  இயக்குனர்...  தன் மகனை கேரள சினிமாவில்  கால் பதிக்க வேண்டி Kaiyethum Doorath என்ற படத்தை  எழுதினார், இயக்கினார், அவ்வளவு  ஏன் பிள்ளைக்காக படத்தையும் அவரே தயாரித்தார்.... ஆனால் படம்  அட்டர் பிளாப்....  பாசிலால் வெளியே தலைகாட்ட முடியவில்லை...  இத்தனைக்க்கும் படத்தில் மம்முட்டி முக்கிய ரோலில் நடித்து இருந்தார்...  ஆனாலும் படம் ப்ப்படம் ஆனாது... பத்திரிக்கைகள் மாறி மாறி பாசிலுக்கு  அட்வைஸ் கொடுத்தன...

பஹத்  பத்திரிக்கைகாரர்களை பார்த்து சொன்னது  இன்றும் அது வரலாற்று பதிவாய் இருக்கின்றது...

 என் அப்பாவை குறை சொல்லாதிங்க.. எங்க அப்பா மேல எந்த தப்பும் இல்லை... தப்பு என்னோடதுதான்....  மாடு அடக்கவேண்டும் என்றால் குறைந்த பட்ச  பயிற்சி அவசியம்.. ஆனால் எந்த பயிற்சியும் இல்லாமல் மாடு பிடிக்கும் வீரனாக களத்தில் இறக்கப்பட்டேன்... தப்பு என்னுடையதுதான் என்று தன் நேர்மையான பேச்சின் மூலம் தன்னை  மற்றவர்களிடத்தில் இருந்து முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்டிக்கொண்டார்... அததான் பஹத்....


எங்கப்பன் பெரிய டைரக்டர்... எத்தனையோ பேரை அறிமுகபடுத்தி வச்சி இருக்கான்...19 வயசுல நடிக்க தெரியாத என்னை கூட்டிக்கிட்டு வந்து, பத்து பேர் முன்னாடி நடிக்க  வச்சி என்னை அவமானப்படுத்திட்டான்... அப்பாவா இருந்தாலும் நான் கேட்கின்றேன்... அந்த ஆள் என்ன பெரிய டைரக்டர்?  நான் சரியா நடிச்சேன்... அந்த ஆளுக்கு மேட்டர் காலியாகிடுச்சி... என்று  வியாக்கியானம் பேசவில்லை....

இராமன் 14 வருடம் வன வாசம் அனுபவித்தது போல, அதில் பாதி வருடங்கள், அதாவது எழு வருடம்,  மீனுக்கு காத்து இருக்கும் கொக்குபோல காத்திருந்தார் பஹத்.. சும்மா இருந்தால் சோம்பி விடுவோம் என்று எம்ஏ பிலாசபி  அமெரிக்காவின் மியாமி மண்ணில் முடித்து நாடு திரும்பினார் பஹத்... மீனுக்கு காத்திருக்கும் கொக்கு போல தன் வாய்ப்புக்கு வசமாக காத்து இருந்தார்... சுறா மீனே சிக்கியதுதான் அதிஷ்டத்தோடு கூடிய வெற்றி.

2009 ஆம் ஆண்டு கேரளா கபே திரைப்படம் வெளியானது... கேரள திரைப்படத்துறை வகுப்பறையில் பஹத் பாசில் என்று அழைக்க ....உள்ளேன் ஐயா என்று சத்தம் போட்டு  சொல்லி தன் இருப்ப்பை கேரள ரசிகர்களுக்கு நிரூபித்தார்..

2010 ஆம்  ஆண்டு நான்கு படத்தில் நடித்து ,சிவப்பு கலர் தொழிற்சங்க போஸ்டர் வியாபிக்கும் கேரளா  மதில் சுவர்களில் தன் முகத்தையும்   போஸ்டர்கள்  மூலம் சாமன்ய மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்...

2011 ஆம் ஆண்டு  சச்சின் போல  ஒன்மேன் ஆர்மீயாக களத்தில் இறங்கினார்...akam மற்றும் Chaappa Kurishu  திரைப்படங்களில் நடித்து... தன் எதிரில் வந்த  பந்தினை நாளா பக்கமும் சிதறிடித்து  இன்றளவும் ஆடிக் கொண்டு இருக்கின்றார்  பஹத் பாசில்... எல்லா பந்தினையும்  என்னுடையது என்று நினைத்து  கவனம் சிதாறாமல்  அடித்து ஆடிக்கொண்டு இருக்கின்றார் அதுதான் அவர் வெற்றியின் தாரக மந்திரம்.

2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இவர் நடித்த படங்கள் எல்லாம்  சூப்பர் டூப்பர்  ஹீட்டா இருக்கின்றது.. இத்தனைக்கும் இவர் ஜிப்சியை காலில் கயிறு கட்டி நிறுத்தவில்லை.. பூசனிக்காயை தலையால் உடைத்து இல்லை... ரயிலை  ஒரே உதையில் பின்பக்கம் செல்ல வைக்கவில்லை... முக்கியமா தண்டவாளத்தில் பைக் ஓட்டவில்லை. ஆனாலும் பஹத்தை கேரளாவில்  கொண்டாடுகின்றார்கள்...

இன்றைய நவீன  மற்றும் விளிம்புநிலை கேரள இளைஞர்களின் பிரதிநிதியாக திரைப்படங்களில் வலம் வருவதே பஹத்தின் வெற்றி என்று  அடித்து சொல்லலாம்...

ஏமாற்றுகாரனா? துரோகியா, சபலிஸ்ட்டா, வில்லனா, அப்பாவியா, ஆட்டோ டிரைவரா? கால்டாக்சி டிரைவரா,  குடித்து கூத்தடிக்கும்பணக்கார இளைஞனா?  வாட்ச்மேன் கேரக்டரா? கூப்பிடு பஹத்தை என்று திரைக்கதை ஆசிரியர்கள்... அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில் சிவப்பு துணி போட்டு  இடம் பிடித்து வைக்கும் போர்டர்கள் போல ... திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குனர்களும்...பஹத்தை தன் கதைகளில் இடம் பெற இடம் பிடித்து வைத்து இருக்கின்றார்கள்..


 எந்த வேடத்துக்கு தன்னை  பொருத்திக்கொள்வேன் என்பவன்தான்  உண்மையான நடிகன்...  அடுத்த தலைமுறையில் எம்ஜிஆர் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது... ஆனால் சிவாஜி நடித்த படங்களை உட்கார்ந்து பார்த்து உடல்மொழியையும் டைமிங்கையும்  கற்றுக்கொள்ள  முடியும்...

தன் பெரிய இயக்குனர் மகன்... என் அப்பாவிடம் இருந்து நான் சினிமா  கற்றுக்கொள்ளவில்லை... Chaappa Kurishu இயக்கிய சமீர் தாகிரிடம்தான் நான் சினிமாவை கற்றுக்கொண்டேன் என்று பொது வெளியில் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம்... 

 Chaappa Kurishu மற்றும்  அகம் படத்துக்கு 2011 ஆம் ஆண்டுக்கான Kerala State Film Award for Second Best Actor விருது பஹத்துக்கு கிடைத்தது. வெற்றி சாமரம் அவர் உழைப்புக்கு வியற்வை போக்க விசிறி வைத்தது.

Chaappa Kurishu திரைப்படத்தில்  செல்போனில்.....முக்கிய டாக்குமன்ட், தன் காதலியோடு ஐல்சா பண்ணிய வீடியோ என இரண்டு முக்கிய விஷயங்களோடு அவருடைய செல்போனை தொலைத்து விட்டு பரிதவிக்கும்  பணக்கார  இளைஞன் கேரக்டரை நம்  கண் முன்  நிறுத்தி இருப்பார்.... அந்த உழைப்புதான் விருது வாங்கி கொடுத்தது... அதனால் தான் இன்றுவரை Chaappa Kurishu இயக்கிய இயக்குனர் சமீர் தாகிரை எனக்கு திரை மொழி கற்றுக்கொடுத்த ஆசான் என்று எல்லா பேட்டிகளிலும் வாயார சொல்லிக்கொண்டு இருக்கின்றார்....

நான் பஹத்தை  கவனித்தது..... 22 பீமேல் கோட்டயம் திரைப்படத்தில்தான்... இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டு பண்ணியது போல, இந்த படத்தில் நடித்த பஹத்தின் நடிப்பும் சிலாகிக்க பட்டது...

இந்த படத்தில்  இவரோடு  நடித்த ரீமா கலிங்கல் என்ற  நடிகையை  மிக மிக ஆத்மார்த்தமான தோழி என்று தைரியமாக குறிப்பிடுகின்றார்... இதுவரை நடித்த நடிகைகளில் எனக்கு பிடித்த நடிகை ரீமா காலிங்கள் என்றும்... மற்றவர்கள் எனக்கு நல்ல நட்பானவர்களாக இருந்தாலும் , ரீமா காலிங்கள் நல்ல தோழிக்கு மேலே என்று  சொல்லுகின்றார்... ரீமா காலிங்கள் 22 பிமேல் கோட்டயம் பட இயக்குனரோட தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகின்றார் என்பது  சேர நாட்டு கிசு கிசு இந்த கட்டுரைக்கு கிஞ்சித்தும் உதவாது.


 கேரளா கபே,   சப்பா கிருஷ், டைமன்ட் நெக்லஸ், அகம், 22 பிமேல் கோட்டயம், அன்னாயும் ரசூலும்,  நெத்தோலி சின்ன மீனால்ல, ஆமேன்,   பிரேடே என்று 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டின் மலையாள திரை உலகின் ஹாட் கேக் தற்போதைக்கு இவர்தான் என்று தைரியமாக சொல்லலாம்.....

 கேரள சேட்டன்கள்  பாதி பேருக்கு மேல் பஹத் மீது கொலை வெறியில் இருக்கின்றார்கள்... பின்னே  சேட்டன்களின் கனவு கன்னிகளின் உதட்டை கவ்வி  சுவைத்தவர் என்றால் யாரக்குதான் இவர் மீது கோபம் வராது... இவ்வட நாட்டில் படம் பார்க்கும்  நமக்கே வயிறு எரிகின்றது என்றால் அங்கே பிரின்டட் கைலியோடு திரியும் அவர்கள் நிலை கவலைகிடம்தான்...

Chaappa Kurishu படத்தில்  ரம்யா நம்பீசன் உதடு மலையாள சினிமா உலகின் நீண்ட நேர  ஆங்கில பட முத்தம் என்று போற்றபடுகின்றது... இங்கே ஆன்ரியாவுக்காக தவம் கிடப்பவர்களையும் பொறாமை பட செய்கின்றார் பஹத்... அன்னாவும் ரசூலும் படத்தில்  அன்டிரியாவின் உதடும் தப்பவில்லை...

இங்கே எப்படி'' மூன்று'' படம் பார்த்து விட்டு தனுஷை கொடுத்து வைத்த மகராசன் என்று பொறமை தீயில் கொண்டாடினார்களோ அதுக்கு ஒரு படி மேலே போய் விட்டார் பஹத்..

பிரைடே படத்தில் ஒரு காட்சி...  நகையை திரும்ப  ஒப்படைத்து விட்டு மனம் நிறைவாக ஒரு குளியல் போட்டு விட்டு அம்மா பிய்த்து வைத்து இருக்கும் பலாச்சுளையை விண்டு விண்டாக எடுத்து  கண்ணீர் பெருக்க சாப்பிடும் அந்த காட்சி என்றும் நினைவில் நிற்கும்  காட்சி.

அன்னாவும் ரசூலும் படத்தில் ....ரசூலு ஓடிக்கொட என்று  நண்பர்கள் தவறு செய்து விட்டு ஓட... எந்த தப்பும் செய்யாத ரசூல் கொலை வெறியோடு துரத்தும் கும்பலிடம் இருந்து  ஓட்டம் பிடிக்கும் காட்சிகள்... அன்ரியாவின் குழல் பேருந்தில்  காற்றில்  பறக்க அதனை வருடும் காட்சிகள் நெஞ்சில் என்றும்  நிற்கும் காட்சிகள்.

 நெத்தோலி சிறிய மீனல்ல படத்தில்  அப்பாட்மென்ட்டில் கமலினியிடம் அடி வாங்கி, அழுது கொண்டே கண்  துடைத்து போகும் காட்சிகள் வாவ்.

பஹத் பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சம்   இல்லை.. ஆன்டிரியாவை காதலிக்கின்றேன் என்று சொல்லி ஆன்ட்ரியா மறுத்ததும்.. இனி அவரோடு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று   பேட்டி கொடுத்ததும்  பஹத் வாழ்வில் மறக்க  முடியாதவை...

தற்போது அமேன் திரைப்படம் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றது.. 5 சுந்தரிகள் என்ற படமும், பெயரிடப்படாத கவுதம் மேனன் படம் என்று 2013 ஆம் ஆண்டில் தன் டைரியில் நிரப்பிக்கொண்டு இருக்கின்றார் பஹத்..

 எந்த பாத்திரத்தில் நீர் உற்றினாலும் அந்த பாத்திரமாகவே நீர்  மாறி விடும் என்பார்கள்.. அந்த உதாரணத்துக்கு பஹத் பெயரை தாராளமாக பரிந்துரைக்கலாம்....


வாழ்த்துகள் பஹத்... இனி பாசிலின் பெயரை சேர்த்து அறிமுகபடுத்தும் நிலையில் அவர் இல்லை  என்பது அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி...


 நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. பஹத்....

 என்ட ஹிரிதயம் நிறைந்த ஆஷம்சங்கள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. எந்த வேடத்துக்கு தன்னை பொருத்திக்கொள்வேன் என்பவன்தான் உண்மையான நடிகன்... அடுத்த தலைமுறையில் எம்ஜிஆர் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது... ஆனால் சிவாஜி நடித்த படங்களை உட்கார்ந்து பார்த்து உடல்மொழியையும் டைமிங்கையும் கற்றுக்கொள்ள முடியும்...//உண்மை தான்

    ReplyDelete
  2. superb introduction about an unknown actor thanks for sharing

    ReplyDelete
  3. பதிவில் எழுத்துப்பிழைகள் குறைவாக இருப்பது போல் தெரிகிறது. இப்பதிவு நீங்கள் எழுதிய தானா?

    ReplyDelete
  4. நன்றி அருள்... தொடர்ந்து பின்னுட்டதில் உற்சாகபடுத்தும் உங்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  5. ஸ்டாலின் யாரோ மண்டபத்துல எழுதி கொடுத்ததை அப்டேட் பண்ணிட்டேன்.. மூன்று மணி நேரம் எபதின பதிவு.. ரேபரன்சுக்கு இரண்டு மணி நேரம்.... எழுத்து பிழை இல்லாம இருக்கறதுக்கு காரணம் நண்பர் லக்கி காச்சு மூச்சின்னு சத்தம் போட்டு விட்டார்.. அதனால் இனிமேல் பதிவை போஸ்ட் செய்யும் போது ஒரு தடவை படிச்சிட்டு போடலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன்... அதான் மேட்டர். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் விளையாட்டா தான் கேட்டேன், அப்படியே எடுத்துக்கிட்டதுக்கு நன்றிங்க. உண்மையிலே, இந்தப் பதிவின் எழுத்து நடை சூப்பர்.

      Delete
  6. நன்றி தினேஷ்குமார்.

    ReplyDelete
  7. அண்ண அது friday இல்ல diamond necklace filmல

    ReplyDelete
  8. அண்ணே அது friday இல்ல film diamond necklace நெனைக்குறன்

    ReplyDelete
  9. அன்னாயும் ரசூலும் classical அது போல சினிமாலாம் தமிழுல வருமா தெரியல வந்தாலும் எவரும் பார்க்க மாட்டானுக

    ReplyDelete
  10. நன்றிங்க. உண்மையிலே இந்தப் பதிவு எழுத்து நடை சூப்பர்.. தொடருங்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner